Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

கூட்டுறவுகள்

முன்னுரை
கூட்டுறவு சங்க பதிவாளரின் செயல்கூறுகள்
கூட்டுறவு விற்பனை, பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு
பொது விநியோக முறை
கூட்டுறவு கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
கூட்டுறவு சங்க பதிவாளர் செயலின் சார்பலன்
புள்ளியியல் விபரம்
தொலைபேசி எண்கள்
முக்கியமான கூட்டுறவுகளின் இணையதளம்

முன்னுரை

நம் நாட்டின் சமுதாய - பொருளாதார மேம்பாட்டிற்கு கூட்டுறவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கூட்டுறவுகள், பல்வேறு துறைகளில் செயல்பட்டு, பொருளாதார மேம்பாடு மற்றும் மக்களின் சமுதாய முன்னேற்றம் போன்றவற்றிக்கு முக்கியத்துவம் தருகிறது.

தமிழ்நாட்டில், வேளாண்மைக்காக கூட்டுறவு சங்கமும், நுகர்வோர் கடைகளும் உருவாக்கப்பட்டது. வேளாண்மை முன்னேற்றத்திற்கு மட்டும் அல்லாமல் நுகர்வோர்களுக்கு சேலை, மனைகள், ஜவுளி, பால் பண்னை மற்றும் மீன்துறை போன்றவற்றிலும் பங்களிக்கின்றது. இன்று வரை 25,768 கூட்டுறவு சங்கங்கள் உள்ளது.

மதிப்பிற்குரிய முதலமைச்சர் மூலம் 13 - 05 - 2006ல் அரசபங்கமானது கூட்டுறவுகளுடன் இணைந்து மூன்றில் இரண்டு திட்டத்தினை இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 32 - 3 - 2006ல் ரூபாய் 6866 தொகையுள்ள கூட்டுறவு கடன் மற்றும் அதன் வட்டியை அரசாங்கமானது இரத்து செய்ததது. இது மட்டும்அல்லாமல் 26,429 நியாய விலைக்கடையில் ஒரு கிலோ அரிசியானது ரூபாய் 2க்கு தரப்பட்டது. இந்த இரு திட்டங்களும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.  


 கூட்டுறவு சங்க பதிவாளரின் செயல்கூறுகள்

நம் நாட்டில், தமிழ்நாட்டில் மட்டும் சலுகைகளானது கூட்டுறவு செயல்கள் மூலம் நடைமுறைப்படுத்தப் படுகிறது. இந்த கூட்டுறவு முயற்சிகள், பொதுமக்களின் பொருளாதார மேம்பாடு, குறிப்பாக கிராமப்புற பகுதியில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது. பல்வேறு வகையான கூட்டுறவு முயற்சிகள் ஆனது, பலவித பொருளாதார செயல்பாட்டுகளை உள்ளடக்கியது.

1955 வரை அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களும் கூட்டுறவு சங்க பதிவாளரின் கட்டுப்பாட்டில் இயங்கியது. ஆனால் 1956 - 57ல் சில வகை மற்றும் சார்பலன் கூட்டுறவு சங்கமானது பிற துறைகள் மற்றும் சட்டப்படியான வாரியத்தின் கட்டுப்பாட்டில் காலத்தை பொருத்து இயங்கியது. இந்த துறை அல்லது வாரியத்தின் தலைமையில் ஆலோசித்தும், சில நேரங்களில் பதிவாளர்களை பொறுத்தும் இயங்கி வந்தது. ஆனால் இப்பொழுது கூட்டுறவு சங்க பதிவாளர்களோடு 14 சார்பலன் பதிவாளர்கள் உள்ளது.

கூட்டுறவு சங்க பதிவாளர்கள், மேம்பாடு செயல்பாடுகளான வேளாண்மை உற்பத்தி மற்றும் முன்னேற்றத்தின் கடன், நகர மக்களுக்கான கடன், வேளாண்மை உற்பத்தி பொருட்களின் விற்பனை மற்றும் பதப்படுத்துதல், வேளாண்மை இடுபொருட்களின் பகிர்மானம் மற்றும் நுகர்வோர்கள் வாங்கும் பொருட்களின் / வர்த்தகப்பொருட்களின், நுகர்வோர் கூட்டுறவுகள் மற்றும் மாநிலத்தின் பொது விநியோக முறை, மற்றும் கூட்டுறவு கல்வி, தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி, மற்றும் கருத்து பிரசாரம் / பொது விளம்பரம் போன்றவை நடைமுறைப்படுத்துகிறது.

