வேளாண்மை :: குசும்பா
   

எண்ணை பனை

Oil Palm

முன்னுரை

எண்ணை பனையானது வருடத்திற்கு சராசரி மழையளவு 2000 மி.மீ. உள்ள இடங்களில் பொதுவாக நன்கு வளரக் கூடியது இருந்த போதிலும் சிறிதளவு வறட்சியுடன்? அதிக நீர் பிடிப்பு திறன் உள்ள மண் மற்றும் குறைவான நீர் மட்டம் உள்ள இடங்களிலும் எண்ணை பனை வளர்கிறது. இன்று முதல் நான்கு மாதங்கள் வரை வறட்சியை தாங்கி வளரக்கூடியதாக இருந்தாலும் தொடர்ந்து நீர் பற்றாக்குறை இருக்குமேயானால் மகசூல் வெகுவாக பாதிக்கும்
எண்ணை பனை வளர்ச்சிக்கும்? மகசூலுக்கும்? வெப்பநிலை ஒரு முக்கிய காரணியாக திகழ்கிறது. கரு மற்றும் பூக்கள் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது. 19 செல்சியஸ்க்கு குறைவான வெப்பநிலை எண்ணை பனை வளர்ச்சியை குறைப்பதோடு? மட்டை எண்ணிக்கையையும் குறைக்கிறது. மேலும் அதிகமான ஆண் பூக்கள் உற்பத்தியாகிறது. 20-33 செல்சியஸ் வெப்பநிலை உள்ள இடங்களில் அதிகப்படியான குலைகள் உற்பத்தியாகிறது. பகல் இரவு நேர வெப்பநிலைகளில் அதிக வித்தியாசம் உள்ள வறண்ட பகுதிகளில் பூக்களில் மலட்டுத் தன்மை அதிகமாக காணப்படுகிறது. எண்ணை பனை வளர்ச்சிக்கு ஆண்டு ஒன்றுக்கு 1800-2000 மணி நேர் சூரிய வெளிச்சம் தேவைப்படுகிறது.
எண்ணை பனை பல வகையான மண் வகைகளில் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளது. இருந்த போதிலும் ஈரமான? நன்கு வடிகால் வசதியுடைய கரிம சத்துக்கள் () கரிம சத்துக்கள் அடங்கிய மண் மிகவும் உகந்ததாகும். கரளை மற்றும் பெரும்பகுதி மணல் கலந்த மண் குறிப்பாக கடற்கரை மணல் எண்ணை பனை வளர்ச்சிக்கு உகந்ததாக இருப்பதில்லை

நாற்றங்கால் மற்றும் அதன் பராமரிப்பு

இரட்டை நிலை நாற்றங்கால்

முளைத்த எண்ணை பனை விதைகள் நேரடியாக வயலில் நடுதல் பரிந்துரைக்கப்படுவதில்லை. எனவே முளைத்த விதைகள் முதலில் நாற்றங்கால் அல்லது பாலித்தீன் பைகளில் வளர்த்து ஐந்து இலை வந்தவுடன் பெரிய பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது. பைகளை நிரப்புவதற்கு வயல் மண்? மணல் மற்றும் மக்கிய எரு ஆகியவைகளை சம அளவு கலந்து பயன்படுத்த வேண்டும். சிறிய பைகள் 13 ஒ 23 செ.மீ. அளவு இருத்தல் வேண்டும். நல்ல நியைிலுள்ள முளைத்த விதை ஒன்றினை 2.5 செ.மீ. ஆழத்தில் நட வேண்டும். பைகளில் உள்ள மண் பகுதியை சூரிய ஒளி படாத வண்ணம்மரத்தூள்? கடலை தோல் மற்றும் சிறுசிறு பண்ணை கழிவு ஆகியவற்றைக் கொண்டாடலாம். இதனால் பைகளில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்கலாம். சரியான அளவு நீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மாதமான செடிக்கு ஒரு பங்கு அமோனியம் சல்பேட்? ஒரு பங்கு சூப்பர் பாஸ்பேட்? ஒருபங்கு பொட்டாசியம் மற்றும் இரு பங்கு மெக்னீசியம் சல்பேட், 15 கிராம் என்ற அளவிலும், 3 ஆம் மாதம் 45 கிராமும்? 6ஆம் மாதம் 60 கிராமும் பரிந்துரைக்கப்படுகிறது. இரட்டை நிலை நாற்றங்கால் முறையில் எட்டு வார வயதுடை நற்றானது (5 இலைகள் உள்ளது) சிறிய பையிலிருந்து பெரிய பைக்கு (40 ஒ 45 செ.மீ) அதன் வேரைச் சுற்றியுள்ள மண்ணோடு சேர்த்து மாற்றப்பட வேண்டும்
ஒற்றை நிலை நாற்றங்கால்

