Agriculture
உர நிர்வாகம்

சர்க்கரைச்சோளம்

உரமேலாண்மை

  • கடைசி உழவின் போது எக்டருக்கு 12.5 டன்கள் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும்
  • ஒரு எக்டருக்கு 10 பாக்கெட்டுகள் (2 கிலோ) அஸோஸ்பைரில்லத்துடன் 10 பாக்கெட் (2 கிலோ) பாஸ்போ பாக்டீரியம் அல்லது 20 பாக்கெட் (4கிலோ) அஸோபாஸ் நுண்ணுயிர்க் கலவையை இடவேண்டும்
  • ஒரு எக்டருக்கு சோளத்திற்கு இடவேண்டிய நுண்ணூட்டச்சத்து கலவையை 12.5 கிலோ அளவில் 50 கிலோ மணலுடன் கலந்து பார்களின் மேலாகத் தூவவேண்டும்
  • நிலத்தில் எடுக்கப்பட்ட மண்ணைப் பரிசோதனை செய்து அதற்குப் பரிந்துரை செய்யப்பட்ட அளவில் இரசாயன உரமிடுதல் அவசியம், பரிசோதனை செய்யாத நிலையில் ஒரு எக்டருக்கு சராசரிப் பரிந்துரையாக தழைச்சத்து 120 கிலோ, மணிச்சத்து 40 கிலோ, சாம்பல் சத்து 40 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.

உரமிடும் காலம் மற்றும் அளவு

  • நுண்ணூட்டச்சத்து மற்றும் நுண்ணுயிர் உரம் ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும்
  • பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்து அளவில் பாதியும், முழு அளவில்மணி மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இடவேண்டும்
  • பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்தில் 25 சதவீதம் அளவை முறையே விதைத்த 15 மற்றும் 30வது நாளில் மேலுரமாகவும் இடவேண்டும்

 

Updated on : December 2013

 
Fodder Cholam