Agriculture
வேளாண்மை :: தானியங்கள்

நஞ்சையில் சேற்று நெல்

நடவுநெல் பயிர் முறைகள்
நாற்றங்கால் பாராமரிப்பு
சேற்று நாற்றங்கால்

நாற்றங்காலின் பரப்பு

  • 20 சென்ட் (800 சதுர மீட்டர்) தண்ணீர் வசதியுடன் ஒரு எக்டர் நடவிற்குத் தேவை

விதை அளவு

  • ஒரு எக்டர் நடவு செய்திட நீண்ட கால ரகம் எனில் 30 கிலோ, மத்திய காலமாயின் 40 கிலோ, குறுகிய கால இரகம் என்றால் 60 கிலோ தேவைப்படுகின்றது

விதை நேர்த்தி

  • ஒரு கிலோ விதைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற வீதத்தில், கார்பன்டஜிம் அல்லது பைரோகுயிலான் 2 கிராம் அல்லது டிரைசைக்லோஜோல் கரைசல் 2 மி.லி. கலந்து 10 மணி நேரம் ஊர வைத்து பின்னர் வடிகட்டவும்
  • இம்முறையினால் இளம் வயதில் பாதிக்கக்கூடிய தோகை எரிப்பு நோயிலிருந்து 40 நாட்கள் வரை பாதுகாப்பு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
  • இவ்வாறு ஊர வைத்த விதையை உடன் விதைக்க வேண்டுமெனில் நனைந்த கோனிச் சாக்கில் கட்டி மூடி, 24மணி நேரம் இருட்டில் வைத்து முளை எட்டி, பின்னர் விதைக்கலாம். அல்லது நிழலில் உலர்த்தி தக்க ஈரப்பதத்தில் சேமித்து பின்னர் விதைக்கலாம்
  • சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் கலத்தல் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து 10 மணி நேரம் வைத்து நீரை வடிகட்டி, பின்னர் மேற்கூரிய முறையைப் பின்பற்றி விதைக்கலாம்
  • மூன்று பாக்கெட் அடீசாஸ்பைரில் (600 கி/ஹெ) மற்றும் 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (700 கி/ஹெ) அல்லது 3 பாக்கெட் அசோபாஸ் (1200 கி/ஹெ) ஆகிய நுண்ணுயிர் உரங்களுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து விதைககளை விதைப்புக்கு முன் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும் (விதைகளை நீக்கிய பின் கிடைக்கும் கரைசலையும் நாற்றங்காலில் விடலாம்).
    • உயிரியல்கட்டுப்பாடு இனங்கள் நுண்ணுயிர் உரங்களுடன் ஏற்புடையன
    • எனவே விதை நேர்த்திக்கு இவை இரண்டும் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்
    • பூஞ்ஞானங் கொல்லியும் உயிரியல் கட்டுப்பாடு இனங்களும் ஒவ்வாமையையுடையன

நாற்றங்கால் தயாரிப்பு

  • தயாரிக்கப்பட்ட நிலம்2.5 மீ (8 அடி) அகலமுள்ள பாத்திகளாக, 30 செ.மீ ( ஒரு அடி) இடைவெளியுள்ளவாய்க்கால் பாத்தியைச்சுற்றிலும் அமைக்க வேண்டும்
  • பாத்தியின் நீளம் 8 முதல் 10 மீ வரை நிலத்தின் சமன் அமைப்பு. மண்ணின் தன்மையைப் பொறுத்து அமைக்கலாம்
  • வாய்க்கால் அமைக்கும் போது எடுக்கப்பட்ட மண்ணை பாத்தியில் பரப்பி நிரவலாம் அல்லது வாய்க்காலை சீந்தி மூலம் அமைக்கலாம்
  • பாத்தி சமன்படுத்தப்படுவது மிகவும் அவசியம்

விதைப்பு

  • முளைகட்டிய விதையினை பாத்தியில் பரவலாக தூவ வேண்டும். தண்ணீர் அளவு 1-2 செ.மீ. அளவு இருத்தல் நல்லது

நீர் நிர்வாகம்

  • விதைத்த 18-24 மணி நேரத்திற்குள் தண்ணீர் வடிக்கப்பட்டு விதை முளைக்க சந்தர்ப்பம் தரப்படவேண்டும்
  • தண்ணீர் குண்டு குழிகளில் கூட தேங்கி நிற்காதவாறு பாத்தி அமைப்பும், நீர் நிர்வாகமும் அமைக்கப்பட வேண்டும்.
  • விதைத்த மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீர் கட்டுவது, தண்ணீர் தேங்கி நிற்காதவாறு அமைதல் வேண்டும். நீரின் உயரம் ஐந்து நாளிலிருந்து சிறிது சிறிதாக நாற்றின் வளர்ச்சியைப் பொருத்து உயர்த்தப்படலாம்
  • அதிக பட்சமாக (ஒரு அங்குல ஆழம்) நீர் கட்டுவது சாலச் சிறந்தது.

களை நிர்வாகம்

  • விதைத்த மூன்றாம் அல்லது நான்காம் நாளில் களை முளைப்பிற்கு முந்திய களைக்கொல்லி பிரிடில்லாகளோர் + சேஃப்பனர் 0.3 கிலோ ஒரு எக்டர் நாற்றுகளுக்குத் தெளிக்கப்பட வேண்டும் களைக்கொல்லி தெளிப்பதற்கு முன்னர் சிறிய அளவு தண்ணீர் நிறுத்தப்படவேண்டும். தேக்கப்பட்ட நீர் வடிக்கப்படலாகாது, மாறாக தானாகவே மண்ணில் மறைதல் நல்லது.
  • பூட்டாக்ளோர் 2.0 லி / ஏக்டர் அல்லது பென்டிமெத்தாலின் 2.5 லி / ஏக்டர் அல்லது அனிலோபோஸ் 1.25 லி / ஏக்டர் விதைத்த 8 நாட்களுக்கு பிறகு ஈரப்பதம் இருக்கும்பொழுது களைக் கொல்லியை தெளிக்க வேண்டும்.

உர நிர்வாகம்

  • 20 சென்டிற்கு 1 டன் தொழு உரம்/ மாட்டு எரு தேவை
  • கடைசி உழவின் போது 20 சென்ட் நாற்றங்காலிற்கு 40 கிலோ டிஏபி உரமோ அல்லது 16 கிலோ யூரியாவும் 120 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் கலந்தோ இடப்படவேண்டும்.
  • அடியுரமாக டிஏபி இடுவது குறைவான மண் சத்துள்ள நாற்றங்கால்களுக்கு மட்டுமே
  • மண் சத்துக்கள் குறைவாக உள்ள நாற்றங்காலுக்கு, நாற்றுக்கள் 25 நாட்களுக்குப் பின்னர் எடுத்து நடவு செய்ய வேண்டிய தருணங்களில், 25 நாட்களுக்கு பின் இரசாயன உரங்களை இட்டு, அதிகபட்சம் அன்றிலிருந்து 10 நாட்களுக்குள் நாற்றுக்கள் எடுத்து நடவு செய்யப்படுதல் அவசியம்
  • மிக அதிகமான களிமண் பூமிகளில் நாற்றுக்கள் எடுக்கும் தருணத்தில் வேர்கள் அழுகுகின்ற நிலை ஏற்படின், விதைத்த 10 ம் நாள் ஒரு சென்டிற்கு 4 கிலோ ஜிப்சம் மற்றும் 1 கிலோ டிஏபி கலந்து இட வேண்டும்.

புழுதி நாற்றங்கால்

  • ஆற்றில் தண்ணீர் வருவது பின்தங்கும் தருணத்தில் புழுதி நாற்றங்கால் வரப்பிரசாதமாக அமையலாம்
  • நாற்றங்காலின் பரப்பு, விதை அளவு மற்றும் விதை நேர்த்தி சேற்று நாற்றங்காலுக்குக் குறிப்பிடப்பட்டவை போன்றதே
  • நாற்றங்கால் நன்கு உழப்பட்டு 1 முதல் 1.5 மீ அகலமுள்ள பாத்திகளாக அமைத்தல் வேண்டும். பாத்தியினைச் சுற்றிலும் ஒரு அடி அகலமுள்ள வாய்க்கால் அமைப்பது நல்லது
  • களிப்பு அதிகமுள்ள மண் வகைகளில் மேட்டுபாத்திகள் அமைக்கலாம், மணற்பாங்கான பகுதிகளில் படுக்கைப் பாத்திகள் போதுமானது.
  • நேர்த்தி செய்யப்பட்ட உலர்ந்த விதைக் தூவப்பட்டு, நன்கு மக்கிய மாட்டு அல்லது தொழு உரத்தினால் விதைகள் மூடப்பட வேண்டும்
  • நீர் நிர்வாகம் மண்நனையும் அளவு நீர் பாய்ச்சுவதோ, தெளிப்பதோ வேண்டும்
  • நான்கு இலைப் பருவம் நடவிற்கு ஏற்றது.

நடவு வயல் பராமரிப்பு
நிலம் தயாரித்தல்

  • கோடையுழவு செய்த வயல்களுக்கு ஆரம்ப நீர்த்தேவை குறைவாகத் தேவைப்படுகின்றது
  • சேற்றுழவு செய்வதற்கு ஒரிரு நாட்கள்முன்பே தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்கு நீர் பாய்ச்சுதல் வேண்டும்
  • பின்னர் சேற்றுழவு முறையே செய்யப்படவேண்டும்
puddlling
  • இருக்கம்படாத சேற்று மண் இவ்வகையான மண்ணில் உழுகின்ற இயந்திரமோ கால் நடைகளோ நகரமுடியாத நிலை ஏற்படுகின்றது. இந்நிலையைக் குறைக்கவோ தவிர்க்கவோ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 400 கிலோ எடையுள்ள ‘கல் உருளை’ அல்லது எண்ணை தகரத்தினுள்ள கற்கள் நிரப்பிய உருளை சரியான ஈரப்பத்தில், எட்டு முறை திரும்பத்திரும்ப இழுக்கப்படுவதால், மண் இறுகி பதப்பட வாய்ப்புள்ளது.
  • உவர் நிலம் ( 8.5க்கு மேல்) இம்மாதிரியான நிலத்தினை நன்கு உழுது அந்நிலத்தின் ‘ஜிப்சம் தேவை’யின் பாதி அளவிற்கு, ஜிப்சம் இடப்படுதல் வேண்டும். மேலும் 5 டன் பசுந்தழை உரத்தினையும் இட்டு நன்கு மிதித்து, பின்னர் சரியான முறையில் வடிகால் அமைத்து, தொடர்ந்து 10-15 நாட்களுக்கு நீர் நிறுத்தி வரவேண்டும். அதன் பின்னர் நடவு செய்யலாம். நடவிற்கு முன்னர் 37.5 கிலோ ஜிங்க் சல்பேட் சம அளவு மணலுடன் கலந்து வயலின் மேற்பரப்பில் தூவிவிடவும்.
  • களர் நிலம் (மேல் காணப்படும் தருணத்திற்கு) குறுக்கு நெடுக்காக ஆழ் வடிகால் அமைத்து, 5டன் பசுந்தழை உரமிட்டு 10-15 நாட்கள் நீர் கட்டி நீர் மண்ணினுள் ஊடுருவி மறைந்து விடுவதே போதுமானது. நடவு செய்ய 25 சதம் அதிகம் தழைச்சத்து அடியுரமாக இடப்படவேண்டும். ஜிங்சல்பேட் உவர் நிலத்திற்கு கூறப்பட்டது போல் செய்யப்படவேண்டும்
  • அமிலத்தன்மையுடைய நிலவகைகளுக்கு சுண்ணாம்புக்கல் 2.5 டன் ஒரு எக்டருக்கு இடப்பட்டு நடவு செய்யப்பட வேண்டும். இம்முறை தொடர்ந்து ஐந்தாவது பயிர் வரை பின்பற்றப்படவேண்டும்.

