Agriculture Engineering
| | | | | | | | | |
உமி/தோல்/தானியம் நீக்கும் கருவிகள்

சூரியகாந்தி விதை உமி நீக்கும் கருவி

பயன்

:

சூரியகாந்தி விதையின் தோலை நீக்கி உமியை பிரிக்க ஏற்றது.

திறன்

:

மணிக்கு 125 கிலோ.

விலை

:

ரூ.30000/-

அமைப்பு

:

இக்கருவியில் அதிவேகமாக (நிமிடத்திற்கு 4000 சுற்று)  ஓடக்கூடிய சுழல்வான் உள்ளது.  அச்சுழல்வானில் ஆறு வழித்தடங்கள் உள்ளன. மேலும் விதை உட்செல்லும் வாய், காற்றாடி மற்றும் விதையை சலிக்கும் சல்லடைகள் உள்ளன.  கருவியில் இடப்படும் சூரியகாந்தி விதைகள் மேலே கொண்டு செல்லும் கருவி மூலம் சுழல்வானுள் செலுத்தப்படுகின்றது.  சுழல்வான் விதைகள் சுழல் விசையினால் நிலைப்பான் மேல் அதிக விசையுடன் எறிவதால், விதையிலுள்ள உமி பிரிக்கப்படுகின்றது.  பிரிக்கப்பட்ட பருப்பு மற்றும் உமி அதிக சக்தி கொண்ட காற்றுப் பெட்டிக்குள் உட்படுத்தப்படுவதன் மூலம் உமி பிரித்தெடுக்கப்படுகின்றன. விதை மற்றும் பருப்பு சலிப்பானை அடைந்து தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகிந்றன.  உமி நீக்கப்படாத விதை திரும்பவும் உள்ளே இடப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

:

இக்கருவி 3 குதிரைத் திறன் மோட்டாரால் இயக்கப்படுகிறது.
உமி நீக்கப்பட்ட விதைகளிலிருந்து கிடைக்கப்படும் எண்ணெயின் தரமும் பிண்ணாக்கின் தரமும் உயர்வானதாகும்.