ஒரு நிலை பாலத்தீன் பை நாற்றங்கால் மற்றும் முளைத்த எண்ணை பனை விதைகள் நேரடியாக பெரிய அளவு பாலித்தீன் பைகளில் நடப்படுகிறது. சாதாரண நாற்றுக்களை விட முளைத்த விதைகளை நேரடியாக பெரிய அளவு பாலித்தீன் பைகளில் வைத்து வளர்க்கும் போது நல்ல வளமான கன்றுகள் கிடைக்கிறது. இந்தியாவில் தற்போது ஒற்றை நிலை பாலித்தீன் பை நாற்றங்கால் முறை பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் கன்றானது ஒராண்டுக்கும் மேல் பாலித்தீன் பகைளில் வளர வேண்டியிருப்பதால் நல்ல தரமான (500 ) 40 ஒ 45 செ.மீ.அளவுள்ள பாலித்தீன் பைகள் உபயோகப்படுத்தப்படுகிறது. பாலித்தீன் பைகளின் கீழ் பாதியில் 7.5 செ.மீ. இடைவெளியில் தண்ணீர் வடிவதற்காக சிறு சிறு துளைகள் இட வேண்டும். ஒரு பாலித்தீன் பையானது 15-18 கிலோ கொள்ளவு உடையதாகும்
முதல் நிலை நாற்றங்காலில் சொல்லப்பட்டது போலவே இதிலும் முளைக்க வைத்த விதைகள் நடப்படுகின்றன. முளைத்த விதைகள் இரண்டு இலை நிலையை அடையும் வரை நிழல் அவசியம் தேவை. எண்ணை பனை இலைகளை பாலித்தீன் பைகளைச் சுற்றி நடுவதன் மூலம் நல்ல நிழல் கிடைக்கும். ஒற்றை நிலை நாற்றங்கால் முறைக்கு அதிக வேலையாட்கள் தேவைப்பட்டாலும் நடவு நேரத்தில் இரண்டு மாதங்கள் மிச்சமாகிறது. நாற்றுக்களின் தண்ணீர்த் தேவையானது அதன் வயதுக்கேற்றவாறு மாறுபடுகிறது.

வயது மாதம் (மாதம்)

நாள்ஒன்றுக்கு (மி.மீ)

0-2

4

2-4

5

4-6

7

6-8

10

தேவையான தண்ணீர் அளவை இரண்டாகப் பிரித்து காலை மாலை என இரு வேளைகளில் தெளிப்பது மிகக் பலனைத் தருவதோடு தண்ணீர் வீணாவதையும் தடுக்கிறது. ஒரு நாற்றுக்கு ஒரு வாரத்துக்கு 9-18 லிட்டர் தண்ணீர் தேவையாகும். இது மண்ணின் தன்மைக்கேற்றவாறு மாறுபடுகிறது. அதிக வெப்பம் உள்ள காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் நர்றங்காலில் நிழல் தேவைப்படுவதில்லை. மாதம் ஒரு முறை

நாற்றங்காலின் வயது

வறட்சி இல்லாத இடங்களில்10-16 மாத வயதுள்ள நாற்றுக்களை நடவு செய்யலாம். 12014 மாத வயதள்ள நாற்றுக்களே நடவுக்கு மிகவும் உகந்ததென கண்டறியப்பட்டுள்ளது. இந்த வயதில் கன்றானது தரையிலிருந்து 1-1.2 மீட்டர் உயரமும்? 13 செயல்படும் இலைகளும் கொண்டதாக இருக்கும். இந்த கன்றுகளே பெரிய இலைகள் தருவதாகவும்? நல்ல காய்ப்புடையதாகவும், அதிக எண்ணை சத்துடைய கனிகள் தருவதாகவும் இருக்கும்

