Agriculture Engineering
| | | | | | | | | |
வேளாண் கழிவுகளை உபயோகிக்கும் தொழில்நுட்பங்கள்

எரிகட்டி தயாரிக்கும் இயந்திரம்

பயன்

:

தென்னை நார்க்கழிவிலிருந்து எரிகட்டி தயாரித்தல்

திறன்

:

மணிக்கு 125 கிலோ

விலை

:

ரூ. 45,000 /-

அமைப்பு

:

இந்த இயந்திரம் உட்செலுத்துவான், ஒருமுனையில் தாங்கப்படாமல் இருக்கும் திருகுத்தண்டு, பீப்பாய் அமைப்பு. அச்சு பிழியும் குழுல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இத்திருகுத்தண்டு பால் பேரிங்கால் ஒருமுனையிலும், மற்றொரு முனை தாங்கப்படாமலும் உள்ளது. பீப்பாய் அமைப்பானது திருகுத்தண்டினால் மூடப்படும். தாங்கியின் மேல் நிலைநிறுத்தப்பட்டிருக்கும். ஒரு முனை தாங்கப்படாமல்  இருக்கும் திருகுத்தண்டு இதன் நீளவாக்கிலும், அச்சு பிழியும் குழலும், 30 செ.மீ நீளமாக இருக்கும். திருகுத்தண்டானது நேரடியாக குறைக்கும் கியரில் இணைக்கப்பட்டிருக்கும். இது 5 குதிரைத்திறன் கொண்ட மோட்டாரினால் இயக்கப்படுகிறது. தென்னை நாாக்கழிவும் சாணமும் போன்ற விகிதத்தில் தேவையான அளவு நீருடன்  கலந்து கட்டியாக வெளியெடுத்து உலர வைத்து  எரிகட்டியாக உபயோகப்படுத்தப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

:

தொடர்ச்சியாக எரிகட்டி  பிழியும் இயந்திரம்.
எரிகட்டியின்  எரி திறன் கிலோவிற்கு 3000 கிலோ காலரி ஆகும்.
தொழிற்சாலைகளுக்கு மிகவும் ஏற்றது.