தேவையான பயிர் எண்ணிக்கையை நிர்வகித்தல்

நாற்றின் வயதும் பயிர் வளர்ச்சியும்

  • குறுகிய கால் ரகமாயின் 18 முதல் 22 நாட்கள் நாற்றுக்கள் மத்திய கால தகமெனில் 25-30 நாட்கள் நீண்ட கால ரகமெனில் 35-40 நாட்கள் தக்கவயது எனக்கொள்ளவும்.

நாற்றங்காலிலிருந்து பிரித்து நடவு செய்தல்

  • தக்க பருவத்தில் - நான்கு இலைப் பருவத்தில் நாற்றுக்கள் பிரித்து நடப்படவேண்டும்
  • மூன்று இலைப் பருவத்திலேயே நடவு செய்யலாம். அவ்வாறு செய்வதால் அதிகமான தூர் கட்ட சந்தர்ப்பம் உள்ளது. சற்றேக் கவனத்துடன் நீர் பராமரிப்பு, நிலம் சமன் படுத்துதல் போன்றவைகள் மேற்கொள்ளப்படவேண்டும். மேலும் விளக்கத்திற்கு திருந்திய நெல் சாகுபடிப் (பகுதி 1.8) பகுதியைப் பார்க்கவும்.
  • ஐந்து இலை, அதற்கு மேல் வயது ஆகிவிட்ட நாற்றுக்கள், தேவயைான பயிர் வளர்ச்சியைத் தராமல் மகசூல் குறைய வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு வயதான நாற்றுக்களை நடவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் தனிச் சிறப்பு பயிர் வளர்ப்பு முறைகள் பின் பற்றப்பட வேண்டும்.

நடவிற்கு முன் நாற்றின் வேரை நுண்ணுயிருடன் நனைத்தல்

40 லிட்டர் தண்ணீரில் 5 பாக் (1000 கி/ஹெ) அசோஸ்பைரில்லம் மற்றும் 5 பாக் பாஸ்போபாக்டிரியா (1000 கி/ஹெ) அல்லது 10 பாக் அசோபாஸ் (2000 கி/ஹெ) கலந்து கரைசலை தயாரிக்கவும். இக்கரைசலில் நாற்றுக்களின் வேர்பாகம் நன்கு நனையுமாறு 15-30 நிமிடங்கள் வைத்திருந்து நடவுக்கு பயன்படுத்தவும்.

நடவு

  • பயிர் எண்ணிக்கையும் இடைவெளியும்
மண் குறைவான மண்வளம் சிறப்பான மண்வளம்

இரகத்தின்வயது

குறுகிய காலம்

மத்திய காலம்

நீண்ட காலம்

குறுகிய காலம்

மத்திய காலம்

நீண்ட காலம்

இடைவெளி (செ.மீ)

15 × 10

20 × 10

20 × 15

20 × 15

20 × 15

20 × 20

குத்துக்கள்

66

50

33

50

33

25

  • குறுகியகால ரகமென்றால் 2-3 நாற்றுக்களும், மத்திய கால, நீண்டகால ரகமெனில் 2 நாற்றுக்களும் நடவு செய்யப்படவேண்டும்.
  • மேலாக நடுவது (3.- செ.மீ) விரைவான வளர்ச்சியைத் தரவல்லது, அதிக தூர் பிடிக்கச் சந்தர்ப்பம்
  • மிகவும் ஆழமாக (7.5 செ.மீ) நடுவது காலம் தாழ்த்தி பயிர் உயிர் பிடிப்பதும் தூகள் குறைவாகக் தோன்றவும் வழிவகுக்கும்
  • நாற்றுக்கள் மண்ணின் மீது தூவப்படுவது அல்லது வைக்கப்படுவது நடுவதை விட சிறப்பு வாய்ந்தது (மேலும் விளக்கத்திற்கு பகுதி 1.6 யைப் பார்க்கவும்)
  • மிகவும் ஆழத்தில் நடுவதல் (2 அங்குலத்திற்கு மேல்) பயிர் பச்சை பிடித்து வளர்ச்சியடைவது காலம் தாழ்த்தப்படுகிறது. மேலும், தூர்களின் எண்ணிக்கை குறைவாகவே அமையும்.
  • வரிசையில் நடவு செய்வதால் ‘களை எடுக்கும் கருவி’ பயன்படுத்துதல் மற்றும் அதன் வழி தோன்றும் பலாபலனைத் தரவல்லது.
  • களை எடுக்கும் கருவி பயன்படுத்த குறைந்த பட்சம் 20 செ.மீ. அகலமுள்ள வரிசை அமைப்பு தேவைப்படுகின்றது.

வயதான நாற்றுக்களை நடும் தருணத்தில்

  • குறைவான மண்வளம் உள்ள நிலங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பயிர் இடைவெளியில்பயிரிடவேண்டும்
  • ஒன்று அல்லது இரண்டு நாற்றுக்களுக்குமேல் நடவு செய்யக்சகூடாது
  • வயதான நாற்றுக்கள் கற்றையாக நடவு செய்வதால் தூர் கட்டுவது தடைபடுகின்றது.
  • வயதான நாற்றுக்களிலிருந்து வெடிக்கின்ற தூர்கள் மட்டுமே அறுவடைவரை நிலக்கும் என்பதையும், சரியான கதிர் எடையுள்ளதாக அமையும் என்பதையும் உணர்ந்து பராமரிப்பு அமைதல் வெண்டும்.
  • புதியதாக தூர் வெடிக்கவும் அத்தூர் இரண்டாம் மூன்றாம் தூர்களை ஈனவும் தழைச்சத்து அடியுரமாக பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 50 சதம் அதிகமாக இடப்படுதல் வேண்டும். மற்ற தருணங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உர அளவே பின் பற்றப்படுதல் போதுமானது.

