Agriculture
தாவர ஊட்டச்சத்து :: விரைவான திசு சோதனை

ஊட்டச்சத்துக்களை அறிய விரைவான திசு சோதனை

பயிர் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனை நிர்ணயிப்பதில் இலை, தண்டு போன்ற தாவர பகுதிகளில் உள்ள ஊட்டச்சத்து நிலை (உள்ளடக்கம்) மற்ற பிற காரணிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தாவரத்தின் இலை மற்றும் தண்டு சத்துக்களை மதிப்பிடுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு பயிரும் அதன் ஒவ்வொரு வளர்ச்சி நிலையில் ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. இது முக்கிய நிலையாகும். தாவர ஊட்டச்சத்து அபாய நிலைக்கும் கீழ் குறையும்பொழுது தாவரம் பற்றாக்குறை அறிகுறிகளை வெளிப்படுத்தும். தேவைப்படும் ஊட்டச்சத்து அல்லது தற்போதுள்ள ஊட்டச்சத்து அளவை பின்வருவனவற்றைக் கொண்டு அறியலாம். 1. தாவர ஆய்வு, 2. மண் பகுப்பாய்வு மற்றும் 3. தாவர பகுப்பாய்வு இரண்டு வகைகளில் மேற்கொள்ளப்படுகிறது. 1.தர சோதனை 2. அளவு மதிப்பு. பயிர்கள் வளர்ச்சியை தக்க வைக்க மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தாவர மற்றும் மண் பரிசோதனை பயன்படுகிறது. விரைவான திசு சோதனை ஊட்டசத்து பிரச்சனைகளை விரைவாக சரிசெய்ய உதவுகிறது. எனினும், தாவர மற்றும் மண் ஊட்டசத்து மதிப்பு பரிசோதனை அடியுரம் மற்றும் உரங்கள் அளிக்கவும் ஊட்டசத்து பிரச்சனைகளுக்கு நீண்ட தீர்வாகவும் அமையும். உலர் எடை அடிப்படையில், சாதாரண ஆரோக்கியமான சாகுபடி பயிருக்கு இலையிலுள்ள செறிவு முக்கிய கூறாகும்.  இருப்பினும் இவை தாவர வகை, மண் வகை, வளர்ச்சி நிலை மற்றும் சுற்றுச்சூழலால் மாறுபடுகிறது.

  நைட்ரஜன் 1.0-3.0% இரும்பு 20 to 100 பி.பி.எம்
  பாஸ்பரஸ் 0.05-1.0% துத்தநாகம் 15 to 50 பி.பி.எம்
  பொட்டாசியம் 0.8-1.2% மாங்கனீசு 2.0 to 10 பி.பி.எம்
  கால்சியம் 0.3-0.6% தாமிரம் 10 to 20 பி.பி.எம்
  மக்னீசியம் 0.2-0.4% போரான் 2 to 15 பி.பி.எம்
  கந்தகம் 0.2-0.3% மாலிப்டினம் 0.5 to 5.0 பி.பி.எம்

விரைவான திசு சோதனை மூலம் ஊட்டசத்து மதிப்பை மதிப்பீடு செய்ய தாவரங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து திசுக்கள் எடுக்கப்படுகின்றன.

சில பயிர்கள் விவரம் பின்வருமாறு:

பயிர் தழைச்சத்து மணிச்சத்து சாம்பல் சத்து கால்சியம் மக்னீசியம் சல்பர்
தானியங்கள் தண்டு /நடு நரம்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு
பருப்பு வகை இலைக் காம்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு
எண்ணெய் வித்துக்கள் இலைக் காம்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு
பருத்தி இலைக் காம்பு இலைக் காம்பு இலைக் காம்பு இலைக் காம்பு இலைக் காம்பு இலைக் காம்பு
வாழை இலைப்பரப்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு இலைப்பரப்பு
பப்பாளி இலைக் காம்பு இலைக் காம்பு இலைக் காம்பு இலைக் காம்பு இலைக் காம்பு இலைக் காம்பு
காய்கறிகள் இலைக் காம்பு, இலைப்பரப்பு இலைக் காம்பு, இலைப்பரப்பு இலைக் காம்பு, இலைப்பரப்பு இலைக் காம்பு, இலைப்பரப்பு இலைக் காம்பு, இலைப்பரப்பு இலைக் காம்பு, இலைப்பரப்பு

பழ மரங்கள்
இவற்றில் இலைபரப்பு அல்லது நடுநரம்பு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அலங்கால மரங்கள், தேயிலை, காபி போன்றவை
இலைபரப்பு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

நுண்ணோட்ட பொருட்கள் : இலைப்பரப்பு அல்லது நடு நரம்புப் பகுதி எடுத்துக்கொள்ளப்படுகிறது.

