Agriculture
பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

கோதுமை

பருவம் மற்றும் இரகங்கள்

சாகுபடிக்குகேற்ற மாவட்டங்கள்

மலைச்சார்ந்த மற்றும் அதன் அருகில் உள்ள சமவெளிப்பகுதிகள் தேனி, திண்டுக்கல், கரூர், கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள மலைப்பகுதிகள்.

பருவம்

அக்டோபர் 15 முதல் நவம்பர் முதல் வாரம் வரை விதைப்பிற்கு ஏற்ற பருவுமாகும். நவம்பர் 15க்குள் விதைப்பினை கண்டிப்பாக முடித்துவிட வேண்டும்.

இரகங்கள் : கோ. வெ.(கோ) 1, த.வே.ப.க சம்பா கோதுமை கோ.வெ.2  

கோதுமை - இரகங்களின் விவரம்:

விவரம் கோ. வெ.(கோ) 1
பெற்றோர் HD2646/HW2002A/CPAN3057
வயது (நாட்கள்) 85-90
தானிய மகசூல் (கிலோ / எக்டர்) 2364
தண்டு நேரானது
உயரம் (செ.மீ) 73 – 78
தூர்கள் 5-6
50 % பூக்கள் தோன்றும் நாட்கள் 50 நாட்கள்
கதிர் வடிவம் பியூசிபார்ம் (முள்ளங்கி வடிவம்)
தானியத்தின் நிறம் பழுப்பு
1000 நெல்லின் எடை (கி) 37
சிறப்பு அம்சங்கள் காயாத செடி மற்றும் மணிகள் உதிராத தன்மை, தண்டு மற்றும் இலை துருநோய் தாக்குதலை தாங்கும் தன்மை, சப்பாத்தி மற்றும் ரொட்டி செய்ய உகந்தது

கோ. வெ.(கோ) 1 
   
விவரம் கோ. வெ.(கோ) 2
பெற்றோர் NP 200 ன் விகாரி
வயது (நாட்கள்) 110
தானிய மகசூல் (கிலோ / எக்டர்) 4040
தண்டு நேரானது முதல் பகுதி நேரானது
உயரம் (செ.மீ) 75-80 செ.மீ
தூர்கள் 10-12
50 % பூக்கள் தோன்றும் நாட்கள் 73 நாட்கள்
கதிர் வடிவம் பியூசிபார்ம் (முள்ளங்கி வடிவம்)
தானியத்தின் நிறம் -
1000 நெல்லின் எடை (கி) 41
சிறப்பு அம்சங்கள் துரு நோய் மற்றும் வெப்பத்தை தாங்கும் தன்மை கொண்டது.

த.வே.ப.க சம்பா கோதுமை கோ.வெ.2 

Updated on : Jan 2014
 
Fodder Cholam