பாடு நிரப்புதல்

  • நட்ட 7 முதல் 10 நாட்களுக்குள் பாடு நிரப்பப்படவேண்டும்

உர நிர்வாகம்

இயற்கை உரமிடுதல்

  • தொழு எரு அல்லது மக்கு உரம் 12.5 டன் ஒரு எக்டருக்கு அல்லது
  • பசுந்தாள் உரம் 6.25 டன்

பசுந்தாள் உரம் இடும்முறை

  • பசுந்தாள் உற்பத்தி 6 டன் என்ற அளைவ எட்டியிருந்தால் அதனை அப்படியே மடக்கி உழுதுவிடவேண்டும். உழுவதற்கு இரும்பு கலப்பையோ அல்லது நாட்டுக் கலப்பையோ பயன்படுத்தலாம்
  • அத்தருணத்தில் குறைந்த பட்சம் ஒரு அங்குலம் தண்ணீர் தேக்கப்பட வேண்டும்
  • குறைந்த பட்சம் அரை செ.மீ. ஆழத்திலாவது பசுந்தாள் உரம் மண்ணினுள் மறையுமாறு ‘பசுந்தாள் மிதிப்பான்’ பயன்படுத்தி அமுத்துதல் வேண்டும்
  • பசுந்தாழை உரமென்றால் சிறிது சிறிதாக நறுக்கி, வரிசை வரிசையாக பரப்பி, மிதித்தல் நல்லது

அடித்தாள் மிதித்தல்

  • அடித்தாள் மிதிக்கப்படும்போது 22 கிலோ யூரியா ஒரு ஹெக்டரில் இடுதல் வேண்டும்
  • தாளடி நடவிற்கு முன், குறைந்தது பத்து நாட்களாவது தாள் மக்குவதற்கு சந்தர்ப்பம் தரப்படவேண்டும்.

நுண்ணுயிர் உரங்கள் இடுதல்

  • அசோல்லா 250 கிலோ என்ற அளவில் நடவு நட்ட மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பரவலாக தூவி நெற்பயிருடன் வளர வேண்டும். அசோல்லா வளர்ச்சியடைந்த நிலையில், நெல்லிற்கு களை எடுக்கும் தருணத்தில், ரோட்டரி களை எடுப்பான் மூலமோ அல்லது காலாலோ மண்ணிற்குள் மிதித்து விடுதல் வேண்டும்.
  • நீலப்பச்சைப்பாசியின் விதை 10 கிலோவை நடவு செய்த 10-ம் நாளில் தூவி சீரான அளவு தண்ணீர் கட்டி வளர்த்திட வேண்டும்.
  • ‘அசோஸ்பைரில்லம்’ மற்றும் பாஸ்போபாக்டீரியா’ ஒவ்வொன்றும் 10 பாக் (2 கிலோ) என்ற அளவில் எடுத்து, 25 கிலோ மக்கிய பண்ணையுரம் மற்றும் 25 கிலோ பெருமணலுடன் நன்கு கலந்து, நடவிற்கு முன் சீராகத் தூவி விட வேண்டும். அல்லது 20 பாக்(4 கிலோ) ‘அசோபாஸ்’ பயன்படுத்தலாம்.
  • சூடோமோனாஸ் ஃபுளுரசன்ல் (க1) 2.5 கிலோவும் நடவிற்கு முன் இடப்படுதல் வேண்டும்.

இராசயன உரங்கள் இடுதல்

  • மண் பரிசோதனை மூலம் தேவையான உரங்களைக் கணக்கிட வேண்டும்.
  • இறவை நெற்பயிருக்கான குறிப்பிட்ட வயலுக்கேற்ற உரமிடும் முறை மூலம் (LCC) மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இடுவதை நிர்ணயிக்கவேண்டும் (றிநனேஒ-ஐ)
  • மண் பரிசோதனை மூலம் உரங்கள் அளித்திட சந்தர்ப்பம் கிட்டாவிட்டால் கீழ்க்கண்ட பொதுவான பரிந்துரையைப் பின்பற்றலாம்.

பொதுவான உர பரிந்துறை -  ஒரு எக்ருக்கு (கிலோ என்ற அளவில்)

சத்துக்கள் தழை மணி சாம்பல்

குறுகிய கால ரகஙகள் (வறட்சிப்பருவம்)

அ.காவேரிப்பகுதி,கோவைப்பகுதி
ஆ.மற்ற பகுதிகள்

 

150
120

 

50
40

 

50
40

மத்திய மற்றும் நீண்ட காலப்பயிர்கள்
(மழைப்பருவம்)

150

50

50

ஒட்டு ரகங்களுக்கு

175

60

60

உரம் குறைவாகத் தேவைப்படும் ரகங்கள்
(வெள்ளைப் பொன்னி போன்றவை)

75

50

50

  • மூன்று பிரிவுகளாக தூர் கட்டும் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் தருணங்களில் இடுதல் வேண்டும்.
  • மேற்கண்ட பரிந்துரை பொதுவானதே, இடத்திற்கு ஏற்ப பரிந்துரைகள் மாறுபடுகின்றன. பகுதிக்கேற்ற பரிந்துரைகள் மிகவும் அவசியமானது என்பது நன்கு உணரப்பட்ட விஞ்ஞான உண்மை.

நெற் பயிரின் வளர்ச்சிப் பருவங்கள் (நாட்கள் - விதைத்த பின்)

பருவம் குறுகிய காலம் (105) மத்திய காலம் (135) நீண்டகாலம்(150)

விரைந்து தூர் கட்டுதல்

35-40

50-55

55-60

பூங்குருத்து உருவதால்

45-50

70-75

85-90

கதிர் வெளிவருதல்

70-75

100-105

115-120

           
தழைச்சத்து, சாம்பல் சத்து பிரித்திடுதல்

  • தழைச்சத்தும், சாம்பல்சத்தும் நான்கு பிரிவுகளாக முறையே கடைசி உழவின்போது தூர் கட்டும் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவங்களில் இடப்படுதல் வேண்டும்.
  • தூர் கட்டும் மற்றும் கதிர் உருவாகும் பருவங்கள் மிகவும் முக்கியமாக பயிர்வளர்ச்சியில் காலங்களாகும். அத்தருணத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவு முறை குறையாமல் இடப்படுதல் மிகவும் முக்கியம்.
  • அடியுரமாகவும், கதிர் வெளிவரும் தருணத்திலும் இடப்படுகின்ற அளவு மற்ற பருவங்களுக்குச் சமமாகவோ அல்லது சற்று குறைவாகவோ அமையலாம்.
  • தழைச்சத்து நிர்வாகம் இலைவண்ண அட்டை மூலம் இடப்படுதல் நலம்
fertilizer

இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து நிர்வாகம்

  • தழைச்சத்து இடும் தருணம் இலை வண்ண அட்டையின் மூலம் முடிவு செய்யப்பட்டு அளவிடப்பட்ட எண்ணை வைத்து முடிவுசெய்யப்படுகிறது.
  • இலையின் பச்சைய அளவை மிதிப்பழவிடுவது நடவு நட்ட 14ஆம் நாளிலிருந்து அல்லது விதைத்த 21 ஆம் நாளிலிருந்து பின்னபற்றவேண்டும்.
  • அளவீடு ஒவ்வொரு வாரமும் செய்யப்படவேண்டும்.
  • மதிப்பீடு செய்ய ஏற்ற இலை முழுதாய் வெளிவந்துள்ள இலைகளில் மேலிருந்து மூன்றாவது ஆகும்
  • மதிப்பீடு செய்ய குறைந்த பட்சம் 10 இலைகள் இங்கும் அங்குமாக தேர்வு செய்யப்படவேண்டும்.
  • வண்ண அட்டையைக் கொண்டு இலையின் வண்ணத்தை ஒப்பிடும்போது சூரியவெளிச்சம் இலையில் நேரடியாகப்படாதவாறு அளவிடுபவர் நிற்கவேண்டும்
  • அளவிடும் காலம் பொதுவாக ஒருகுறிப்பிட்ட நேரமாக இருத்தல் நல்லது. அது காலை 8-10 மணிக்குள் என்றால் நல்லது.
  • அளவிடுபவரும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நபரே என்றால் அளவீடு சரியாக அமையவாய்ப்புள்ளது.
  • அளவீடு எண் ரகத்திற்கு ஏற்றவாறு வேறுபடுகின்றது. அதிக தழைச்சத்தை தாங்க முடியாத இரகங்கள் எனில்3.0 என்றும் மற்ற ரகங்களுக்கும், 4.0 என்பதை மறக்கலாகாது
  • அவ்வாறு முடிவு செய்யப்பட்ட அளவீடு பத்திற்கு ஆறு அல்லது அதற்கு மேல் குறிப்பிட்ட அளவைவிட கீழ் இருக்குமெனில் உடனே தழைச்சத்து இடப்பட வேண்டும் என்று பொருள். நட்ட ஏழு நாட்களில் 25 கிலோ / எக்டர் தழைச்சத்து (ஒரு பை யூரியா) அளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் 40 கிலோ / எக்டர் தழைச்சத்தை குருவை அல்லது குறுகிய கால இரகங்களுக்கு அளிகக் வேண்டும் அல்லது ஒவ்வொரு முறையும் 30 கிலோ / எக்டர் தழைச்சத்தினை மத்திய மற்றும் நீண்ட கால இரகங்களுக்கு அளிக்க வேண்டும். இரகங்கள் மற்றும் கலப்பினங்களின் அளவீட்டு எண் 4கிற்கு கீழ் குறைந்தும் மற்றும் வெள்ளை பொன்னி இரகத்திற்கு 3 என்ற அளவீட்டு எண்ணாக இருப்பினும் நட்ட 14ம் நாளிலிருந்து கண்காணிக்க வேண்டும்.
  • வயதான நாற்றுகள் : 35 முதல் 45 நாள் வயதுள்ள நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்தினால் அதன் மகசூலை அதிகரிக்க 35 கிலோ / எக்டா தழைச்சத்தினை அடியுரமாக அளிக்க வேண்டும். மேலும் நட்ட 14-ம் நாளிலிருந்து இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

** பகுதிக்கு குறிப்பிட்ட ஊட்டச்சத்து மேலாண்மை அணுகு முறை மூலம் நெல் பயிரிடும் பகுதிகளுக்காக விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உர அளவுகள் (காவேரி டெல்டா பகுதிகளை தவிர)

வ.எண் பகுதி பரிந்துரைக்கப்பட்ட உர அளவு (கிலோ/எக்டர்)*
மணிச்சத்து சாம்பல்சத்து
1 காவேரி டெல்டா பகுதி
(i) பழைய டெல்டா 35 50
(ii) புதிய டெல்டா 35 80
2 கோயமுத்தூர் மாவட்டம்
(i) பொதுவாக 30 40
(ii) ஆனைமலை மண்டலம் 30 80
3 கிள்ளிகுளம் 30 50
4 திருச்சி 35 50
5 அம்பாசமுத்திரம் 40 50
6 பவானி சாகர் 20 25
7 பையூர் 25 45
8 ஏத்தாப்பூர் 30 45
9 அருப்புக்கோட்டை 20 30
10 கடலூர் 30 50

** குறிப்பிட்ட மண் வகைகளிலிருந்து கிடைக்கும் மகசூலை பொருத்து எஸ்.எஸ்.என்.எம் அடிப்படையில் மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து பல்வேறு நெல் பயிரிடும் பகுதிகளுக்காக விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில் பரிந்துரைக்கப்பட்டது.

மணிச்சத்து இடப்படும் முறைகள்

  • மணிச்சத்து அடியுரமாக இடப்பட்டு நன்று கலக்கப்பட வேண்டும்
  • பசுந்தாள் உரத்திற்கு மாற்றாக ஆலை அழுக்கு அல்லது தொழு உரமாக்கிய நார்க்கழிவு போன்றவைகளும் இடலாம்.
  • பசுந்தாள் உரம் இடப்படும் தருணத்தில் மணிச்சத்திற்கு ‘ராக்பாஸ்பேட்டு’ தேர்வு செய்யப்படலாம். அவ்வாறு தேர்வு செய்து இடப்பட்டபின், அடுத்த பருவத்திற்கு மணிச்சத்து இடப்பபடுவதை தவிர்க்கலாம். ‘ராக்பாஸ்பேட்டு’ உரத்தினை சூப்பர் பாஸ்பேட்டுடன் அல்லது டைஅமோனியம் பாஸ்பேட்டுடன் 75 : 25 அல்லது 50 : 50 சதம் என்ற அளவை கலந்து இட்டு சரியான பலன் பெறலாம்.