கூட்டுறவு கடன்:

இந்த துறையானது வேளாண்மை கடன், வேளாண்மை உற்பத்தி பொருட்களின் விற்பனை, உரங்கள் மற்றும் முக்கிய வர்த்தக பொருட்களின் பகிர்மானம் மற்றும் தமிழ்நாட்டின் சட்டரீதியாக செயல்படும் செயல்கூறுகளை உள்ளடக்கியதாகும். இந்த துறையின் முக்கிய குறிக்கோள் யாதெனில், அனைத்து கூட்டுறவுகளும் இதன் கீழ் இயங்கி பொதுமக்கள் திருப்தியடையும் வகையில் பொருட்களை விநியோகம் செய்வது, அனைத்து கூட்டுறவுகள் செயற்பாடு வசதிகள் மற்றும் வளர்ச்சிகளை மேம்படுத்துவது ஆகும். கூட்டுறவு சங்கம் 2008 - 09ல் பட்டுவாட செய்யப்பட்ட கடன்களின் விபரம் பின்வருமாறு,

வ.எண்

கடன்கள்

ரூபாய் (கோடியில்)

1.

குறுகிய கால கடன்கள்

1500

2.

மத்திய கால கடன்கள்

126.00

3.

நீண்ட கால வேளாண்மை கடன்கள்

100.00

4.

நகை கடன்கள்

8487.78

5.

விளைநிலமற்ற கடன்கள் மற்றும் பிற கடன்கள்

579.60

கூட்டுறவு சங்கங்களின் பல்வேறு செயல்முறை திட்டங்களின் விபரங்கள் பின்வருமாறு.

கூட்டுறவு கடன் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடு:

கூட்டுறவு கடன் நிறுவனமானது, வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை ஆராய்ந்து, பொதுமக்களுக்கு பலதரப்பட்ட பகுதிகளில் கடன்களை தருகிறது. குறுகிய கால கடன் அமைப்பானது, மாநில அளவில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்பற அளவில் முதல் நிலை வேளாண்மை கூட்டுறவு வங்கி போன்ற மூன்று வகையான வரிசைகளை உள்ளடக்கியது. நீண்ட கால கடன் அமைப்பானது, மாநில அளவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாடு கூட்டுறவு வங்கி, தாலுகா அளவில் முதல் நிலை வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாடு கூட்டுறவு வங்கி போன்றவற்றை உள்ளடக்கியது. சிறுநகரம் மற்றும் நகரப் பகுதியில் உள்ள மக்களுக்கு நகரக்கூட்டுறவு வங்கி வசதிகள்.


கூட்டுறவு விற்பனை, பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு

கூட்டுறவு விற்பனை

கூட்டுறவு விற்பனையின் முக்கிய குறிக்கோள் யாதெனில் நியாயமான விலையில் உற்பத்திபொருட்களை விற்பனை செய்லது, உழவர்களுக்கு விளை இடுபொருட்களை வழங்குவது, வேளாண்மை பொருட்களுக்கான கடன்களை முன்கூட்டியே தருவது, வேளாண்மை வர்த்தகபொருட்களின் பதப்படுத்துதலை செய்வது மற்றும் விற்பனையின் மூலம் கடன்களில் இருந்து மீட்பதற்கான வழிகளில் உதவுவது போன்றவை ஆகும்.

இந்த குறிக்கோள் ஆனது தமிழ்நாட்டில் 113 முதல்நிலை கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையமானது, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமை நிறுவனமாக செயல்படுகிறது. தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையமானது, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு தலைமைச் சங்கமாக செயல்படுகிறது.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம்:

இந்த விற்பனை இணையமானது 1959ல் தொடங்கப்பட்டது. இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றின் பகிர்மானத்திற்கு இது பெரிதும் உதவுகிறது. 28640 மில்லியன் டன்கள் கொள்ளளவு உடைய 38 சேமிப்பு கிடங்குகள் மற்றும் 4650 மில்லியன் டன்கள் கொள்ளளவு உடைய 15 வாடகை சேமிப்பு கிடங்குகள் உள்ளது. கோயம்பேட்டில் 2500 மில்லியன் டன்கள் கொள்ளளவு உடைய மொத்த விற்பனை வளாகம் மற்றும் பேசின் பாளத்தில் 1350 மில்லியன் டன்கள் கொள்ளளவு உடைய மொத்த விற்பனை வளாகம் போன்ற இரு சேமிப்பு கிடங்கு பகுதிகள் சென்னையில் உள்ளது.

தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் கீழ் இந்த இணையமானது செயல்படுகிறது. இந்த இணையமானது ஆதரவு விலை செயல்பாட்டிற்கும், பாமிணி, திருவாரூர் மாவட்டத்தில் உரப்பகுதியான செயற்பாட்டிற்கும் உதவுகிறது.

வேளாண்மை விளைபொருட்களின் விற்பனை:

கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் விவசாயிகள் நியாயமான விலையில் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு வழிவகுக்கிறது. இதன் செயல்பாடுகளானது உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர்களை இணைக்கும் பாலமாக அமைகிறது.