வயலில் நடவு செய்தல்

எண்ணை பனை நடவு செய்யும் வயலை நடவு செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தயார் செய்ய வெண்டும். நடவு செய்யும் நிலம் காட்டுப் பகுதியாக இருப்பின் நிலத்தைச் சுத்தம் செய்து கழிவுகள் அனைத்தையும் எரித்து விட வேண்டும். குறைந்த நீர் உறிஞ்சம் தன்மையுள்ள நிலங்களில் நீர் தேங்குவதைத் தடுக்க தக்க வடிகாலர் வசதிகள் செய்யப்பட வேண்டும். சரிவான நிலங்களில் 3-4 மீட்டர் விட்டம் உள்ள வட்டப் பாத்திகள் அமைக்கப்பட வேண்டும்

கன்றுகளை தேர்ந்தெடுத்தல்

நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு ஆளான? வளர்ச்சியடையாத கன்றுகளை தவிர்த்து விட வேண்டும். வளமான நாற்றுகளின் உயரமானது 90 செ.மீ. முதல் 159 செ.மீ. வரை இருக்கும். இது 14 மாதங்களுக்குப் பிறகு சமமாகக் காணப்படும்

நடவு காலம்

எண்ணை பனை நடவானது பருவ மழை ஆரம்பிக்கும் நேரத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தக்கவாறு நாற்றங்கால் தயாரித்து நடவு காலத்தில் கன்றின் வயதானது 12 முதல் 14 மாதங்களாக பிறகு சமமாகக் காணப்படும்

இடைவெளி

எண்ணை பனையில் சரியான இடைவெளி என்பது ஒரு அலகு பரப்பிலிருந்து அதிகப்படியான விளைச்சலை கொடுப்பதாக இருக்க வேண்டும். சரியான எண்ணிக்கையில் இருந்து குறையும்போது தனி மரத்தின் விளைச்சல் அதிகமான பொழுதும் மொத்த விளைச்சல் குறைந்தே காணப்படும்
அதிகப்படியான மர எண்ணிக்கையும் தனி மரத்தின் விளைச்சலை வெகுவாக பாதிக்கிறது. ஏனெனில் அதற்கு தேவையான நீர்? சத்துக்கள் மற்றும் வெளிச்சம் ஆகியவை குறைவுபடுதலேயாகும். தொடக்க நாட்களில் அதிக விளைச்சலை கொடுத்தாலும் பிறகு மரங்கள் வளர வளர அதன் அடிப்படை தேவையின் பற்றாக்குறையின் காரணமாக மகசூல் வெகுவாக பிறகாலங்களில் பாதிக்கப்படுகிறது
மிக சரியான அளவு அடிப்படை தேவைகள் கிடைக்கும் பட்சத்தில் எக்டர் ஒன்றுக்கு 127-135 மலர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. மிக அதிக நெருக்கமான பயிர் இடைவெளியால் ஒன்றுக்கொன்று  மோதிக் கொள்வதால் ஆண்? பெண் பூக்களின் எண்ணிக்கயைில் அதிக வித்தியாசம் ஏற்படுகிறது. நெருக்கமான பயிர் இடைவெளி அதிகப்படியான ஆண் பூக்கள் உற்பத்தியை ஏற்படுத்துகிறது. முக்கோண வடிவ நடவு முறை மிகச் சிறந்ததாக அமைகிறது 9 ஒ 9ஒ 9ஒ மீட்டர்இடைவெளியில் பயிரிட்டர்ல ஹெக்டேர் ஒன்றுக்கு 143 மலர்கள் நடலாம். மிக அதிகமான சூரிய வெளிச்சத்தை பயன்படுத்த மர வரிசை வடக்கு தெற்காக அமைக்க வேண்டும்.

