Agriculture
தாவரச்சீர் குலைவினை (அல்லது) மாறுபாடுகளைக் கண்டறிதல்

 

தாவரப்பகுதியின் பாதிப்பும் அறிகுறிகளும்

காரணங்கள்

இலை

மண்வளம் இன்மை

பசுமை சோகை (பொது)

அதிகளவு சூரிய ஒளித் தன்மையால்

 

அதிகளவு வெப்பம்

பசுமை சோகை (இளம் இலைகள்)

இரும்பு (அ) மாங்கனீஷ் பற்றாக்குறை மற்றும் தாமிரம், துத்தநாகப் பற்றாக்குறை.

 

பூச்சிக்கொல்லி விஷத்தன்மையால், சூரியஒளிக் கிடைக்கப்பெறாமல் பாதிப்படைவது.

பசுமை சோகை (வயதான இலைகள்)

குறைந்த களை மற்றும் சாம்பல் சத்துப் பற்றாக்குறை

 

அதிக அளவு உவர்த்தன்மை

 

அதிகமாக நீர்ப் பாய்ச்சுவதால்

 

குறைவான மண் காற்று இடைவெளி உள்ளதால்

ஓரத்தில் தோன்றும் சோகை

குறைந்த மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் கொடுப்பதால்

 

அதிக அளவு உவர்த் தன்மை

 

குளிர் வறட்சி (முதல் நிலைக் கீழ் உள்ள இலைகள்)

 

சிலந்தி வண்டிலால் பாதிப்பு (முதனிலைக் கீழ் உள்ள இலைகள்)

 

பூச்சிக்கொல்லியால் தோன்றும் நஞ்சு.

நரம்பிடைச் சோகை

இரும்பு மற்றும் மக்னீசியம் குறைபாடு (மேல் இலைகள் முதலில் பாதிப்படைகிறது).

 

சிலந்தி வண்டிலால் பாதிப்பு

 

சல்பர் டை ஆக்சைடினால் தோன்றும் காற்று மாசு.

 

பூச்சிக் கொல்லியால் தோன்றும் நஞ்சு.

நரம்புச் சோகை

சில குறிப்பிட்ட களைக்கொல்லியால் பாதிப்பு

வட்ட பாசிகப்புள்ளி

பூஞ்சை (அ) பாக்டீரியா புள்ளிகள்

 

பூச்சிக்கொல்லியால் தோன்றும் நஞ்சு

 

உரத்தினால் தோன்றும் மாசு

ஒழுங்கற்ற பாசிகப்புள்ளி

குளிர்-நீர்-இவற்றால் பாதிப்பு

 

பூஞ்சை (அ) பாக்டீரியாவில் இலைப்புள்ளிகள் தோன்றுதல்.

 

வைரஸ் (அ) வைரஸ் போன்ற பாதிப்பு

 

பூச்சிக் கொல்லியால் ஏற்படும் நஞ்சு, உரம் இவற்றால் மாசுக்கேடு அடைதல்.

இலை ஓரம் (அ) நுனி கருகிவிடுதல்

ஊட்டச்சத்து குறைபாடு, சாம்பல் சத்து (அடிஇலைகளில் முதலில்)

 

அதிகப்படியான “போரான்”

 

அதிக மண்ணின் உவர்த்தன்மை

 

புளோரைடு மூலம் தோன்றும் நஞ்சு

 

அதிக மற்றும்  குறைந்த வெப்பத்தால் பாதிப்பு

 

தாவரம் வளர்க்கும்  உட்பகுதிகளில் குறைந்த வளிமண்டல ஈரப்பதம்

 

சிலந்தி வண்டினால் பாதிப்பு

 

இலைப்பாக்டீரியவால் பாதிப்பு

 

பூச்சிக் கொல்லி மற்றும் உரத்தினால் தோன்றும் நஞ்சு

இலைப்பரப்பு காய்ந்து விடுதல்

குளிர்-நீர்-இவற்றால் பாதிப்பு

 

இலைத் துளைப்பானால் பாதிப்பு

 

இலைப்புள்ளிகள் நோய்கள் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவில் தோன்றுகின்றன.