2007 - 08ம் ஆண்டில் கூட்டுறவு சங்கமானது 31.3.08 வரை ரூபாய் 1130.11 கோடிக்கு வேளாண்மை விளைபொருட்களை விற்பனை செய்துள்ளது.

நுகர்வோர் கூட்டுறவுகள்:

நிர்வாக அமைப்பு:

தமிழ்நாட்டில் நுகர்வோர் கூட்டுறவு ஆனது, மாநில அளவில் தமிழ்நாட்டு நுகர்வோர் கூட்டுறவு இணையம், மாவட்ட அளவில் கூட்டுறவு மொத்த விற்பனை கிடங்குகள் அடிப்படை அளவில் முதல்நிலை கூட்டுறவு கிடங்குகள், போன்ற மூன்று வகையான வரிசை உடைய அமைப்புகளை உள்ளடக்குகிறது.

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம்:

இந்த இணையமானது பட்டாசுகள் மற்றும் பயன்பாட்டு பொருட்களை கொள்முதல் செய்து, மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை கிடங்குகள், முதன்மை கூட்டுறவு கிடங்குகள், மற்றும் கூட்டுறவு அச்சகம் போன்றவற்றிற்க்கு பகிர்மானம் செய்கிறது.

கூட்டுறவு மொத்த விற்பனை கிடங்கு:

பொது விநியோக முறைக்காக மாநிலத்தில் 34 கூட்டுறவு மொத்த விற்பனை கடையானது உள்ளது. இந்த கூட்டுறவு மொத்த விற்பனையானது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்களில் இருந்து தேவையான வர்த்தக பொருட்களை விநியோகம் செய்து, பொதுமக்களுக்கு சொந்த கடைகள் மற்றும் முதன்மை சங்கங்களினால் செயற்படும் கடைகள் மூலம் பொது விநியோகம் செய்கிறது.

31.3.2008 வரை கூட்டுறவு நியாயவிலை கடைகளில் ரூபாய் 2414.66 லட்சம் வரை 12.36 டன்கள் ஊட்டி தேயிலை மற்றும் பாதி பொருட்கள் ஆனது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நுகர்வோர் கிடங்குகள் ரூபாய் 1988.81 கோடி வரை நுகர்வு பொருட்களை விற்பனை செய்துள்ளது.

முதன்மை கூட்டுறவு கிடங்குகள்:            

தமிழ்நாட்டில், 3324 முதன்மை கூட்டுறவு கிடங்குகள் உள்ளன. இதனுடன் மாணவரகள் கூட்டுறவு கிடங்கு, ஊழியர்கள் கூட்டுறவு கிடங்கு, மகளிர் கூட்டுறவு கிடங்கு, மற்றும் பிற முதன்னை கூட்டுறவு கிடங்குகளும் அடங்கும். இந்த கூட்டுறவானது தரமுடைய நுகர்வு பொருட்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்கிறது. பொது விநியோக முறையின் அடிப்படையில் வர்த்தக பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்கிறது.

கூட்டுறவுகளின் சிறந்த வகைகள்:
கூட்டுறவு அச்சககம்:

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் 26 கூட்டுறவு அச்சககம் இயங்குகிறது. அனைத்து கூட்டுறவுகள், அரசாங்கம், அரசாங்கம் போன்ற முகவைகள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் போன்றோரின் தேவைக்காக இயங்குகிறது. இந்த கூட்டுறவு அச்சககத்தில் 12,688 நபர்கள் மற்றும் இதன் முதலீடு பங்கு ரூபாய் 2.05 கோடிகள் ஆகும்.

உப்பு பணியாளர்களின் உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கங்கள்:

இந்த சங்கமானது உப்பு பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டதாகம். தற்போது 11 உப்பு பணியாளர்களின் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் நடைமுறையில் உள்ளது.

மற்ற சிறப்பான சங்கங்கள்:

தற்போது 6 நபவிதர் கூட்டுறவு சங்கம் மற்றும் 3 சலவையர்கள் கூட்டுறவு சங்கம் போன்றவை இவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக நடைமுறையில் உள்ளது. தமிழ்நாட்டில் 34 கூட்டுறவு சிற்றுண்டியானது நடைமுறையில் உள்ளது. தகவல் தொடர்பு முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி சென்னை மாவட்டத்தில் “சென்னை துரித பட்வொடா கூட்டுறவு சங்கம்” என்ற புதிய கூட்டுறவு சங்கமானது உருவாக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் ஒப்பந்த கூட்டுறவு சங்கங்கள்:

இந்த கூட்டுறவு சங்கமானது, நிர்வாக குழுக்களும், தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள இடைத்தாரர்களை நீக்குவதன் மூலம் நிர்வாகத்திடம் இருந்து தொழைலாளர்கள் சலுகைகளை பெறுவதற்கு உதவுகிறது. தமிழ்நாட்டில் தற்போது 113 தொழிலாளர்கள் ஒப்பந்த சங்கங்கள் உள்ளது. இதன் மொத்த நபர்கள் 34,325 தொழிலாளர்கள் ஆகும்.

