வேளாண்மை :: சோயாமொச்சை
   

 

Soybean

பருவம் மற்றும் இரகங்கள்

ஆடிப்பட்டம் (ஜீன்-ஜீலை) புரட்டாசிப்பட்டம்(செப்டம்பர்-அக்டோபர்) மாசிப்பட்டம் (பிப்ரவரி-மார்ச்)

கோ 1 (இறவை), கோ 2 இ
கோ (சோயா) 3

நெல் தரிசு

கோ 1, கோ2

விதை அளவு

கோ 1 இ கோ(சோயா) 3-80 கிலோ, எக்டர், மிதமான பயிர் எண்ணிக்கை ழூ 6,66,000, எக்டர்
கோ 2 - (மானாவாரி) தனிப்பயிர் 60-70 கிலோ, எகச்டர், ஊடுபயிர் 25 கிலோ, எக்டர்

பண்புகள்

கோ1

கோ2

கோ(சோயா) 3

பெற்றோர்

தாய்லாந்து இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு

யுஜிஎம்21ஒஜெஎஸ்335 கலப்பிலிருந்து உருவாக்கப்பட்டது

யுஜிஎம் 69ஒ ஜெஎஸ்335 கலப்பிலிருந்து உருவாக்கப்பட்டது

வெளியிட்ட ஆண்டு

1980

1995

2005

50 சதம் பூக்கும் நாட்கள்

37

30 40

39 41

வயது (நாட்கள்)

85

75 80

85 90

மகசூல் (கிலோ, எக்டர்)

 

 

 

மானாவாரி

1080

1340

-

இறவை

1640

1650

1700

செடியின் உயரம்

58

30 40

53.5

கிளை

6

 

5 6

பூவின் நிறம்

ரோஸ்

ரோஸ் மற்றும் ஊதா

ரோஸ்

விதையின் நிறம்

பழுப்பு கலந்த வெண்மை

பழுப்பு கலந்த மஞ்சள்

பழுப்பு கலந்த மஞ்சள்

100 விதை எடை (கிராம்)

12.5

13-14

10.95 11.75

வயது: சோயா மொச்சை 90 நாட்களில் வளர்ந்து பயனளிக்கக்கூடிய 40 நாட்களில் 50 சதம் பூக்கும் திறன் கொண்டது நெல்லில் தரிசாக பயிரிட கோ 1, கோ ஏடிடி1

பயிர் மேலாண்மை

நிலம் தயாரித்தல்

முன்செய் நேர்த்தி நிலத்தை நன்கு உழுதபின், பாத்தியாகவும், வாய்க்காலாகவும் பிரிக்கவும்

விதையும் விதைப்பும்

விதையவு எக்டருக்கு கோ 1 80 கிலேரா 2 (இறவை) தனிப்பயிராக எக்டருக்கு 60 70 கிலோ ஊடு பயிராக பயிரிட 25 கிலோ எக்டர்

விதைநேர்த்தி: விதையிலிருந்து பருவும் நோய்களான வேர் அழுகல் நோய், வாடல் நோய், இலைப்புள்ளி நோய், நுனிக்கருகல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நெர்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு பார்பென்டாசிம் 2 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்யவும்.

நுண்ணுயிர் கலத்தல்: தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் (ஊடீளூ1) 3 பாக்கெட் (600 கிராம், எக்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம், எக்) உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசோபியம் (2000 கிராம், எக்) மற்றும் 10 பாக்கெட் (2000 கிராம், எக்) பாஸ்போபாக்டீரியா உடன் 25 கி.கி. தொழு உரம் மற்றும் 25 கி.கி உரம் மற்றும் 25 கி.கி மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும். பாக்டீரியாவால் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடத்திற்குஉலர்த்த வேண்டும்

விதைத்தல்: விதைகளை 2-3 செ.மீ. ஆழத்தில் 30 ஒ 10 செ.மீ. இடைவெளியில் ஊன்ற வேண்டும்

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரநிர்வாகம்

ஒரு எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து, 80 கிலோ மணிச்சத்து 40 கிலோ சாம்பல் சத்து மற்றும் 40 கிலோ கந்தகச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடி உரமாக இடவேண்டும். விதைத்த 40வது நாளில் இலைமூலம் 2 சதவீதம் டிடீபி கரைசல், தெளிப்பதன் மூலமும், காலிசிலிக் அமிலம் 100 பிபிம் 50 கிராம், 500 லி, எக்டர்) இலை மூலம் விதைத்த 30வது மற்றும் 40வது நாளில் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்

soybean0001.

பயிர்

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)

 

தழை

மணி

சாம்பல்

கந்தகம்

சோயா மொச்சை

மானாவாரி

12.5

25

12.5

20

 

இறவை

25

50

25

40

சத்துக்குறைபாடு

பாஸ்பரஸ் குறைபாடு வேர்கள் உருவாவது குறைவாக இருக்கும். இலைகளில் பூக்கும் தருணத்தில் பழுப்புநிறப் புள்ளிகள் காணப்படும்

போரான் குறைபாடு  இலைகளில் நரம்புகளிடை நிறம் வெளிர்பச்சை நிறமாக இருக்கும். இலைகளின் நுனிப்பாகம் கீழ்நோக்கிக் குவிந்திருக்கும் இலைகள் உதிர்ந்துவிடும், இலைகளின் ஒரங்கள் காய்ந்துவிடும்.