நடவு

60 செ.மீ. ஆழத்திற்கு குழி எடுத்து அதில் மேல் மண்ணைக் கொண்டு மூடி பிறகு ஆற விட வேண்டும். பிறகு பாலித்தீன் பைகளை அகற்றிவிட்டு மண் நிரப்பப்பட்ட குழிகளில் வைக்க வேண்டும். மரக்கன்றுகளை நடவு செய்யும் பொழுது கைஉறை அணிந்து கொள்வதால் இலை காம்பிலுள்ள முள் குத்துவதைத் தவிர்க்கலாம் நடப்பட்ட மரக் கன்றுகளை எலி மற்றும் இதர பூச்சிகளிலிருந்து வலைகளை அமைத்து காப்பாற்ற வேண்டும். குழி ஒன்றுக்கு 200 கிராம் என்ற அளவில் பாறை உப்பு () இட வேண்டும். பொதுவாக குழியில் நடவு செய்தவுடன்? தழைச் சத்து உரம் இடுவதில்லை.ஏனென்றால் தழைச்சத்து உரம் வேர்களை பாதிக்கிறது. தழைச்சத்தும்? சாம்பல் சத்தும் வழக்கமாக 4-6 வாரங்களுக்குப் பிறகு கொடுக்க வேண்டும். மெக்னீசியம் சல்பேட் அல்லது எப்சம் உப்பு குழிக்கு 200 கிராம் இடலாம்.

பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தல்

ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் கன்று நடப்பட்ட இடத்தை ஆய்வு செய்து இறந்த செடிகளுக்கு பதிலாக புதிய செடிகளை நட வேண்டும். அவ்வாறு நடவு செய்யப்பட்ட கன்றுகளை சிறப்பாக கவனித்து மற்ற கன்றுகளுடன் சமமாக வளருமாறு கண்காணித்தல் அவசியம். முதல் 30 மாதங்களில் அதிக பெண் மலர்களை உற்பத்தி பண்ஹம் மரங்களே அதிகவிளைச்சலை கொடுக்க வல்லது. பெண் மலர்களை கொடுக்க தவறியவை சரியான மகசூலை தரமுடியாது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
உரமும்?
உரமிடலும் உரத்தேவை


வயது

உரங்கள் (கிராம், மரம், வருடம்)

 

தழை

மணி

சாம்பல்

முதல் வருடம்

400

200

400

இரண்டாம் வருடம்

800

400

800

மூன்றாம் வருடம்

1200

600

2700

உரமிடும் முறை

பரிந்துரை செய்யப்பட்ட இரசாயன உரங்களை இரு பங்காக மே ஜீன் மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் மரத்தை சுற்றி 2 மீட்டர் என்ற அளவில் இட்டு மண்ணை மேலாகக் கிளரிவிடவும் அங்ககச் சத்துக்கள்? குறைவாக உள்ள நிலத்தில் பசுந்தாள் உரம் மற்றும் மக்கிய பண்ணைக் கழிவுகள் இடவேண்டும். ஒரு மரத்திற்கு வருடத்திற்கு மெக்னீசியம் சல்பேட் 500 கிராம் என்ற அளவில் இடவேண்டும்.
யூரியா சிறந்த தழைச்சத்து உரமாகும்? அதே போல் பாறை பாஸ்பேட் மற்றும் ----ஆப் பொட்டாசியம் ஆகியவை மணி மற்றும் சாம்பல் சத்திற்கு சிறந்தவை. மரத்தின் வயதிற்கேற்ப மரத்தின் இலை பரவி இருக்கும் வரையில் உரமிட வேண்டும்.

அ.தழைச்சத்து
எண்ணை பனை மரத்தின் இலைகளின் பரப்பு? ஆண்? பெண் பூக்களின் விகிதம் மற்றும் குலைகளின் எண்ணிக்கை மற்றும் எடையை அதிகரிக்கப் பயன்படுகிறது. தழைச்சத்து பற்றாக்குறை இருப்பின் மரத்தின் இலைகளில் பச்சையம் குறைந்து முழுவதும் மஞ்சள் நிறத்திற்கு மாறுதல். அதிக அளவில் தழைச்சத்து இடுவதாலும் அதிக அளவில் ஆண் பூக்கள் உருவாகும்

