Agriculture
வேளாண்மை :: நார் பயிர்கள்

இறவை பருத்தி

மானாவாரி பருத்தி

நெல்லுடன் பயிர் சுழற்சி முறையில் பருத்தி

மானாவாரி பருத்தி

நீர் அறுவடை தொழில் நுட்பங்களை பின்பற்றி மற்றும் பருத்தியை ஒரு வெற்றிகரமான பயிராக சாகுபடி செய்யலாம்.
பருவம் மற்றும் இரகங்கள்
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம், விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியின் பாதி பகுதியில் பருவகால மழை 375 மி.மீ., மற்றும் அது பெரும்பாலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் பெறப்படும், எல்.ஆர்.ஏ. 5166 அல்லது, எஸ்.வி.பி.ஆர் 2 அல்லது கே.சி. 2, கே.சி. 3. ரகங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் மழை பெறுகிற இடங்களான, இராமநாத புரம், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கே 11 ரகங்களைத் தேர்ந்தெடுக்கவும்.


1.மானாவாரி பருத்திக்கு நிலம் தயாரித்தல்
நிலம் தயாரிப்பு
1. முந்தைய பயிர் அறுவடை முடிந்தவுடன் உடனடியாக நிலத்தைத் தயாரிக்கத் தொடங்குதல்
2. நிரந்தர பரந்த பார்கள் அமைத்தல்.


2.தொழு உரம் அல்லது உரம் இடுதல்
உழாத நிலத்தில் ஒரு ஹெக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய உரம் அல்லது மட்கிய தென்னை நார்க் கழிவு அல்லது 2.5 டன் மண்புழு உரத்தை சீராக பரப்புதல்.
பல்நோக்கு கருவிகள் அல்லது நாட்டு கலப்பையை செயல்படுத்தி மண்ணில் உரத்தைப் பரப்புதல்.
 7.5 கிலோகிராம் ஊட்டமேற்றிய தொழு உரத்துடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நுண்ணூட்டக் கலவையை இடுதல்.


3.கனிம உரங்களின் பயன்பாடு
முடிந்தவரை மண் பரிசோதனையின் பரிந்துரைப்படி தழை, மணி மற்றும்  சாம்பல் உரங்களை அளிக்க வேண்டும்.
மண் சோதனைகள் செய்யவில்லை என்றால் வெவ்வேறு வகையான ரகங்களுக்குப் பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டும்.


ரகங்கள்

உரங்களின் அளவு(கிலோ / எக்டர்)

N

P205

K20

கே11

20

0

0

எஸ்.வி.பி.ஆர். 2

40

20

40

கே. சி.2

40

20

40

4.நுண்ணூட்ட உரங்களின் பயன்பாடு
மொத்த அளவு 50 கிலோ செய்ய போதுமான மணல் கொண்டு வேளாண் துறையின் 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையைக் கலந்து செய்தல். (அல்லது) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஊட்டமேற்றிய தொழு உரம் 7.5 கிலோ / எக்டருக்கு இட வேண்டும். ஊட்டமேற்றிய தொழு உரத்தைத் தயார் செய்ய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நுண்ணூட்டக் கலவையுடன், தொழு உரத்தை 1:10 விகிதத்தில் கலந்து தயார் செய்ய வேண்டும். போதுமான ஈரப்பதத்தில் கலந்து  நிழலில் ஒரு மாதம் வைத்திருக்க வேண்டும்.

• விதைப்புக்குப் பிறகு வரப்புகளின் மீது சீராக இட்டு, விதைகளை மூட வேண்டும்.
• மண்ணில் கலக்கக் கூடாது.