துத்தநாகக் குறைபாடு

கீழ்நோக்கிக் குவியும்
துத்தநாகக் குறைபாடுள்ள மண்ணிற்கு எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட்டுடன் 125 டன் தொழுஉரம் கலந்து மண்ணில் இடவேண்டும். மாங்கனீச பற்றாக்குறையுள்ள மண்ணிற்கு எக்டருக்கு 25 கிலோ மாங்கனீசு சல்பேட்டுடன் 12.5 டன் தொழுஉரம் கலந்து மண்ணில் இடவேண்டும். அல்லது ஒரு சதவீத மாங்கனீசு சல்பேட் கரைசலை இலை மூலம் 20, 30 மற்றும் 40வது நாளில் தெளிக்க வேண்டும்

நீர் நிர்வாகம்: விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும் விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர் தண்ணீர் கட்ட வேண்டும். பின்னர் மண் மறறும் காலநிலைகளுக்குத் தகுந்தவாறு குளிர்காலத்தில் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் கோடை காலத்தில் 7 முதல் 70 நாட்கள் இடைவெளியிலும் நீர் பாய்ச்ச வேண்டும். சோயா மொச்சை அதிகமாக ஈரம் இருக்குமாயின் பாதிக்கப்படும். வயலில் நீர்தேங்கி இருப்பதை தவிர்க்கவேண்டும். பூக்கும் பருவத்திலிருந்து முதிர்ச்சிப் பருவம் வரை நீர் பற்றாக்குறை பாதிப்பதில்லை. வறட்சியின் தாக்கத்தை சரிக்கட்ட கயோலின் 3 சதவிகிதக் கரைசல் அல்லது பாரபின் 1 சதவிகித கரைசலை இலையின் மீது தெளிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் சோயாமொச்சசை மற்றும் ஆமணக்கு விதைப்பில் 0.60 பாசன கூட்டு விகிதத்தில் பாசனம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. அதிகபட்ச பயன் கிடைப்பதற்கு 10 முதல் 12 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்வது சிறந்ததாகும்.
இறவைப் பயிருக்கு எக்டருக்கு பெண்மித்திலின் 3.3 லிட்டர் அல்லது ஆலகுளோர் 4.0 லிட்டர் விதைத்தவுடன் தெளித்து உடன் நீர் பாய்ச்ச வேண்டும். இதன் மூலம் விதைத்தலில் இருந்து 30 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்தலாம். விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் களைகளை ஒரு முறை எடுத்து நீர் பாய்ச்ச வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 20 மற்றும் 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு: காய்ப்புழுக்களின் தாக்குதல் காணப்பட்டால் ஒரு எக்டருக்கு எண்டோசல்பான் ஒரு லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும். வைரஸ் நோய்களின் தாக்குதல் (மஞ்சள் தேமல் மற்றும் மொட்டு காய்தல்) தென்பட்டால் பாதிக்கப்பட்ட செடிகளை 30 நாட்களுக்குள் பிடுங்கி எறிய வேண்டும். மற்றும் விதைத்த 15வது 30வது நாட்களுக்குப் பின்னர் எக்டருக்கு மோனோகுரோட்டோபாஸ் அல்லது மீதைல் டெமெட்டான் 500 மில்லி தெளிக்க வேண்டும்

ஊடுபயிர்: கரும்பில் ஊடுபயிராக சாகுபடி செய் சோயா மொச்சை உகந்த பயிராகும். சோயாமொச்சையைத் தனிப் பயிராகவும் சாகுபடி செய்யலாம். மேலும் இப்பயிரை வாழை மரவள்ளி, பருத்தி, மஞ்சள், தென்னை ஆகிய பயிர்களிலும் ஊடுபயிராகப் பயிரிடலாம்

அறுவடை: இலைகள் பழுத்து உதிர்ந்தவுடன் நிலமட்டத்தில் அறத்துச் செடிகளைக் காயவைத்து பின் தாம்பு ஒட்டடி மணிகளைப் பிரித்துத் தூற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். சோயாவை நெல் தரிசாக ஜனவரி மாதம் முதல் மார்ச் நடுவரையிலும் பயிர் செய்யலாம். எக்டரக்கு 75 கிலோ விதைகள் தேவைப்படும்.

soybean0003

 

தாவர ஊட்டச்சத்து
தாவர வளர்ச்சி ஊக்கிகள்
மகசூலை அதிகரிக்கும்
வழிமுறைகள்

 
வறட்சி
வெள்ளம்
களர்/உவர் தன்மை
வெப்பநிலை

 
 
விவசாயிகளின் கூட்டமைப்பு
வெளியீடுகள்
கேள்வி பதில்
கலைச்சொற்கள்
முக்கிய வலைதளங்கள்
புகைப்படங்கள்

 
 
 
Fodder Cholam Rice Wheat maize sorghum Ragi cumbu varagu panivaragu samai tenai blackgram cowpea cowpea redgram soybean horsegram garden lab lab groundnut sesame coconut sunflower castor niger safflower sugarcane sugarcane sugarbeet Cumbu Napier kollukattai Pul Fodder Cholam Fodder Cowpea Fodder Cumbu Fodder Maize Guinea Grass Velimasal Soundal Kudiraimasal Muyal Masal sword bean Field lab lab Sweet Sorghum Greengram