ஐிங் சல்பேட் உரமிடுதல்

  • 25 கிலோ ஐிங் சல்பேட்டை 50 கிலோ உலர்ந்த மணலுடன் கலக்குதல் வேண்டும்
  • உழுது சமன்படுத்தப்பட்ட வயலில் நடவுக்கு முன் பரவலாக மண்ணின் மேற்பரப்பில் தூவிவிடவும்
  • அதன் பின்னர் மண்ணுடன் கலக்கத்தேவையில்லை
  • பசுந்தளையுரமாகவோ, தாழ் உரமாகவோ இடப்பட்டிருந்தால் ஐிங் சல்பேட்டின் அளவை 12.5 கிலோவாகக் குறைத்துக்கொள்ளலாம்.

ஐிங் குறைபாடு காணப்பட்டால் போக்கும் விதம்

  • ஐிங்க் சல்பேட் 0.5 சதம் + 1.0 சதம் யூரியா கரைசல் இலைவழியே 15 நாட்கள் இடைவெளியில் குறைபாடு மறையும் வரை தெளிக்கப்பட வேண்டும்.

ஐிப்சம் இடுதல்

  • நடுநிலையான மற்றும் சுண்ணாம்புத் தன்மையுடைய மண் வகைகளுக்கு 500 கிலோ அளவில் ஐிப்சம் கடைசி உழவின் போது இடப்படவேண்டும்.

பொதுவான இலைவழி உரம் அளித்தல்

  • நெல்லிற்கு கதிர் உருவான தருணத்திலும் மீண்டும் 10 நாட்கள் கழித்தும் இருமுறை, இலைவழி உரமாக “யூரியா 1” + டிஏபி 2” + மூரியேட் பொட்டாஷ் 1” ஆகிய மூன்றின் ஒட்டு மொத்த கரைசலின் கூட்டுமுறைப்படி தெளிக்கப்படலாம்.

சத்துப்பற்றாக்குறை, நச்சுத்தன்மையின் அறிகுறி

  • தழைச்சத்து பற்றாக்குறை செடியின்  கீழ் இலைகள் மஞ்சள் நிறத்துடனும்  பொதுவாக வளர்ச்சிக்  குன்றியும் காணப்படும். பற்றாக்குறை மிகவும் தீவிரமான நிலையில் இலைகள் பழுப்புநிறமாக மாறி மடிந்துவிடும். பற்றாக்குறையின் அறிகுறி இலையின் நுனியில் தோன்றி இலையின்நடு நரம்புவரை பரவி இறுதியில் இலை மடிந்து விடும்.
  • சாம்பல் சத்து பற்றாக்குறை புது இலையில் நீலம் கலத்த பசுமை நிறத்திலும், முதிர்ந்த இலைகள் முறையற்றும் மஞ்சள் தேமலுடனும், திட்டுத்திட்டாக கருகியும் காணப்படும். கதிர் முதிர்வது குறைந்தும் காணப்படும். தண்டு பலவீனமடைந்து சாய்ந்தும் விடலாம்.
  • மக்னீசியம்பற்றாக்குறை இலைகள் மஞ்சள்தேமலுடன் நுனியில் வெள்ளைப் புள்ளியுடன் காணப்படும்.
  • கரும்பின் நச்சுத்தன்மை அடியிலைகளின் நுனியிலிருந்து பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி இலையில் காம்புவரை வளர்ந்து பசுமையான அல்லது ஆரஞ்சு நிற வண்ணத்தில் அறிகுறி தென்படும்
  • துத்தநாகக் குறைபாடு அடியிலைகளின் அடிப்பாகத்தில் மஞ்சள் தேமல் குறித் தென்படும். மேலும் துருபிடித்த தோற்றமும் செடியில் தென்படும்.
  • தாமிரச் சத்து குறைபாடு: இலைகளில் பச்சை சோகை நடு நரம்பு தவிர அனைத்து பகுதியிலும் பரவும். அதன்பின் இலை நுனிகளில் செம்பழுப்பு சிதைவுப் புள்ளிகள் காணப்படும். புதியதாக உருவாகும் இலைகள் சுருண்டு காணப்படும்.

வேப்பம் பிண்ணாக்கு கலந்து மற்றும் தார் பூசிய யூரியா

வேப்பம் பிண்ணாக்கு அல்லது வேப்பம் கொட்டையை நன்கு நசுக்கி பொடியாக்கி (2 மி.மி. சல்லடையில் சலிக்க வேண்டும்). யூரியாவுடன் 2” அளவில் இரண்டரக்கலந்து ஒரு இரவுப்பொழுது வைத்திருந்து பயன்படுத்தவேண்டும். யூரியா, ஜிப்சம், வேப்பம் பிண்ணாக்கு 5 :4:1 என்ற விகிதத்தில் கலந்தும் தழைச்சத்தின் பயன்படும் திறனை அதிகரிக்காலாம். 100 கிலொ யூரியாவிற்கு 1 கிலோ நிலக்கரித்தார் தேவைப்படும். தாரை குறைந்த அளவு வெப்பத்தில் காய்ச்சி 1.5 லிட்டர் மண்ணெண்னையுடன் கலந்து பின்னர்100 கிலோ யூரியாவுடன் கலந்து நன்கு கலக்கி நிழலில் உலரவைத்து பின்னர் இடலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட யூரியா ஒரு மாதம் வரைகூட வைத்து பயன்படுத்தலாம்.