பழங்குடி மக்களின் மேம்பாடு:

பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக தமிழ்நாட்டில் 19 மிகப்பெரிய பல பயன் (LAMP) கூட்டுறவு சங்கங்களானது நடைமுறையில் உள்ளது. இந்த சங்கமானது 81650 பழங்குடி நபர்களையும், 9841 பழங்குடி அல்லாத நபர்களையும் உள்ளடக்கியது. விளைச்சல் மற்றும் பிற உற்பத்திற்காக இந்த சங்கமானது பழங்குடி மக்களுக்கு வட்டியில்லா கடனை தருகிறது. அரசாங்கமும், இந்த சங்கத்தின் மூலம் பல்வேறு மானியங்களான முதலீடு பங்கு மானியம், போக்குவரவு மானியம், மற்றும் ஓட்டுநர் மற்றும் வாகன பாதுகாக்கும் நபர்களுக்கு மானியம் போன்றவற்றை ஒவ்வொரு வருடமும் தருகிறது.

இந்த சங்கத்தின் மூலம் 31.3.2008 வரை கொடுக்கப்பட்ட சலுகைகள் பின்வருமாறு:

1. கடன் வழங்கியது ரூபாய் 1799.72 லட்சம்
2. வேளாண்மை பொருட்களை வாங்கியது ரூபாய் 212.66 லட்சம்.
3. வேளாண்மை உள்ளீடு பொருட்கள் விநியோகம். ரூபாய் 130.52லட்சம்
4. சிறிய விவசாயிகள் விளைபொருள்கள் சேகரிப்பு. ரூபாய் 22.72லட்சம்.
5. நுகர்வு பொருட்களின் விநியோகம். ரூபாய் 853.81 லட்சம்.
6. அரசாங்க மானியம். ரூபாய் 90 லட்சம் (2007 - 2008).


பொது விநியோக முறை

மாநிலத்தின் முதன்மை கடமைகளில் ஒன்றும் உணவினை பாதுகாக்து, மக்களுக்கு தொடுப்பதாகும். அரசாங்கமானது பொது விநியோக முறையின் மூலம் தரமுள்ள அரிசியை பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு கட்டுபடியாகும் விலையில் கொடுக்கிறது. இதனை மையமாக வைத்து, 3.6.2006 முதல் பொது விநியோக முறை மற்றும் அத்தோதயா அண்ணா திட்டத்தின் (AAY) மூலம் ஒரு கிலோ அரிசியானது ரூபாய் 2க்கு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு மூலம் பொது விநியோக முறை நியாய விலை கடையாக செயல்படுத்தப்படுகிறது.21644 நியாய விலை கடைகள் மூலம் 1.68 கோடி குடும்பஅட்டை உடைய நபர்கள் வர்த்தக பொருட்களை மேலும் கூட்டுறவு ஆனது, 5602 பகுதி நேர நியாய விலை கடைகளையும், 86 அலைபேசி நியாய விலை கடைகளையும், தொலைதூரத்தில் (அல்லது) அனுக முடியாத பகுதிகளுக்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 617 துணை சில்லறை விற்பனை வெளியீடானது, மகளிர் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் கூட்டுறவு ஆனது மாநிலத்தின் மண்ணெண்ணெய் பகிர்மானத்திற்காக 266 மண்ணெண்ணெய் கடைகளை நடத்துகிறது.

AAY திட்டத்தின் மூலம், குடும்ப அடையாள அட்டை உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசியானது ஒரு மாதத்திற்கு அரசாங்கமானது தருகிறது. நமது மாநிலத்தில் மட்டும் 15.41 லட்ச மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர்.

மகளிர் நியாய விலைக் கடை:

மகளிர்களின் தொழில் முன்னேற்றத்திற்கும், பொருளாதார நிலை முன்னேற்றத்திற்கும் அரசாங்கமானது சில நியாய விலையை கடைகளை மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு கழகத்தின் மூலம் உப்படைக்கிறது. 31.3.2008ல் இருந்து 617 நியாய விலைக்கடைகளை, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நியாய விலை கடைகளுக்கு மின்னியல் எடை இயந்திரத்தை வழங்குதல்:

தமிழ்நாடு அரசாங்கம் சரியான அளவில் வர்த்தக பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கு மின்னியல் எடை இயந்திரத்தை அளித்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் ரூபாய் 100 லட்சம் செலவில் 2365 நியாய விலை கடைகளுக்கு மின்னியல் எடை இயந்திரத்தை வழங்கியுள்ளது. மேலும் 23,600 நியாய விலை கடைகளுக்கு தனியார் மின்னியல் எடை இயந்திரங்களை வாங்குவதற்கு ரூபாய் 11.50 கோடி நிதியானது வழங்கியுள்ளது.

ஒருங்கிணைந்த கூட்டுறவு மேம்பாட்டுத் திட்டம் (ICDP):

கூட்டுறவுகளின் உள்ளமைப்பினை மேம்படுத்துவதற்கும், கூட்டுறவு தொழில்களின் நிலையை மேம்படுத்துவதற்கும், தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கூட்டுறவு மேம்பாட்டுத் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், வேளாண்மை மற்றும் வேளாண்மை சார் பகுதிகளான மீன்வளர்ப்பு கோழிப்பண்ணை, பால்பண்ணை, கைத்தறி மற்றும் ஊராக தொழில்கள் போன்றவற்றிக்கு நிதிஉதவியானது மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கு தரப்படுகிறது. கூட்டுறவின் அனைத்து நிலை முன்னேற்றத்திற்கும் இந்த திட்டமானது உதவுகிறது. NCDC - இடமிருந்து கடன் உதவியை பெற்ற பிறகு அரசாங்கமானது ICDPக்கு நிதி உதவியை தருகிறது.

5ஆண்டுகளுக்கு இந்த திட்டமானது நடைமுறை படுத்துப்படுகிறது. கீழ்கண்ட 10 மாவட்டங்களில் ICDP திட்டமானது நடைமுறையில் உள்ளது.

முடிவடைந்த திட்டங்களின் விபரங்கள் (லட்ச ரூபாயில்):

வ.எண்

மாவட்டத்தின் பெயர்

கணக்கீடு (லட்ச ரூபாய்)

நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு

1.

விருது நகர்

862.51

1989 – 1995

2.

கடலூர் - ஒருங்கிணைந்த வடக்கு பகுதி

1506.97

1992 – 1997

3.

விழுப்புரம்

1506.97

1992 - 1997

4.

கோயமுத்தூர்

1080.99

1995 - 2001

5.

தருமபுரி

1160.25

1995 - 2001

6.

திருவண்ணாமலை

816.58

1996 - 2001

7.

காஞ்சிபுரம்

1123.88

1998 - 2005

8.

இராமநாதபுரம்

687.03

2000 - 2004

9.

திருச்சி

1216.98

2002 - 2008

10.

பெரம்பலூர்

937.84

2002 - 2008

 

மொத்தம்

9393.00

 

நடைமுறையில் உள்ள திட்டங்களின் விபரம்:
தற்போது 4 மாவட்டங்களில் ICDP ஆனது நடைமுறையில் உள்ளது:


வ.எண்

மாவட்டத்தின் பெயர்

நடைமுறைப்படுத்தப்பட்ட வருடம்

மொத்த
கணக்கீடு (லட்ச ரூபாய்)

அரசாங்கத்தால் தரப்பட்ட தொகை (லட்ச ரூபாயில்)

1.

தஞ்சாவூர்

2002 - 03 முதல் இன்று வரை

1101.09

1101.09

2.

திருவாரூர்

2002 - 03 முதல் இன்று வரை

1222.44

1222.44

3.

தேனீ

2005 - 06 முதல் இன்று வரை

987.73

695.75

4.

தூத்துக்குடி

2002 - 03 முதல் இன்று வரை

942.08

638.49

 

 

மொத்தம்

4253.34

3657.77

சேலம், ஈரோடு, மதுரை மற்றும் புதுக்கோட்டை பகுதியிலுள்ள மதிப்பீட்டாளர்கள் மூலம் திட்டஅறிக்கை விபரங்கள் தயார் செய்யப்பட்டு, மாநில ஒருங்கிணைப்புகுழு மற்றும் NCDC போன்றவற்றின் மூலம் மதிப்பீடப்படுகிறது. நிர்வாகமானது, அரசாங்கத்தின் மூலம் இந்த திட்டத்தினை அங்கீகரித்து நடைமுறை படுத்துகிறது. இதனை பொருத்து NCDC ஆனது திருநெல்வேலி மாவட்டத்தினை கருத்தில் கொண்டு திட்ட அறிக்கை விபரமானது சேகரிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல், கரூர், வேலூர், சிவகங்கை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ICDP திட்டமானது அடுத்த கட்ட நிலையை நடைமுறைப்படுத்தப்படும். இந்த மாவட்டங்களில் செயல்படுத்த NCDC ஆனது இதனுடைய வர்த்தகத்தை தருகின்றது. நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டாளர்கள் மூலம் இந்த திட்டத்திற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. அரசாங்கமானது மேலும் நீலகிரி மாவட்டத்தினை ICDP திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டு NCDC மூலம் இதன் கொள்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  


கூட்டுறவு கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி

கூட்டுறவு கல்வி, பயிற்சி, பொது விளம்பரம் மற்றும் கருத்து பரப்பு போன்ற செயல்களை, தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்துகிறது.
கூட்டுறவு பயிற்சி:


கூட்டுறவு நிர்வாக சம்பந்தமான செயல்திறன் மற்றும் மேன்மையை அடைவதற்கான ஆற்றல் போன்றவற்றினை பயிற்சியானது தரப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 20 கூட்டுறவு நிர்வாக பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கூட்டுறவு நிர்வாகம், குறுகிய கால கணினி படிப்புகள் மற்றும் நகை மதிப்பீடுதல் போன்ற பயிற்சிகன் அளிக்கப்படுகிறது. கூடுதலாக கூட்டுறவு பணியபட்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட மற்றும் தேவையின் அடிப்படையில் குறுகிய கால பாடங்களை நடத்துகிறது. கூட்டுறவு பயிற்சி பெறாத பணியாட்களுக்கு கடித போக்குவரத்து பாடங்களை தருகிறது.

கூட்டுறவு நிர்வாகத்தில் உயர் பட்டயப் படிப்பு:

சென்னை மற்றும் மதுரை போன்ற இரண்டு இடங்களில் உயர் பட்டயப் படிப்பிற்கு நிறுவனம் உள்ளது.

தொழில்நுட்ப கல்வி:

தமிழ்நாடு கூட்டுறவு சங்கமானது, தருமபுரி மாவட்டத்தின் பர்கூர், தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி என்ற இடங்களில் வேலையில்லா இளைஞர்களிடம் சுய வேலைவாய்ப்பினை ஊக்குவிப்பதற்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இந்த தொழில் பயிற்சி நிறுவனத்தின் மூலம் சராசரியாக 280 மாணவர்கள் தொழில்நுட்ப பயிற்சியை பெற்றுள்ளனர். தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் கீழ் திருச்சியின் லால்குடி பகுதியில் கூட்டுறவு உயர் தொழில் நுட்ப கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு ஆராய்ச்சி:

சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்றவற்றிக்கு தளா ரூபாய் 5 லட்சமானது. கூட்டுறவு பகுதியில் புதுமையான எண்ணங்களை ஊக்குவிக்க தமிழ்நாடு கூட்டுறவு சங்கமானது தருகிறது. கூட்டுறவு பகுதியில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களை ஊக்குவிக்க கல்வி உதவி நிதியாக தரப்படுகிறது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கமானது, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி என்ற இரண்டு நிதியை பேணிக்காக்கிறது. 3 சதவிகித நிகர லாபத்தை கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியில் இருந்தும், 2 சதவிகித நிகர லாபத்தை கூட்டுறவு கல்வி நிதியிலிருந்தும் கூட்டுறவு சங்கமானது லாபத்தை பெறுகிறது. இந்த நிதி தொகையானது கூட்டுறவு ஆராய்ச்சி, முன்னேற்றம், கல்வி, பயிற்சி மற்றும் கொள்கைகளின் கருத்து பரப்பு போன்றவற்றிக்கு பயன்படுத்தப்படுகிறது.

கூட்டுறவு சங்க பதிவாளர் செயலின் சார்பலன்

செயல் பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் இயற்கும் சங்கங்கள்:


வ.எண்

செயல் பதிவாளரின் பெயர்

சங்கங்களின் எண்ணிக்கை

1.

கூட்டுறவு சங்க வீட்டுவசதி பதிவாளர்

997

2.

ஆணையர், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாடு

9041

3.

கைத்தரி மற்றும் துணிநெய்தல் இயக்குநர்

1411

4.

மீன் வளர்ப்பு இயக்குநர்

1256

5.

அக்ரோ பொறியியல் பணி பதிவாளர்

211

6.

காதி மற்றும் கிராம தொழில்கள், முதன்மை நிர்வாகஅதிகாரி

1100

7.

தொழில்கள் மற்றும் வர்த்தக ஆணையர்

301

8.

கால்நடை பணிகளின் இயக்குநர்

526

9.

சமூக நல ஆணையர்

103

10.

சக்கரை ஆணையர்

15

11.

பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநர்

26

12.

எண்ணெய் வித்து விதைகளின் இயக்குநர்

225

13.

ஊரக மேம்பாட்டு இயக்குநர்

45

14.

பணைபொருட்கள் மேம்பாடு வாரிய இயக்குநர்

 


புள்ளியியல் விபரம்

கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை:

மாநில அளவில்

கூட்டுறவு சங்கங்கள்

எண்ணிக்கை

1.

தமிழ்நாடு கூட்டுறவு
சங்கம்

1

2.

மாநில முதன்மை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு

1

3.

மாநில வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி, தமிழ்நாடு

1

4.