மானாவாரியில் மகசூலை அதிகரிக்க மற்றும் பி.டி. பருத்தியில் சிவப்பாகுதலைக் குறைத்தல்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நுண்ணூட்டக் கலவையின் பயன்பாடு
(ஊட்டமேற்றிய தொழு உரம் 7.5 கிலோ / எக்டருக்கு பல்வேறு வகைகளுக்கு இட வேண்டும். பி.டி. பருத்திக்கு 10 கிலோ / எக்டருக்கு ஊட்டமேற்றிய தொழு உரம் இட வேண்டும்) மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக PGR இலைவழி தெளித்தல் 1.5% செறிவில் சதுர மற்றும் காய் உருவாகுதல் நிலைகளில் தழை, மணி, சாம்பல் உரங்கள் அதிகபட்ச பருத்தி விதை விளைச்சலுடன் இலை சிவப்பாகுதலைக் குறைக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.


5.விதைகள் மற்றும் விதைத்தல்
1) வெவ்வேறு வகைகளுக்கு அல்லது வீரிய ரகங்களுக்கு ஏற்ற கீழ்க்காணும் விதை விகிதங்கள் தேர்வு செய்தல்.


ரகங்கள்

விதைகளின் அளவு(கி / எக்டர்)

பஞ்சுடைய விதைகள்

பஞ்சு நீக்கிய விதைகள்

கே 11

20

..

எல்.ஆர்.ஏ.5166, எஸ்.வி.பி.ஆர். 2

20

15

குறிப்பு: பஞ்சு நீக்கிய விதைகள் மட்டும் எல்.ஆர்.ஏ.5166  மற்றும் SVPR2 விதைகள். பஞ்சுடைய விதைகள் கே 9 விதைகள் கே 10 மற்றும் கே 11
ii) கலப்புப் பருத்திப் பயிர் ரகங்களில், அதே அளவு விதை விகிதங்களைப் பராமரித்தல் மற்றும் பருப்பு வகைகளுக்கு பின்வரும் விதை அளவுகளை அமைத்தல்.
உளுந்து / பச்சைப்பயறு:10 கிலோகிராம்/எக்டர்
காராமணி: 7.5 கிலோ/எக்டர்


6. பார் இடைவெளி

1) இம்முறையில் தூய பயிர் ரகங்கள் / கலப்பினங்கள் 45 செ.மீ. இடைவெளியில் தாவர வரிசைகளுக்கு இடையில் 15 செமீ இடைவெளியில் அமைக்க வேண்டும்.
2)பருத்தியில் ஊடுபயிராக பயறு வகையை சாகுபடி செய்யும் போது பருத்தியின் ஒரு இரட்டை வரிசையை இரண்டு பருப்பு வரிசைகளுடன் மாற்றி சாகுபடி செய்யலாம் மற்றும் பருத்திப் பயிரின் மொத்த எண்ணிக்கையைப் போலவே தூய பயிர் ரகங்களுக்கும் உள்ளது.
3) பருப்புப் பயிருக்கு ஜோடியான பருத்திச் செடிகளின் இடைவெளியில் 30 x 10 செ.மீ இடைவெளியில் பயிரை அமைக்க வேண்டும். APK 1 உளுந்துக்கு இந்த நிலை மிகவும் பொருத்தமானது.


வகைகள்

பருத்திப் பயிருக்கான இடைவெளி(செ.மீ.)

இரண்டு வரிசைக்குள்

இரண்டு வரிசைகளுக்கு இடையில்

பயிர்களுக்கு இடையில்

கே 11, எல்.ஆர்.ஏ.5166, எஸ்.வி.பி.ஆர். 2

30

60

15

7. அமிலத்தின் மூலம் பஞ்சு நீக்குதல்: பாசன பருத்திக்கான அமிலம் மூலம் பஞ்சு நீக்கும் முறையை இங்கு கடைப்பிடிக்கவும்.


8. அமிலம் கொண்டு பூசண கொல்லிகள் நீக்கிய விதை முன் நேர்த்தி

  • பாசன பயிருக்கு மாதிரியே.

