வேளாண்மை :: சூரியகாந்தி
   

 

Sunflower

பருவம் மற்றும் இரகங்கள்

அ.மானாவாரி

1.

ஆடிப்பட்டம் (ஜீன்-ஜீலை)

இரகங்கள் மார்டன், கோ 4

 

கோயமுத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல்,
திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி,
திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர்

வீரிய ஒட்டு டி.சி.எஸ்.எச்.1 கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச் 44, பி.ஏ.சி. 1091, எம்.எஸ்.எப்.எச்.17

2.

கார்த்திகைப்பட்டம் (அக்டோபர்-நவம்பர்)

இரகங்கள் மார்டன், கோ 4

 

கடலூர், விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை. திண்டுக்கல், தேனீ, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூார், கரூர், திருநெல்வேலி

வீரிய ஒட்டு டி.சி.எஸ்.எச்.1.கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச்.44, பி.ஏ.பி.1091, எம்.எஸ்.எப்.எச்.17

 

ஆ. இறவை

 

1.

மார்கழிப்பட்டம் (டிசம்பர்-ஜனவரி)

இரகங்கள் மார்டன், கோ 4

 

சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனீ,  திருநெல்வேலி, தூத்துக்குடி

கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச் 44, பி.ஏ.சி. 1091, எம்.எஸ்.எப்.எச்.17

2.

சித்திரைப்பட்டம் (ஏப்ரல்-மே)

இரகங்கள் மார்டன், கோ 4

 

கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர்

வீரிய ஒட்டு .சி.எஸ்.எச்.1.
கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச்.44, பி.ஏ.பி.1091, எம்.எஸ்.எப்.எச்.17

சூரியகாந்தி இரகங்கள்

பண்புகள்

மார்டன்

கோ 4

டி.சி.எஸ்.எச்.1

பெற்றோர்

செர்னியன்கா 66-ல் இருந்து தேர்வு

குட்டை ஓ சூரியா வழித் தோன்றல்

234 ஏ ஒ ஆர் 272

வயது (நாள்)

75

80-85

85

விளைச்சல் (கி.ஹெ.)
மானாவாரி

900

1500

1800

இறவை

1000

1750

2500

எண்ணெய் சத்து()

36

39.7

41

உயரம் (செ.மீ.)

90

145 175

160

பூவிதழின் நிறம்

வெளிரிய மஞ்சள்

வெளிரிய மஞ்சள்

வெளிரிய மஞ்சள்

விதையின் அளவு

நடுத்தரமானது

நடுத்தரமானது

நடுத்தரமானது

விதையின் நிறம்

கருப்பு

கருப்பு

கருப்பு, சில விதைகளில் கோடுகள் இருக்கும்

1000 விதைகளின் எடை(கி)

44

56

60

மண்வகை

நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா மண் வகையும் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்றது. கரிசல் பூமியில் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மண் வகையிலும், எல்லா மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.

sunflower0001

sunflower0002

நிலம் தயாரித்தல்

நிலத்தில் 12.5 டன் மக்கிய தொழு உம் அல்லது தன்னை நார்க் கழிவு இட்டு நன்றாக உழுது பண்படுத்தி மண்ணை நன்றாகப் புழுதியாக்க வேண்டும்

விதை அளவு

 

மானாவாரி

இறவை

இரகங்கள்

7 கி.எக்டர்

6 கி.எக்டர்

ஒட்டு இரகங்கள்

6 கி.எக்டர்

4 கி.எக்டர்

sunflower0004

விதை நேர்த்தி

மானாவாரியில் விதைக்கும் முன் விதையை சிங்க் சல்பேட் 2 கரைசலில் 12 மணிநேரம் ஊறவைத்து. நிழலில் உலர்த்திய பின்னர் விதைப்பு செய்யலாம், கார்பென்டாசிம் 2 கிராம், கிலோ விதையுடன் கலந்து 24 மணி நேரம், கழித்து விதைப்பு செய்ய வேண்டும். அல்லது டிரைகோடர்மா 4 கிராம், கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம். சோஸ்பைரில்லம் 3 பாக அசோஸ்பைரில்லம் (600 கிராம், ஹெ) மற்றும் 3 பாக் (600 கிராம், ஹெ) பாஸ்போபாக்ஏரியா அல்லது 6 பாக் அசோபாஸ் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நி உலர்த்தி, உடனடியாக விதைக்க வேண்டும்

விதைப்பு

ஒரு குழிக்கு இரண்டு விதை என்ற அளவில் பாரின் பக்கவாட்டில் 3 செ.மீ. ஆழத்தில் விதைக்கவும், நடவு செய்த 10-15வது நாளில் வளர்ச்சி இல்லாத செடிகளை களைந்து குழிக்கு ஒர் நல்ல செடி இருக்கும்படி பராமரிக்க வேண்டும்.

பயிர் இடைவெளி

ஒட்டு இரகங்கள்          60 ஒ 30 செ.மீ
இரகங்கள்                45 ஒ 30 செ.மீ

sunflower0005

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

     

பருவம்

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)

வீரிய ஒட்டு இரகம்

இறவை

தழை

மணி

சாம்பல்

மானாவாரி

60

90

60

இரகம்

இறவை

40

50

40

மானாவாரி

50

60

40

 

இறவை

40

50

40

                                         
நுண்ணுயிர் உரம்

உயிர் உரம் மண்ணில் இடுதல் 10 பாக் (2000 கிராம், ஹெ) அசோஸ்பைரில்லம்மற்றும்
10 பாக் (2000 கிராம், ஹெ) பாஸ்போபாக்டீரியம் அல்லது 20 பாக்
அசோபாஸ் (4000 கிராம், ஹெ) உடன் 25 கி.தொழுஉரம் மற்றும் 25 கிலோ
மணலுடன் கலந்து, விதைப்பதற்கு முன்னால் இட வேண்டும்.

நுண்ணூட்டம் இடுதல்

12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 40 கிலோ மணலுடன் கலந்து விதைக்கு முன்
சாலில் இட்டு பின்னர் விதைப்பு செய்ய  வேண்டும். மாங்கனீசு பற்றாக்குறை உள்ள
நிலத்திற்கு 0.5 கரைசலை விதைத்த 30, 40 மற்றும் 50ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

கீழ்க்கண்டவாறு நீர்ப் பாய்ச்ச வேண்டும்
முதல் தண்ணீர்      : விதைத்தவுடன்
2ம்தண்ணீர்         : உயிர்த தண்ணீராக 7ம்நாள்
3-ம் தண்ணீர்        : விதைத்த 20ம் நாள்
4-ம் தண்ணீர்        : மொட்டு பிடிக்கும் பருவம்
5,6-ம் தண்ணீர்       : பூ பிடிக்கும் தருணத்தில் (இரண்டு முறை)
7,8-ம் தண்ணீர்       : விதைப் பிடிக்கும் தருணத்தில் (இரண்டு முறை)
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி
ப்ளுக்ளோரலின் அல்லது பென்டிமெத்தலின் 2 லிட்டர் எக்டருக்கு தெளித்த பின்
நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும். களைக் கொல்லி இட்டபின் 30 35 நாளில் ஒரு கைக்களை
எடுப்பது அவசியம். விதைத்தபின் 15 30ம் நாளில் களைக்கொத்தி கொண்டு களை எடுக்க வேண்டும்

போரான் தெளிப்பு

பூக்கொண்டைகளில் வெளிவட்ட மஞ்சள் பூக்கள் மலர ஆரம்பிக்கும் சமயத்தில்
வெண்காரத்தை (போரான்) 0.2 (2கி.லிட்.தண்ணீர்) கலந்து பூக்கொண்டைகள்
நனையுமாறு தெளிக்கவும், இது மணிகள் நன்றாக பிடிக்க உதவும்.

மணிகள் அதிகம் பிடிக்க

மகரந்தச் சேர்க்கை ஏற்படும் தருணமான காலை 9 மணி முதல் 11 மணிக்குள் மெல்லிய துணி கொண்டு பூவின் மேல்பாகத்தை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மெதுவாக ஒவ்வொரு பூக்கொண்டையையும் தேய்க்க வேண்டும். எட்டியிலிருந்து பத்து நாட்களுக்கு 5 முறை இப்படி ஒவ்வொரு பூவிலும் செய்யவேண்டும். அத்துடன் பூக்கள் மலரும் தருணத்தில் எக்டருக்கு மூன்று பெட்டி வீதம் தேனீ வளர்த்தல் நல்ல பலன்
தரும். அருகருகே உள்ள பூக்கொண்டையினை ஒன்றோடொன்று முகம் சேர்ந்து
இலேசாகத் தேய்த்துவிட்டாலும் சிறந்த பலன் தரும்.

அறுவடை

sunflower0013

sunflower0014

பூவின் அடிப்பாகத்திலுள்ள இதழ்கள் மற்றும் பின்புறம் மஞ்சள் நிறமடைந்து பூக்கொண்டையிலுள்ள விதைகள் கடினத்தன்மை அடைந்திருப்பது முதிர்ச்சிடைந்தமைக்கு அறிகுறியாகும். உலர்ந்த பூக்கொண்டைகளைப் பறித்து
உலர்த்திய பின் விதைகளைத் தனியே பிரித்தெடுத்து சுத்தம் செய்யவேண்டும். அறுவடைக்குப் பின்செய் நேர்த்தி அறுவடைக்குப்பின் விதைகளை 8 முதல் 9 சத ஈரப்பதம் வரும் வரை நன்கு உலர வைக்க வேண்டும்

 

தாவர ஊட்டச்சத்து
தாவர வளர்ச்சி ஊக்கிகள்
மகசூலை அதிகரிக்கும்
வழிமுறைகள்

 
வறட்சி
வெள்ளம்
களர்/உவர் தன்மை
வெப்பநிலை

 
 
விவசாயிகளின் கூட்டமைப்பு
வெளியீடுகள்
கேள்வி பதில்
கலைச்சொற்கள்
முக்கிய வலைதளங்கள்
புகைப்படங்கள்

 
 
 
Fodder Cholam Rice Wheat maize sorghum Ragi cumbu varagu panivaragu samai tenai blackgram cowpea cowpea redgram soybean horsegram garden lab lab groundnut sesame coconut sunflower castor niger safflower sugarcane sugarcane sugarbeet Cumbu Napier kollukattai Pul Fodder Cholam Fodder Cowpea Fodder Cumbu Fodder Maize Guinea Grass Velimasal Soundal Kudiraimasal Muyal Masal sword bean Field lab lab Sweet Sorghum Greengram