Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு
தாவர ஊட்டச்சத்து
பயிர் வினையியல் மாறுபாடுகள்

 

முன்னுரை

     

பயிரின் வளர்ச்சி காணப்பட்டாலோ, அல்லது பழங்களின் உள்ளேயோ அல்லது வெளியிலோ ஒழுங்கற்ற வளர்ச்சி காணப்பட்டால் (அசாதாரண வெப்பநிலை, சூரிய ஒளி, ஈரப்பதம், ஊட்டச்சத்து மற்றும் தீங்கும் விளை வாயுக்கள், போதுமான அளவு வளர்ச்சி ஊக்கிகள் கிடைக்காமை போன்ற காரணிகளால்) அவை பயிர் வினையியல் மாறுபாடுகள் ஆகும்.

 

குறைந்தளவு வெப்பநிலையால் எற்படும் பயிர் வினையியல் மாறுபாடுகள்


1. இலைகள் வெளிர்தல்

      இலைகளிலுள்ள பச்சையம் பாதிக்கப்படுவதால் அவை மஞ்சள் நிறமாக மாறுகிறது.

2. இலைகளிலுள்ள திசுக்கள் செத்துவிடுதல் / ஒழுங்கற்ற வளர்ச்சி நிலை

      இலைகள் ஒழுங்கற்ற வளர்ச்சி நிலையைப் பெறுதல், மேலும் திசுக்கள் செத்து விடுவதால், இலைகளின் வளர்ச்சி தடைபடுகிறது.

3. தண்டில் ஏற்படும் மாற்றங்கள்

      திடீரென வெப்பநிலை குறைவதால் தண்டானது சுருங்கி, வெடிப்புடன் காணப்படும்.

அதிக அளவு வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள்

  1. அதிகப்படியான வெப்பநிலை காரணமாகப் பயிர்களில் அதிக அளவு நீராவிப் போக்கு ஏற்பட்டு இலைகள் கருகிவிடுகின்றன.
  2. முட்டைக்கோஸ், லெட்டூஸ் போன்ற காய்கறிப் பயிர்களில் வெளிரிய தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
  3. தக்காளிப் பழத்தின் வெளிப்புறத்திலுள்ள தோல் திசுக்கள் அதக வெப்பத்தினால் இறந்து விடுகின்றன. அதற்கு அடுத்தபடியாக
  4. தோல் பகுதிக்கு அடிப்புறத்தில் தடித்த சொரசொரப்பான திசுக்கள் உருவாகின்றன. பயிரின் இனப்பெருக்க உறுப்புகள் உருவ மாற்றம் அடைந்து இதழ் போன்ற இலைகளாக மாறுகிறது.

சாதகமற்ற சூரிய ஒளியால் ஏற்படும் மாற்றங்கள்

இதனால் பயிரின் வளர்ச்சித் திறன் பாதிக்கப்படுகிறது. இலைகள் பச்சை நிறத்தை இழந்து படிப்படியாக மஞ்சள் நிறமாக மாறி, தண்டுப் பகுதியும் பின்னோக்கிக் கருகல் போன்ற பாதிப்பினையும் அடைகிறது. குறைந்த சூரிய ஒளியானது பாதிப்பினையும் அடைகிறது. குறைந்த சூரிய ஒளியானது பயிரின் ஒளிச்சேர்க்கையைப் பாதிக்கிறது

இ. திராட்சையில் போரான் சத்துக் குறைபாட்டால் பழங்களின் அளவு பெரிதும், சிறிதுமாக காணப்படுதல்.

Pear: Water core
Apple: Bitter bit
Tomato: Blossom ent rot

Tomato: Heat injury
Sweet potato: Chilling injury
Potato: Black heart
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam