எங்களைப் பற்றி :: வேளாண் அறிவியல் நிலையங்கள்

வேளாண் ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்

பின்னணி

இந்நிலையம் 1955 ல் இருந்து பவானிசாகர் அனை அருகாமையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்களத்தில் இருந்து 15 கி.மீ  தொலைவில் சத்தியா – மேட்டுப்பாளையம் சாலையில் (SH 15) அமைந்துள்ளது. தற்போது இந்நிலையம் வேளாண் ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர் என்று அழைக்கப்படுகின்றது.

ஆணை

இந்நிலையம் ஈரோடு உழவர்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், மஞ்சள், காய்கறி பயிர்கள் அதாவது தக்காளி, மிளகாய், பாதுகாவலர், முருங்கை முதலிய தரமான விதை உற்பத்தி மற்றும் வழங்களில் பங்களிக்கின்றது. கலப்பின நெல் விதை உற்பத்தி பற்றி உழவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது. இதில் பல உழவர்கள் பங்கேற்கின்றனர். பல்வேறு தொழில்நுட்ப மேலாண்மை மூலம் நீர் பயன்பாடுகள் பற்றி உழவர்களுக்கு விளக்க நீர் மேலாண்மை திட்டம் இந்நிலையத்தில் இயங்கி வருகின்றது. உயர் விளைச்சல் தரும் நிலக்கடலை ரகங்களுக்கான தீவிர ஆராய்ச்சி நடந்து வருகின்றது. இந்நிலையத்தில் இயங்கிவரும் பயிர் மருத்துவ மையம் உழவர்களுக்கு பூச்சிகொல்லிகள் பயன்படுத்தப்பட வேண்டிய காலங்கள் மற்றும் உயிரினத்தால் ஏற்படும் இடர்பாடுகளுக்கான தீர்வுகள் பற்றிய ஆலோசனைகள் கால றைப்படி வழங்கப்படுகின்றது.

இருப்பிடம்

இந்நிலையம் ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ளது. இந்நிலையம் மொத்தம் 180.80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேலாண்மை நோக்கத்திற்காக பண்ணை நான்கு துணை பண்ணைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை, வடத்தொகுதி (N), பங்கர் தொகுதி(P), தென் தொகுதி (S) மற்றும் தோப்பம்பாளையம் தொகுதி (T) இப்பகுதியில் முக்கிய நடவடிக்கைகள் வருமாறு:

வேளாண் சூழல் அமைப்பு

வருடம் முழுவதும் S மற்றும் N பிரிவுகளுக்கு பாசனம் பெற்ற நீர் பவானிசாகர் அனையிலிருந்து பெறப்பட்டது. மற்ற இரண்டு தொகுதிக்கு ( T மற்றும் P) அற்று இறைவை வழி பாசனம் பெறப்படுகின்றது.
புவி உண்மைச் செய்தி:
அட்சரேகை: 11”29’N
தீர்க்கரேகை: 77”8’E
உயரநிலை: 256 மீ எம்.எஸ்.எல்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் நிருவப்பட்ட பெரிய ஆராய்ச்சி நிலையங்களிள் ஒன்று  வேளாண் ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர். நிருவப்பட்டுள்ள திட்டமில்லா திட்டத்தை தவிர 11 திட்டங்கள் இந்நிலையத்தில் இயங்கி வருகின்றது. இந்த 11 திட்டங்களில் 3 பல்கலைக்கழக திட்டங்கள், 4 இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மன்றத் திட்டங்கள், 3 துணிகர மூலதனம் சார்ந்த திட்டங்கள் மற்றும் ஒன்று ராக்ஃப்பேல்லர் – USA நிதி வழங்கும் திட்டமாகும்.
ஆராய்ச்சி திட்டங்கள்:

  • அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் – நீர் மேலாண்மை (WM):

அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின் நீர் மேலாண்மை திட்டம் 1969 லிருந்து சுமார் ரூ. 30 லட்சம் நிதியுடன் செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் பார்வையின் கீழ் பவானி திட்டம் (LBP) பிரிவில் நீர் ஆற்றல் பயிரித் திட்ட வளர்ச்சியின் மேல் உள்ளது. இத்திட்டத்திற்கான பகுதி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி வருமாறு:

  • நீர் தேவைகள், சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன மேம்பாடு மற்றும் பயிர்கள் விளைச்சல் மேம்படுத்தல் மற்றும் மண்டலத்தின் பயிர்த் திட்டம்
  • திட்ட செயல் திறன் பதிப்பீடு மற்றும் வழங்கு இணக்கம் மற்றும் தேவை கீழ் பவானி திட்டப் பிரிவுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட விறியோக அட்டவணை வளர்ச்சி
  • மேம்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியுடன் வயல்வெளி நீர் மேலாண்மை கல்வி நடத்துதல்
  • நிலையவெளி ஆராய்ச்சி:
  • வாழை, கறிவேப்பிலை மற்றும் மிளகாய்க்கான நுண் பாசனம் மற்றும் நீர்வழி உரமிடுதல் பாடங்கள்
  • துவரை, சப்போட்டா மற்றும் நிலக்கடலையில் சொட்டு நீர் மற்றும் ஈரப்பாதுகாப்பு மூட்டம் ஆராய்ச்சி
  • கலப்பின நெல்லுக்கான பாசனம் மற்றும் ஊட்டச்சத்து இடைவினைப் பாடங்கள்
  • பண்ணை வழி ஆய்வு:

நீர் கிடைப்புத் தன்மை வட்டார அளவில் மதிப்பீடு செய்தல் மற்றும் மும்மடிப் பெருக்கல் மற்றும் தேவையுடன் நீர் வழங்கு கண்டுபிடிப்புகளை ஏற்படுத்துதல்.
அறிவு மற்றும் நீர் மேலாண்மை தொழில்நுட்ப மேம்பாட்டு ஏற்பு மற்றும் கீழ் பவானி திட்ட ஆணைக்கான பயிர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் மீது ஆய்வு தாக்க ஏற்படுத்தும் ஆய்வு மேற்கொள்ளுதல்.

  • தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு உழவர்களால் ஏற்கப்பட்டது.

பயிர் – பல்வேறு பயிர்களுக்கான தேவையின் தலையாயக் கண்டுபிடிப்பு
நெல் – 4 நாட்களுக்கு ஒரு முறை 5செ.மீ ஆழம் நீர் பாசனம் (அல்லது) 30% நீர் குளத்தில் வற்றிய பிறகு 1-2 நாட்கள்
சோளம் – தழை வழி, பூத்தல் மற்றும் பருவமடையும் கட்டங்களிள் 500 செ.மீ ஆழம் பாசனம் வழங்கப்படுகின்றது.
கம்பு – குருத்து விடுதல், பூத்தல், பருவமடைதல் கட்டங்களிள் 550 மிமீ ஆழம் பாசனம் வழங்கப்படுகின்றது
பயிரினங்கள் – 550மிமீ ஆழம் பாசனம் வழங்கப்படுகின்றது (0.6 IW/CPE விதத்தின் அடிப்படையில் 10 – 12 நாட்கள் இடைவேளயைில்)
நிலக்கடலை – 10 – 12 நாட்களுக்கு ஒரு முறை இடைவேளையில் 0.6 IW/CPE விகிதம் 550மிமீ ஆழம் பாசனம் வழங்கப்படுகின்றது. ஓர நீள்பாத்திப் பாசனம் 22.3% பாசனம் நீர் சேமிக்கின்றது.
சூரியகாந்தி – மாற்றி அமைக்கப்பட்ட சால் பாசனத்துடன் 0.6 IW/CPE விகிதம் 450 மிமீ நீர் தேவைப்படுகின்றது.
பருத்தி – 650 மிமீ பூத்தல் ,காய் உருவாகுதல் மற்றும் காய் வளர்ச்சி பருவம் மிகவும் அபாய நிலைகள் ஆகும்.
கரும்பு – 1800 மிமீ (மேற்பரப்பு முறை), 0.30 IW/CPE 1028 1028 மிமீ நீர் மட்டுமே நுகரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சொட்டு நீர் பாசனம் வழங்கப்படுகின்றது.
மஞ்சள் – மேற்றளப் பாசனத்திற்கு 1390மிமீ நீர் தேவைப்படுகின்றது மற்றும் கிழங்கு விளைச்சலில் ஏக்கருக்கு 21 டன்கள் பதிவு செய்யப்பட்டது. சொட்டுநீர் பாசனம் 0.30 IW/CPE விகிதம் தினமும் நுகரப்படுகின்றது. 650மிமீ நீர் மற்றும் 36.5 டன் / ஏக்கர் கிழங்கு விளைச்சல் மட்டுமே நுகரப்படுகின்றது.
வாழை – மேற்றனப் பாசனத்திற்கு 2500 மிமீ நீர் மட்டுமே நுகரப்படுகின்றது. வாழை விளைச்சல் ஏக்கருக்கு 28 டன்களாக பதிந்துள்ளது. சொட்டுநீர் பாசனத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பயிறுக்கு 24 லிட்டர் விகிதத்தில் 1081 மிமீ நீர் மட்டுமே நுகரப்படுகின்றது. வாழை விளைச்சல் 57.6 டன் ஹெக்டர் என்று பதிந்துள்ளது.
மரவள்ளிக்கிழங்கு – பயிர்களை சொட்டு நீர் மூலம் பாசனப்படுத்துவதால் 100% மேற்றனப் பாசனம் உயர் விளைச்சலாக 57.6 டன் ஹெக் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • உழவர்களுக்கான தொழில்நுட்பத்தாக்கம்:

