animal husbandry
கால்நடை பராமரிப்பு :: பன்றி வளர்ப்பு : செயற்கைக் கருவூட்டல் முதல் பக்கம்
பன்றிகளில் செயற்கைக் கருவூட்டல்

பன்றிகளில் செயற்கைக் கருவூட்டல் செய்யும்போது அதன் இனப்பெருக்கப் பாதையின் அமைப்பினாலும், ஒரே ஈற்றில் பல குட்டிகள் ஈனும் தன்மையினாலும் சில பிரச்சனைகள் எழக்கூடும். இனச்சேர்க்கையின்போது ஆண்பன்றியின் ஆண்குறி முனைப்பகுதி, கருப்பையின் வாய்ப்பகுதிக்குள் செலுத்தப்படும். இவ்வாறு செல்லும் ஆண்குறியின் மீது ஒர் அழுத்தம் செயல்பட்டு விந்தணுக்கள் கருப்பையின் தள்ளப்படுகின்றன. நம் நாட்டில் பன்றி வளர்ப்பு தற்போதுதான் பரவலாக நடைபெற்று வருகிறது. பல (தகவல்கள்) செய்திகள் பன்றி வளர்ப்பு பற்றி இருந்தும், இனப்பெருக்கம் சரியாக நடைபெறவில்லை.

பன்றிகள் 6 முதல் 8 மாதத்தில் பருவ வயதை அடையும். பின்பு விந்துக்களை உற்பத்தி செய்யும். பன்றிகள் 3 முறை 200 - 500 மி.லி விந்துக்களை கருப்பையினுள் உந்தித் தள்ளும். இதில் முதல் மற்றும் மூன்றாம் உந்துதலில் அதிகம் விந்தணுக்கள் வெளிப்படாது. இரண்டாம் உந்துதலில் மட்டுமே அதிக விந்தணுக்கள் வெளியிடப்படுகின்றது. ஒரு மில்லி லிட்டரில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மொத்தம் உள்ள விந்தணுக்கள் அதிகமாகவே இருக்கும். ஒரு  உந்துதலிலிருந்து கிடைக்கும் விந்தணுக்கள் 15-25 பெண் பன்றிகளைக் கருவுறச் செய்யப் போதுமானது. இதுவே மாடுகளில் ஒரு காளையின் விந்தணுக்கள் 400 பசுக்களுக்குப் போதுமானது. பிறக்கும் குட்டிகளின் எண்ணிக்கை, செலுத்தப்பட்ட ஒரு மில்லி லிட்டர் விந்தணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் சினைக்காலத்தைப் பொறுத்தும் அமையும்.

Pig_AI

கருவூட்டல் உட்செலுத்தல்

விந்தணுக்களை வெளிப்படுத்தச் செய்ய ஆண் பன்றியை உயிருள்ள அல்லது பொம்மை பெண் பன்றி மீது தாவச்செய்தல் வேண்டும். பொம்மை பன்றிகளை பயன்படுத்தும்போது பெண் பன்றியின் சிறுநீரை அதன்மீது தடவிப் பயன்படுத்தும்போது, அதன் சினைவாடையால் கவரப்பட்டு ஆண்பன்றி அதிகளவு விந்துக்களை வெளித்தள்ளும். மெடொனால்ட் ன் (1969) கூற்றுப்படி விந்தணுக்கள் 3 பகுதிகளாக வெளித்தள்ளப்பபடுகின்றன. முன் விந்துப் பகுதி கோழை போன்று, பிசுபிசுப்பாக ஒட்டக்கூடிய தன்மையுடன் இருக்கும். இரண்டாம் பகுதியில் விந்தணுக்கள் இருக்கும். பின்விந்துப் பகுதியில் கூழ்போன்ற திரவம் காணப்படும்.

மொத்தம் வெளிப்படும் விந்துக்களில் 20 - 25 இந்தக் கூழ் பகுதியிலிருந்து கிடைக்கிறது. பொதுவாக 10 நிமிடங்களில் விந்தணுக்கள் வெளித்தள்ளப்பட்டுவிடும். ஒரு சில பன்றிகளில் சற்று அதிக நேரம் ஆகலாம்.

பன்றிகளில் சினைப்பருவம் மிக முக்கியமானது. ஜப்பானிய பன்றி வளர்ப்பாளர்கள் கூற்றுப்படி 76 கிலோ எடையுடன் 256 வது நாளில் உள்ள பெண் பன்றிகள் பருவ வயதடைந்தனவாகக் கருதப்படுகின்றன. பெண் இனப்பெருக்க உறுப்பு வீங்கி சற்று சிவந்து காணப்படுவது, சினைப்பருவ அறிகுறியாகும். பெண் பன்றியின் உள்ளமைப்பு சற்று வித்தியாசமாக இருப்பதால், வேறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. பன்றிகளில் செயற்கைக் கருவூட்டல் செய்ய சில புத்தகங்களில் நுணுக்கங்கள் தரப்பட்டுள்ளன. 3 முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றைப் படித்து,  நன்கு தெரிந்து கொண்ட பின்பே செய்ய வேண்டும்.மேலும் விந்தணுக்களின் கருப்பை அல்லது கருப்பை கொம்பில் வைப்பதற்கென தனிக்குழாய்கள் பயன்படுத்தப்படுகிறது.

பன்றியின் விந்தணுக்களுடன் நீர்ம மஞ்சள் கருவைப் பயன்படுத்தலாம். சிலர் விந்தணுக்களின் அடர்த்தியைக் குறைக்கப் பாலை உபயோகிப்பர். பொதுவாக 50 மி.லிட்டரில் 5109 விந்தணுக்கள் என்பதே பரிந்துரைக்கப்பட்ட அளவு. பெண் பன்றிகள் சூட்டிற்கு வந்த 24 மணி நேரத்தில் விந்தணுக்களைச் செலுத்திவிடவேண்டும். குட்டி ஈன்றபின் ஒரிரு நாட்களில் பெண் பன்றிகளில் வெளிப்படும் சூடு சினைத்தன்மை அற்றது. இச்சமயத்தில் இனச்சேர்க்கை செய்தல் கூடாது. 6-8 வரை வயதுடைய இளம்குட்டியை பால் மறப்பித்தல் செய்தல் வேண்டும். குட்டிகளைப் பிரித்த 5 நாட்களுக்குப்பிறகு மீண்டும் சேர்க்கைக்கு விடலாம். இவ்வாறு செய்வதால் பன்றிகள் ஒரு வருடத்திற்கு 2 முறை குட்டிகள் ஈனும்.

(ஆதாரம்: டாக்டர் ஆச்சார்யா, கால்நடை வளம் கையேடு)

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15