 

நூற்புழுவால் பாதிப்பு

 

பூச்சிக் கொல்லி மற்றும் உரத்தினால் ஏற்படும் நஞ்சு

இலையின் ஓரம் மற்றும் இடையில் காய்ந்து விடுதல்

வெப்பத்தால் பாதிப்பு

 

குளிர் நீர் மற்றும் காற்றினால்

 

இலைகளை உண்ணும் பூச்சிகளால் தோன்றுவது

 

காற்று மாசுப்படாமல் பாதிப்பு

 

பூச்சிக்கொல்லி மற்றும் உரத்தினால் மாசுபாடு

இலைகள் அசாதாரணமாகப் பெரிதாதல்

அதிக அளவு ஊட்டச்சத்து தருவதால்

 

குறைந்த ஒளியில் வளர்வதால்

 

தொடர்ந்து அறுவடை செய்யாமல் இருப்பதால்

 

அதிக வேர்ப்பகுதி காணப்படுவதால்

இலை அசாதாரணமாச் சிறியதாதல்

குறைந்த ஊட்டச்சத்து தருவதால்

 

மாமிரம் குறைவாகத் தருவதால் புதியதாகத் தோன்றிய இலைகள் கருகி விடுகின்றன.

 

அதிக உவர்த்தன்மை

 

அதிக அளவு ஒளியில் வளர்வதால்

 

குறைந்த அளவு ஒளி மற்றும் குறைந்த அளவு வளிமண்டல் ஈரப்பதத்தால்

இலைக்காம்பு மற்றும் இலைத்தண்டு பெரிதாதல்

குறைந்த அளவு ஒளியில் வளர்வதால்

இலைக்காம்பு மிகவும் சிறிதாதல்

அதிக அளவு ஒளியில் வளர்வதால்

இலை மேற்பரப்பு இலைத்தூள் பெரிதாகவும், சுருங்கியும் விடுதல்

குறைந்த அளவு ஒளியில் வளர்வதால்

இலை மேற்பரப்பு குறைந்து விடுதல்

அதிக அளவு ஒளியில் வளர்வதால்

இலை மேற்பரப்பு அதிகளவு தடிமனாகி விடுதல்

வைரஸ் மற்றும் வைரஸ் மாதிரியான நோய்கள்

 

பூச்சிக் கொல்லிகளால் தோன்றும் விஷத்தன்மை

 

குறைந்த அளவு ஒளியில் வளர்வதால்

 

“டார்சனோமிய” சிலந்திகள்

இலையின் மேற்பரப்பு மற்றும் ஓரங்களில் வெடிப்பு

இயந்திரத்தால் தோன்றும் பாதிப்பு

 

ஈரப்பத அளவு அளிப்பதில் பாதிப்பு

புதிதாக வளரும் தளிர்களில் அபரிவிதமாக இறுக்கமாக குவிந்த வண்ணம் காணப்படும்

அட்டைச் சிலந்தி முதலியவற்றால் பாதிப்பு.

இலை ஓரங்களில் தோன்றும் அளவு

இயந்திரத்தால் தோன்றும் பாதிப்பு

 

மென்று தின்னும் பூச்சிகளால்

 

பூச்சிக்கொல்லிகளால் தோன்றும் விஷம்

தளைகளில் ஒளி ஊடுருவிச் செல்லும் குழாய் போன்ற அமைப்புக் காணப்படுகிறது

இலைத்துளைப்பானால் தோன்றும் பாதிப்பு

தளைகளில் தோன்றும் துளைகள்

இயந்திரத்தால் தோன்றும் பாதிப்பு

 

நத்தை, புழு மற்றும் சில தழைகளை உண்ணம் பூச்சிகளால் தோன்றும் பாதிப்பு

 

பூச்சிக் கொல்லிகளால் தோன்றும் பாதிப்பு

இலை மேற்பரப்பு பளபளப்பாக அசாதாரணமாகத் தோன்றுதல்

அளவுக்கு அதிகமான தாவர பளபளப்பு உண்டாக்கும். பொருட்களை இலையின் பரப்பில் அளிப்பதால்.

