Agriculture
நீர் மேலாண்மை :: பயிர் வளர்ச்சியில் நீரின் பங்கு


பயிர் வளர்ச்சியில் நீரின் பங்கு


  • தண்ணீர் ஒரு மூலக்கூறு பயிர்களில் திசுவுறை உயிர்ப்பொருள்
  • தண்ணீரால் நுண்ணூட்டச்சத்துக்கள் கரைவதன் மூலம் பயிர்கள் அந்நுண்ணூட்டசத்துக்களை எளிதில் எடுத்துக்கொள்ள முடிகிறது.
  • தண்ணீர் நுண்ணூட்டச்சத்துக்களின் கடத்தியாக செயல்படுகிறது.
  • ஒளிச்சேர்க்கை நடைபெற தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் இவ்ஒளிச்சேர்க்கையினால் கிடைக்கும் மூலப்பொருளை தாவரத்தின் வெவ்வேறு பகுதிக்கு தண்ணீரால் கடத்தி செல்லப்படுகிறது.
  • தாவரத்தின் மொத்த இடையில் தண்ணீர் 70 சதவிகிதம் வகிக்கிறது.
  • விதைமுளைப்பதற்கும் வேர் வளர்ச்சிக்கும மற்றும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கும் தண்ணீர் ஒரு இன்றியமையாத கூறாகும்.
  • எனவே தண்ணீர் பயிர் வளர்ச்சிக்கு ஒரு முக்கியத் தேவையாகும்.

மண்ணில் உள்ள ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது அவை பயிர்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. இவ்வாறு மண்ணில் ஈரப்பதம் குறையும்போது (பயிர்களுக்காக) தண்ணீரை மண்ணிற்கு அளிப்பதே ‘நீர் பாய்ச்சுதல்’ எனப்படும்.
நீலகிரியில் குறைந்த பட்சமாக 0.1% தஞ்சாவூரில் அதிகபட்சமாக 88% நீர் பாய்ச்சப்படுகிறது. ஏற்காடு மற்றும் காஞ்சிபுரத்தில் 50 – 78 விழுக்காடும், தர்மபுரி 19 விழுக்காடும், சேலம் 23 விழுக்காடு மற்றும் திண்டுக்கல்லில் 29 சதவீதமும் நீர்பாய்ச்சப் படுகிறது.
இந்தியாவில் நீர் பாய்ச்சுதல் மேம்பாடு
பழங்காலத்திலிருந்தே இந்தியா சீனா போன்ற நாடுகளில் நீர்ப்பாய்ச்சல் செய்யப்படுகிறது. நீர்பாய்ச்சல் ஆரம்பித்த பின்தான் குடியிருப்புகள் தோன்றின. தெற்கு மற்றும் தென்வடக்கு ஆசியாவில் தான் இக்குடியிருப்புக்கள் முதன் முதலில் தோன்றின. தமிழ்நாட்டில் சோழர்கள் நீர் நிர்வாகத்தில் சிறந்து விளங்கினர். கரிகாற் சோழனால் கட்டப்பட்ட கல்லணை இதற்கு சிறந்த உதாரணம்.

 
 
Fodder Cholam