Agriculture
நில பண்படுத்தல்

பயிர் சாகுபடியில் நிலத்தை பண்படுத்தும் முறைகள்

திருந்திய நெல் சாகுபடி
நாற்றங்கால்

  • நாற்றங்கால் தேர்வு செய்யப்படவேண்டும். நீர் நிலைக்கும் நடவு வயலுக்கும் அருகில் இருப்பது நல்லது.
  • ஒரு எக்டர் நடவு செய்ய 20x7.5மீ பரப்பளவுள்ள (150 ச.மீ.) நிலம் போதுமானது. நிலத்தில் வாய்க்காலைத் தவிர்த்து 100 ச.மீ. நிலமே நாற்றங்கால் ஆகும்.
  • உழுது சமன் படுத்தப்பட்ட நிலம், 120 செ.மீ. (5 அடி) அகலமுள்ள பாத்திகளாக 50 செ.மீ. இடைவெளியில் இரண்டு அங்குலம் ஆழத்திற்கு மண்ணை எடுத்து இருபுறமும் உள்ள பாத்திகளில் பரவலாக விசிறி சமன் செய்யப்பட்டு அமைக்கவேண்டும். பாத்திகளின் நீளம் 20 மீட்டராக (சுமார் 60 அடி) அமைதல் சிறந்த முறையில் நீர் பாசனம் செய்வதற்கு ஏற்றது.

நஞ்சையில் சேற்று நெல்
நாற்றங்கால் தயாரிப்பு

  • தயாரிக்கப்பட்ட நிலம்2.5 மீ (8 அடி) அகலமுள்ள பாத்திகளாக, 30 செ.மீ ( ஒரு அடி) இடைவெளியுள்ளவாய்க்கால் பாத்தியைச்சுற்றிலும் அமைக்க வேண்டும்
  • பாத்தியின் நீளம் 8 முதல் 10 மீ வரை நிலத்தின் சமன் அமைப்பு. மண்ணின் தன்மையைப் பொறுத்து அமைக்கலாம்
  • வாய்க்கால் அமைக்கும் போது எடுக்கப்பட்ட மண்ணை பாத்தியில் பரப்பி நிரவலாம் அல்லது வாய்க்காலலை சீந்தி மூலம் அமைக்கலாம்
  • பாத்தி சமன்படுத்தப்படுவது மிகவும் அவசியம்

