Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: திருந்திய நெல் சாகுபடி
நாற்றங்கால் மேலாண்மை
விதையளவு
  • 7- 8 கிலோ ஒரு குத்துக்கு ஒற்றை நாற்று
  • 12 – 15 கிலோ /ஏக்கருக்கு ஒரு குத்துக்கு இரண்டு நாற்று நெல்பயிர் வளர்வதில் இடர்ப்பாடுகள் உள்ள இடத்திற்கு உகந்தது.
நாற்றங்கால் நிலத்தைத் தயார் செய்தல்:

  • ஏக்கரில் நடுவதற்கு 100 மீட்டர் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். சமமான நிலத்தை நீர் ஆதாரத்திற்குப் பக்கத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும். பிளாஸ்டிக் விரிப்பை விரித்து அல்லது பாலித்தீன் பைகளை உபயோகித்து மெல்லிய உயர்த்தப்பட்ட படுக்கையில் வைப்பதால், வேர்கள் வளர்ந்து மண்ணின் ஆழத்திற்குச் செல்லாமல் தடுக்கப்படுகிறது.
   
மண்கலவை தயார் செய்தல் :
  • 4m3 மண் கலவை  ஒவ்வொரு 100 மீட்டர் நாற்றங்காலுக்கும் தேவைப்படுகிறது. 70% மண்கலவை + 20% நன்கு மட்கிய அழுத்தப்பட்ட சேறு/ உயிர் எரிவாயு சாறு / makiya eru + 10 % நெல் உமி. 1.5 கிலோ மண்கலவையில் ஒருங்கிணைத்து டை அம்மோனியம் பாஸ்பேட் பொடியில் அல்லது 2 கிலோ 17-17-17 N.P.K. உரத்துடன் கலந்து இட வேண்டும்.

மண்கலவையைக் கலத்தல்:

மண்கலவையை நிரப்புதல்: 0.5 மீட்டர் நீளத்திற்கு மரச்சட்டத்தை வைக்க வேண்டும். பிளாஸ்டிக் இலையில் அல்லது வாழை இலையில் 1 மீட்டர் அகலத்திலும் மற்றும் 4 செ.மீ. ஆழத்திலும் 4 சம பாகங்களாகப் பிரித்தல். மரச்சட்டத்தை மண்கலவையுடன் மேல்பாகம் வரை மூடி விடவும்.

விதைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு  முன்னர் முளை கட்டுதல் : 24 மணி நேரம் விதைகளை ஊற வைத்தல். வடிகட்டி மற்றும் ஊறவைத்த விதைகளைக் காய வைத்தல் விதை முளைத்து வேர் பிரியும் போது (2-3 மீட்டர் நீளத்திற்கு) விதைக்க வேண்டும்.

உயிர் உரத்தின் பயன்பாடு : 100 மீ. நர்சரி நிலத்திற்கு 2 கிலோ அஸோஸ்பைரில்லம் மற்றும் 5 கிலோ மைக்கோரிஷால் பூஞ்சாணம் பயன்படுத்துதல்.


    

பாய் நாற்றங்கால்