உமி/தோல்/தானியம் நீக்கும் கருவிகள்

நிலக்கடலை தோல் நீக்கும் கருவி (கையால் இயங்குவது)

பயன்

:

நிலக்கடலையை உடைத்து தோல் நீக்கம் செய்ய ஏற்ற கையால் இயங்கும் கருவி.

திறன்

:

மணிக்கு 200 கிலோ

விலை

:

ரூ.6000/-

அமைப்பு

:

இக்கருவியில் கையால் இயக்கப்படும் ஒரு ஊரலாடும் அமைப்பு, அரைவட்ட வடிவ சல்லடை மற்றும் சட்டம்  போனறவை உள்ளன.  ஊசலாடும் அமைப்பில் இரும்பு நிலக்கடலையை இக்கருவியினுள் கொட்டும்போது, ஊரலாடும் அமைப்பிற்கும் சல்லடைக்கும் இடையில் வந்து சேர்கிறது.  ஊசலாடும் அமைப்பை, ஆட்கள் கையால் இயக்கும் போது, நிலக்கடலை உடைக்கப்பட்டு தோல் நீக்கப்படுகிறது.  தோல் மற்றும் நிலக்கடலை பருப்பு, சல்லடையின் துவாரம் வழியாக வெளியேறுகிறது.

சிறப்பு அம்சங்கள்

:

சல்லடை மற்றும் ஊசலாடும அமைப்பிற்கிடையே உள்ள இடைவெளியை மாற்றிக்கொள்ளலாம்.
பல அளவு துவாரமுள்ள சல்லடைகளை பயன்படுத்தி பல நிலக்கடலை ரகங்களை தோல் நீக்கம் செய்யலாம்.
இக்கருவியை இயக்க 2 அல்லது 3 ஆட்கள் தேவை

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015