Agriculture
உர நிர்வாகம் :: உரமிடுதல் முறைகள்


உரமிடுதல் முறைகள்

உரமிடுதல் முறைகள்
பலவகையான உரமிடுதல் முறைகள் உள்ளன. அவை:

அ) தெளிப்பு முறை:

  1. வயலின் அனைத்துப் பகுதிகளில் ஒரே மாதிரியாக உரங்களை தெளிப்பதாகும்
  2. அடர்த்தியாக செடிகள் உள்ள பயிர்களுக்கு, மண்ணில் நன்றாக வேருன்றிய பயிர்களுக்கும், இந்த முறை ஏற்றது. இதன் மூலம் அதிகளவிலான உரங்களை அளிக்கலாம். கரையாத பாஸ்பரஸ் உரங்களான ராக் பாஸ்பேட்டை இந்த முறை மூலம் தெளிக்கலாம்

Method of Fertilizer

உரங்களைத் தெளிப்பதால் இரண்டு வகைகள் உள்ளன

  • அடிஉரமிடுதல்
  • விதைக்கும் பொழுது அல்லது பயிரிடும்போது தெளித்தல் (அடிஉரமிடுதல்) உரங்களை ஒரே மாதிரியாக வயலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவுமாறு தெளித்து மண்ணுடன் கலப்பதே உரங்களை விதைக்கும் பொழுது தெளிப்பதன் நோக்கமாகும்

  • மேலுரமிடுதல்
  • வளரும் பயிர்களுக்கு உடனடியாக பெறக் கூடிய வகையில் தெளிப்பதே இதன் நோக்கமாகும். குறிப்பாக நெருக்கமாக பயிரிடும் பயிர்களான நெல், கோதுமையில் இந்த முறை நல்ல பயனைத் தரும்.

தெளிப்பு முறையின் தீமைகள்

  • பயிர்களின் வேர்கள் முழுவதுமாக உரங்களை எடுத்துக் கொள்ள முடிவதில்லை
  • வயலில் களைச் செடிகள் வளர்வதை ஊக்குவிக்கிறது.
  • ஊட்டச்சத்துக்கள் மண்ணில் நிலையாக உள்ளன. இதனால் பயிர்களால் எளிதில் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

குறித்த இடத்தில் உரமிடுதல்

  • விதை இருக்கும் இடத்தை பொறுத்தோ அல்லது வேறு ஒரு குறிப்பிட்ட இடத்திலோ உரங்களை இடும் முறையாகும்
  • உரங்களை இடும் அளவு குறையும் பொழுதும், வேர் வளர்ச்சி நன்றாக இல்லாத இடத்திலும், வளமில்லாத மண்ணிலும் இந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த முறையின் மூலம் சாம்பல் மற்றும் மணிச் சத்துக்களை இடலாம்.

பொதுவாக பயன்படுத்தப்படும் முறைகள்
உழு சால் வழி உரமிடுதல்

  • உழவு சாலின் அடிப்பகுதியில் உரத்தை இட்டு, உழவு செய்யும் போது தொடர்ந்து உரமிடப்படுகிறது
  • ஒவ்வொரு வட்டத்தையும் முடித்து விட்டு அடுத்த சாலுக்கு போக வேண்டும்.
  • இந்த முறை மண் எங்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை உலர்ந்து, கெட்டியான மண் கட்டியாக வருகிறதோ அங்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆழமாக உரமிடுதல்

  • நெல் வயல்களில் அம்மோனியா நைட்ரஜன் பயிர்களுக்கு கிடைக்காமல் அப்படியே இருக்கிறதோ, அங்கு இந்த முறையில் உரமிடப்படுகிறது. இதனால் ஒரே மாதிரியாக வேர்ப் பகுதியின் அருகில் கிடைக்குமாறு செய்யப்படுகிறது.

குறிப்பிட்ட பகுதியில் உரமிடுதல்

விதைக்கு அல்லது பயிருக்கு அருகில் உரங்களை அளிப்பதால், வளரும் பயிர்களின் வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கப் பெறுகிறது.

பொதுவாக பின்பற்றப்படும் முறைகள்

துளை உரமிடுதல்

  • விதைக்கும் சமயத்தில் விதை உர தெளிப்புக் கருவியின் மூலம் உரங்கள் இடப்படுகிறது. இதனால் உரங்களும், விதையும் ஒரே வரிசையில், வெவ்வேறு ஆழத்தில் இடப்படுகின்றன. இந்த முறை சாம்பல், மணிச் சத்துக்களை தானியம் பயிர்களுக்கு அளிப்பதற்கு ஏற்றதாக இருந்தாலும், விதை முளைப்புத் திறன் குறையும் சில சமயங்களில் இளம் செடிகள் அதிகளவு உரங்களினால் மடிந்து விடுகின்றன

பக்கவாட்டில் உரமிடுதல்

  • பயிரின் நடுவே உள்ள வரிசைகளில் உரமிடப்படுகின்றன.

பொதுவான முறைகள்

  • கையில் உரமிடுதல், மக்காச்சோளம், கரும்பு, பருத்தி மற்றும் இதர பயிர்களில் கூடுதலாக தழைச்சத்து வளரும் பயிர்களுக்கு தரப்படுகின்றன
  • மரங்களைச் சுற்றி உரமிடுதல். மா, ஆப்பிள், திராட்சை, பப்பாளி மற்றும் இதர மரங்களில் இந்த முறையில் உரமிடப்படுகிறது.