செடியிலிருந்து “இலை உதிர்தல்”

அதிக மண் உவர்த்தன்மை

 

கப்பல் முதலியவற்றில் இருந்து வரும் தாவரங்கள், எந்த ஒளி மற்றும் வாயுக்கள் இல்லாத இடத்தில் அதிக நாட்கள் வைத்துப்பின் பயன்படுத்தும்போது

 

குளிரினால் பாதிப்பு

 

நீர்ப்பாசனம் செய்யாத இடைப்பட்டக் காலங்களில் வெம்பி விடுதல்

 

காற்றின் ஈரப்பதம் குறைதல்

 

மண்ணின் காற்றிடைவெளிக் குறைதல்

 

மண்ணிலுள்ள பூச்சிகளால் பாதிப்பு

 

சிலந்திப் பூச்சிகளால் தோன்றும் பாதிப்பு

 

நூற்புழுக்களால் பாதிப்பு

 

வேர் அழுகலுக்குக் காரணமான உயிரிகளால் பாதிப்பு

 

காற்று மாசுக்கேடால், எத்தலீன் உற்பத்திக் குறைவு

 

பூச்சிக் கொல்லிகளால் தோன்றும் பாதிப்பு

தண்டின் வளர்ச்சி குறைதல்

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, சிலந்தி தாக்குதல், பூச்சிக்கொல்லிகளால் தோன்றும் பாதிப்பு நெருக்கமான நடவு முறை, போதுமான அளவு சூரிய ஒளி இல்லாமை.

தண்டு அழுகுதல்

களைக்கொல்லியால் ஏற்படும் பாதிப்பு, அதிக மண் உவர்த்தன்மை, அதிகப்படியான நீர்ப்பாசனம், தண்டின் அருகில் உரத்தை வைத்தல்.

தண்டில் கட்டி ஏற்படுதல்

பண்ணைக் கருவிகளால் ஏற்படும் பாதிப்பு, பூச்சித் தாக்குதல், பூஞ்சை நோய் தாக்குதல், பாக்டீரியா குறைதல்.

தண்டு பின்னோக்கி கருகுதல்

கால்சியம், தாமிரம் (அ) போரான் பற்றாக்குறை, சிலந்தி பூச்சித் தாக்குதல்.

வேர் சிறியதாகவும், மண்ணின் நீண்ட ஆழம் வரை செல்லாதது.

அடிப்பகுதி அதிக வெப்பமாதல்

வேர் மெதுவாக வளர்ச்சியடைதல்

அதிக மண் உவர்த்தன்மை, அதிக மண் வெப்பநிலை, ஆழமாக நடவு செய்தல்

வேர் அழுகல்

பூச்சி அல்லது நோய் தாக்குதல்

 

மண் உவர்த்தன்மை (அ) அதிக நீர் தேங்குதல்

வேரில் முடிச்சுகள் (அ) கட்டிகள் தோன்றுதல்

நூற்புழு தாக்குதல், இயற்கையாகவே சிலப் பயிர்களில் வேர் முடிச்சுகள் காணப்படுதல்.

விதைகள் முளைக்கத் தவறுதல்

முளைப்புத் திறனற்ற விதைகள், முதிர்யடையும் முன்னரே அறுவடை செய்தல், விதைகளை சரியான முறையில் சேமித்து வைக்கத் தவறுதல், குறைவான காற்றோட்ட வசதியுடன் கூடிய மண்ணில் விதைத்தல், விதையின் கடினமான தோல், விதைக்கால் உறக்கம்.

நாற்றுக்கள் அழுகுதல்

நோய் தாக்குதல், அதிக உவர்த்தன்மை

நாற்றுக்கள் சில வெளிர்தல்

மரபு ரீதியாகவே சில அவ்வாறே காணப்படுதல்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam