|| |  | |  | | || |

பறவை இனங்கள் :: ஈமு :: இனப்பெருக்கம்

 

செயற்கை முறை கருவூட்டல்
பூச்சி மேலாண்மை
நோய்மேலாண்மை
காப்பீடு
திட்டங்கள்
விரிவாக்கச் சேவைகள்

இனப்பெருக்கம்

முட்டை உற்பத்தி மேலாண்மை

ஈமு பறவை 20-24வது மாத வயதில் இனப்பெருக்கம் செ்யய ஆரம்பிக்கும். பருவத்திற்க வந்த ஜோடியற்ற பறவைகளனைத்தையும் ஒரு கொட்டிலுக்குள் விட்டுவிடவேண்டும். பொதுவாக அவைகளே தங்களுக்கேற்ற ஜோடியைத் தோந்தெடுத்துக் கொள்ளும். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் / ஜனவரி மாதங்களில் இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும். ஜோடியற்ற பறவைகள் ஒரு ஜோடியை மட்டும் கூண்டுக்குள் விட்டால் அவைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அல்லது சரியாக இனச்சேர்க்கை செய்யாது. இது முட்டை உற்பத்தியைக் குறைப்பதோடு பறவைகளும் ஒன்றையொன்று காயப்படுத்திக் கொள்ள நேரிடும்.

இவ்வாறு அவை ஜோடி சேர்ந்த பிறகு ஒவ்வொரு ஜோடியையும் தனித்தனிக் கொட்டிலுக்குள் அடைத்துவிடவேண்டும். இனச்சேர்க்கை முடிந்த பின் வேண்டுமெனில் அப்படியே விட்டு விடலாம் அல்லது அந்த ஜோடியைப் பிரிக்க விரும்பினால் பல பறவைகளைச் சேர்த்து ஒரே கொட்டிலுக்குள் அடைத்தால் பிரிந்து விடும்.

ஜோடிகள் தனித்தனியாக இல்லாமல் ஒரே கொட்டகைக்குள் பல ஜோடிகள் இனச்சோ்க்கைக்கு விடப்படும் வோது போதுமான இடவசதி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். இது பறவைகள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்கும். மேலும் ஆண், பெண் பறவைகளின் விகிதம் சமமாக இருப்பது அவசியம்.

பெட்டைக் கோழிகள் ஏப்ரலில் முட்டையிட ஆரம்பித்து அக்டோபர் / நவம்பர் வரை இடும். பெரும்பாலான கோழிகள் முட்டை சேகரிக்கும் போது அமைதியாகவே இருக்கும். எனினும் சில கோழிகள் முட்டையை எடுக்க அனுமதிக்காது. அவை ஒன்றொடொன்று ஒட்டிக் கொண்டு தாக்க வரலாம். எனவே அவைகளுக்குத் தெரியாமல் பின்பகுதி வழியே சென்று முட்டையை சேகரித்துக் கொள்ளுவதே சிறந்தது.

எப்போதும் ஈமுக்களை முன்பகுதி வழியே அணுகுவது சிறந்ததல்ல. ஏனெனில் அவை பயந்தால் உதைக்கவோ, அலகினால் கொத்தவோ செய்யும். பறவையிடமிருந்து 1 மீட்டர் தொலைவிலேயே நின்று கொள்ளவேண்டும்.

அடைகாத்தல்

இயற்கையாகவே அல்லது செயற்கை முறையிலோ அடைகாக்கலாம். எனினும் இப்போது பரவலாக செயற்கை முறையே பின்பற்றப்படுகிறது.

இயற்கை முறை அடைகாப்பு

இயற்கை முறையில் பெட்டைக் கோழிகள் முட்டையிட ஆரம்பித்த பிறகு ஆண் கோழிகள் முட்டை மீதமர்ந்து அடைகாக்கின்றன. முட்டைகள் கொட்டகை முழுவதும் ஆங்காங்கு இடப்பட்டு இறுதியில் முட்டையிடும் காலம் முடிந்த பிறகு, கூடு போன்ற அமைப்பு தயாரிக்கப்பட்டு அதில் அடைகாக்கப்படுகிறது. சிதறிக் கிடக்கும் முட்டைகளை புற்கள், இலைகள், குச்சிகள் மூலம் ஆண் கோழ எதிரிகளின் பார்வையிலிருந்து மறைத்துக் கூட்டிற்கு எடுத்து வந்து அடை காக்கும்.

