தாவர ஊட்டச்சத்து :: முன்னுரை
|
|
பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிப்பது மிகவும் அவாசியமாகும். எனவே வேளாண்மையில் பயிர்களின் மகசூலை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிர்களின் மகசூலை பாதிப்பதில் நிறைய காரணிகள் அங்கம் வகுக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகும். மண்ணில் போதுமான அளவு தனிமங்களின் பங்கு இல்லாதபோது தாவரங்களில் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமாக கருதப்படுவது, நுண்ணூாட்டச்சத்துக் குறைபாடே ஆகும். நுண்ணூட்டச்சத்துக்கள் தாவரங்களின் வளாச்சிக்கும் மகசூலுக்கும் மிகவும் இன்றியமையாதாகும். உதாரணமாக, பருத்தியில் மகரந்ததாள் உற்பத்திக்கு துத்தநாகம் இன்றியமையாதாகும். நிலக்கடலையின் மகசூலில் போரான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் தென்னையில் ஒல்லிக்காய்கள் உருவாவதை தடை செய்கிறது. பயறுவகைப்பயிர்களில் வேர்முடிச்சுகள் உருவாக மாலிப்டினம் ஏதுவாக அமைகிறது. எள் செடியில் மாங்கனீசு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கிறது. நுண்ணூட்டச்சத்துக்களின் முக்கியத்துவம் 1960-70 ஆண்டின் இடையிலிருந்து அறியப்பட்டது. எனவே நுண்ணூட்டச்சத்துக்களைப் பற்றிய ஆராய்ச்சி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் 1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகமும் 25 வருடங்களுக்கு மேலாக நுண்ணூட்டச்சத்துக்களைப் பற்றிய பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு ஆராய்ச்சிக் கட்டுகரைகளையும் வெளியிட்டுள்ளது. |
|
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014 |