தமிழ்நாடு கூட்டுறவு
விற்பனை இணையம்

1

5.

தமிழ்நாடு இணயைம்

1

6.

தமிழ்நாடு கூட்டுறவு
நகர வங்கிகள் இணையம்.

1

மாவட்ட அளவில்

 

எண்ணிக்கை

1.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 

23

2.

மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை கிடங்கு

34

3.

மாவட்ட கூட்டுறவு சங்கங்கள்

29

4.

கூட்டுறவு அச்சகம்

26

5.

கூட்டுறவு வேளாண்மை நிறுவனம்(11 + 9)

20

6.

தங்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம்

1

தொடக்கநிலை அளவில்

 

எண்ணிக்கை

1.

தொடக்கநிலை வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் FSCS

4460

2.

தொடக்கநிலை கூட்டுறவு விற்பனை சங்கங்கள்

113

3.

பெரிய பல பயன் கூட்டுறவு சங்கங்கள்

1851

4.

தொடக்கநிலை கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கிகள்

180

5.

கூட்டுறவு நகர வங்கிகள்

121

6.

பணியாளர்கள் கூட்டுறவு கடனுதவி சங்கங்கள்

1851

7.

நகர கூட்டுறவு கடனுதவி சங்கங்கள்

46

8.

முதன்மை கூட்டுறவு கிடங்கு மற்றும் மாணவர்கள் கூட்டுறவு

3256

9.

கூட்டுறவு சிற்றுண்டிச்சாலை

31

10.

தொழிலாளர்கள் ஒப்பந்த கூட்டுறவு சங்கங்கள்

113

11.

பிற வகை கூட்டுறவு சங்கங்கள்

 

தொலைபேசி எண்கள்:

வ.எண்

பெயர்

பதவி

தொலைபேசி எண்

1.

திரு. A.V. வேலு

கூட்டுறவு அமைச்சர்

044 - 25673209(O)
044 - 24937225(R)

2.

K. சண்முகம், I.A.S.

உதவியாளர், CF & CP துறை, தமிழ்நாடு அரசு

044 - 25672224(O)
044 - 24465657(R)

3.

ஜடிந்திர நாத் சவான், I.A.S.

கூட்டுறவு சங்க பதிவாளர்

044 - 28364848(O)
044 - 24792530(R)

4.

L. சித்தரசேனன்

கூடுதல் பதிவாளர் (நுகர்வு செயல்கள்)

28364849(O)
26505353(R)

5.

N. அசோகன்

கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கி)

28364850(O)
24323032(R)

6.

P. ராஜேந்திரன்

கூடுதல் பதிவாளர் (ICDP)

28364852(O)

7.

L. சித்தரசேனன்

கூடுதல் பதிவாளர்(MPD)

28364851(O)
22355235(R)

8.

R. ராஜேந்திரன்

கூடுதல் பதிவாளர் (TNCU)

28364864(O)
24919414(R)

முக்கியமான கூட்டுறவுகளின் இணையதளம்

கூட்டுறவுகள் (மத்திய கூட்டுறவுகள்)

இணையதளங்கள்

பால் கூட்டுறவு

http://business.mapsofindia.com/milk-co-operatives/tamilnadu.html

இந்திய கூட்டுறவுகள்

http://goidirectory.nic.in/coop.htm

குஜராத் உரங்கள் கூட்டுறவு லிமிடெட்

www.gsfclimited.com/

இந்திய விவசாயிகள் மற்றம் உரங்கள் கூட்டுறவு லிமிடெட்(IFFCO)

http://www.iffco.nic.in/

கிருஷாக் பாரதி கூட்டுறவு விற்பனை (KRIBACO)

http://kribhco.net/

தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம், இந்தியா(NAFED)

www.nafed-india.com

தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம், இந்தியா லிமிடெட்(NCCF)

www.nccf-india.com/

தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம்(NCDC)

www.ncdc.in

தேசிய கூட்டுறவு வீட்டுவசதி இணையம், இந்தியா(NCHF)

www.nchfindia.net

தேசிய கூட்டுறவு சங்கம், இந்தியா

www.ncui.net

மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய கூட்டமைப்பு (லிட்)(NAFSCOB)

www.nafscob.org/

ரெப்கோ வங்கி லிமிடெட் (அகதிகள் கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு வங்கி)

www.repcobank.com/careers.htm

பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டு இணையம், இந்தியா (TRIFED)

www.kandhamal.nic.in/trifed.htm

தேசிய கூட்டுறவுகள்:

 

