Agriculture
பசுந்தாள் எருயிடுதல்

பசுந்தாள் உரமிடுதலின் பயன்கள்

  • மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களை சாதகமாக்குகிறது
  • மண்ணின் அங்கக பொருட்களின் தன்மைய நிலைப் படுத்துகிறது
  • பசுந்தாள் உரப்பயிர்கள் மக்குவதால் சாகுபடி பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது
  • மண்ணின் காற்றோட்டத்தை அதிகரிக்கிறது
  • உணவு மற்றும் எரிபொருள் போன்றவையாகவும் பயன்படுத்தப்படுகின்றது

மண் கட்டமைப்பு மற்றும் நிலப்பண்பாடு

  • பசுந்தாள் உரப்பயிரானது, மண்கட்டமைப்பு மற்றும் நிலப்பண்பாட்டை மேம்படுத்துகிறது
  • கடினமான மண்ணில் துளைகளை ஏற்படுத்தி காற்று பரிமாற்றம் மற்றும் நீர் வடிகால்க்கு உதவுகிறது
  • இளகிய மண்ணில் நீர் நிலைப்புத்தன்மைய அதிகரிக்கிறது

மண்ணின் வளம் மேம்பாடு

  • நிலத்தை உழும்போது அடிமட்ட அடுக்குகளிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சி மேல்மட்டத்திற்கு கொண்டு வருகிறது
  • மண்ணின் அடிப்பட்ட அடுக்குகளில் ஊட்டச்சத்துக்கள் கரைவதை தடுக்கிறது

சாகுபடி பயிர்விளைச்சல் மற்றும் தன்மை மேம்பாடு

  • 15 முதல் 20 சதவிகித விளைச்சலை அதிகரிக்கிறது
  • நெல்லின் வைட்டமின் மற்றும் புரதம் போன்ற சத்துக்களை அதிகரிக்கிறது

பூச்சி மேலாண்மை

  • புங்கம் மற்றும் வேம்பு இலைகள் பூச்சிகள் கட்டுப்படுத்துகிறது
 
Fodder Cholam