ஆ.மணிச்சத்து
வேர்களின் உற்பத்தி? பழக்குலைகளின் உற்பத்தி திறன் மற்றும் முதிர்ச்சியில் முக்கிய பங்கு மணிச்சத்து  பெண் பூக்கள் மற்றும் குலைகளின் எண்ணிக்கை? குலைகளின் எடை ஆகியவற்றை அதிகரிக்கும். மணிச்சத்து குறைபாட்டினால் இலைகளில் துரு பிடித்த மாதிரியான இளஞ்சிவப்பு நிற திட்டுகளும் நுனி இலைகள் காய்ந்து போவதும் ஏற்படும்
சாம்பல் சத்தானது ஒளிச்சேர்க்கையை அதிகப்படுத்துதல்? நீராவிப் போக்கை கட்டுப்படுத்துதல்? பழக்குலைகளின் எண்ணிக்கை? எடை மற்றும் பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகரித்து மரத்தின் மகசூல் அதிகரிக்க பயன்படுகிறது. சாம்பல் சத்து பற்றாக்குறையினால் பயிர் வளர்ச்சி குன்றி மகசூல் பாதிக்கும் முற்றிய இலைகள் மஞ்சள் நிறமாக மாறி திட்டுத் திட்டாக கரும்புள்ளிகள் காணப்படும். மேலும் இதன் முக்கிய அறிகுறியாக ஆரஞ்சு நிற புள்ளிகள் காணப்படும்.

ஈ.மக்னீசியம்

இதன் பற்றாக்குறையினால் இலை முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி நன்கு வெளிப்படுத்தும். இந்த நிறம் முற்றிய இலைகளில் தெரியும். மற்ற இலைகளின் மீது இது வெளிர் ஆரஞ்சு நிறமாக இருக்கும். மக்னீசியம் பச்சையத்தின் முக்கிய மூலக்கூறு. ஆகவே இதன் பற்றாக்குறையை நன்கு கண்டு கொள்ளலாம். இதனை போக்க மரத்திற்கு 500 கிராம் மக்னீசியம் சல்பேட் உரத்தை இடவும்.

உ.இதர நுண்ணூட்டங்கள்

இரும்பு? மாங்கனீசு காப்பர் மற்றும் துத்தநாக குறைபாடுகள் பொதுவாக நம் தமிழகத்தில் காணப்படுவதில்லை. பேரான் குறைபாடு காணப்படும் இடங்களில் இலைகளின் நுனிப்பகுதி ஆரம்ப கட்டத்தில் கொக்கியைப் போல் வளைந்தும் பிறகு இலைப்பகுதி சிறிது சிறிதாக சுருங்கி கடைசியில் மீன் முள்போல் கருகி விடும். முற்றிய நிலையில் மட்டைகள் கொத்து போல் ஒன்றோடொன்று சேர்ந்து மர வளர்ச்சி குன்றி காணப்படும். மரத்திற்கு 50-200 கிராம் போராக்ஸ் டெகா ஹைட்ரேட் வயதிற்கு தகுந்தாற்போல் சிபாரிசு செய்யப்படுகிறது.

நீர் தேவை

தொடர்ந்து மண்ணில் ஈரப்பதம் இருந்தால் நல்ல வளர்ச்சியும் அதிக மகசூலும் கிடைக்கும். தேவையான அளவு நீர், நில ஆழம் தண்ணீர் சேமித்து வைக்கும் திறன் ஆகியவை மிகவும் அவசியம், நீர் பற்றாக்குறை இருப்பின் இலைகளின் துளைகள் மூடிக்கொள்வதால் வளர்ச்சி குன்றி பெண் பூக்கள் குறைந்து ஆண் பூக்கள் அதிக அளவில் தோன்றும். எண்ணை பன்னைக்கு மாததிற்கு 120-150 மிமீ என்ற அளவில் நீர் தேவைப்படுகிறது. நல்ல தண்ணீர் வசதியுள்ள இடங்களில் பாத்தி முறை பாசனமும்? நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் சொட்டு நீர் பாசனமும் சிபாரிசு செய்யப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்தில் ஒரு நாளைக்கு ஒரு மரத்திற்கு 90 லிட்டர் தண்ணீர் தரவேண்டும்.