திசு சோதனை செயல்முறை

நைட்ரஜன் :

சோதனைப் பொருள் : டைபினைல்அமைனை 1% அடர் கந்தக அமிலத்தில் சேர்க்கவும்.
சிறு துண்டு இலை அல்லது இலைக்காம்பை ஒரு கண்ணாடி வட்டில் எடுத்துக்கொண்டு அதில் 1% டைபினைல்அமைனை சேர்க்க வேண்டும். நீல நிறமாக மாற்றமடைந்தால் நைட்ரேட் அல்லது நைட்ரஜன் இருப்பதை குறிக்கிறது. நிறத்தைப் பொறுத்து இலையில் நைட்ரஜனின் தற்போதைய அளவை அறியலாம்.
அடர் நீலம் : போதுமான நைட்ரஜன்
வெளிர் நீலம் : சற்று நைட்ரஜன் பற்றாக்குறை உள்ளது
நிறம் அற்றது : அதிகளவு நைட்ரஜன் பற்றாக்குறை உள்ளது

பாஸ்பரஸ் :

சோதனைப் பொருள்: (1) அம்மோனியம் மாலிப்டேட் கரைசல் (2)ஸ்டானஸ் குளோரைடு

8 கிராம் அம்மோனியம் மாலிப்டேட்டை 100 மிலி காய்ச்சி வடிகட்டிய நீருடன் கலக்கவும்.  இதனுடன் 126 மிலி ஹைட்ரோகுளோரிக் அமிலம் (HCL) சேர்க்கவும் மற்றும் அதன் அளவு 300 மிலி வடிகட்டிய தண்ணீர் அளவில் வைக்க வேண்டும். இவை அம்பர் நிற பாட்டிலில் வைக்கப்படுகிறது மற்றும் அதே நேரத்தில், காய்ச்சி வடிகட்டிய நீர் பயன்படுத்தி 1:4 என்ற விகிதத்தில் எடுத்து நிர்க்கச் செய்ய வேண்டும்.
ஒரு தேக்கரண்டி அளவு புதிதாக நறுக்கிய இலைகளை சோதனைக் குழாயில் எடுத்துக்கொண்டு அதில் அம்மோனியம் மாலிப்டேட் சோதனைப் பொருளை சேர்த்து சிறிது நேரம் வைக்க வேண்டும். நன்கு குலுக்கிற பிறகு ஸ்டானஸ் குளோரைடு ஒரு சிட்டிகை சேர்க்க வேண்டும். நிற மாற்றம் ஏற்படும்.
நீலம் கலந்த பச்சை : சற்று பாஸ்பரஸ் பற்றாக்குறை உள்ளது
நிறம் அற்றது : அதிகளவு பாஸ்பரஸ் பற்றாக்குறை உள்ளது

பொட்டாசியம் :

சோதனைப் பொருள்: (1) சோடியம் கோபால்ட் நைட்ரேட் சோதனைப்பொருள் (2) எத்தில் ஆல்கஹால் (95%).
5 கிராம் கோபால்ட் நைட்ரேட் எடுத்து அதனுடன் 30 கிராம் சோடியம் நைட்ரேட்  சேர்த்து அதை 80 மிலி காய்ச்சி வடிகட்டிய தண்ணீருடன் கலக்கவும். இதனுடன் 5 மிலி  உறைபனி அசிட்டிக் அமிலம் சேர்க்கவும். 100 மிலி வடிகட்டிய தண்ணீர் அளவிற்கு செய்ய வேண்டும். 5 மிலி கரைசலை 15 மிகி சோடியம் நைட்ரேட் 100 மிலி நீர் கொண்டு அடர்த்தி குறைக்க வேண்டும். இறுதியில் இலைத்துண்டுகளை சோதனைக் குழாயில் எடுத்துக்கொண்டு, 10 மிலி நீர்த்த சோதனைப் பொருளை சேர்த்து தீவிரமாக கலக்கி 5 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு 5 மிலி எத்தில் ஆல்கஹால் சோதனைப் பொருளை சேர்த்து 3 நிமிடங்கள் வைக்கவும். இந்த கரைசலில் கலங்கள் அளவு தோன்றும்.
கலங்கல் இல்லை : பொட்டாசியம் குறைபாடு
சற்று கலங்கியநிலை : இயல்பான குறைபாடு
உயர் கலங்கியநிலை : சரியான அளவு பொட்டாசியம்

