Agriculture
களை மேலாண்மை :: பார்த்தீனியம் மேலாண்மை
முன்னுரை
பார்த்தீனியம் ஹிஸ்டீரியோபோரஸ் எல்.
குடும்பம் : காம்போசிட்டே(ஏஸ்டேரசியே)
பொதுப்பெயர் : காங்கிரஸ் களை
தமிழ்ப்பெயர் : விஷப்பூண்டு
மார்ப்பாலஜி : பெரிய இலைக் களை
பண்பு : ஆண்டு மூலிகை 1.5 மீ வரைக்கும்.
தண்டு : மெலிதான மயிரிழைகளுடன் கூடியது.
இலை : மாற்றுமுறை இலைகள், காம்பற்றது, இரண்டாகப் பிளவு பட்டிருக்கும் 20x10 செ.மீ. வரைக்கும், இளம்பருவம், மடல் முழுவதும், கடுமையானது.
பூ : கொத்தான பூக்கள், மஞ்சரிக்காம்பினுள் மஞ்சரிகள், வெள்ளை சிறு பூக்கள், 5 வெளிப்பகுதி சிறு பூக்கள், பெண்மலர், இரண்டு பளிங்கு இறக்கைகள் அடிப்பகுதியில் தாங்கியிருக்கும். உட்பகுதியில் சில ஆண் சிறு பூக்கள், பெண் பூவில் சிறு வட்டம் மற்றும் முட்டை வடிவம், பூக்காம்பு முழுவதும், ஆண் பூ குழாய் வடிவம், 5 பகுதிகளாகும், மகரந்தப்பைகள் கீழ்ப்பகுதியில் இருக்கும்.
பழம் : பல அடுக்குகளில் பழம், பின்புறத்தில் அழுத்தப்பட்டிருக்கும். கீழ்ப்பகுதியில் நேராக, கிளைப்பக்கவாட்டில் இரண்டு முட்கள் இருக்கும்.
இனப்பெருக்கம் : விதை மூலம் பரவுகிறது.
வாழிடம் : பயிர் சாகுபடி செய்யும் நிலங்கள் மற்றும் சாலை ஓரங்கள்

பார்த்தீனியத்தை நட்சத்திர களை, கேரட் களை, வெள்ளை தொப்பி, மேல் வெள்ளை என்றும் அழைக்கப்படுகிறது. இயற்கையாக மெக்சிகோ, தென் மற்றும் வட அமெரிக்க, ஆஸ்திரேலியா, சைனா, கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் நூற்றாண்டுகளாக இக்களை காணப்படுகிறது. 1977 வரை இக்களை உலகில் கட்டுப்படுத்த முடியாத களைகளில் ஒன்றாக இருக்கவில்லை. ஆனால் அதன் பிறகு பார்த்தீனியம் உலகில் உள்ள ஏழு முக்கிய களைகளில் ஒன்றாக உருவெடுத்தது.

 

 
Fodder Cholam