களைக் கட்டுப்பாடு
எண்ணை பனை மரத்தை சுற்றி உள்ள பாத்தி முழுவதும் களை இல்லாமல் இருப்பது நல்லது. இதை வட்ட வடிவ பாத்தி முறை களை எடுப்பதினால் செயல்படுத்தலாம். வருடத்திற்கு நான்கு முறை களை எடுக்க சிபாரிசு செய்யபடுகிறது. களைக்கொல்லிகள் ------டலபான் மற்றும் டிசிஏ ஆகியவை எண்ணெய் பனையை அவற்றைப் பாதிப்பதால் பயன்படுத்துவதை தவிர்க்கவும். களைக் கொல்லி கலவையான 2 கிலோ போராகுவாட் மற்றும் 3-4 கிலோ எக்டர் அரசின்? மோனோரான் மற்றும் டையூரான் என்ற அளவில் மண்ணில் தெளித்து அல்லது துளைவி ககைளை கட்டுப்படுத்தலாம் என்று நைஜரியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

பாதைகளை பராமரித்தல்
எண்ண பனை வயல்களை சுற்றிப்பார்தது? பராமரிக்கவும்? அறுவடை செய்யவும் களை கட்டுப்பாடு செய்யவும் வயல்களில் பாதைகளை நன்கு பராமரித்தல் அவசியம்.

பூக்கள்நீக்கம்

பாமாயில் மரங்களில் நட்ட நாளிலிருந்து இரண்டரை ஆண்டுகள் வரை பூக்களை நீக்க செய்ய வேண்டும். இளம் பூக்களை கைகளாலே நீக்கி விடலாம். சற்று முற்றிய பூக்களை உளி, கத்தி கொண்டு நீக்கலாம். ஆரம் கட்டங்களில் குலைகளின் அளவு மிகச் சிறியதாக இருப்பதாலும், அவற்றின் எண்ணெயின் அளவு மிகக் குறைவாக இருப்பதாலும் பூ நீக்கம் தேவைப்படுகிறது. மேலும் பாமாயில் மரம் வீரியமாகவும் அடிப்பகுதி பெருத்தும், போதுமான வேர்த் தொகுப்புடன் வளர்வதற்கும் பிற்காலத்தில் விளையும் பழக்குலைகள் மற்றும் மட்டைகளின் எடையை தாங்கும் சக்தியை மரம் பெறுவதற்கு வசதியாக கவாத்து செய்தல் இன்றியமையாததாகிறது. 3 வருடங்களுக்கு மேற்பட்டு பழக்குலைகளின் அளவு பெரிதாவதால் அவைகள் அறுவடைக்குத் தயாராகி விடுகின்றன.

எண்ணை பனை இலைகளை கழித்தல்

எண்ணை பனை ஒரு மாதத்திற்கு  இரண்டு இலைகள் உற்பத்தி செய்கிறது. எனவே, அதிகமாக உள்ள இலைகளை வெட்டி பராமரித்தல் அவசியம். இது பழக்குலைகளை எளிதாக அறுவடை செய்வதற்கு மிக முக்கியமாகும். எனவே? 4-7 வயதுள்ள மரத்தில் 48-56 இலைகளும்? 8-14 வயதுள்ள மரங்களில் 40-49 இலைகளும் 15 வயதிற்கு மேற்பட்ட மரத்தில் 32-40 இலைகளை பராமரித்தல் அவசியம். தேவையற்ற இலைகள் கழிப்பது மழைக்காலங்களிலும் மற்றும் ஆட்கள் பற்றாக்குறை இல்லாத காலங்களிலும் செய்வது சாலச் சிறந்தது.