Emu_natural incubation
அடைகாக்கும் கோழி

ஈமு பறவைகளில் ஒரு முட்டைக்குப் பின் அதிக நாள் இடைவெளி விட்டு மெதுவாகவே முட்டையிடுகின்றன. இரண்டு நாளுக்கு ஒரு முறை முட்டை அதிகமாக இடும். 6-10 முட்டைகள் வரை இட்டபின் ஆண் கோழிகள் அதன் மீதமர்ந்து அடைகாக்க ஆரம்பிக்கும். பின்பு இடப்படும் முட்டைகளையும் உருட்டி வந்து இந்த அடைகாக்கும் முட்டைகளோடு சேர்த்துவிடும். அனைத்து முட்டைகளையும் சேர்த்த பிறகு, ஆண் கோழி எங்கும் செல்லாமல், நீர், தீவனம் எதுவுமின்றி நீண்ட நேரம் முட்டை மீதே அமர்ந்து இருக்கும். மற்ற பறவைகளை கொட்டிலை விட்டு நீக்கி விடுதல் அவைகள் ஒன்றொடொன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்கும். முட்டை பாதுகாப்பாகவும் இருக்கும்.

ஆண் கோழி அடைகாக்க ஆரம்பித்த 56வது நாளில் குஞ்சுகள் பொரிக்கும். எனினும் 50ம் நாளிலிருந்தே ஏதேனும் குஞ்சுகள் பொரித்திருக்கிறதா என்று தினமும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சரிபார்க்கும் போது ஆண் கோழிய மெதுவாக சிறிது உயர்த்தி முட்டைகளின் நிலையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

குஞ்சுகளை குஞ்சு வளர்ப்பகத்தில் வளர்ப்பதாக இருந்தால் குஞ்சுகள் பொரித்தவுடன் அவற்றை வளர்ப்பதற்திற்கு எடுத்துச் சென்று விடவேண்டும் அல்லது ஆண் கோழியுடன் சேர்த்து விட்டு விடுவதாலக இருந்தால் பொரிக்காத முட்டைகளை அகற்றவிடவேண்டும். குஞ்சுகள் சிறிது வளரும் வஐர வளர்ப்பகத்தில் வைத்து கழுகு, காகம், நரி போன்றவற்றிடமிருந்து பாதுகாப்பாக வளர்ப்பதே சிறந்தது.

இயற்கை முறை குஞ்சு பொரிப்பில் அதிக அளவு இடம் தேவைப்படுகிறது. மேலும் இவ்வாறு செய்வதற்கு முன் இதைப்பற்றி போதிய விவரங்களை வளர்ப்பாளர் அறிந்திருக்கவேண்டும்.

மேலும் இயற்கை முறையில் ஈரமான சூழ்நிலைகளில் பாக்டீரிய தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு ஆரம்பத்தில் இடப்பட்ட முட்டைகள் நான்கைந்து வாரங்கள் வெப்பநிலை மாற்றத்திற்கு உட்பட்டு இரவின் குளிர்ந்த வெப்பநிலையால் கரு இறந்து விட நேரிடலாம். இது போன்ற காரணங்களால் இயற்கை முறையில் குறிப்பிட்ட அளவு இழப்பு ஏற்படும்.

செயற்கை முறையில் அடைகாத்தல்

செயற்கை முறையில் ஒரு நாளின் காலை, மாலை இரண்டு முறை முட்டையை சேகரித்து அடைகாப்பானில் வைக்கப்படுகிறது. சேகரித்த முட்டைகளை தொற்று நீக்கிக் கொண்டு சுத்தம் செய்து குளிர்ந்த அறை வெப்பநிலையில் அதாவது 10-16 டிகிரி செ 10 நாட்கள் வரை வைக்கவேண்டும். ஒவ்வொரு குழு முட்டைகளாக குறிப்பிட்ட இடைவெளியில் (10 நாட்கள் இடைவெளி) அடைகாத்தல் வேண்டும்.