நடவு வயல் பராமரிப்பு
நிலம் தயாரித்தல்

  • கோடையுழவு செய்த வயல்களுக்கு ஆரம்ப நீர்த்தேவை குறைவாகத் தேவபைடுகின்றது
  • சேற்றுழவு செய்வதற்கு ஒரிரு நாட்கள்முன்பே தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்கு நீர் பாய்ச்சுதல் வேண்டும்
  • பின்னர் சேற்றுழவு முறையே செய்யப்படவேண்டும்
Tillage Operations for Field Cros Tillage Operations for Field Cros
  • இருக்கம்படாத சேற்று மண் இவ்வகையான மண்ணில் உழுகின்ற இயந்திரமோ கால் நடைகளோ நகரமுடியாத நிலை ஏற்படுகின்றது. இந்நிலையைக் குறைக்கவோ தவிர்க்கவோ 5ன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 400 கிலோ எடையுள்ள ‘கல் உருளை’ அல்லது எண்ணை தகரத்தினுள்ள கற்கள் நிரப்பிய உருளை சரியான ஈரப்பத்தில், எட்டு முறை திரும்பத்திரும்ப இழுக்கப்படுவதால், மண் இறுகி பதப்பட வாய்ப்புள்ளது.
  • உவர் நிலம் ( 8.5க்கு மேல்) இம்மாதிரியான நிலத்தினை ந்னகு உழுது அந்நிலத்தின் ‘ஜிப்சம் தேவை’யின் பாதி அளவிற்கு, ஜிப்சம் இடப்படுதல் வேண்டும். மேலும் 5 டன் பசுந்தழை உரத்தினையும் இட்டு நன்கு மிதித்து, பின்னர் சரியான முறையில் வடிகால் அமைத்து, தொடர்ந்து 10-15 நாட்களுக்கு நீர் நிறுத்தி வரவேண்டும். அதன் பின்னர் நடவு செய்யலாம். நடவிற்கு முன்னர் 37.5 கிலோ ஜிங்சல்பேட் சம அளவு மணலுடன் கலந்து வயலின் மேற்பரப்பில் àவிவிடவும்.
    இ. களர் நிலம் (நுஊ 4 னள, அக்கு மேல் காணப்படும் தருணத்திற்கு) குறுக்கு நெடுக்காக ஆழ் வடிகால் அமைத்து, 5டன் பசுந்தழை உரமிட்டு 10-15 நாட்கள் நீர் கட்டி நீர் மண்ணினுள் ஊடுருவி மறைந்து விடுவதே போதுமானது. நடவு செய்ய 25 சதம் அதிகம் தழைச்சத்து அடியுரமாக இடப்படவேண்டும். ஜிங்சல்பேட் உவர் நிலத்திற்கு கூறப்பட்டது போல் செய்யப்படவேண்டும்
    ஈ.அமிலத்தன்மையுடை நிலவகைகளுக்கு சுண்ணாம்புக்கல் 2.5 டன் ஒரு எக்டருக்கு இடப்பட்டு நடவு செய்யப்பட வேண்டும். இம்முறை தொடர்ந்து ஐந்தாவது பயிர் வரை பின்பற்றப்படவேண்டும்.

சேற்றுவயல் நேரடி விதைப்பு
நிலம் தயாரித்தல்

  • கோடையுழவு அவசியம்
  • விதைப்பதற்கு முன்பாக நீர் எட்டி சேற்றுழவு செய்யப்படுதல் வேண்டும்
  • மிகமிக அவசியம் நிலம் நாற்றங்காலைப் போன்றே சமன் செய்யப்படுதல்
  • இங்கும் அங்கும் மேடு பள்ளமாகவோ, குண்டும் குழியுமாகவோ இருப்பின் அங்கெல்லாம் நீர் தேங்கி நாற்றுக்கள் சரி வர முளைக்காமல் இடைவெளி அதிகம் காணப்படும்.
  • நிலம் சமன்படுத்துதல் நீர் மேலாண்மைக்கும், களை மேலாண்மைக்கும் அடிப்படைத் தேவைகள் என்பதை நன்கு உணர்ந்து. தக்கவாறு நிலம் சமன் படுத்தப்பட வேண்டும்.
  • அரை அடி அகழத்தில் சிறிய வடிகால் வாய்க்கால்கள் நிலத்தின் குறுக்கேயும், 3 மீ இடைவெளியிலும், வரப்பின் ஒரத்திலும் அமைத்தல் நல்லது.

இறவையுடன் நஞ்சையில் புழுதிவிதைத்த மானாவாரி நெல்
நிலம் தயாரித்தல்

  • கோடையுழவும் அதன் பிந்திய உழவும்அவசியம்
  • எங்கெல்லாம் ‘மண் இருக்கம்’ ஏற்பட வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் ஜிப்சம் 1 டன் அடியில் இட்டு கடைசி உழவு செய்யப்படவேண்டும்.

நஞ்சையில் புழுதிவிதைத்த இறவை நெல்
நிலம்தயாரித்தல்

  • கோடையுழவும் அதன் பிந்திய உழவும் அவசியம்
  • எங்கெல்லாம் ‘மண் இருக்கம’ ஏற்பட வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் ஜிப்சம்1 டன் அடியில் இட்டு கடைசி உழவு செய்யப்டவேண்டும்

புழுதிவிதைத்த மேட்டுக்கால் நெல்
நிலம்தயாரித்தல்

  • கோடையுழவும் அதன் பிந்திய உழவும் அவசியம்
  • எங்கெல்லாம் ‘மண் இருக்கம’ ஏற்பட வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் ஜிப்சம்1 டன் அடியில் இட்டு கடைசி உழவு செய்யப்டவேண்டும்

கோதுமை
நிலம் தயாரித்தல்
இரும்பு கலப்பை கொண்டு இருமுறையும், கொக்கி கலப்பைக் கொண்டு இரண்டு முதல் மூன்று முறை நன்றாக உழுதல் வேண்டும்.

