Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தாவர வளர்ச்சி ஊக்கிகள்

சைட்டோகைளின்

சைட்டோகைனின் என்பது தாவர வளர்ச்சிப் பொருளாகும். அது செல்பிரிதலைத் àண்டுகிறது. மில்லர் மற்றும் ஸ்கூஜ் என்பவர்கள் 1954-ல் ஹெர்ரிங் மீன் எனப்படும் மீன்வகை ஒன்றிலிருந்து இதைப்பிரிதெடுத்தார்கள். இதற்கு கைடின் எனப்பெயரிட்டனர். இதைத் தொடர்ந்து செல்பிரிதலைத் àண்டும் பண்புள்ள பலபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஓட்டுமொத்தமாக இவை சைட்டோகைனின்கள் என அழைக்கப்படுகின்றன. மக்காச்சோளத்தில் காணப்படும் சைட்டோகைனின் ‘சியாடின்’ எனப்படும். இளநீரிலும் இது உள்ளது. பல்வேறு வகை விதைத்தாவரங்கள் பலவற்றிலும் சைட்டோகைனின் உள்ளது. குறிப்பாக, கரு இளம் வேர்கள் ஆகியவற்றில் உள்ளன. ஆக்சின் மற்றும் சைட்டோகைனின் ஆகிய இரண்டும் வெவ்வேறு அளவுகளில் சேர்ந்து தாவரத்தின் வளர்ச்சி மற்றும் வேறுபாடலைதலை ஊக்குவிக்கின்றன.

சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் சைட்டோகைனின் மிகமுக்கியமான செயல், செல் பிரிதலை ஊக்குவிப்பதாகும்.

இன்டோல் அசிடிக் அமிலத்துடன் இது சேர்ந்து காலஸ் திசுவிலிருந்து மொட்டு மற்றும் வேர் உருவாதலைத் துண்டுகிறது.

நுனிமொட்டு இருக்கும் போது. சைட்டோகைனினைப் பயன்படுத்தினால் பக்கவாட்டு மொட்டுக்களின் வளர்ச்சி துண்டப்படுகிறது.

பல விதைகளில், விதையுறக்கத்தை ஐசட்டோகைனின் நீக்கி, அவை முளைக்கும் படி செய்கிறது.

தாவரங்கள் முதுமையடைவதை சைட்டோகைனின் தாமதப்படுத்துகிறது. இத ரிச்மான்ட் லாங்க் விளைவு எனப்படும்.

 

Cell division
Auxillary growth
Delaying of senescence
 

© ©தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014

Fodder Cholam