Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை


இந்தியாவில் வேளாண் விளைபொருள் விற்பனை


இந்தியா ஒரு வேளாண்மை நாடு மூன்றில் ஒரு பங்கு மக்கள், நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ வேளாண்மையைச் சார்ந்தே உள்ளனர். பண்டைய காலத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண்மை முக்கியப் பங்கு வகுக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மையின் பங்களிப்பானது கிட்டத்தட்ட 25 சதவிகிதமாக உள்ளது. மக்களின் தேவைகளில் உணவு முக்கியமாக கருதப்படுவதால், வேளாண்மை உற்பத்தியை, வர்த்தகத்துறையில் ஈடுபடுத்தப்படுகிறது. இதன் காரணமாக தேவையான உற்பத்தி மற்றும் சரிவிகித பகிர்மானம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

வேளாண்மை விளைப்பொருள் விற்பனை என்பது வேளாண்மை விளைப்பொருட்களை வாங்குவது மற்றும் விற்பது ஆகும். ஆனால் ஆரம்பக்காலத்தில், கிராமப்புற பொருளாதாரமானது விவசாயிகள் வேளாண்மை பொருட்களை தன்னிறைவுக்காக விற்பனை செய்வதும், தற்போது விவசாயிகள் நுகர்வோர்களிடம் பணம் அல்லது பண்டமாற்று முறையின் அடிப்படையில் விற்பனை செய்யும் போது எந்த வித தடைபாடுகள் இல்லாமலும் இருந்தது. ஆனால் இன்றைய வேளாண்மை விளைப்பொருள் விற்பனையானது, நுகர்வோர்களிடம், விளைபொருள் சேர்வதற்கு முன் ஒரு நபரிடம் இருந்து பிற நபரிடம் விளைபொருளானது பரிமாற்றப்படுகிறது. ஒன்று சேர்ப்பது, நுகர்வு முன்னேற்பாடு மற்றும் பகிர்மானம் போன்ற மூன்று முக்கிய செயல்களானது விற்பனையில் பங்குவகிக்கிறது.  அந்தந்த நேரத்தில் இருக்கும் விளைப்பொருளின் தேவை, கிடைக்கக்கூடிய சேமிப்பு போன்ற கூறுகளின் அடிப்படையில் வேளாண்மை விளைப் பொருளானது விற்பனை செய்யப்படுகிறது.

விளைபொருள் நேரிடையாக சந்தையில் விற்கப்படுகிறது அல்லது காலநிலையை பொறுத்து அப்பகுதியில் சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் விளை நிலத்தில் இருந்து கிடைத்ததை சேகரித்து விற்பது அல்லது விளை நிலத்தில் கிடைத்தப் பொருளை சுத்தம் தரம் பிரிப்பது மற்றும் பதப்படுத்துவது போன்ற செயல்பணிகளை விவசாயிகளோ அல்லது அந்த கிராமத்தின் வணிகர்கள் மூலம் செய்து விற்பது போன்றவையும் அடங்கும். சில நேரங்களில்  நுகர்வோர்களின் தேவை அல்லது விளைபொருட்களின் தரம் சிதைவு ஏற்படாமல் பேணுவது போன்றவற்றிற்கான பதப்படுத்துதல் முறையானது செய்யப்படுகிறது.

பகிர்மான முறையின் செயலானது, முதல் நிலை, இரண்டாம் நிலை அல்லது முனையம் விற்பனையை உள்ளடக்கிய மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை போன்றவற்றின் மூலம் தேவையின் அடிப்படையில் செய்யப்படும் விநியோகத்திற்கு ஒப்பிடத்தக்கதாகும் / இணையானதாகும். பெரும்பாலும் விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை, வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் (விளைச்சலுக்கு பணம் கொடுக்கும் வியாபாரிகள்) அல்லது கிராமப்புற வியாபாரிகளிடம் விற்கின்றனர். இந்த விளைப் பொருட்களானது பல்வேறு வழிகளில் விற்கின்றனர். அதாவது, கிராமப்புற விவசாயிகள் உள்ளூர் வாரச் சந்தையில் அல்லது பக்கத்து கிராமப்புற சந்தையில் விற்கின்றனர். இந்த மாதிரியான விற்பனை வழிகள் இல்லையெனில் விளைபொருட்களானது பக்கத்தில் உள்ள கிராமம் அல்லது சிறு நகரம் அல்லது மண்டியில் விற்கின்றனர்.