கால்சியம்:

மார்கனின் சோதனைப்பொருள் : 30 மிலி பனி அசிட்டிக் அமிலம் மற்றும் 100கி சோடியம் அசிடேட் ஆகியவற்றை சிறிது காய்ச்சி வடிகட்டிய தண்ணீரில் சேர்க்கவும்.
செயல்முறை: இறுதியாக 0.5 கிராம் நறுக்கிய தாவர பொருளை கண்ணாடி குப்பியில் (ஆரோக்கியமான மற்றும் குறைபாடுள்ள தாவரங்களை தனிதனிக் குப்பிகளில்) எடுத்துக்கொண்டு அதனுடன் 5 மிலி மார்கனின் சோதனைப்பொருளை சோதனைக் குழாயில் சேர்க்கவும். 15 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும், இதனுடன் 5 மிலி கிளிசரின் மற்றும் 10% அமோனியம் ஆக்ஸலேட்டை கலக்கி 2 நிமிடங்கள் குலுக்க வேண்டும். 15 நிமிடங்களுக்குப் பிறகு கலங்கள் ஏற்பட்டு இயல்பான தாவரத்தின் திசுவில் கால்சியம் அளவைக் குறிக்கும்.

மெக்னீசியம்:

சோதனைப்பொருள் :

  1. 5% தூய சுக்ரோஸ் கரைசல்
  2. 2% ஹைட்ராக்ஸிலமைன் ஹைட்ரோகுளோரைடு
  3. டைட்டன் மஞ்சள்
  4. சோடியம் ஹைட்ராக்சைடு

150 மிகி மஞ்சள் டைட்டன் 95% எத்தில் ஆல்கஹால் 75 மிலி மற்றும் 25 மில்லி காய்ச்சி வடிகட்டிய தண்ணீரில் கரைக்கவும். இந்த கரைசலை இருட்டில் வைக்கவும்.
செயல்முறை
இறுதியாக ஒரு தேக்கரண்டி நறுக்கிய தாவரப் பொருளுடன் பின்வரும் சோதனைப் பொருட்களை சேர்க்க வேண்டும். 1 மிலி 5% சுக்ரோஸ் கரைசல், 2% ஹைட்ராக்ஸிலமைன் ஹைட்ரோகுளோரைடு மற்றும் 1 மிலி டைட்டன் மஞ்சள். இறுதியாக 2 மிலி 10% சோடியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்பட்டு காரத்தன்மையாகிறது. சிவப்பு நிறம் போதுமான மெக்னீசியம் உள்ளதையும் மற்றும் மஞ்சள் நிறம் மெக்னீசயம் இல்லாததையும் குறிக்கிறது.

இரும்பு:

கண்ணாடி குப்பியில் (0.5கி) நறுக்கிய இலைத் துண்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஹைட்ரோகுளோரிக் அமிலம்  சேர்க்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, 10 மிலி வடிகட்டிய தண்ணீர் மற்றும் அடர் நைட்ரிக் அமிலம் 2 முதல் 3 சொட்டுகள் சேர்க்கவும். 2 நிமிடங்கள் கழித்து 10 மிலி கரைசலை ஒரு மாதிரிக் குழாயில் எடுத்துக்கொள்ளவும் மற்றும் அதனுடன் 5 மிலி 20% அமோனியம் தயோசயனைட் சேர்த்து கலக்கவும். மேலும், 2 மிலி அமில் ஆல்கஹால் சேர்த்து நன்றாக குலுக்கி சிறிது நேரம் அப்படியே வைக்கவும். அமில் ஆல்கஹால் அடுக்கில் தோன்றும் சிவப்பு நிற அடர்த்தி இரும்பின் அளவைக் குறிக்கிறது.

 
Last Update:September 2014
 
Fodder Cholam