எரு இடுதல்
மக்கிய தொழு உரம் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இடவேண்டும்.

கம்பு
நிலம் தயாரித்தல்

கோடை மழையைப் பயன்படுத்தி, பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பைக் கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன் கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் உழவின்போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க்காலத்தில் பூச்சிதாக்குதல் குறையும். மழைக்காலத்தில் மழைநீரைச் சேமித்து மண் ஈரம் காக்க ஆழச்சால் அகலப்படுத்தி, சம உயர வரப்பு, சமதள சாகுபடி நிலப்போர்வை அமைத்தல் களைக் கட்டுப்பாடு போன்ற முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

மக்காச்சோளம்
நிலம் தயாரித்தல்

முதலில் நிலத்தை டிராக்டர் மூலம் கட்டி கலப்பையால் ஒரு முறை உழவு செய்யவும். பின்பு தொழு உரத்ததை நிலத்தில் பரப்பிய பிறகு கொக்கி கலப்பை கொண்டு இரு முறையும் நன்கு உழவு செய்யவும்.

கேழ்வரகு
நிலம் தயாரித்தல்

கோடை மழையைப் பயன்படுத்தி, பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பைக் கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன் கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் உழவின்போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க்காலத்தில் பூச்சிதாக்குதல் குறையும். மழைக்காலத்தில் மழைநீரைச் சேமித்து மண் ஈரம் காக்க ஆழச்சால் அகலப்படுத்தி, சம உயர வரப்பு, சமதள சாகுபடி நிலப்போர்வை அமைத்தல் களைக் கட்டுப்பாடு போன்ற முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

சோளம்
நிலம் தயாரித்தல்
கோடை மழையைப் பயன்படுத்தி, பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பைக் கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். பின்னர் ஒவ்வொரு மழைக்குப் பின்பும் கலப்பைக் கொண்டு நிலத்தை உழுதுவிடவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன், கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் உழவின்போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க்காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும். மழைக்காலத்தில் மழைநீரைச் சேமித்துமண் ஈரம் காக்க ஆழச்சால அகலப்படுத்தி, சம உயர வரப்பு, சமதள சாகுபடி, நிலப்போர்வை அமைத்தல், களைக் கட்டுப்பாடு போன்ற  முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

உளுந்து
நிலம் தயாரித்தல்
நில மேம்பாடு
நில மேம்பாட்டிற்கு ஒரு எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழு உரம் 12.5 அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடவேண்டும்

Tillage

தட்டைப்பயிர்
நிலம் தயாரித்தல்
வயலை நன்கு உழுதபின் பாத்திகள் அமைக்கவும்.மண்ணின் கடினத்தன்மையை நீக்க எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடுவதன்மூலம் மண்வளத்தை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெறலாம்

பச்சைப்பயிறு
நிலம் தயாரித்தல்
வயலை நன்கு உழுதபின் பாத்திகள் அமைக்கவும். மண்ணின் கடினத்தன்மையை நீக்க எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடுவதன்மூலம் மனண்வளத்தை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெறலாம்

ஆமணக்கு
நிலம்  தயாரித்தல்
அமில நிலங்களைத்  தவிர பிற நிலங்களில் பயிரிடலாம். நாட்டுக் கலப்பையினால் இரண்டு மூன்று தடவை உழவேண்டும்.

