Agriculture
வேளாண்மை :: பயிர் தேர்ந்தெடுக்கும் முறை

புகையிலை (நிகோடினா டபாக்கம்)

பிறப்பிடம் மற்றும் பரவல்
ஜீனஸ் நிகோடினா என்பது 60 க்கும் மேற்பட்ட இனங்கள்  இதில் அடங்கும், அதில் நிகோடினா டுபாகோ, மற்றும் நிகோடினா ரஷ்டிகா பொதுவாக சாகுபடி செய்யப்படும் வணிகப் புகையிலைகள் ஆகும். இதில் நிகோடினா ரஷ்டிகா இந்தியா, ரஷ்யா மற்றும் சில ஆசிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளபோதும் நிகோடினா டுபாகோ பரவலாக உலகின் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. நிகோடினா டுபாகோ மற்றும் நிகோடினா ரஷ்டிகா தோன்றிய முக்கிய மையமாக தென் அமெரிக்கா மற்றும் பெரு திகழ்கிறது.

பயிரிடப்படும் பகுதி மற்றும் உற்பத்தி
இந்தியாவில் புகையிலை பெரும்பான்மையாக ஆந்திரா, குஜராத், கர்நாடகா, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரில் சாகுபடி செய்யப்படுகிறது. குஜராத்தில் 45 சதவீத பகுதியில் உற்பத்தியும் (0.13mஏக்கர்) மற்றும் 30 சதவீத உற்பத்தியும் (0.16 mt.) உள்ளது. மேலும், உற்பத்தித் திறன்  ஆந்திராவைத் தொடர்ந்து குஜராத்திலும் (எக்டருக்கு 1700 கிலோ) அதிகமாக உள்ளது.
புகையிலை வகைகள்
குஜராத்தில் உள்ள ஆனந்த் பகுதியில் முற்றிலும் இருதிசையிலும் புகையிலை பயிரிடப்படுகிறது. கர்நாடக நிப்பானி பகுதியில் இருதிசையிலும் புகையிலையைக் காணலாம். வட பீகார் மற்றும் வங்காளம் பகுதியில் ஹூக்கா உற்பத்தி மற்றும் குறைந்த அளவில் மெல்லும் உணவுப்பொருள் மற்றும் மூக்குப்பொடி வகைகளில் டுபாகோ மற்றும் ரஷ்டிகா வகைகள் பயன்படுத்தப் படுகின்றன. தமிழ்நாட்டில், மதுரை மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் சிகார், வடிகட்டி, சேர்ப்பான் மற்றும் மெல்லும் புகையிலைகள் பயிரிடப்படுகிறது.
காலநிலை மற்றும் மண்
சராசரி வெப்பநிலையான 20° செல்சியசிலிருந்து 27° செல்சியஸ் இருக்கும் போது இந்தியாவில் புகையிலை பயிரிட உகந்த சூழ்நிலையாகும். மானாவாரிப் பயிராக சாகுபடி செய்யும் போது, அது பயிர் வளரும் பருவத்தில் பரவலான மழை குறைந்தது சுமார் 500 மிமீ தேவைப்படுகிறது. மழை பருவத்தில் 1200 மி.மீ அதிகமாக மழை பொழியும் பகுதியில் இது வளர்வதில்லை. பயிர் முதிர்ச்சியின் போது மழையால் கழுவப்படும் இலையின் மேலுள்ள பசை மற்றும் ரெசின்கள் விரும்பத்தகாத ஒன்றாகும். இந்தியாவில், சிகாரைத் தவிர, வடிகட்டி மற்றும் சேர்ப்பான் புகையிலைகள் மற்றும் தென் இந்தியாவில் மெல்லும் புகையிலைகள் அனைத்தும் வளரும் பருவத்தில் மிகவும் குறைந்த அளவில் மழை பெறுகின்றன.
இந்தியாவில், சுருட்டு மற்றும் சேர்ப்பான் புகையிலைகள் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் சிவப்பு மற்றும் வண்டல் மண்ணில் பயிரிடப்படுகிறது. இதற்கு நைட்ரஜன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் chathukal பெரிய அளவில் தேவைப்படுகிறது. வண்டல் மண் பீ.டி.புகையிலைக்கு பொருத்தமானது. தமிழ்நாட்டில் மெல்லும் புகையிலை கோயம்புத்தூர், தஞ்சாவூர், சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் நல்ல வடிகால் வசதியுள்ள, சிவப்பு மண்ணில் பயிர் செய்யப்படுகிறது.
நாற்றங்கால் மேலாண்மை

புகையிலை விதைகள் மிகவும் சிறிய மற்றும் முட்டை வடிவ தடித்த விதை தோலும் கொண்டது. இது, சுமார் 0.75 மி.மீ நீளமும் 0.53 மி.மீ அகலமும் மற்றும் 0.47 மி.மீ தடிமனையும் கொண்டுள்ளது.  விதை உற்பத்தி செய்யப்படும் பொழுது வகைகள் மற்றும் நிலைமைகளைப் பொறுத்து, விதையின் அளவு மற்றும் எடை மாறுபடுகின்றன. நிகோடினா டுபாகோவில் விதையின் சராசரி எடை 0.08 லிருந்து 0.09 மிகி மற்றும் ஒரு கிராமில் 11,000 - 12,000 விதைகள் உள்ளன. நிகோடினா ரஷ்டிகாவில் விதை பெரியது மற்றும் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் நாற்றுகள் சிறியது மற்றும் மென்மையானது எனவே, விதைகளை நாற்றங்காலில் விதைப்பதற்கு பொருத்தமற்றதாக உள்ளது. எனவே அவைகளை நாற்றங்கால் அல்லது விதை படுக்கைகள் அமைத்து நாற்றுகளை நடவு வயலில் நடவு செய்வதற்கு முன், ஒரு குறிப்பிட்ட அளவு வளரும் வரை கவனமாக வைத்திருக்க வேண்டும். சரியான நாற்றங்கால் இடம், நிலம் தயாரிப்பு மற்றும் உரங்கள், தண்ணீர் மற்றும் பூச்சிகள் மற்றும் நோய்களை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது அவசியம்.

பொதுவாக புகையிலை நாற்றங்கால் மணல் அல்லது மணல் கலந்த களிமண்ணில் வளர்க்கப்படுகின்றன. ஆந்திரப் பிரதேசப் பகுதிகளில் சிகரெட்-புகையிலை  அதிகப்படியான களிமண் பகுதிகளில் பயிரிடப்பட்டாலும் நாற்றங்காலானது மணல் மற்றும் சிறு கற்கள் கொண்ட மண்ணில்  வளர்க்கப்படுகிறது. அதிகப்படியான களிமண்ணில் நாற்றங்கால் தயார் செய்தால் அதிகப்படியான களிமண் அளவு மற்றும் உயர் மழைப்பொழிவினால் உள் வடிகால் வசதி குறையும் மற்றும் உயர் வெப்பநிலைநோய் பாதிப்புக்கு வழி வகுக்கும்.

நாற்றங்கால் தளத்தில் ஒரு நல்ல உள் பரப்பு வடிகால் மற்றும் வெளிச்சம் உள்ள இடத்தில் அமைக்க வேண்டும். 6 முதல் 7 வாரங்கள் வரை தக்கைப் பூண்டு அல்லது சணப்பை போன்ற பசுந்தாள் பயிர் வளர்த்து உழவு ஓட்டுதல் மற்றும் அது தின்ஹட்டா (மேற்கு வங்கம்) போன்ற இடங்களில் நடைமுறையில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நாற்றங்கால் தளத்தை மாற்றுவதன் மூலம் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குதல் குறைக்க மற்றும் மற்ற வகைகளிலிருந்து வரும் மாசுகளையும் அகற்றி விடும். அந்த தளத்தை மாற்ற முடியாது என்றால், பழைய தளத்தை புகையிலை தண்டுகள், நெல் உமி, கரும்பு-குப்பை, போன்ற எளிதாக கிடைக்கும் மெதுவாக எரியும் கழிவு பொருட்களை எரித்து  சுத்தப்படுத்தி படுக்கையை தயார் செய்து விதைப்பதற்கு முன் ஒரு சில நாட்களுக்கு பிறகு, சரியான ஈரப்பதத்தில் செய்யப்பட வேண்டும்.
உழவு
பொதுவாக, ஆயத்த உழவு அனைத்து புகையிலைகளுக்கும் கிட்டத்தட்ட பொதுவானது. எனினும், நன்கு உழும் எண்ணிக்கை மண்ணின் இயல் குணங்களை பொறுத்து மண்ணுக்கு மண் வேறுபடுகிறது. விரைவில் பயிரின் முந்தைய அறுவடைக்கு பிறகு உழவு ஓட்டுதல் நடைமுறையில் உள்ளது. பருவ மழைக்காலத்தில் கனரக மண் உழவு செயல்படுத்த முடியாத போது களைகளை கையால் நீக்கி வயலைக் களைகள் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.
நுனி கிள்ளுதல்

இலைகள் இல்லாமல் நுனியில் மொட்டு அகற்றுதல் பூவின் தலை வளர்ந்ததும் அல்லது அதற்கு முன்னால் செய்தல் ஆகும்.
பக்கவாட்டுக் கிளைகளை அகற்றுதல்

நுனி கிள்ளிய பின்னர் துணைத்தொடர் மொட்டுகள் வளர்ந்து மற்றும் உறிஞ்சிகள் என அழைக்கப்படும் தளிர்கள் வளர்கிறது. இந்த அடிக்கன்றுகளை அகற்றுவது, கன்றுகளை அகற்றுவது என்று அழைக்கப்படுகிறது.
நுனி கிள்ளுதல் மற்றும் பக்கவாட்டுக் கிளைகளை அகற்றுதலின் விளைவாக, ஆற்றல் மற்றும் சத்துக்களைப் பூக்களிலிருந்து இலைகளுக்குத் திசை திருப்புவது, இலைகளின் அளவும் மற்றும் இறுதியாக இலையின் தரத்தை அதிகரிக்கவும் ஆகும். சுருட்டுப் புகையிலையைத் தவிர, பெரும்பாலான புகையிலைகளை, நுனி கிள்ளுதல் மற்றும் பக்கவாட்டுக் கிளைகளை அகற்றுதல் மூலம் வளர்த்தல் ஆகும்.

இரகங்கள் மற்றும் பருவங்கள்

வரிசை
எண்

புகையிலையின் வகை

மாநிலங்கள்

1.

FCV புகையிலை

ஆந்திரா மற்றும் கர்நாடகா

2.

பீ.டி.புகையிலை

குஜராத், கர்நாடகாவின் நிப்பானி பகுதி

3.

சிகார் மற்றும் சுருட்டு

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம்

4.

ஹுக்கா புகையிலை

அசாம், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் உத்திரப் பிரதேசம்.

5.

சூயிங்கம் மற்றும் மூக்குப் பொடி

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், பீகார், அசாம், உத்திரப் பிரதேசம்

6.

நாடு, பர்லி, இலங்கை HDBRG

ஆந்திரப்பிரதேசம்

7.

பிக்கா புகையிலை

ஒரிசா

 

வரிசை
எண்

புகையிலையின் வகை

மாநிலங்கள்

1.

FCV புகையிலை

சிறப்பு CTRI, ஜெயஸ்ரீ, சிறப்பு கோதாவரி, G 11

2.

பீ.டி.புகையிலை

கிளு 20, சுரட்டி 20, ஆனந்த் 23, ஆனந்த் 119 மற்றும் ஹங்குமாத்ரி

3.

சிகார் மற்றும் சுருட்டு

யாருமைக்கப்பல்,மொன்னக்கப்பல், மன்டிவல், அடுக்குமல்லி

4.

ஹுக்கா புகையிலை

ஆனந்த் 145, எஸ் 57, V.D.1, VTK 1, WR 2 மற்றும் P.V. 7

5.

சூயிங்கம் மற்றும் மூக்குப் பொடி

சிவப்பூர், சோனா, பாக்கியலஷ்மி, பூசா, பிரபா, மீனாட்சி

6.

நாடு, பர்லி, இலங்கை HDBRG

பெடைவிட்டானம், ரங்காபுரம் மற்றும் விஸ்வநாத்

பருவங்கள்
நாற்றங்காலுக்கு விதைப்பு மற்றும் நடவுக்கு உகந்த நேரம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது மற்றும் ஒரே இடத்தில் இருந்தாலும் கூட வெவ்வேறு வகை மற்றும் வகைகளுக்கு வேறுபடுகிறது. பொதுவாக, நாற்றங்கால் தயாரிப்பது ஏப்ரல் முதல் மே வரையும் மற்றும் அக்டோபர் வரை நடலாம்.
களை நிர்வாகம்

புகையிலையில் களைப் பிரச்சினைகள், விதைப்பாத்திகள் மற்றும் நடப்பட்ட பயிர் இரண்டிலும் தீவிரமாக உள்ளன. ஆர்பங்கி புகையிலையில் ஒரு முக்கிய களை ஆகிறது.
நாற்றங்கால்
புகையிலை நாற்றங்காலில் களை எடுத்தலில் மிகவும் பொதுவான முறை, வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல நாடுகளில் கையால் களை எடுத்தல் ஆகும். வளர்ந்த நாடுகளில், ரசாயனப் பொருட்கள் சக்தியுள்ளதாக களை யைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. புகையிலை நாற்றங்காலுக்குப் பயன்படுத்தப்படும் தற்காலிக மண் கிருமி நாசினிகளில் சில:
மீத்தைல் புரோமைடு (8-10 கிலோ)
மேதம் (2-5 கிலோ)
கால்சியம் சைனமைடு (50-60 கிலோ)
நடவுவயல்
          நடப்பட்ட பயிரில் பயிருடனான களை போட்டி என்பது நடவு செய்த பிறகு முதல் 60 நாட்கள் வரை இருக்கும். நடப்பட்ட பயிரில், உள்வரிசை சாகுபடி பரந்த வரிசை இடைவெளி என்பது சாத்தியமே. எனவே, பயிர்களுக்கு கைக்களை தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு சாகுபடிகளுக்குக் களை எடுத்தால் களைகளுக்குப் போதுமான கட்டுப்பாட்டைக் கொடுக்கின்றன. முன்னால் இருந்த    மூலிகைகளுக்கு புகையிலை மிகவும் தூண்டக்கூடியதாக உள்ளது. PPI களைக்கொல்லிகள் திறன் மிகுந்த களை கட்டுப்பாட்டை வழங்குகிறது. பொதுவாக வயலில் நாற்றுகள் நடுவதற்கு முன் பரிந்துரைக்கப்படும் களைக்கொல்லிகள்
புரோனமைடு (1.5-2)
புளுகுளோரலின் (2-3)
ஐசோபுரோபலீன் (1.5-2)
ஐசோஆக்ஸபென் (1.5-2.5)
ஓராபங்கி செரூனூவா ஒட்டுண்ணி களையைக் கட்டுப்படுத்த DMTT குருணை 300-500 கிலோ ஒரு ஹெக்டேருக்கு என்ற விகிதத்தில் நடவு செய்வதற்கு 30-40 நாட்களுக்கு முன்னதாக இடுவது சிறந்ததாகும்.

 அறுவடை
புகையிலையின் வெவ்வேறு வகைகளுக்கு, முதிர்ச்சி அறிகுறிகள் மற்றும் அறுவடை முறைகள் வேறுபடுகின்றன. முக்கியமாக, அறுவடையில் இரண்டு முறைகள் உள்ளன. இலையைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் தண்டு வெட்டுதல் முறை:
இலையைத் தேர்ந்தெடுத்தல்(பிரைமிங்)
பொதுவாகப் புகையிலையில், சிறிய இலைகள் முதிர்ச்சி அடையும் அதனைத் தொடர்ந்து மேல் இலைகள், இப்படியே வழக்கமாக ஏறுவரிசையில் நடக்கும். அறுவடையின் போது ஒரு சில இலைகளை அகற்றும் போது அவை முதிர்ந்திருக்கும். இந்த முறையைப் இலையைத் தேர்ந்தெடுத்தல் (பிரைமிங்) என அழைக்கிறோம். சிகரெட் மற்றும் சுருட்டுப் புகையிலைகளை இந்த முறையில் அறுவடை செய்கிறோம்.
தண்டு வெட்டுதல் முறை
சிகரெட், சுருட்டு, மெல்லும் புகையிலை, பி.டி. மற்றும் ஹூக்கா புகையிலைகள் தண்டு வெட்டி முறை மூலம் அறுவடை செய்யப்படுகின்றன. இந்த முறையில், தாவரங்களை அரிவாள் கொண்டு தரையை ஒட்டி வெட்டி  பொதுவாக இரவிலேயே தரையில் தரம் பிரிக்க விட்டு விட வேண்டும். அதைத் தொடர்ந்து கையாளும் முறை சீர்மையாக்கும் முறையைப் பொருத்து வேறுபடுகிறது. அறுவடைக்கு சரியான நேரம் அதிகபட்ச இலைகள் முதிர்ந்த நிலையில் உள்ளபோது ஆகும் .
சீர்மையாக்குதல்

சீர்மையாக்கும் முறை என்பது பட்டினி நிகழ்வின் மெதுவான செயல்பாடு காற்றோட்டம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்பாடு போன்ற பல்வேறு நிலைகள் மூலம் எட்டப்பட்ட பொருத்தமான உடல் மற்றும் இரசாயனப் பண்புகள், காய்ந்த இலையை உற்பத்தி செய்வதற்கு ஆகும். குணப்படுத்தும் முறையின் நிறைவாக, இலை உயிரியல் ரீதியாக இறந்தால் கூட, சில செயல்முறை என்சைம்கள் இருக்கலாம். புதிதாக அறுவடை செய்யப்பட்ட இலையை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம். நிலையான குழு, டைனமிக் குழு மற்றும் நைட்ரஜன் குழு மூன்று வகுப்புகள் உள்ளன.
நிலையான குழுவில் சில மாற்றங்கள் நடைபெறும் மற்றும் நார் சத்து, செல்லுலோஸ், ஹெமிசெல்லுலோஸ், பெக்டின், டானின் முதலியன கொண்டுள்ளது. நைட்ரஜன் குழுவில் குறைவான மாற்றங்கள் நடைபெறும். கூறுகளான புரதங்கள், அம்மோனியாவுடன் கரையக்கூடிய நைட்ரஜன், நைட்ரேட், அமைடுகள் மற்றும் ஆல்கலாய்டுகள் உட்பட எல்லாம் அடங்கும். டைனமிக் குழுவில் முக்கிய மாற்றங்கள் நடைபெறும், அவைகள், சர்க்கரைகள், மாவுகள் மற்றும் கரிம அமிலங்களால் செய்யப்படுகிறது.
தரம் பிரித்தல்
சீர்மைபடுத்திய பின்னர், இலைகளை வரிசைப்படுத்தி இலையின் நிறம் மற்றும்  சேதம்  கொண்டு இலைகள் தரப்படுத்தப்படும். FCV புகையிலையில் தரத்தின் மிக முக்கியமான உறுப்புகள், நிறம், அமைப்பு, அளவு, மாசு, பலம் வெள்ளை சாம்பலுடன் எரியும் மற்றும் உடன்பட்ட சுவை.

Source: www.ctri.org  
 
Fodder Cholam