Agriculture
வேளாண்மை :: பயறு வகைகள்

துவரை (கஜானஸ் கஜான்)

Redgram

பயிர் மேலாண்மை

நிலம் தயார் செய்தல்

நிலத்தை நன்கு ஆழமாக உழுது ஏக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அளிக்கவும் அல்லது கடைசி உழவிற்குப் பின் மட்கிய தேங்காய்நார்க் கழிவை அளிக்கவும் வரப்பு மற்றும் பள்ளம் அமைக்கவும்.

விதையும் விதைப்பும்

விதையளவு

விதையளவு கிலோ/எக்டர்
இரகங்கள் கோ 6 வம்பன் 2 எல்.ஆர்.ஜி 41 கோ(துவரை) 7 வம்பன் (துவரை) 3 ஏபிகே 1
தனிப்பயிர் 8 8 8 15 15 15
கலப்புப்பயிர் 3 3 3 5 5 5

விதை நேர்த்தி:

விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒருகிலோ விதைக்கு கார்பென்டாசிம் திரம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு ட்ரைக்கோ டெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் புளுரசன்ஸ் 10 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.

உயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல்

  • பூஞ்சைக் கொல்லி (அல்லது) உயிர்க் கட்டுப்பாட்டுக்காரணி கொண்டு விதை நேர்த்தி செய்தபின் 24 மணிநேரம் கழித்து மீண்டும் பாக்டீரியா பயிர் வளர்ப்பு கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு எக்டருக்கு தேவையான விதையை விதை நேர்த்தி செய்ய ரைசோபியல் கல்சர் சி.ஆர்.ஆர் / சி.பி.ஆர், பாஸ்போ பாக்டீரியா (பேசில்லஸ் மெகாடீரியம்) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தயாரித்த பி.ஜி.பி.ஆர் (சூடோமோனஸ் எஸ.பி) ஒரு பாக்கெட் (200கி) அளிக்கவும். செம்மண்ணாக இருந்தால் வி.பி.ஆர் 1 ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.
  • விதை நேர்த்தி செய்வதற்கு மட்டும் ரைசோபியம் உடன் சேர்ப்பானாக அரிசி கஞ்சி சேர்க்க வேண்டும். பி.எஸ்.பி மற்றும் பி.ஜி.பி.ஆர். கொண்டு விதை நேர்த்தி செய்யாவிட்டால் பாஸ்போ பாக்டீரியா 10 பாக்கெட் (2 கிகி) (பேசில்லஸ் மெகாடீரியம்) மற்றும் (2கிகி) பி.ஜி.பி.ஆர் (சூடோமோனஸ் எஸ.பி) உடன் 25கிகி தொழுவுரம் மற்றும் 25 கிகி மண் கலந்து விதைப்பதற்கு முன் அளிக்கவும்.

விதைத்தல்

விதைகள் விதைப்பு

பின்வரும் இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.

இரகங்கள் தனிப்பயிர் கலப்புப்பயிர்
குறைந்த வளம் அதிக வளம்
கோ(Rg) 7 45 செ.மீ x 30 செ.மீ 60 செ.மீ x 30 செ.மீ 120 செ.மீ x 30 செ.மீ
வம்பன் (Rg) 3, APK 1 45 செ.மீ x 20 செ.மீ 60 செ.மீ x 20 செ.மீ 120 செ.மீ x 30 செ.மீ
கோ 6, வம்பன் 2, LRG 41 90 செ.மீ x 30 செ.மீ 120 - 150 x 30 செ.மீ 240 செ.மீ x 30 செ.மீ
வரப்புப் பயிர் 60 செ.மீ - BSR 1 மற்றும் 30 செ.மீ - மற்றவைகளுக்கு

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

மானாவாரிப் பயிராக இருந்தால் 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து. 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை ஒரு எக்டருக்கு அடி உரமாக இடவேண்டும். இறவைப் பயிராக இருந்தால் 25 தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும். அடியுரமாக 25 கிலோ ஜிங்சல்பேட் இடவேண்டும்.

பயிர்    ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)
தழை மணி சாம்பல் கந்தகம்
துவரை மானாவாரி 12.5 25 12.5 10
இறவை 25 50 25 20

குறிப்பு: மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகச் சத்தை இடவும்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்உரக்கலவை எக்டருக்கு 5 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக நடவு வயலில் இட வேண்டும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற அளவில் நுண்உரக்கலவை மற்றும் தொழுவுரம் சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் நிழலில் உலர்த்த வேண்டும்.

பயறு வகை பயிர்களின் உயிர்ம ஆதரங்கள் கொண்டு நைட்ரஜன் சமன் செய்தல்

50 சதவிகித நைட்ரஜனை உயிர்ம ஆதாரங்கள் கொண்டு சமன் செய்யலாம். (எக்டருக்கு 850 கிகி மண்புழு உரம்) மண்ணில் கார அமில தன்மை 6 க்கும் குறைவாக இருக்கும் போது, பயறுவகை பயிர்களுக்கு சுண்ணாம்பு அளிக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்: விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த்தண்ணீர் மூன்றாவது நாளிலும், பூ பிடிக்கும் பருவத்திலும் 50 சதவிகித பூ பூக்கும் பருவத்திலும் காய் வளர்ச்சிப் பருவத்திலும் நீர் பாய்ச்ச வேண்டும். நீர் தேங்கி நிற்பதை தவிர்த்திட வேண்டும்.

களை கட்டுப்பாடு

  • களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லியான பென்டிமெத்தலின் ஏக்கருக்கு 0.75 கிலோ (2.5 லிட்டர்/எக்டர்) விதைத்த மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுன்குழல் கொண்ட பேக்பேக் அல்லது நேப்சாக் அல்லது ராக்கர் தெளிப்பானில் ஒரு எக்டருக்கு 500 லி தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு பாசனம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து விதைத்த 30-35ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும்.
  • களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால், விதைத்த 20வது நாளிலும் மற்றும் 35வத நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.
  • ஆட்கள் பற்றாக்குறை இருந்தால், விதைத்த 3ம் நாளில் பென்டிமெத்தலின் 0.75 கிலோ (2.5லி/எக்டர்) அளிக்கவும். தொடர்ந்து களை முளைத்த பிறகு  இமாசிதிபர் @ 60 கி ai/எக்டரை 15 நாளிலும் (களை 2-3 இலை பருவத்தில்) மற்றும் குயிசலோபாப் இதைல் @ 50 கி ai/எக்டரை 20ம் நாளிலும் களை முளைத்த பின் (களைகளில் 2-3 இலைகள் இருக்கும்பொழுது)  பரந்த இலை மற்றும் புல்தரை களைகளை கட்டுப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. இரண்டும் இருந்தால், டேங்கில் இமாசிதிபர் @ 60 கி ai/எக்டர் மற்றும் குயிசலோபாப் இதைல் @ 50 கி ai/எக்டர் களை முளைத்த 15-20ம் நாள் (களை 2-3 இலை பருவத்தில்) தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

விதைத்த 3ம் நாள் களை முளைப்பதற்கு முன் மெட்டலாகுளோர் எக்டருக்கு 1.0 கிகி  தெளிக்க வேண்டும். தொடர்ந்து விதைத்த 40ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும்.

டைஅமோனியம் பாஸ்பேட் அல்லது யூரியா, என்.ஏ.ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் தெளித்தல்

  • பூக்கும் முன் இலைத் தெளிப்பாக என்.ஏ.ஏ 40 மிகி/லி ஒரு முறை மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
  • டி.ஏ.பி 20 கி/லி அல்லது யூரியா 20 கி/லி பூக்கும் தருணத்தில் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.
  • சாலிசிலக் அமிலம் 100 மிகி/லி பூக்கும் முன் இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.

 
அறுவடை செய்தல்

  • காய் 80% முதிர்ந்தவுடன் முழு பயிரையும் அறுவடை செய்ய வேண்டும்.
  • 2 – 3 நாட்களுக்கு குவியலாக வைக்க வேண்டும்.
  • உலர்த்த வேண்டும்.