எள்
நிலம் தயாரித்தல்
மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. நிலத்தை இருமுறை டிராக்டர் கலப்பையால் (அ) மூன்று முறை இரும்பு கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவேண்டும். சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும். மண்ணில் உள்ள கடினமான கட்டிகளை உடைக்க உளிக் கலப்பையைக் கொண்டு 0.5 மீட்டர் ஆழத்தில் இரு, செங்குத்தான திசைகளில் உழவேண்டும். பிறகு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய தென்னை நார்க்கழிவு போடவேண்டும். இறவை எள் சாகுபடிக்கு, கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைப் பொறுத்து 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவிற்கு படுக்கை தயாரிக்கவேண்டும். நீர் தேங்குவதைத் தடுக்க சமன்படுத்த வேண்டும். நெல் சாகுபடிக்கு பிறகு எள் போடும் நிலமானது சரியான ஈரப்பதத்தில் ஒரு முறை உழுதபின், விதை விதைத்த பிறகு மற்றொரு உழவினால் மூடவேண்டும்.

நிலக்கடலை
நிலம் தயாரித்தல்
மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. சட்டிக் கலப்பையைப் பயன்படுத்தி உழுதபின் 3 அல்லது 4 முறை இரும்புக்கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழவேண்டும்.
உளிக்கலப்பையைக் கொண்டு மண் கடின அடுக்கை உடைத்தல்
குறைந்த ஆழத்தில் மண் கடின அடுக்கு உடைய நிலத்தை உளிக்கலப்பையைக் கொண்டு 50 செ.மீ இடைவெளியில் ஒரு திசையில் உழவேண்டும். பின்னர் அதற்கு நேர் எதிர் திசையில் உழவேண்டும். இவ்வாறு 3 வருடத்திற்கு ஒரு முறை செய்யவேண்டும். பின்னர் 12.5 டன் தொழு உரம் அல்லது நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவு இடவேண்டும்

பேய் எள்
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவேண்டும். பின்பு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும்.

குசும்பா
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவண்டும். பின்பு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும்
தொழு உரமிடுதல்
நிலம் தயாரித்த பிறகு 12.5 டன் தொழுஉரம் (அ) மக்கிய தென்னை கழிவு இடவேண்டும். தொழு உரமானது உழுவதற்கு முன்னால் இடப்படவில்லையெனில், கடைசி உழவுக்கு முன்பு தொழு உரத்தை இட்டு மூடவேண்டும்

சூரியகாந்தி

Tillage Tillage

நிலம் தயாரித்தல்
நிலத்தில் 12.5 டன் மக்கிய தொழு உம் அல்லது தன்னை நார்க் கழிவு இட்டு நன்றாக உழுது பண்படுத்தி மண்ணை நன்றாகப் புழுதியாக்க வேண்டும்.

பருத்தி
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்றாக உழுது பண்படுத்தவேண்டும். குறைந்த ஆழத்தில் மண் கடின அடுக்கு இருந்தால் நிலத்தை கத்திக் கலப்பையைக் கொண்டு 0.5 மீ இடைவெளியில் ஒரு திசையில் உழவேண்டும். பின்னர் அதற்கு நேர்செங்குத்தான திசையில் உழவேண்டும். இதனை மூன்று வருடத்திற்கு ஒரு முறை செய்யவேண்டும். மண் நன்கு பொடியாகும்படி உழுதபின்னர் எக்டருக்கு வேப்பம் புண்ணாக்கு 250 கிராம் இடுவதின் மூலம் கூன் வண்டின் தாக்குதலைத் தவிர்க்க முடியும்.
கரும்பு