எண்ணை பனை மரத்தில் மகரந்த சேர்க்கை

எண்ணை பனை மரங்களில் ஆண் பூ? பெண்பூ தனித்தனியாக தோன்றுவதால் ஆண் பூவில் உள்ள மகரந்தம் பெண் பூவிற்கு காற்று மூலம் பரவி மகரந்த சேர்க்கை ஏற்படுகிறது. ஆனால் காற்று மூலம் நடக்கும் இம்மகரந்த சேர்க்கை குறைந்த அளவில் ஏற்படுகிறது. அதனால் மகசூலும் குறைவாகவே உள்ளது. எலைடோபியல் காமருனிகஸ் என்ற கூன் வண்டின் நடமாட்டத்தினால் எண்ணை பனை மரங்களில் அதிக அளவு மகரந்த சேர்க்கை ஏற்பட்டு? அதிக மகசூலும் கிடைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். நம் நாட்டில்? இவ்வாண்டின் காரணமாக 36 முதல் 56 சதம் வளைர அதிக பழங்கள் உண்டாகிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இந்த சிறிய கூன் வண்டு ஆண் பூக்கள் மலர ஆரம்பித்தவுடனேயே பூவிற்கு வர தொடங்கி விடும். இது பூக்கள் முற்றிலும் மலரும்பொழுது அதன் வாசனைக்கு கவர்ந்து இழுக்கப்பட்டு? ஆண் பூக்களை மொய்த்து விடும். இவ்வாறு அதிகவண்டுக் மொய்ப்பதால் பூக்களில் இருக்கும் மகரந்தம் காற்றில் சிதறி பெண் பூவிற்கு பரவுவதற்கு ஏதுவாக இருக்கிறது. இவ்வண்டுகள் தங்கள் உடலில் ஒட்டிக் கொண்டு இருக்கும் மகரந்தத்தைப் பெண் பூவின் வாசனைக்கு கவரப்பட்டு அங்கு செல்லும்பொழுது மகரந்த சேர்க்கை ஏற்படுகிறது.
இவ்வண்டுகள் மகரந்தத்தை சாப்பிடுவதில்லை. பெண் பூக்களில் வளர்ச்சி பெறுவதும் அதை சாப்பிட்டு சேதப்படுத்துவதும் கிடையாது. இதைத் தவிர பாமாயில் குடும்பத்தை சார்ந்த தென்னை? பாக்கு?  பனை மரங்களில் பூக்களை அண்டி வாழ்வதில்லை என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. வண்டுகளை வருடம்  முழுவதும் பராமரிக்க வேண்டுமானால் ஆண் பூக்கள் தொடர்ந்து இருக்க வேண்டும். எண்ணை பனை தோட்டங்களில் அதிக அளவு பூச்சி மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.

அறுவடை

எண்ணை பனை பழக்குலைகளை சரியான நேரத்தில் அறுவடை செய்வதும் மிகவும் அவசியம். இதன் மூலம் எண்ணையின் தரம் மேம்படுத்தப்படுகிறது. எண்ணைப் பனை நட்ட நான்கு வருடங்களிலிருந்து பலன் கொடுக்கத் துவங்கிறது. சுமார் 25 வருடம் வரை பலன் கிடைத்துக் கொண்டே இருக்கும். எண்ணை பனைக்குலைகள் நன்கு முதிர்ந்தபின் தக்க சமயத்தில் அறுவடை செய்ய வேண்டும். நன்கு முதிர்ந்த குலைகளில் இருந்து ஒளிரு பழங்கள் மரத்தின் அடியில் விழத்துவங்கும். அந்த தருணத்தில் பழங்கள் மஞ்சள் முதல் கருங்சிவப்பு நிறத்தில் காணப்படும். பழங்கள் குலையிலிருந்து விழத்துவங்கியவுடன் பழங்களில் எண்ணைச் சத்து அதிகரிப்பது நின்று விடும். ஆதலால் அச்சமயத்தில் குலைகளை அறுவடை செய்யவேண்டும்.

அறுவடை இடைவெளி

எண்ணை பனை மரத்திலிருந்து சராசரியாக 7-14 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும். எண்ணைபனை குலைகள் மரத்தில் ஏறி அறுவடை செய்ய முடியாது. ஏனெனில் மட்டையில் பெரிய முட்கள் உள்ளன. ஆகவே கீழே இருந்துதான் அறுவடை செய்யப்பட வேண்டும். சிறிய மரமாக இருந்தால் கத்தியைக் கொண்டு அறுவடை செய்யலாம். அறுவடை செய்வதற்கு முன்பாக குலைக்கு கீழேயுள்ள மட்டைகளை வெட்டிவிட வேண்டும். மட்டைகள் இருந்தால் அறுவடை செய்வதற்கு சிரமமாக இருக்கும்
பெரிய மரத்தில் அறுவடை செய்வதற்கு மூங்கில் அல்லது அலுமினியக் கம்பியில் கத்தியைக் கட்டிக்கொண்டு அறுவடை செய்ய வேண்டும். குலையின் தண்டுப் பகுதியை வெட்டினால் குலை கீழே விழுந்துவிடும்.அதை பிறகு பதப்படுத்துவதற்கு ஆலைக்கு அனுப்ப வேண்டும். கீழே விழுந்த பழங்களையும் சேகரித்துப் பதப்படுத்தலாம். மேலை நாடுகளில் டிராக்டர்களில் ஏணி பொறுத்தப்பட்டு மரத்திற்கு தக்கவாறு ஏற்றியும்? இறக்கியும் அறுவடை செய்யப்படுகிறது.
வரவு செலவு

எண்ணெய் பனையின் வளர்ப்புக்கு ஆகக்கூடிய வரவு செலவு கணக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை? வேலையாட்களின் கூலி? எண்ணெய் விலை மேலும் பல்வேறு வரவு செலவுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. நான்காம் ஆண்டு முதல் பத்தாம் ஆண்டு வலை குலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால்? அதன் பிறகே நிலையான மகசூல் பெறப்படுகிறது. முதலாம் ஆண்டு பாசன செலவு மானாவாரி சாகுபடியில் ஆகும் பாசன செலவை விட மூன்று மடங்கு அகும். பாசனத்திற்கு ஆகும் செலவை முதல் அறுவடையில் சரிசெய்து விட முடியும். முதல் அறுவடை நான்காம் ஆண்டு முதல் செய்யலாம். ஆறாம் ஆண்டு முதல் வரவு செலவைவிட அதிகமாக இருக்கும். அதாவது மரக்கன்றுக்கு இடக்கூடிய நீர் இறைப்பு இயந்திரம்? மேலும் சொட்டுநீர் பாசன அமைப்பு? இதற்கு ஆகும் செலவை விட அதிகமாக இருக்கும்.

மகசூல்
நல்ல பராமரிப்பில் வளர்க்கப்பட்ட எண்ணை பனை மரங்களிலிருந்து கிடைக்கக்கூடிய

மகசூல் விபரம்


எண்ணை பனை மரத்தின் வயது

மகசூல் விபரம் டன், எக்டர், வருடம்

3 முதல் 4 வருடம்

5

4 முதல் 5 வருடம்

12

5 முதல் 6 வருடம்

25

6 முதல் 25 அல்லது 30 வருட மகசூல்

30

அட்டவனை 1 எண்ணெய் பனை உறபத்தி செலவு (எக்டர்)

 

செலவு

வேலையாட்கள் தினக்கூலி ரூ.80

16,000/-

உரச்செலவு

12,500/-

பயிர் பாதுகாப்பு செலவு

  400/-

மொத்த செலவு

28,900/-

அட்டவனை 2 எண்ணெய் பனை வருமானம் (குலைகளின் உற்பத்தியைப் பொறுத்து)

வ.
எண்

விபரம்

மகசூல் டன், எக்டர்

வருமானம் எக்டர்

நிகர லாபம் வருமானம் – செலவு எக்டர்

1.

வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 10 கிலோ எடையுள்ள 10 குலைகள் காய்த்தால்

14.3

35,750/-

6,850/-

2.

வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 15 கிலோ எடையுள்ள 12 குலைகள் காய்த்தால்

25.7

64,250/-

35,350/-

3.

வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 20 கிலோ எடையுள்ள 12 குலைகள் காய்த்தால்

34.3

85,750/-

51,850/-

(ஒரு டன் பழக்குலையின் விலை ரூ.2,500/-)

 

 

தாவர ஊட்டச்சத்து
தாவர வளர்ச்சி ஊக்கிகள்
மகசூலை அதிகரிக்கும்
வழிமுறைகள்

 
வறட்சி
வெள்ளம்
களர்/உவர் தன்மை
வெப்பநிலை

 
 
விவசாயிகளின் கூட்டமைப்பு
வெளியீடுகள்
கேள்வி பதில்
கலைச்சொற்கள்
முக்கிய வலைதளங்கள்
புகைப்படங்கள்

 
 
 
Fodder Cholam Rice Wheat maize sorghum Ragi cumbu varagu panivaragu samai tenai blackgram cowpea cowpea redgram soybean horsegram garden lab lab groundnut sesame coconut sunflower castor niger safflower sugarcane sugarcane sugarbeet Cumbu Napier kollukattai Pul Fodder Cholam Fodder Cowpea Fodder Cumbu Fodder Maize Guinea Grass Velimasal Soundal Kudiraimasal Muyal Masal sword bean Field lab lab Sweet Sorghum Greengram