நெல், நிலக்கடலை, கரும்பு, பருத்தி, வாழை மற்றும் எள் ஆகியவற்றிற்கான நீர் மேலாண்மை தொழில்நுட்ப மேம்பாடு கீழ் பவானி திட்டப்பகுதி உழவர்களால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. வாழை, கரும்பு மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவைக்கான சொட்டு நீர் பாசனம் ஈரோடு மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் நீர் போதாமை பகுதி உழவர்களிடையே பிரபலமடைந்துள்ளது.
தேசிய விதைத் திட்டம்: விதை வல்லுநர் விதை உற்பத்தி மற்றும் விதை தொழில்நுட்ப ஆராய்ச்சி:
இந்த விதை உற்பத்தித் திட்டம் இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் ரூ.12.50 லட்சம் நிதி முதலீட்டில் 1985ல் தொடங்கப்பட்டது. மேம்பட்ட ரகங்களின் உயர் தர விதை வல்லுநர் விதைகள் உற்பத்தி, சேய் வரி கலப்பினங்கள், நிறுவனம் மற்றும் சான்றிதழ் விதைகள் ஆகியக் குறிக்கோள்கள் மையமாக கொண்டு இத்திட்டம் நிலையத்தில் செயல்படுத்தப்படுகின்றது. இந்த தரமான விதை உற்பத்தி வேளாண் துறைகள் மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்கள் மூலம் உழவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களிள் உற்பத்தியை பெருக்கவும் சந்தை படுத்தவும் உதவுகின்றது.

தேசிய விதை திட்டத்தின் பார்வை:

  • நெல், பயிறு வகைகள் மற்றும் தக்காளியின் தரமான விதை வல்லுநர் விதை உற்பத்தி
  • பருத்தி விதை மற்றும் சேய் வழி விதை பயிர் இடை வெளியை சி.எம்.எஸ் / செய்முறையில் நிர்ணயித்தல்
  • உழவர்களின் வயலில் விதை உற்பத்தியின் பங்கேற்பு
  • தமிழ்நாட்டில் உள்ள மரபு வழி உருமாறிய பருத்தியின் தாக்கத்தை மதிப்பீடல்
  • மரபியல் வல்லுநர் விதை பக்குவப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தலின் பயிர் மற்றும் இயந்திர செயல் திறன்.