இந்தியாவில், வேளாண்மை விலை மற்றும் செலவு ஆணைக்குழு, இந்திய உணவுக் கழகம், இந்திய பருத்தி கழகம், இந்திய சணல் கழகம் போன்ற பல்வேறு மத்திய அரசாங்க நிர்வாக அமைப்புகள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் ரப்பர், தேயிலை,காபி, புகையிலை, நறுமணப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பல்வேறு தனிச்சிறப்பினை உடைய விற்பனைக்கூடங்களும் உண்டு. வேளாண்மை உற்பத்தி (தரம் பிரித்தல் மற்றும் விற்பனை) ஆணை 1937ன் படி 40க்கும் மேற்பட்ட முதல்நிலை வர்த்தகமானது, ஏற்றுமதி பொருட்களை கண்டிப்பாக தரம் பிரிப்பதும் உள்நாட்டு நுகர்வு பொருட்களை தானாகவே முன்வந்து தரம் பிரிப்பதும் போன்ற செயல்களை செய்கின்றது. வர்த்தக விற்பனையின் வழிமுறைகளானது மாநில அரசாங்கத்தின் செயல்நிலை ஆகும். விற்பனை மற்றும் கண்காணி இயக்ககம் மூலம் விற்பனை மற்றும் கண்காணிக்கும் சேவைகள் மற்றும் கிராமப்புற அளவில் தேர்வு செய்யப்பட்ட விற்பனை நிலையத்தில் வர்த்தகப் பொருள் தரம் பிரிக்கும் மையங்கள் அமைப்பதற்கான நிதிச் சேவை போன்றவற்றை அளிக்கிறது.

பாரம்பரிய மிக்க வேளாண்மை உற்பத்தி,  விற்பனை மற்றும் இதனைச் சார்ந்த வர்த்தகச் செயல்களில், மதிப்பூட்டப்பட்ட சேவையின் மூலம் புதிய எண்ணங்களைக் கொண்டு வருவதற்கு இது சரியான நேரமாகும். இந்த மதிப்பூட்டப்பட்ட சேவையின் மூலம் வேளாண்மை இயந்திரத்தின் ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது.

இதற்கு அடுத்ததாக, உணவு பதப்படுத்துதலின் முக்கிய வருமானம் ஈட்டும் பகுதியாக மட்டும் அல்லாமல், முழு நேர  வேலை வாய்ப்பினை இன்றைய இளைஞர்களுக்கு அளிக்கிறது. வேளாண்மை பகுதி மற்றும் உலக அளவில் ஏற்படும் மாற்றங்களில் போது கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களின் தேவை அதிகமாக இருக்கும்.

1970-71 மற்றும் 1971-72 ஆம் ஆண்டுகளில் வேளாண் அமைச்சகத்தின் விற்பனை மற்றும் கண்காணி இயக்ககம் மூலம் 500 ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் எடுத்த கருத்தாய்வில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் போதுமான விற்பனை மற்றும் வினைதிறன் பற்றிய மதிப்பீடு, குறைவாடுகள் பற்றாக்குறைகள் மற்றும அதற்கான ஆலோசனைகள் போன்றவற்றை பற்றியும் கோடிட்டு காட்டுகிறது. சில விற்பனைக் கூடத்தின் நிதிப்பற்றாக்குறை குறைபாடுகளில் ஒன்றாகும். நான்காவது திட்டத்தின் போது வேளாண் அமைச்சகத்தின் மூலம் கொடுக்கப்படும் மத்திய பகுதித் திட்டம் ஆனது, விற்பனை மேம்பாட்டிற்று ஆகும் செலவில் 20 சதவிகிதம், அதாவது அதிகபட்சமாக ரூபாய் 2 லட்சங்களை கொடுக்கிறது. மீதித்தொகை கடன் வங்கிகள் தருகின்றது.

பன்னாட்டு மேம்பாட்டு முகாம் (IDA) மூலம் செய்யப்படும், ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் கட்டமைப்பு மேம்பாட்டு, ஒரு முக்கிய மேம்பாடு ஆகும். பீகாரில் மட்டும் 50 விற்பனைக்கூடங்களின் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிதி உதவி செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் பாசனநீர், கிராமப்புற கட்டமைப்பு, குடிநீர் மறுசேமிப்பு மற்றும் நீர்ப்பிடிப்பு போன்றவற்றின் நல்ல செய்திகளும் அடங்கும். மேலும் வங்கிகளின் உயர் அதிகாரிகள் மூலம் கொடுக்கப்படும் முதலீட்டினைக் கொண்டு சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தக கூட்டிணைப்பு (SFAC)ன் நிர்வாகத்தினை உயர்த்துகிறது.

ஆதாரம்: http://www/domain.com/economy/agricultural/20040713_marketing.html

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றிகேள்வி பதில் புகைப்படங்கள்தொடர்பு கொள்ள

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015