வேரைச் சுற்றி உரமிடுதல்

உரங்களை வேரைச்சுற்றி இடுதலாகும். இதில் 2 முறைகள் உள்ளன.

குன்றின் மீது உரமிடுதல்

  • பழத்தோட்டங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் பயிரைச் சுற்றி ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கமும் உரமிட வேண்டும். வளையத்தின் நீளம் மற்றும் ஆழம் பயிர்களின் தன்மையைப் பொறுத்து மாறுபடுகிறது

வரிசை உரமிடுதல்

கரும்பு, உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், தானியங்கள் போன்ற பல பயிர்களில் வரிசையில் விதைக்கும் போது, உரங்களை தொடர்ந்து வளையங்களாக வரிசையின் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கமும் இடவேண்டும்.

சிறு வில்லைகளாக உரமிடுதல்

  • தழைச்சத்து உரங்களை 2.5 - 50 செ.மீ ஆழத்தில் நெற்பயிரின் வரிசைகளின் நடுவில் சிறு வில்லைகளாக இட வேண்டும்
  • உரங்களை மண்ணுடன் 1:10 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். நெல் வயல்களில் தேவையான அளவுகளில் சிறு வில்லைகளாக மண்ணுடன் சேர்த்து இட வேண்டும்
Row Placement

நன்மைகள் மற்றும் தீமைகள்

  • இந்த முறையால் மண்ணுடன் குறைந்த அளவு தொடர்பே உள்ளது. அதனால் ஊட்டச்சத்துக்கள் மண்ணில் நிலைபடுவது குறைகிறது
  • வயலின் அனைத்துப் பகுதிகளிலும் களைகள் இருப்பதால், உரங்களை பயன்படுத்த முடியாது
  • உரங்களின் படிவு அதிகமாக இருக்கும்
  • பயிர்களால் எடுத்துக் கொள்ளப்படும் உரங்களின் அளவு அதிகம்
  • தழைச்சத்து இழப்பு குறைகிறது
  • சாம்பல் சத்து ஓரளவு இந்த முறையில் இடப்படுகிறது

Agriculture Nutrient

துவக்கக் கரைசல்

  • தழை, மணி, சாம்பல் சத்துக் கரைசல் 1 : 2 : 1 மற்றும் 1 : 1 : 2 என்ற விகிதத்தில் நடவு செய்யும் சமயத்தில் குறிப்பாக காய்கறிப் பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்.
  • பயிர்களின் துரித வளர்ச்சி மற்றும் விரைவான நாற்றுக்களின் வளர்ச்சிக்கு இந்த கரைசல் உதவுகிறது.

தீமைகள்

  • கூடுதல் வேலையாட்கள் தேவைப்படுகிறது.
  • சாம்பல் சத்து நிலைப்படுத்துவது அதிகளவில் உள்ளது.

தழைத் தெளிப்பு

  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் கலந்த கரைசலை வளரும் பயிர்களின் தழைகளின் மீது தெளிக்க வேண்டும்.
  • நீரில் கரையும் போது பல ஊட்டங்கள் எளிதாக இலைகளில் உறிஞ்சப்படுகிறது.
  • கரைசலின் அடர்த்தியை கட்டுப்படுத்தலாம், இல்லையென்றால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் இலைகள் எரிந்தது போல தோற்றமளிக்கும்.
  • நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, தாமிரம், போரான், துத்தநாகம், மாங்கனீசு சத்துக்களை இந்த முறையில் அளிக்கலாம். சில சமயங்களில் பூச்சிக் கொள்ளிகளைக் கூட உரங்களுடன் கலந்து அளிக்கலாம்.

உரபாசனம்

  • உரபாசனம் என்பது நீரில் கரையக் கூடிய உரங்களை பாசன நீருடன் வழியாக அளித்தல் ஆகும்.
  • ஊட்டச்சத்துகள் மண்ணிற்குள் கரைசல் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.
  • பொதுவாக தழைச்சத்து உரங்களை பாசன நீருடன் கலந்து அளிக்கலாம்.

உட்செலுத்துதல்

  • நீர்ம உரங்களை மண்ணினுள் அழுத்தத்துடன் அல்லது அழுத்தம் இல்லாமல் உட் செலுத்த வேண்டும்.
  • அழுத்தமில்லாத கரைசல்கள் மண்ணின் மேற்பரப்பு மீதோ அல்லது உழுசாலிலோ ஊட்டச்சத்து இழப்பு ஏற்படாமல் அளிக்கலாம்.
  • அன்ஹைடரஸ் அம்மோனியாவை குறுகலான சாலில் 12 – 15 செ.மீ ஆழத்தில் வைத்து, உடனடியாக மூடிவிட வேண்டும். இதனால் அம்மோனியா இழப்பு ஏற்படாது.
Nutrient Management

வான் வழி தெளிப்பு

மண்ணில் உரங்களை அளிக்க முடியாத சூழ்நிலையில் உரக் கரைசலை வானூர்தி வழியாக குறிப்பாக மலைப்பகுதிகளில், காடுகளில், புல்வெளிகளில், கரும்பு வயல்களில் இந்த முறை மூலம் தெளிக்கலாம்.

 
Fodder Cholam