மரபியல் வல்லுநரின் விதை அதிகமாக்கும் திட்டம்:
மரபியல் வல்லுநரின் விதை அதிகமாக்கும் திட்டம் 1978 லிருந்து செய் பணியில் உள்ளது. மறு பெருக்கத்திற்கு கருவிதையாக செயல்படும் ரகங்களுக்கான அடிப்படை விதை பராமரிப்பு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட முக்கிய பயிர்களுக்கான மரபியல் வல்லுநர் விதை அளவு வழங்கள் ஆகியவை இத்திட்டத்தின் குறிக்கோள்களாகும். இத்திட்டத்தின் மொத்த நிதி 30.50 லட்சம் ஆகும்.
நடப்பில் உள்ள ஆராய்ச்சி நடவடிக்கைகள்:
நெல்லின் விதை வல்லுநர் விதை உற்பத்தி – ADT 39, ADT 43, ADT 45 பவானி,
IR 50பயிறுவகைகள் – உளுந்து(TMV 1), தட்டைப்பயிறு(CO 7), பச்சைப்பயிறு(CO 6), துவரை (CO 6), சோயா மொச்சை(Co 1) மற்றும் தக்காளி(PKM 1).
தொழில்நுட்ப வளர்ச்சி:
நெல், பயிறுவகைகள் மற்றும் தக்காளியின் நிருணையிக்கப்பட்ட தரமான விதை வல்லுநரின் விதைகளின் ரகங்கள் அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களுக்கு மறு பெருக்கத்துக்கான விநியோகம். 2002 – 2003 வடங்களின் மொத்தமாக 31, 235 கிலோ விதை வல்லுநரின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு 1901 கிலோ விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
உழவர்களுக்கான தொழில்நுட்பத் தாக்கம்:
விதை வல்லுநரின் விதை உற்பத்தி மற்றும் விநியோகம் வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு, தேசிய விதை நிறுவனம், தனியார் நிறுவனம் மற்றும் உழவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்ட தரமான விதை உற்பத்தி திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தரமான விதை வல்லுநரின் விதை நிறுவன விதை கட்டம் I, II மற்றும் சான்றிதழ் விதைகள் மறு பெருக்கத்திற்கு தேவைப்படுகின்றது. இது உழவர் சமுதாயத்தின் பொருளாதாரம் மற்றும் உற்பத்தியை உயர்த்துகின்றது.
வருடாந்திர எண்ணெய் வித்துப் பயிரின் விதை வல்லுநரின் விதை உற்பத்தி – சூரியகாந்தி:
இத்திட்டம் 1972 லிருந்து இயங்கிவரும் பழைமையான திட்டங்களில் ஒன்று. சூரியகாந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி மற்றும் தரமான விதை வல்லுநரின் விதை உற்பத்தி ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாகும். தற்போது உள்ள ஆணைகள் நவீன விதைவல்லுநர் விதை மற்றும் சேய் வழி அதாவது CMS 234 A, CMS 234 B மற்றும் 6D- 1 போன்ற சூரியகாந்தி கலப்பின விதை உற்பத்தியை மையமாக கொண்டே ரூ. 5 லட்சம் நிதியுடன் செயல்பட்டு வருகின்றது.
நிலக்கடலை ஆராய்ச்சி:
நிலக்கடலைக்கான அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டம் இந்நிலையத்தில் 1972 லிருந்து செயல்படுகின்றது. நெல் தரிசு நிலைக்கேற்ற நிலக்கடலை ரகங்கள் இத்திட்டத்தின் குறிக்கோள்களாகும். குளிர்காலக் கோடையில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்திற்கு சோதனை மையமாக செயல்படுகின்றது.
விரிவாக்க நடவடிக்கைகள்:
1998 லிருந்து இந்நிலையத்தில் திட்ட மருத்துவ மையம் இயங்கி வருகின்றது. உயிர்க் காரணிகளால் எழும் உழவர்களின் இடர்பாடுகள் முன்னறிவிப்பு மற்றும் கால முறைப்படி கருத்துக்கணிப்பு மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் வழங்குகின்றனர். இம்மையத்தின் முக்கிய குறிக்கோள்கள் வருமாறு:

  • பண்ணை ஆலோசனை சேவை வழங்குதல்
  •  உழவர்கள் மற்றும் விரிவாக்க பணியாளர்களுக்கு பயிர் பாதுகாப்பு பற்றி பல்வேறு நோக்கங்களின் பயிற்சி வழங்குதல்
  • வானொலி / தூர்தர்ஷன் / மற்ற கூடகங்கள் மூலம் உழவர் தினம் / வயல் தினம் போன்ற தினங்கள் மூலம் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பரப்புதல்
  • வேளாண் துறை மற்றும் பல்கலைக்கழகம் இடையில் இணைப்பு உருவாக்கல்

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் ஆராய்ச்சி நிலையம்,
பவானிசாகர் - 638 451.
Tel: 04295 240032; 04295 240244
Email: arsbsr@tnau.ac.in;  pmanicks_55@yahoo.co.in

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10