Agriculture
வேளாண்மை :: பயறு வகைகள்

வாள் அவரை ( கனவேலியா க்லேடியேடா)

 

பயிர் மேம்பாடு

எஸ்.பி.எஸ்1 வாள் அவரை அறிமுகம் செய்யப்பட்டது. இவை ஒளியுணர்வு இல்லாத காய்கறி பயிர்களில் ஒன்றாகும். இந்த அவரை 110-120 நாட்களுக்குள் முதிர்ச்சி அடைந்து விடும். இதனை வருடம் முழுவதும் பயிர் செய்யலாம் மற்றும் பாசனத்திற்கு மிகவும் எற்றது. விதைத்த 75 வது நாளில் இதன் காய்கள் அறுவடைக்கு வந்துவிடும். தனிப்பயிராக எக்டருக்கு 1356 கிலோ விதை மகசூலையும், 7500 கிலோ காய் மகசூலையும் தரவல்லது. மேலும் இதனை வரப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் மற்றும் நிழல் பயிராகவும் பயிரிடலாம்.

பருவம் :

ஜூன் - ஜூலை (மானாவாரி), செப்டம்பர் - அக்டோபர் (நபி), பிப்ரவரி - மார்ச் (கோடை).

எஸ். பி. எஸ் 1 இரகத்தின் விவரங்கள்

 

வெளியிட்ட ஆண்டு

:

1990

 

தாவர தோற்றம்

:

குட்டை, நேரான, படரும் தாவரம்

 

நிறம்

:

பச்சை

 

கிளைகள் (எண்ணிக்கை)

:

4 - 6

 

பூங்கொத்து

:

இலைக்கோணத்தில் பூங்கொத்து

 

மலர்

:

தடித்த, வெளிர் ஊதா

 

காய்கள்

:

நீளம், தொங்கும், பச்சை, தட்டையான மற்றும் சதை பகுதி உடையது

 

100 விதை எடை (கி)

:

131.6

 

விதை நிறம்

:

பால் வெள்ளை

 

50% பூக்கும் காலம்

:

45 - 50

 

சிறப்பு அம்சங்கள்

:

குறைந்த காலம் (110 - 120 நாட்கள்), காய்கறி மற்றும் தானிய பயிர், மிகவும் சத்தான மற்றும் சுவையானது (25.9% புரதச்சத்து), பூச்சி மற்றும் நோய் பாதிப்பு பெரிதாக காணப்படுவதில்லை.

பயிர் மேலாண்மை

விதை அளவு (கிலோ/எக்டர்) : 110-120 (தனிப்பயிர்)

உரங்கள் (கிலோ/எக்டர்) : 25 தழைச்சத்து, 50 மணிச்சத்து

இடைவெளி : 45 x 30 செ.மீ (இறவை), 30x20 செ.மீ மானாவாரி

 

 
 
Fodder Cholam