Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நஞ்சையில் சேற்று நெல் :: நடவு வயல் பராமரிப்பு
இயற்கை உரமிடுதல்
  • தொழு எரு அல்லது மக்கு உரம் 12.5 டன் ஒரு எக்டருக்கு அல்லது
  • பசுந்தாள் உரம் 6.25 டன்

பசுந்தாள் உரம் இடும்முறை

  • பசுந்தாள் உற்பத்தி 6 டன் என்ற அளைவ எட்டியிருந்தால் அதனை அப்படியே மடக்கி உழுதுவிடவேண்டும். உழுவதற்கு இரும்பு கலப்பையோ அல்லது நாட்டுக் கலப்பையோ பயன்படுத்தலாம்
  • அத்தருணத்தில் குறைந்த பட்சம் ஒரு அங்குலம் தண்ணீர் தேக்கப்பட வேண்டும்
  • குறைந்த பட்சம் அரை செ.மீ. ஆழத்திலாவது பசுந்தாள் உரம் மண்ணினுள் மறையுமாறு ‘பசுந்தாள் மிதிப்பான்’ பயன்படுத்தி அமுத்துதல் வேண்டும்
  • பசுந்தாழை உரமென்றால் சிறிது சிறிதாக நறுக்கி, வரிசை வரிசையாக பரப்பி, மிதித்தல் நல்லது

அடித்தாள் மிதித்தல்

  • அடித்தாள் மிதிக்கப்படும்போது 22 கிலோ யூரியா ஒரு ஹெக்டரில் இடுதல் வேண்டும்
  • தாளடி நடவிற்கு முன், குறைந்தது பத்து நாட்களாவது தாள் மக்குவதற்கு சந்தர்ப்பம் தரப்படவேண்டும்.

நுண்ணுயிர் உரங்கள் இடுதல்

  • அசோல்லா 250 கிலோ என்ற அளவில் நடவு நட்ட மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பரவலாக தூவி நெற்பயிருடன் வளர வேண்டும். அசோல்லா வளர்ச்சியடைந்த நிலையில், நெல்லிற்கு களை எடுக்கும் தருணத்தில், ரோட்டரி களை எடுப்பான் மூலமோ அல்லது காலாலோ மண்ணிற்குள் மிதித்து விடுதல் வேண்டும்.
  • நீலப்பச்சைப்பாசியின் விதை 10 கிலோவை நடவு செய்த 10-ம் நாளில் தூவி சீரான அளவு தண்ணீர் கட்டி வளர்த்திட வேண்டும்.
  • ‘அசோஸ்பைரில்லம்’ மற்றும் பாஸ்போபாக்டீரியா’ ஒவ்வொன்றும் 10 பாக் (2 கிலோ) என்ற அளவில் எடுத்து, 25 கிலோ மக்கிய பண்ணையுரம் மற்றும் 25 கிலோ பெருமணலுடன் நன்கு கலந்து, நடவிற்கு முன் சீராகத் தூவி விட வேண்டும். அல்லது 20 பாக்(4 கிலோ) ‘அசோபாஸ்’ பயன்படுத்தலாம்.
  • சூடோமோனாஸ் ஃபுளுரசன்ல் (க1) 2.5 கிலோவும் நடவிற்கு முன் இடப்படுதல் வேண்டும்.
 

 

   
Fodder Cholam