பீகார் தேசிய கூட்டுறவு வங்கி விமிடெட்(BSCB)

http://biharbank.bih.nic.in/

மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி லிமிடெட், பிடார், கர்நாடகா

http://www.dccbank.com

கிரிஜான் கூட்டுறவு கழகம்(GCC)

http://apgirijan.nic.in/

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை இணையம் (லிட்)(AMUL)

www.amul.com/

ஹரியானா பால் பண்ணை மேம்பாட்டு கூட்டுறவு இணையம் லிட்(HDDCF)

http://www.vitaindia.com/

ஹரியானா தேசிய கூட்டுறவு முதன்மை வங்கி லிமிடெட்(HARCO BANK)

http://harcobank.nic.in/

ஹரியானா தேசிய கூட்டுறவு விநியோகம் மற்றும் கூட்டமைப்பு லிமிடெட்(HAFED)

http://hafed.gov.in/ccharter.htm

ஹிமாச்சல பிரதேசம் தேசிய கைத்தறி மற்றும் கைப்பணி நெசவாளர் முதன்மை கூட்டுறவு சங்கம் லிமிடெட்(HIMBUNKAR)

www.himbunkar.com

ஜெய்பூர் பால்பண்ணை

http://www.jaipurdairy.com/

கேரளா கூட்டுறவு பால் விற்பனை இணையம் லிமிடெட்(MILMA)

http://www.milma.com/

கேரளா தேசிய கூட்டுறவு நகர் விற்பனை இணையம் விமிடெட்(COIRFED)

http://www.coirfed.com/

மத்திய பிரதேசம் தேசிய கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்பு லிமிடெட்(MPCDF) 

http://mpcdf.nic.in/

மத்திய பிரதேசம் தேசிய கூட்டுறவு வீட்டுவசதி கூட்டமைப்பு லிமிடெட் 

http://mpawassangh.nic.in/

மகாராஷ்டிரா தேசிய கூட்டுறவு பருத்தி உற்பத்தியாளர் விற்பனை இணையம் லிட்(MAHACOT)

www.mahacot.com/

மகாராஷ்டிரா தேசிய கூட்டுறவு இணையம்

http://www.mahacot.com/

மகாராஷ்டிரா தேசிய கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலை கூட்டமைப்பு லிமிடெட்

www.mahasugarfed.org/

மகாராஷ்டிரா தேசிய கூட்டுறவு பழகுடி மக்கள் மேம்பாட்டு கூட்டுறவு லிமிடெட்

NA

ஒரிசா தேசிய கூட்டுறவு வங்கி லிமிடெட்(OSCB)

www.oscb.coop/

பஞ்சாப் தேசிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைப்பு லிட்(MILKFED)

http://milkfed.nic.in/

இராஜஸ்தான் கூட்டுறவு பால்பண்ணை இணையம்(RCDF)

http://sarasmilkfed.coop/

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்(ஆவின்)

http://www.aavinmilk.com/

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் (கோ – ஆப்டெக்ஸ்)

http://www.cooptex.com/

தமிழ்நாடு கைவினை தொழில் கூட்டுறவு விற்பனை இணையம்

http://www.indcom.tn.gov.in/engr_socities.htm

உத்திர பிரதேசம் கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலை கூட்டமைப்பு லிமிடெட்

www.upsugarfed.org

மற்றவை:

 

வேளாண்மை, கூட்டுறவு, மீன்வளர்ப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை, சட்பீஸ்கர்

http://agridept.cg.gov.in/

கூட்டுறவு மற்றும் வணிக வளாகம் துறை, இலட்சத்தீவுகள்

http://laksupplies.nic.in/

கூட்டுறவு துறை, மகாராஷ்டிரா

http://goidirectory.nic.in/maha.htm

கூட்டுறவு துறை, மேகாலயா

http://megcooperation.gov.in/

கூட்டுறவு துறை, பஞ்சாப்

http://pbcooperatives.gov.in/

கூட்டுறவு துறை, ராஜஸ்தான்

http://goidirectory.nic.in/rajasthan.htm

கூட்டுறவு துறை, தமிழ்நாடு

http://www.tncu.tn.gov.in/

கூட்டுறவு துறை, உத்திரபிரதேசம்

http://cooperative.up.nic.in/

கூட்டுறவு வேளாண்மை நிறுவனம், (ICM), போபால்.

http://icmbpl.nic.in/

ஆசிய மற்றும் பசிபிக்கின் சர்வதேச கூட்டுறவு துணை மண்டல அலுவலகம்

http://www.icaroap.coop/

மதுசுதன் கூட்டுறவு வேளாண்மை நிறுவனம்(MICM)
புவனேஸ்வரி            

http://icmbhubaneswar.nic.in/

தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம்(NDDB)

http://www.nddb.org/

சஹகார், மகாராஷ்டிரா

http://www.mah.nic.in/sahakaar/

சமூக பாதுகாப்பு இணைய திட்டம்(SSNP)

http://ssnp.pedap.org/

துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் லிமிடெட்(TUCAS)

http://www.tucas.org/

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015