Agriculture
களை மேலாண்மை :: பார்த்தீனியம் மேலாண்மை
கால்நடை சுகாதாரத்தில் பார்த்தீனியம்
கால்நடைகளுக்கு பார்த்தீனியத்தின் தீமைகள்

கால்நடைகள் பார்த்தீனிய செடியை உண்ணுவதில்லை என்றாலும், அதன் நச்சுத்தன்மை கால்நடைகளின் உடல்களில் பார்த்தீனியம் செடிகளின் வழியாக நடக்கும் போது அல்லது அதனை நுகரும் போதும் பரவுகிறது. அதன் பின் கால்நடைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. எருமைகளுக்கும் அதன் கன்றுகளுக்கும் உணவாகக் கொடுக்கும் பொழுது குறைவான மற்றும் கடுமையான நச்சுத்தன்மை உடலில் ஏற்பட்டு, வாய்ப்பகுதிகள் மற்றும் குடல்பகுதிகளில் புண்கள் ஏற்படுத்துகின்றது. சிறுநீரகம் மற்றும் ஈரல் பகுதிகளில் ஏற்படும் நச்சுத்தன்மையால் கால்நடைகளின் மலட்டு தன்மை ஏற்படுகிறது. பார்த்தீனியம் பரவியுள்ள பகுதிகளில் மேயும் கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால் மனிதர்களுக்கு தீமை விளைவிக்கக் கூடியது.

பார்த்தீனியம் செடியின் மகரந்தத்தூள்கள், காற்று மண்டலத்தில் வருடம் முழுவதும் காணப்படுகிறது. பார்த்தீனியத்தின் மகரந்தத்தூள் சரும நோய்களை ஏற்படுத்தக்கூடிய தன்மை உடையது. இத்தன்மை ஜுன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. இச்செடி ஆஸ்த்மா மற்றும் தோல் வியாதிகளை ஏற்படுத்தக்கூடியது. மேலும் இக்களைச்செடியின் மகரந்தத்தூள் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது. ஒரு பார்த்தீனியம் செடி 624 மில்லியன் மகரந்தங்களை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை கொண்டது மற்றும் பல மைல்கள் தூரம் காற்றின் மூலம் பரவக்கூடியது.

 

 
Fodder Cholam