  1. டிராக்டரில் இணைக்கபட்டு இயங்கும் சட்டி அல்லது விக்டரி கலப்பை கொண்டு நிலத்தினை ஆழமாக உழுதல் வேண்டும்.மேலும் வயலில் உள்ள மண் கட்டிகளை உடைத்து விடவும் மண் பொலபொலப்புத் தன்மை அடையவும் ஜீனியர் கலப்பை கொண்டு உழுதல் வேண்டும்.
  2. சீரான முறையில் நீர்ப்பாசனம் செய்திட நிலத்தின நன்கு கமன்படுத்த வேண்டும்
  3. நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.முி. இடைவெளியில் விக்டரி அல்லது பார் அமைக்கும் கலப்ப கொண்டு அமைக்க வேண்டும். நடவு சால்கள் 20 செ.மீ.  ஆழம் உடையதாக இருத்தல் வேண்டும்
  4. நீர்ப்பாசன வாய்க்கால்கள் 10 மீட்டர் இடைவெளியில் இருத்தல் வேண்டும்

தீவனச் சோளம்
நிலம் தயாரித்தல்
எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் 10 பாக் அசோஸ்பைரில்லம் (2000 கிராம்) மற்றும் 10 பாக் பாஸ்போபாக்டீரியா (2000 கிராம்) அல்லது 20 பாக் அசோபாஸ் (4000 கிராம்) கலந்து இட வேண்டும். பின்னர் 2 முதல் 3 முறை உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் 6 மீ நீளமும் 60 செ.மீ இடைவெளியும் கொண்ட பார்கள் அமைக்க வேண்டும்.

தீவன மக்காச் சோளம்
நிலம் தயாரித்தல்
உழவு
இரும்புக் கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக் கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழவேண்டும்.

தொழு உரம் இடுதல்
எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழு உரம் அல்லது மட்குடன் 10 பாக் அசோஸ்பைரில்லம் (2000 கிராம்) மற்றும் 10 பாக் பாஸ்போபாக்டீரியா (2000 கிராம்) அல்லது 20 பாக் அசோபாஸ் (4000 கிராம்) ஆகியவற்றை உழும்போது வயலில் இட்டு உழவேண்டும். 2 முதல் 3 முறை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்தி 60 செ.மீ இடைவெளியில் பார் அமைக்க வேண்டும்.

நீல கொழுக்கட்டைப் புல்
நிலம் தயாரித்தல்
மண் வடிகால் வசதியுள்ள இரு மண்பாட்டு மற்றும் சுண்ணாம்புச் சத்து
மிகுந்த நிலம் மிகவும் ஏற்றது. களர், உவர், நிலங்களிலும் பயிர் செய்யலாம்.
உழவு
நிலத்தை இரும்புக்கலப்பை கொண்டு இரண்டு அல்லத மூன்று முறை உழுது பாத்திகள் அமைக்க வேண்டும்.

குதிரை மசால்
நிலம் தயாரித்தல்
உழவு
இரும்புக் கலப்பை கொண்டு 3 அல்லது 4  முறை உழுது பண்பட்ட நிலத்தில் பாத்திகள் அமைக்கவேண்டும்.
தொழு உரம் இடுதல்
தொழு உரம் அல்லது கம்போஸ்ட் எக்டருக்கு 12. 5 டன் என்ற அளவில் இட வேண்டும்.

தீவன தட்டைப்பயறு
நிலம் தயாரித்தல்
உழவு
நிலத்தை இரும்புக்கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக் கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழ வேண்டும்.
தொழு உரமிடுதல்
எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடவும்.

முயல் மசால்
நிலம் தயாரித்தல்
உழவு
இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழ வேண்டும்.

தொழு உரம்
எக்டருக்கு 10 டன் தொழு உரம்  அல்லது கம்போஸ்டை உழவின் போது மண்ணில் கலக்க வேண்டும்.

வேலி மசால்
நிலம் தயாரித்தல்
உழவு
இரும்புக் கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக் கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழவேண்டும்.
பார் பிடித்தல்
6 மீ நீளம் மற்றும் 1 மீ இடைவெளியில் பார் பிடித்து பார்களுக்கிடையில் வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013

Fodder Cholam