களை மேலாண்மை

  • களையைகட்டுப்படுத்த உருளைச்சக்கர களை எடுப்பானை நடவு நட்ட 15-ஆம் நாளும் அதன் பின்னர் 10 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறையும் பயன்படுத்தலாம். களை எடுக்கும் செலவு குறைக்கப்படுவதுடன் வேர்ப்பகுதிக்கு ஆக்சிஜன் கிடைப்பதுடன், வேரின் ஆற்றல் திறன் சீரமைக்கப்பட்டு உணவுப்பொருட்கள் சிறப்பாக மாற்றல் அடைந்து, நெல்லின் கதிர்மணிகள் அதிகம் பிடித்து மகசூல் அதிகமாக வாய்ப்புள்ளது.
  • நெல்லுடன் அசோல்லா வளர்ப்பதாலும், நெல்லும்-பசுந்தாள் ஒன்றாக பயிரிடுவதாலும் களையின் ஆதிக்கத்தைக் குறைக்கலாம்.
  • கோடை உழவு மற்றும் கோடை காலப்பயிர்கள் பயிர்த்திட்டத்தில் சேர்க்கப்படும்போது களையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளது.

களை முளைப்பதற்கு முந்தி களைக்கொல்லிகள்

  • பூட்டாக்குளோர் 1.25 கிலோ அல்லது அனிலோபாஸ் 0.40 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். மாற்றாக களை முளைப்பிற்கு முந்திய களைக்கொல்லிகளின் கலவையையும் பயன்படுத்தலாம். அவையாவன பூட்டாக்குளோர் 0.6 கிலோ + 0.75 கிலோ 2,4 DEE அல்லது அனிலோபாஸ் 2,4 DEE ‘தயார் – கலவை’. தெளிக்கப்பட்டு நட்ட 30-35 ஆம் நாளில் கைக்களை எடுத்தல் வேணடும்
  • களைக்கொல்லி 50 கிலோ உலர்ந்த மணலுடன் கலக்கப்பட்டு, நட்ட 3 அல்லது 4-ம் நாளில் மண் மறையுமாறு சிறிய அளவு நீர் நிறுத்தி தூவப்படவேண்டும். நீர் வடித்தலோ, கட்டுதலோ அடுத்த இரண்டு நாட்களுக்குத் தவிர்த்தல் வேண்டும்.

களைமுளைத்தபின்னர் இடும் களைக்கொல்லிகள்

  • களைகள் முளைப்பதற்கு முன்பே இடப்படவேண்டிய களைக்கொல்லிகள் இடப்படாத தருணத்தில், நட்ட 15-ஆம் நாளில் களைக்கொல்லிகள் இடப்படலாம்.
  • 2,4 டி சோடியம் உப்பு (பெர்னாக்சோன் 80% நனையும் பொடி) 1.25 கிலோவை 625 லிட்டர் நீருடன் கலந்து களை முளைத்த 3-4 இலைப்பருவத்தில் தெளிக்கப்படவேண்டும்.

நீர் மேலாண்மை

  • சேற்றுழவும், உழுது நிலத்தை சமன் செய்தலும், நீரின் தேவையைக் குறைக்கின்றன.
  • இரும்புச் சக்கரக் கலப்பை மூலம் சேற்றுழவு செய்யும்போது நீர் மண்ணினுள் ஊடுருவி வீணாவது 20% வரை தடுக்கப்படுகிறது.
  • வயலில் மடக்கி உழப்பட்ட பசுந்தாள் உரம் நல்ல முறையில் மக்குவதற்கு குறைந்தது ஒரு அங்குல நீர் நிறுத்தப்படவேண்டும். குறைவான நார்த்தன்மையுடைய சணப்பை, தக்கைபபூண்டு போன்றவைகளுக்கு 7 நாட்களும் அதிகம் நார்த்தன்மையுடைய கொளுஞ்சி இனங்களுக்கு 15 நாட்களும் நீர் நிறுத்தி, அதன்பின்னரே நடவு செய்யவேண்டும்.
  • நடவு செய்யப்படும்பொழுது, தண்ணீரின் அளவு, சேறும் சகதியுமாய் இருத்தல் நல்லது அவ்வாறு அமைந்தால் சரியான ஆழத்தில் நடவும். அதிக தூர் பிடிப்பதற்கான சந்தர்ப்பமும் அதிகம்.
  • நட்ட ஒரு வாரத்திற்கு ஒரு அங்குல நீர் தேக்கி வைக்கவேண்டும். இக்காலம் தூர் பச்சை படிக்கும் காலமானதால், இந்த நீர் அளவு குறையாமல் நீர் பராமரிக்கவேண்டும்.
  • பச்சை பிடித்த பின்பு 2 அங்குல ஆழத்திற்கு நீர் கட்டி, கட்டிய நீர் மறைந்து மயிரளவு மண்வெடிப்பு தோன்றும்போது மீண்டும் நீர் கட்டுதல் நலம். இம்முறையில் நீர் கட்டுதல் பயிர் முதிர்ச்சியடையும் வரை கடைபிடிக்கவேண்டும்.

நீர்மறைந்து மண்வெடிப்பு தோன்ற தேவையான நாட்கள்

மண் வகை கோடையில் குளிர்காலத்தில்

இருபாடு மண்

1

3

களிமண்

தண்ணீர் மறைந்தவுடன்

1-2

  • கொண்டைக் கதிர் பருவத்திற்கு பின்னர் 2 அங்குலத்திற்குமேல் ஆழமாக நீர் பாய்ச்சுவதோ தொடர்ந்து அதே நிலையில் தண்ணீரின் அளவை நிலை நிறுத்துவதோ வேரின் திறனை வெகுவாக பாதிக்கவல்லது. வேர் அழுகி திறனை இழப்பதும். கதிர் சரியாக வெளிவராததும், வந்த கதிர்களில் நெல் மணிகள் சரிவர முதிர்ச்சியடையாததும்,  தவறான நீர் மேலாண்மையினால் என்பது நன்கு உணரப்படுதல் வேண்டும்.
  • அவ்வாறு அதிகமான ஆழத்திற்கு நீர் தேங்க வேண்டிய நிர்பந்தத்தில் சரியான வடிகால் அமைக்கப்படுவது அவசியம் ‘நீர் கட்டுவது கட்டிய நீர் முழுவதுமாய் மறைந்த பின்னர்’ என்ற மேலாண்மையைப் பின்பற்றினால் நல்லது.
  • பொதுவாக கடைசி நீர் கட்டுவது அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பாக அமைவது நல்லது.

