வேளாண்மை :: இயற்கை சீற்ற மேலாண்மை :: நிலச்சரிவை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
   

 


நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் எடுக்கப்படும் முக்கிய தடுப்பு நடவடிக்கைகளாவன

  • வடிகால்களை சீர்படுத்துதல்
  • நிலத்தை தகுந்த முறையில் பயன்படுத்தும் செயல்முறைகள்
  • மரங்களை அழித்த பகுதியில் மீண்டும் மரங்களை நடுதல்
  • உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

பலமான மழை பொழியும் போது மழைநீர் அதிகளவில் மண்ணில் புகுந்து, மண்ணை இழுத்துக் கொண்டு ஓர் இடத்தில் அதிகப்படியாக படிந்து விடும். இதனால் மண்ணின் அடிப்பகுதி இளகி அழமான சரிவை நோக்கி விழும். இதைத் தடுப்பதற்கு மண்ணில் நீர் உட்புகும் திறனை குறைக்க வேண்டும். மற்றும் அதிகப்படியான மழைநீரை எந்தத் தடங்கலுமின்றி கீழே செல்லுமாறு செய்ய வேண்டும். நிலச்சரிவை தடுக்க மேற்கொள்ளும் முதல் நடவடிக்கையானது வடிகால்களை சீர்படுத்துதல். அதிகப்படியனா சரிவுகளில் சிறிய அல்லது பெரிய அளவு வடிகால் வாய்க்கால்களை ஏற்படுத்தி பராமரிக்கலாம்.
பீடபூமியின் எல்லைப் பகுதிகளில் சரிவை கணக்கில் கொள்ளாமல், மண்படியும் அளவு, தன்மையைப் பொறுத்து வடிகால்களை அமைக்க வேண்டும்.



சமஉயர வரப்பு அமைத்தல்

மண் அதிகளவில் சரிந்து படிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை ஒதுக்கி விட்டு, அவற்றில் நிரந்தரமாக பயிர் செய்வதற்கான  நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டும். மேற்பகுதியில் உள்ள நிரந்தமற்ற பகுதிகளில் அதிகளவில் மரங்கள் அழிந்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் உடனடியாக மரம் வளர்ப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிலச்சரிவை தாங்கி நிற்கும் இரகங்களைத் தேர்வு செய்து நட வேண்டும்.


சமஉயர  அகழிகள் மற்றும் கற்சுவர்கள்


சிறப்பியல்புகள்

  • மலைப் பகுதிகளில் அரிப்பைத் தடுக்க ஏற்ற அமைப்பாகும்.
  • > 20% சரிவுள்ள மலைச் சரிவுகளில் இதை செய்யலாம்.
  • அளவு : 1000 செ.மீ2 முதல் 2500 செ.மீ2
  • தொடர்ச்சியாக  அல்லது நடுவில் விட்டு விட்டு அமைக்கலாம்.
  • கற்கள் இருந்தால், கற்களாவன அடுக்குத் தளம் மற்றும் சுவர்கள் அமைக்கலாம்.

இருக்கை அடுக்குத் தளம்

  1. செயல்பாடுகள் : சாகுபடி செய்வதற்கு ஏற்றவாறு சரிவான பகுதியை  பல மட்ட வரிசைகளில் கொண்டு வருவதற்கு இது உதவுகிறது.
  2. பொதுவான தகவல்: சமஉயர வரப்புகளை கொண்ட, வயல்களைப் போன்று பகுதி தோண்டியும், பகுதி நிரப்பியும் உள்ளவாறு அடுக்குகளை அமைக்க வேண்டும். இதனால் வயல்களை அடுக்கு போன்ற சமதள வயல்களை மாற்றலாம். சரிவைப் பொறுத்து செங்குத்தான மற்றும் கிடைமட்டமாக அடுக்குகளை இடைவெளிவிட்டு அமைக்கலாம்.
  3. விலை : அடுக்குத்தளம் ஒரு எக்டருக்கு அமைக்க ஆகும் செலவு ரூ.800/-
  4. சிறப்பியல்புகள்  : அடுக்குகளில்  உள்பக்கமாக சரிவு இருப்பதால் அதிகப்படியான நீரை வடித்துவிடும். வெளிப்பக்கமாக சரிவுள்ள அடுக்கு தளத்தில் ஆழமான சரிவை மிதமான சரிவாக குறைத்துவிடும்.
    6% க்கு அதிகமாக சரிவுள்ள பகுதிகளில் இதை அமைக்கலாம்.
 
 
 
 
 
 
 

Crop Protection

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008

Fodder Cholam