ஈமு கோழியின் முட்டைகளுக்கென தனி அடைகாப்பான்கள் உள்ளன. மேலும் கோழியின் அடைகாப்பானையே சிறிது பெரியதாக மாற்றியும் ஈமு முட்டைகளைப் பயன்படுத்தலாம். குளிர் வெப்பநிலையிலிருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு எடுத்து வந்து 12-18 மணி நேரம் வைத்துப் பின்பு தான் அடைகாப்பானுக்கு மாற்றுதல் வேண்டும். அடைகாப்பானில் 35.25-35.5 டிகிரி செ (ஒளிர் விளக்கு) ஈரப்பதம் 45-50 % (குளிர் / ஈர விளக்கு) இருக்குமாறு 50 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும்.

emu_incubator
செயற்கை முறையில் அடைகாக்கப்படும் முட்டைகள்

நாளொன்றுக்கு 3 முறை முட்டையைத் திருப்பி விடுதல் வேண்டும். இதை நாமாகவோ அல்லது அடைக்காப்பானின் தானியக்கித் திருப்பி மூலமாகவோ செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கரு ஓரிடத்தில் தங்கி ஓட்டுடன் ஒட்டிக் கொள்வதைத் தடுக்கலாம்.

50வது நாள் முட்டைகள் சுத்தமான தனித்த குஞ்சு பொரிக்கும் தளத்திற்கு மாற்றப்படுகின்றன. அங்கு 35 டிகிரி செ  வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பின்பற்றப்படுகிறது.

இந்த ஈரப்பதம் உள்ளே உள்ள சவ்வு ஈரமடைந்து முட்டையின் ஓட்டை இளக்குவதால் முட்டை பொரிப்பதற்கு ஏதுவாகிறது. இந்த சமயத்தில் முட்டையைத் திருப்பி வைக்கக்கூடாது.

ஈமு முட்டைகளும் பிற பறவைகளின் முட்டைகளைப் போல் பாக்டீரியத் தொற்றால் பாதிக்கப்படும். எனவே தகுந்த தொற்று நீக்கும் புகையூட்டிகளைப் பயன்படுத்தி முட்டைகளை சேகரித்த உடனே சுத்தம் செய்யவேண்டும். காலியான உள்ள அடைகாப்பான், பொரிப்பகம் போன்றவைகளயும் அந்த புகையூட்டி மூலம் தொற்று நீக்கம் செய்யலாம்.

செயற்கை முறை அடைகாப்பான்கள் இதற்காகவே தயாரிக்கப்பட்டவை. கீழ்க்கண்ட தவறுகளால் மட்டுமே அதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. அவை

  • முட்டைகள் சரியாக சேகரிக்கப்படாமலோ, தொற்று நீக்கம் செய்யப்படாமலோ குளிர் வெப்பநிலையில் வைக்கப்படாமலோ இருந்தால்
  • வெப்பநிலை மற்றும ஈரப்பதம் சரியான அளவு பயன்படுத்தப்படாவிடின்
  • அடைகாப்பான், குஞ்சு பொரிப்கம் சரியாகச் சுத்தம் செய்யப்படாவிடின்

முட்டையானது உயிருள்ள ஒரு பொருள் அது தூய புதிய ஆக்ஸிஜனை அதன் ஓட்டின் வழியே எடுத்துக் கொண்டு கார்பன் மோனாக்ஸைடு வாயுவை வெளியேற்றுகிறது. எனவே தினமும்  தவறாமல் போதுமான அளவு தூய காற்று அடைகாப்பானுள்ளும், குஞ்சு பொரிப்பகத்திற்குள்ளும் காற்று செலுத்தப்படவேண்டும். இதற்கு அடிக்கடி அதனைத் திறந்து மூலமாகவோ, செயற்கைக் காற்றோட்ட விசிறியைப் பொருத்துவதன் மூலமோ காற்று கிடைக்கச் செய்யலாம்.

(ஆதாரம்: http://www/dpi.gld.gov.au/cps/rde/dpi/hs.xsl/27_2716_ena_html.htm)

 

 
   

பால் கறக்கும் கருவி
முட்டை பொறிக்கும் கருவி
தீவனப்பயிர்களை
வெட்டும் இயந்திரம்

   
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
gg  

கால்நடை மருத்துவமனை
பால் உற்பத்தியாளர் சங்கம்
அறுவை கூடம்
சந்தைகள்
கால்நடை பராமரிப்பு நிறுவனம்

 
 

|| |  | |  | | || |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008