AMIS
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி home முதல் பக்கம்

இறக்குமதி உரிமம் மற்றும் இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர் குறியீடு எண்

பெரும்பாலான பொருட்கள்  சுதந்திரமாக இறக்குமதி செய்யப்பட்டபொழுது, இந்திய எக்சிம் கொள்கை (2007) சில பொருட்களை இறக்குமதி செய்யத் தடை மற்றும் சில பொருட்களுக்கு நிபந்தனையுடன் கூடிய இறக்குமதியை அனுமதித்தது. இத்தகைய சூழ்நிலையில் இறக்குமதியாளர் இறக்குமதி உரிமத்தை இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியிடமிருந்து பெறுவது முக்கியம்.

  1. இறக்குமதி உரிமம் வழங்கும் அதிகாரி
  2. இறக்குமதி உரிமத்தின் காலக்கெடு
  3. இறக்குமதி உரிமம் மாதிரி
  4. இறக்குமதியாளர் பகுப்பு
  5. வழக்கமான ஆய்வு
  6. இறக்குமதியாளர்கள் பதிவு

இறக்குமதி உரிமம் வழங்கும் அதிகாரி

இந்தியாவில், இறக்குமதி உரிமம் தலைமை இயக்குநர் வெளிநாட்டு வர்த்தகம் மூலம் வழங்கப்படுகிறது.  தலைமை இயக்குநர் வெளிநாட்டு வர்த்தகத்தின் டெல்லி அலுவலகம்  உத்யோக் பவன், புதுடெல்லி 110011 என்ற முகவரியில் உள்ளது.

இறக்குமதி உரிமத்தின் காலக்கெடு

இறக்குமதி உரிமங்களை புதுபிக்க காலக்கெடு மூலதனப் பொருட்களுக்கு 24 மாதங்கள் மற்றும் மூலப்பொருட்கள், நுகர்பொருள் மற்றும் உதிரிகள் ஆகியவற்றிற்கு 18 மாதங்கள் ஆகும்.

இறக்குமதி உரிமம் மாதிரி

இறக்குமதி உரிமம் மாதிரி இரண்டு நகல்களைக் கொண்டுள்ளது.

அன்னியச் செலாவணி கட்டுப்பாட்டு நகல்

வெளிநாட்டு விற்பனையாளர்களால் பயன்படுத்தப்படும் அல்லது கடன் கடிதம் துவக்க பயன்படுத்தப்படும்.

சுங்கதுறை நகல்

சரக்குகளை பெறுவதற்கு சுங்கத்துறை அதிகாரிகளிடம் சுங்கதுறை நகல் கொடுக்கபடுகிறது. சுங்கத் துறை நகல் இல்லையென்றால், அனுமதிக்கப்படாத இறக்குமதியாக கருதப்படும். சரக்குகள் பறிமுதல் செய்யப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும்.

இறக்குமதி வகைகள்

இறக்குமதி பொருட்கள் அனைத்தும் கீழ்வரும் நான்கு பிரிவுகளில் அடங்கும்.

  • எளிதாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்: பெரும்பாலான மூலதனப் பொருட்கள் இந்த பிரிவின் கீழ் அடங்கும். எளிதாக இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களுக்கு இறக்குமதி உரிமம் தேவையில்லை.
  • இறக்குமதி உரிமம் : அதிக அளவிலான பொருட்கள் இறக்குமதி உரிமத்தின் கீழ் அடங்கும். நுகர்பொருள் அனைத்தும் இப்பிரிவின் கீழ் அடங்கும்.  விலைமதிப்பற்ற மற்றும் விலையுயர்ந்த கற்கள், பாதுகாப்பு மற்றும் அதை சார்ந்த தயாரிப்புகள், விதைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள், பூச்சிக்கொல்லிகள், மருந்துகள் மற்றும் இரசாயனங்கள், சில மின்னணு பொருட்கள், சிறிய அளவிலான தொழிற்சாலை தயாரிப்புகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் 17 இதர மற்றும் சிறப்பு வகை பொருட்கள் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளன.
  • வரையறுக்கப்பட்ட வழி பொருட்கள் : இந்தியாவில் சில பொருட்கள் குறிப்பிட்ட வழி அல்லது அரசு முகமை மூலம் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். இவற்றுள் பெட்ரோலிய பொருட்கள் (இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மட்டுமே இறக்குமதி செய்ய இயலும்), நைட்ரஜன் பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் சிக்கலான இரசாயன பொருட்கள் (கனிமங்கள் மற்றும் உலோகங்கள் வர்த்தக கழகம்), வைட்டமின் ஏ மருந்து (மாநில வர்த்தக கழகம்), எண்ணெய் மற்றும் விதைகள்(மாநில வர்த்தக கழகம் மற்றும் இந்துஸ்தான் காய்கறி எண்ணெய்கள்) மற்றும் தானியங்கள் (இந்திய உணவுக் கழகம்) ஆகியவை அடங்கும்.
  • தடை செய்யப்பட்ட பொருட்கள் : மெழுகுவர்த்திக்கு பயன்படும் கடினமான கொழுப்பு, விலங்கு உறைமோர், வன விலங்குகள் மற்றும் பதப்படுத்தப்படாத தந்தம் ஆகியவை முற்றிலும் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டவையாகும்.

இறக்குமதியாளர் பகுப்பு

இறக்குமதி உரிமம் வழங்கும் நோக்கத்திற்காக இறக்குமதி தயாரிப்புகள் மற்றும் வாங்குவோர் அடிப்படையில் இறக்குமதியாளர்கள் மூன்று பகுப்புகளாக பிரிக்கப்படுகின்றனர்.

  1. பயனாளர் : பயனாளர் வணிக நோக்கத்திற்காக அல்லாமல் தனிப்பட்ட தேவைக்காக இறக்குமதி உரிமத்ததை விண்ணப்பித்து பெறலாம்.
  2. பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர் : ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கத்தில் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம், பண்டக வாரியம் அல்லது அரசால் நியமிக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட அதிகாரிகளால் ஏற்றுமதி உரிமம் வழங்கப்படுகிறது.
  3. மற்றவை

பயனாளர்கள் உரிமம் இரண்டு வகைப்படும்

  1. பொதுவான உரிமம் : இந்த உரிமம் தடைசெய்யப்பட்ட நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளிலும் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய பயன்படுகிறது.
  2. குறிப்பு உரிமம் : குறிப்பிட்ட நாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்ய இந்த உரிமம் பயன்படுத்தப்படுகிறது.

சுங்கத்துறை ஆய்வு

உரிமத்தில் ஏதேனும் சட்ட அத்துமீறல் உள்ளதா என்பதை கண்டறிய சுங்கத்துறை அதிகாரிகள் உரிமத்தை ஸ்கேன் செய்கின்றனர்.  ஆய்வாளர்கள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை ஆராய்ந்து மதிப்பீடு செய்கின்றனர். இறக்குமதியாளர் இறக்குமதி உரிமத்தில் ஏதேனும் சட்ட அத்துமீறல் இருந்தால் அபராதம் விதிப்பதற்கும் அவற்றை மாற்றுவதற்கும் சுங்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.

இறக்குமதியாளர்களுக்கான பதிவு

சரக்குகளை இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்களுக்கு பதிவு செய்வது முன்தேவையாக உள்ளது. இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண் (IEC)இல்லையென்றால் சுங்க அதிகாரிகள் சரக்குகளை அனுமதிக்கமாட்டார்கள். இந்தியாவில், இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநர் மூலம் வழங்கப்படுகிறது.
எனினும், அத்தகைய இறக்குமதி பதிவு நேபால், மியான்மரிலிருந்து இந்தோ மியான்மர் எல்லை வழியாக அல்லது சீனாவிலிருந்து குன்ஜி, நாம்கயா, சிப்கிளா அல்லது நாதுலா துறைமுகம் வழியாக வரும் சரக்கின் மதிப்பு ரூ.25,000க்குள் இருந்தால் பதிவு தேவையில்லை.

  • இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண் விண்ணப்பம்
  • ஆன்லைன் விண்ணப்பப முறை
  • இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண் படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள்
  • இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண் நகல்
  • இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண்ணை ஒப்படைத்தல்

இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண் விண்ணப்பம்

இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண்  பதிவு செய்ய இணைப்பு 3.1 ல் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் முறையாக கையொப்பமிட வேண்டும் மற்றும் பின்வரும் ஆவணங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

  • இணைப்பு 1ன் படி வங்கி ரசீது (நகல்) / கட்டணம் ரூ.1000/- இந்திய வரைவோலை, விண்ணப்பதாரர் நிறுவனத்திற்கு வங்கியாளர் சான்றிதழ்
  • விண்ணப்பதாரரின் வங்கியரால் உறுதிசெய்யப்பட்ட இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படம்
  •  வருமான வரி அதிகாரிகளால் வழங்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் ஒரு பிரதி, நிரந்தர கணக்கு எண் ஒதுக்கீடு செய்யப்பட்டவில்லை என்றால் சட்டரீதியான கடிதம் இணைக்கப்பட வேண்டும்

ஆன்லைன் விண்ணப்பப முறை

ஆன்லைன் விண்ணப்பத்தில் பயனாளர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பம் நிரந்தர கணக்கு எண் பிரதி மற்றும் வங்கிச் சான்றிதழுடன் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும்.

கட்டணம் செலுத்த இரண்டு வழிகள் உள்ளன.

  • கேட்பு வரைவோலை: கட்டணம் கேட்பு வரைவோலை மூலம் கொடுக்கப்பட்டதென்றால் இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண் விண்ணப்பம் கிடைக்கப்பட்டவுடன் உருவாக்கப்படும்.
  • மின்னணு நிதி மாற்றம் : கட்டணம் மின்னணு நிதி மாற்றம் மூலம் செலுத்தப்பட்டால், உரிமம் வழங்கும் அலுவலகத்தில் எண் தன்னியக்கமாக உருவாகி விண்ணப்பதாரரால் எண்ணை ஆன்லைனில் பார்க்க முடியும்.

இ. இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண் படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள்

  • அனைத்து விண்ணப்பங்களும் வங்கி ரசீது மற்றும் கட்டணத்திற்கான அத்தாட்சியாக கேட்பு வரைவோலை இணைக்கப்பட வேண்டும்.
  • விண்ணப்பப் படிவம் தெளிவாக தட்டச்சு செய்யப்பட வேண்டும். கைகளால் எழுதப்பட்ட படிவங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் சம்மந்தப்பட்ட நபர் மை பேனாவால் கையெழுத்திட வேண்டும்.
  • எந்தெந்த ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டுமோ அவை அனைத்தும் சுய கையொப்பமிட வேண்டும்.
  • விண்ணப்பதாரர் தொடர்பான தகவல்களை மட்டும் நிரப்பினால் போதுமானது. மற்றவற்றிற்கு ‘பொருந்தாது’ என குறிப்பிட வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் வங்கியரால் உறுதிச்சான்று தரப்பட்ட இரண்டு விண்ணப்பதாரர் புகைபடங்கள் கொடுக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் விவரங்கள் மாற்றம் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட இடங்களை நிரப்புவதற்கு படிவங்கள் இணைக்கப்பட வேண்டும்.

இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண் நகல்

இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண் அசலை இறக்குமதியாளர் (அல்லது ஏற்றுமதியாளர்) தொலைத்துவிட்டால் நகல் வழங்கப்படும். இறக்குமதியாளர் உறுதிமொழிப் பத்திரம் மற்றும் நகலுக்கான கட்டணம் ரூ.200 வழங்க வேண்டும்.

இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண்ணை ஒப்படைத்தல்

இறக்குமதியாளர் இறக்குமதி வர்த்தகத்தை தொடர்ந்து நடத்தவில்லையென்றால் அவர் இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண்ணை  அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். இதுபோன்ற அறிவிப்பு ரசீது ஒப்படைக்கப்பட்டால், அதிகாரி உடனடியாக எண்ணை ரத்து செய்துவிடுவார் மற்றும் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் மற்றும் சுங்கத்துறைக்கு மின்னணு மாற்றத்தில் அனுப்பப்பட்டுவிடும்.


© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014