Agriculture
களை மேலாண்மை :: பார்த்தீனியம் மேலாண்மை

பார்த்தீனியத்தின் பண்புகள்

பார்த்தீனிய பூக்கள் பார்த்தீனிய விதைகள்

பார்த்தீனிய செடிகள் முட்டை வடிவமான இலைகளை கொண்டது மற்றும் இலையின் மேல் வெள்ளை நிற ரோமங்கள் பெற்றுள்ளது. செடியின் முதிர்ந்த இலைகள், இளம் செடிகள் பொதுவாக அதிக ஆழம் கொண்ட ஆணிவேர் அமைப்புடையது.

தண்டு மற்றும் இலைகளின் வெள்ளை நிற ரோமங்கள் துள்ளியமாக்க்காணப்படும். இச்செடிகள் பார்ப்பதற்கு நீலம் அல்லது சாம்பல் நிறத்திலும், பூக்கள் வெள்ளை நிறத்தில் செடிகளின் உச்சிப்பகுதியில் கொத்துக்கொத்தாக்க்காணப்படும். பூக்கள் முதிர்ச்சி அடையும் போது தடிமனாகவும் காப்பி நிறத்துடனும் காணப்படும். இதன் விதைகள் தட்டையாகவும், 2 மிமி நீளமாகவும் மற்றும் வைர வடிவமாக காணப்படும். பார்த்தீனிய செடியில் ஒவ்வொரு பூங்கொத்துகளிலும் நான்கு விதைகள் காணப்படும். இந்த விதைகள் நான்கே வாரத்திற்குள் நிலத்தில் விழுந்து முளைத்து மீண்டும் பூத்து விதைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. ஒரு முறை பார்த்தீனியம் உற்பத்தியாகி விட்டால் எந்த சூழ்நிலையிலும் அதாவது மழை, வறட்சி எதையும் தாங்கி வளரக்கூடியது.

 

 
Fodder Cholam