நீர் பாய்ச்சுவதற்கான முன்னெச்சரிக்கைகள்

  • ஒவ்வொரு வயலும் 25 முதல் 50 சென்ட் உள்ளதாக அமைத்துக் கொள்ளுதல்
  • இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட வயல்களின் நான்கு புறமும் வரப்பிற்கு உட்புறமாக 30-45 செ.மீ. இடைவெளியில் கை வரப்பு அமைத்தல் தண்ணீர் துவையைக் குறைப்பதுடன் வரப்பின் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்கவும் முடியும்.
  • மண்ணின் நீர்க்கசிவு பூமியின் அடியைநோக்கி சென்று வீணாகுவதைத் குறைக்க நீரின் மட்டம் 2 அங்குலத்திற்கும் குறைவாக பராமரித்தல் அவசியம்.
  • நீர்பிடிப்பு உள்ள நிலப் பகுதிகளுக்கு வடிகால் அமைக்கப்படுவது மிகமிக அவசியம். வடிகால் வயலின் மத்தியிலும், குறுக்காகவும் 2 அடி ஆழத்திற்கு 11/2 அடி அகலத்திற்கு அமைக்கப்படலாம்.
  • நீர் மேலாண்மையின் சிறப்பு, எந்த நிலையிலும் மண்ணில் வெடிப்புகள் தோன்றும் வரை நீர் மீண்டும் பாய்ச்சுவது தாமதப்படுத்தப்படலாகாது.
  • ஆற்றுப்பாசனம் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மிகவும் முறைப்படி, மிகையாமல் பயன்படுத்துதல் அவசியம்.
  • இருபோக  நெல் பயிரிடும் ஆற்றுப்பாசனப் பகுதிகளில் நீர் பற்றாக்குறை அல்லது தட்டுப்பாடு எதிர்பார்க்கப்படும் காலங்களில் குறுவை நெல்லிற்குப் பதிலாக பயறுவகைப் பயிர்களைப் பயிரிட்டு நீரின் தேவையைக் குறைக்க வேண்டும் அல்லது நஞ்சையில் புழுதி விதைத்த இறவை நெல் முறையைப் பின்பற்றலாம்.

அறுவடை

  • நடவு செய்யப்பட்ட இரகத்தின் வயதைப் பொறுத்து அறுவடை காலத்திற்கு 7 நாட்கள் முன்பாக நீர் தேங்கி நிற்காமல் பாரத்துக்கொள்வது அறுவடைக்கு நல்லது.
  • 80 சதம் கதிர்மணிகள் முற்றிய பின்பும் கூட வயலில் பச்சை இலைகளின் தோற்றம் காணப்படும் அளவிற்கு இன்று ரகங்கள் உள்ளன என்பதை மனதில் கொண்டு கதிர் முதிர்ச்சியடைந்துவிட்டதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
  • பொதுவாக கதிரின் அடிப்பகத்தில் உள்ள நெல்மணிகளை கை விரல்களினால் அழுத்திப்பார்த்து முதிர்ச்சியை முடிவு செய்யலாம். மணிகள் அழுத்தப்படும்போது கடினமாகவும் பால் வெளியில் வராத நிலையிலும் இருப்பின் அறுவடைக்குத் தயார் எனப்பொருள்.
  • அறுவடைசெய்த நெல்மணிகள் பதர் நீக்கப்பட்டு, இளம் வெயிலில் நீர்ப்பதம் குறைக்கப்பட்டு, 12% அளவிற்கு சேமிக்கப்படலாம். நெல்மணிகள் ஈரம் உலர்த்தப்படும் விதம் நெல்லின் அறவைத் திறனையும், அரிசியின் தன்மையையும் பாதிக்கவல்லது.
  • அறுவடையை 3-4 நாட்கள் முன்கூட்டி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது. சாப்பாட்டு உப்புக்கரைசல் 20 சதம் என்ற அளவில் இலைகளில் தெளிக்கப்பட்டு, தெளிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்கு பின் அறுவடை செய்யப்படலாம், இம்முறை பருவமழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ள காலங்களில் பின்பற்றலாம்.

நாற்றுக்கள் ‘விசிறும் முறையில்’ நடவு செய்ய வழிமுறைகள்

  • 20 நாட்கள் வயதுடைய நாற்றுக்கள் மிகவும் ஏற்றது.
  • நாற்றுக்களின் தேவை வரிசை நடவிற்கு ஆவதைவிட சுமார் 20 சதம் அதிகமும், கலப்பு நடவு முறை அளவிற்கு சமமானது.
  • நாற்றுக்களை உழுது நன்கு சமன் செய்யப்பட்ட நடவு வயலில் நடவு ஆட்களைக் வைத்து ‘தூவுவது போல்’ பிரித்து போட வேண்டும். எரியத்தேவையில்லை.
  • இம்முறை அதிகம் மழைபெய்யும் காலம் தவிர எல்லாக் பருவங்களிலும் பின்பற்றப்படலாம்.
  • சுமார் 50 சதம் வரிசை நடவிற்கு ஆகும் ஆட்கள் தேவையைவிடகுறைவாகவும், 35 சதம் கலப்பு நடவைவிட குறைவாகவும் தேவைப்படுதவதாய் கணக்கிடப்பட்டுள்ளது.
  • இம்முறையில் நாற்றுக்கள் விசிறப்பட்ட பின்பு அடுத்த 7 நாட்கள் நீரின் பராமரிப்பு சிறியமுறையில் அமையவேண்டும். சேற்று வயலில் நேரடி விதைத்த நெல்லிற்கு எடுத்துக்கொள்ளப்படும் நீர் பராமரிக்கும் வகனம் இம்முறைக்கும் ஏற்றது.
  • மற்ற சாகுபடி குறிப்புகள் நடவு செய்யபட்ட நெல்லிற்கு பின்பற்றப்படுவது போன்றதேயாகும்.
மகசூல் வரிசையில் நடவு செய்யப்ட்டமுறையைப் போன்றும், கலப்பு நடவிற்கும் அதிகமாக 10-12 சதம் வரை தரவல்லது
Updated on : Aug 2014
 
Fodder Cholam