Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: சிறுதானியங்கள் :: மக்காச்சோளம்

அறுவடை பருவம்

பயிரின் வயதைக் கொண்டு கீழ்க்கண்ட அறிகுறிகளை காணவும்.

  1. கதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்தவுடன் காய்ந்துவிடும்.
  2. விதைகள் கடினமாகவும் காய்ந்தும் காணப்படும். இப்பருவம் அறுவடைக்கேற்றது.

பயிர் அறுவடை

  1. கோணி ஊசியைக் கொண்டு கதிரின் மேல் தோலைக் கிழித்து கதிர்களை பிரித்து எடுக்கவும்.
  2. அறுவடையை ஒரே நேரத்தில் முடிக்கவும்.

கதிரடித்தல்

  • கதிர்களை சூரிய வெளிச்சத்தில் நன்கு காய வைக்கவும்.
  • விசைக் கதிரடிப்பான் கொண்டோ அல்லது டிராக்டரை கதிர்களின் மேலே ஓட்டியோ மணிகளைப் பிரித்தெடுக்கலாம்.
  • மணிகளைத் தூற்றி சுத்தப்படுத்தவும்.
  • பின்பு இவற்றை கோணிப்பையில் சேமிக்கவும்.

harvest

 
 
Fodder Cholam