9. விதைத்தல்

• பல்நோக்கு விவசாயத்தை செயல்படுத்துதலைப் பயன்படுத்தி விதைகளை விதைத்து ஒரே நேரத்தில் அடியுரங்களை இட வேண்டும்.
• எந்திரத்தில் உரங்களுக்கான பிரிவில் கலப்பு உரங்களை இட்டு இயக்க வேண்டும்.
• விதைகளை போடுவதற்கு 3 பேரை ஈடுபடுத்த வேண்டும், பருத்திக்கு 2 மற்றும் பயறு வகைக்கு ஒருவர் என தேவைபடுவர். ஒரே செயலில், உரம் வைத்தல்,விதைத்தல் மற்றும் விதைகளை மூடுதலும் நிறைவு செய்யப்படுகிறது.
குறிப்பு: பருத்தி மற்றும் பயறு வகைகள் கரிசல் மண்ணில் 5 செ.மீ. ஆழத்தில், விதைப்புப் பருவமழை தொடங்கும் முன்  வறண்ட படுக்கையில் விழுகின்றன. குறைந்த மழை  பெறும் போது, ஈரப்பதம் ஆழமாக ஊடுருவுவதில்லை மற்றும் விதைகள் முளைவிடுவதில்லை மற்றும் இறப்பதில்லை. நல்ல மழை பெறும் போது, போதுமான அளவு ஈரப்பதம் மற்றும் விதை ஊடுருவி முளைப்பதற்கு போதுமானதாக இருக்கும்.


10. களை மேலாண்மை

  • முன் தேவைப் பயன்பாடாக பென்டிமெத்திலின் 3.3 லிட்டர் / எக்டருக்குப் பயன்படுத்தினால் 40 வது நாளில் ஒரு கைக்களை பயிர் வந்த பின்னர் செய்ய வேண்டும்.
  • களைக்கொல்லி இடும் போது போதுமான மண் ஈரம் இருக்க வேண்டும்.
  • களைக்கொல்லி இடும் போது போதுமான மண் ஈரப்பதம் இல்லையென்றால், பயிர் வந்த பின்னர் 10 லிருந்து 20 வது நாளில் இடலாம்.

11. இடைவெளி நிரப்புதல்: ஒவ்வொரு இடைவெளியிலும் போதுமான ஈரப்பதம் இருக்கும்படி 3 லிருந்து 4 விதைகளை ஊன்றலாம்.


12. நாற்றுகளைக் கலைத்தல்

1. தாவரங்கள் இடையே சரியான இடைவெளி விட்டு விதைத்த 15 வது நாளில் குழி ஒன்றுக்கு இரண்டு நாற்றுகளை விட்டு, செடிகளுக்கிடையே சரியான இடைவெளி விட வேண்டும்.
2. விதைத்த 20 வது நாளில் பயறு வகைகளைக் கலைத்து, தட்டைப்பயிர்கள் இடையே 15 செமீ மற்றும் பிற பயறு வகைகளுக்கு இடையே 10 செ.மீ., இடைவெளியும் அமைக்க வேண்டும்.


13. இலைவழி உரம்: போதுமான ஈரப்பதம் கிடைக்கும் என்றால் விதைத்த 45-வது மற்றும் 65 வது நாளில் 0.5% யூரியா மற்றும் 1% பொட்டாசியம் குளோரைடு தெளிக்கவும்.

14. கூர்மைக் கலப்பை கொண்டு இடைச்சாகுபடி செய்தல்: விதைத்த 30 வது மற்றும் 45 வது நாளில் கூர்மைக் கலப்பை கொண்டு வேலை செய்ய வேண்டும்.

குறிப்பு: மற்ற சாகுபடி முறைகள், பயிர் பாதுகாப்பு நடவடிக்கை, அறுவடை போன்றவை பாசனப் பயிருக்கு மாதிரியே.

பயிர் வினையியல் : பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில் 200 லிட்டர் தண்ணீரில் / ஏக்கருக்கு 2.5 கிலோ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக பருத்தி பிளஸ் தெளிக்க வேண்டும். இதனால் பூ மற்றும் பிஞ்சு உதிர்தல் குறைக்கிறது, காய் வெடிக்கும் தன்மை அதிகரிக்கிறது, பருத்தி விதை விளைச்சல் அதிகரிக்கிறது மற்றும் வறட்சியைத்தாங்கும் தன்மையை அளிக்கிறது.

 

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam