| | |  |  |  | | | | |
வேளாண்மை :: கற்றாழை

மண்வளம்
நீர்வளம்

தாவர ஊட்டச்சத்து
தாவர வளர்ச்சி ஊக்கிகள்
மகசூலை அதிகரிக்கும்
வழிமுறைகள்

Agave

நன்றாக வெளிக்டகொணரப்பட்டு பயன்படுத்தப்படாத வளங்களில், நார் உற்பத்தி செய்யக்கூடிய, கடும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது கற்றாழையும் ஒன்று. இது மானாவாரி உழவர்களின் வாழ்வை மேம்படுத்தும் என்றால் மிகையாகாது. கற்றாழை குட்டையான தண்டையுடையது. அது அடுக்கான மலர்களைப்போன்ற நேரான நுனி கூரான சடைப்பிடிப்புள்ள இலைகளைக் கொண்டது. இதனுடைய மஞ்சி கெட்டியானதும் மற்றும் சுரசுரப்பானதும் ஆக இருந்தாலும் புளிச்ச தரத்தில் உயர்ந்தது. இது கயிறு, வடம், முறுக்கு கயிறு, மீன்வலை, மிதிபாய் மற்றும் கம்பளங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. மேலும் குட்டையான நார்கள் துடைப்பங்கள் தயாரிக்கவும், பிரஸ்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இலை நீக்கப்பட்ட கழிவுகள் காகிதப் பலகைகள் செய்யப் பயன்படுகிறது. இதன் நார்கள் 73-780 செல்சியஸ் லிக்னின் கொண்  செல்லுலோஸ் அமைப்பை உடையன. இது தவிர, மெழுகு மற்றும் ஹெக்கோஜெனின் அசிட்டேட் என்னும் ஸ்டீராயிடும் எடுக்கப்பட்டு மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழையின் முதலினமான அகேவ் 275 உப இனங்களை உடையது. இதில் அகேவ் சிசாலானா, கன்டாளா மற்றும் அமெரிக்கானா ஆகியவை இந்தியாவில் காணப்படுவன. கற்றாழை தன் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் பூக்கக்கூடியது. கற்றாழை இருப்புப் பாதை ஓரங்களிலும், நெடுஞ்சாலை ஓரங்கள், ஆற்றின் கரையோரங்கள் மற்றும் மானாவாரி நிலங்களில் வேலிச் செடியாகவும் வளர்க்கப்படுகிறது. இது நாள் வரை இப்பயிர் ஆங்காங்கே வயல் எல்லைகளில் மிகக்குறைந்த பராமரிப்பிலேயே வளர்க்கப்படுகிறது. இப்பயிர் மானாவாரி நிலங்களில், மற்ற பயிர்கள் வராத இடங்களில் நன்கு வளர்கிறது. இது மணல் சார்ந்த நல்ல வடிகால் உள்ள மண்வகைகளில் வேகமாக வளர்கிறது.

நாற்றாங்கால்

கற்றாழை சாதாரணமாக பக்கக் கன்றுகளிலிருந்து எடுத்து நடப்பட்டு வளர்க்கப்படுகிறது. நன்கு வளர்ந்த பக்கக் கன்றுகளை தோண்டி எடுத்து மழைக்காலங்களில் நடப்படுகிறது. சிறு மொட்டுக்களிலிருந்து, நடவு செய்வதானால், ஒரு மீட்டர் அகலத்தில் 20 மீட்டர் நீளத்தில் தாய்ப்படுகை தயார் செய்து 5000 மொட்டுக்கள் முதலில் நடப்படுகிறது. ஆறு மாதங்கள் கழித்து, நாற்றுக்கள் பிடுங்கி எடுக்கப்பட்டு அதே அளவு படுகையில் 500 என்ற கணக்கில் நடப்படுகின்றன. மீண்டும் இதில் மூன்று மாதங்கள் விடப்படுகின்றன. மொத்தம் ஒன்பது மாதங்கள் கழித்து, காலிலிருந்து அரைகிலோ எடையும் 9-12 உயரமும் உள்ள பக்கக்கன்றுகள் நடவுக்கு தயாராகிவிடும்.

வயல் நடவு

வயலில், கன்றுகள் ஒரு அடி நீள, அகல மற்றும் ஆழம் கொண்ட குழிகள் 2-2 மீட்டர் இடைவெளியில் வேண்டும். நடும் பருவம் மழைக்காலமாக இருந்தால் ஆரம்பக் காலத்தில் நன்கு வேர்ப்பிடித்து வளர்வதற்கு ஏதுவாக அமையும்.

அறுவடை

நடவு  செய்த மூன்றாண்டுகள் கழித்து. இலைகள் அறுவடைக்கு தயாராகின்றன. ஒரு மீட்டருக்கும் குறையாத நீளமுள்ள இலைகள் முதலில் அறுவடைக்கு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு செடியும் ஒரு ஆண்டில் 40-50 வரை கணக்கிடப்பட்டுள்ளது. அகேவ் சிசலானா உயர் இரக நார்களைக் கொண்டது. மூன்றாம் ஆண்டிலிருந்து 30-40 டன் இலைகளை ஒரு ஏக்கருக்கு அறுவடை செய்யலாம். சுமாராக இரண்டாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். வரப்போரப்பயிரானாலும் ரூபாய் 400 வரை வருமானம் தரத்தக்கது. பழைய முறையான, சுரண்டி எடுத்தலை விட தற்போது இயந்திர நார்ப் பிரிப்பானை கொண்டு நாரைப் பிரித்தெடுக்கலாம். பிரிக்கப்பட்ட நார்கள், கழுவப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு காயவைக்கப்பட்டு கட்டுக்களாக கட்டப்படுகின்றன. முன்னெச்சரிக்கையாக, இலைகள் அறுவடை செய்யப்பட்ட இரண்டு நாட்களில், நார் பிரிக்கப்படுகிறது. இது தரமான நார்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. கற்றாழை நார் மாவு வெள்ளை நிறத்திலிருந்து தங்க நிற மஞ்சளாக காணப்படுகிறது.

 

மானாவாரி நில சாகுபடி முறை
நீர்த்தேக்க மேலாண்மை
இயற்கை சீற்ற மேலாண்மை
ஒருங்கிணைந்த பண்ணை முறை
அங்கக வேளாண்மை
பசுந்தாள் எருயிடுத
ல்

வறட்சி
வெள்ளம்
களர்/உவர் தன்மை
வெப்பநிலை

வேளாண்மைத் துறை திட்டம்
விண்ணப்பப் படிவம்
நீர்வள,நிலவள திட்டம்
வேளாண் கொள்கை குறிப்புகள்

பயிர்த் திட்டமிடுதல்
பயிர்த்தேர்வு முறைகள்
நுட்ப காலநிலை
வெப்பநிலை
காற்றழுத்தம்
மழை
சூரிய வெப்பம்

 

| முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | உரமேலாணமை | நீர் நிர்வாகம் | களை மேலாண்மை | பூச்சி & நோய் மேலாண்மை |
| புகைப் படங்கள் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து