துவரையை நடவு செய்தல்

  • நீ்ண்டகால துவரை வகைகளை மட்டும் தேர்வு செய்யவும்.
  • மானாவாரியாக அல்லது பாசன நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் நடவு செய்யவும்.
  • 6X4 அங்குல அளவு மற்றும் 200 மைக்ரான் தடிமன் கொண்ட பாலித்தீன் பையை  தேர்வு செய்யவும்.
  • பாலித்தீன் பையில் நிலத்தின் மண் : மணல் : தொழுவுரம் அகியவற்றை 1:1:1  என்ற அளவில் நிரப்பி நீர் தேங்குவதை தடுக்க 3-4 துளைகள் இட வேண்டும். 
  • விதையை 0.2 % கால்சியம் குளோரைடில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் விதையை கடினமாக்க 7 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்.
  • கடினமான விதைகளை 4கி /கிலோ மற்றும் 100 கிராம் ரைசோபியம் மற்றும் 100 கிராம் பாஸ்போ பாக்டீரியம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளை @2/ பாலித்தீன் பையில் 1 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.
  • விதைகளை பாலித்தீன் பைகளில் நடவிற்கு 30-45 நாட்கள் முன்பாகவே விதைக்க வேண்டும்.
  • நடவிற்கு முன் நன்கு ஆழமாக உழு வேண்டும். தொடாந்து 2-3 முட்கலப்பை கொண்டு உழ வேண்டும்.
  • இறவை பயிரில் நீண்ட கால இரகங்களுக்கு தனிப் பயிராக இருந்தால் 15 சதுர செ.மீட்டரில்  5’ X 3’ அளவில் குழி தோண்ட வேண்டும் மற்றும் ஊடுபயிராக இருந்தால் 6’ x 3’ அளவில் தோண்ட வேண்டும். மானாவாரியாக இருந்தால் 5’x3’ அளவிற்கு தோண்ட வேண்டும். குறுகிய கால இரகங்களுக்கு 15 சதுர செ.மீட்டரில் 3’ x 2’ அளவில் குழி தோண்ட வேண்டும்.
  • நீர் தேங்கிய பகுதிகளில், குழி தோண்டுவதற்கு முன்னர் வாய்க்கால் அமைக்க வேண்டும்.
  • நடவு செய்த 20-30ம் நாளில் கனிம உரங்கள் @ 25:50:25கி தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து யூரியா, டி.ஏ.பி மற்றும் பொட்டசியம் ஆகியவற்றை நாற்றுகளை சுற்றி இட வேண்டும்.
  • அடிப்படையாக துத்தநாக சல்பேட் எக்டருக்கு 25 கிகி என்ற அளவில் தொழுவுரம் அல்லது மணலுடன் கலந்து அளிக்கவும்.
  • நடவு செய்த 20 – 30 நாள் முனைய வளர்ச்சியை தடுக்க  தாவரங்களை நுனியில் கிள்ளி விட வேண்டும். (மேல் 5 செ.மீ அகற்றுதல்)
  • பூ உதிர்வதைத் தடுக்க 0.5மிலி/ லி ப்ளேனோபிக்ஸ் தெளிக்கவும்.

ஊட்டச்சத்து குறைபாடுகள்

இரும்பு : இலைகளில் பச்சையத்தின் அளவு குறைகிறது – நைட்ரஜன் அல்லது மற்ற கூறுகள் பற்றாக்குறையால் இலை வெளிறி காணப்படும்.

பயிர் வினையியல்

பூ பூக்கத் தொடங்கும் பருவத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயறு வகை வொண்டரை ஏக்கருக்கு 2 கிகி இலைத் தெளிப்பாக அளிப்பதன் மூலம் பூ உதிர்தல் குறைகிறது. அதிக மகசூல் கிடைக்கிறது மற்றும் வறட்சியை தாங்கி வளருகிறது.

பயிர் பாதுகாப்பு

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் 

 

 
Fodder Cholam