Agriculture
வேளாண்மை :: பயறு வகைகள்

கொண்டைக்கடலை

Bengalgram

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம் / பருவம் இரகங்கள்
நவம்பர் (குளிர்காலம்) மானாவாரி
வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், தர்மபுரி, புதுக்கோட்டை, ஈரோடு, கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல்,தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி
கோ 3, கோ 4

கொண்டைக்கடலை இரகங்களின் இயல்புகள்

பண்புகள் கோ 3 கோ4
பெற்றோர் மகாராஷ்ட்ரா உள்ளூர் இரகத்தின் தனிவழித் தேர்வு ஐசிசி 42 x ஐசிசி 12237 கலப்பிலிருந்து உருவாக்கப்பட்டது
வெளியிட்ட ஆண்டு 1996 1998
50 சதம் பூக்கும் நாட்கள் 35-40 40
வயது (நாட்கள்) 85 85
மகசூல் (கிலோ, எக்டர்)    
மானாவாரி 1150 1150
செடி உயரம் 35-40 35-40
கிளை 3-5 3-5
பூவின் நிறம் வெளிர் ரோஸ் வெளிர் ரோஸ்
விதையின் நிறம் பழுப்பு பழுப்பு
100 விதை எடை (கிராம்) 30-32 30-32

பயிர் மேலாண்மை

விதை அளவு (எக்டருக்கு)

கோ 3 : 90 கிலோ / எக்டர்
கோ 4 : 75 கிலோ / எக்டர்
begalgram_seed

நிலம் தயாரித்தல்

முன்சேய் நேர்த்தி நிலத்தை 3-4 முறை புழுதிபட நன்கு உழ வேண்டும்

விதை நேர்த்தி

விதைகளிலிருந்து பரவும் நோய்களான வேர் அழுகல் நோய், வாடல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதையுடன் கார்பெண்டாசிம் 2 கிராம் அல்லது திரம் 4 கிராம் அல்லது 4 கிராம் ட்ரைகோடர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் புளுரோசன்ஸ் கலந்து 24 மணி நேரம் கழித்து விதையுடன் 3 பொட்டலாம் ரைசோபியம் நுண்ணுயிர் கலக்க வேண்டும். விதைப்பு விதைகளை ஒரு சதவீத பொட்டாசியம் டைஙைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும்

நுண்ணுயிர் கலத்தல்

விதைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட ரைசோபியல் பயிர் வளர்ப்பு ஒரு பாக்கெட் (200 கிராம்/எக்டர்) அல்லது பாஸ்போ பாக்டீரியாவை (200 கிராம்/எக்டர்) கொண்டு அரிசி கஞ்சியுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்யவில்லை என்றால், 10 பாக்கெட் ரைசோபியம்   (2 கிலோ / எக்டர்) மற்றும் 10 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை (2 கிலோ / எக்டர்) 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மண்ணுடன் கலந்து விதைப்பிற்குமுன் வயலில் இட வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து இடவேண்டும்

உரஅளவு அடியுரமாக ஒரு எக்டருக்கு மானாவாரிப் பயிராக இருந்தால் 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்து, இறவைப்பயிராக இருந்தால் 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும்.

பயிர்  ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)
கொண்டைக் கடலை மானாவாரி 12.5 25 12.5 10
இறவை 25 50 25 20

குறிப்பு:  மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும்

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி:

  • களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லியான பென்டிமெத்தலின் @ 2.5 லிட்டரை விதைத்த மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுன்குழல் கொண்ட பேக்பேக் அல்லது நேப்சாக் அல்லது ராக்கர் தெளிப்பானில் ஒரு எக்டருக்கு 500 லிட்டர் தண்ணீர் கொண்டு தெளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து விதைத்த 25-30ம் நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.
  • களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால், விதைத்த 15வது நாளிலும் மற்றும் 30வத நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.

அறுவடை

காய்கள் முற்றிய பின் அறுவடை செய்யவும் காய்களை உடைத்து விதைகளை மட்டும் பிரித்தெடுக்கவும்

பயிர் பாதுகாப்பு

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் 

 

 
Fodder Cholam