animal husbandry
கால்நடை பராமரிப்பு :: வெற்றிக்கதைகள் முதல் பக்கம்

பன்றி வளர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுதல்

பின்னணி:

திரு.S.தியாகராஜன், சர்வம்பட்டி, நாமக்கல் மாவட்டம். இவர் ஒரு குறு விவசாயி. பன்றி வளர்ப்பில் ஆர்வமுள்ள இவர், பன்றி வளர்ப்பு தொழில்நுட்பங்களைப் பற்றிய ஆலோசனை பெற வேளாண் அறிவியல் நிலையம் அணுகினர். வெண்பன்றி வளர்ப்பு பற்றிய அறிவைப்பெற்ற பின்னர் , இவர் ஒரு சிறு பண்ணை அமைத்து அதில் 45 வெள்ளை பன்றிக்குட்டிகளை வளர்க்கத் தொடங்கினார்.

குறுக்கீடுகள்:

அறிவியல் மேலாண்மை உத்திகள் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் கற்றுத்தரப்பட்டது.
1.பல் பிடுங்குதல்
2.இரும்பு ஊசி
3.தடுப்பூசி

தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட பன்றிக்குட்டிகளை வாங்கிய பிறகு அவற்றை 5 மாதங்களுக்குப் பிறகு இறைச்சிக்காக விற்க, அந்த விவசாயிக்கு அறிவுறுத்தப்படுகிறது

செயல்முறை:

தற்சமயம், இவர் 150 பன்றிக்குட்டிகளை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்துள்ளார். தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட பன்றிக்குட்டிகளை, கொழுப்பு இறைச்சிக்காக வாங்குவதில் தனது கவனத்தைத் திருப்பினார். வயது 7-8 மாதங்களான பன்றிகளை விற்பனை செய்கிறார்.

தொழில்நுட்பம்:

வைட்டமின் மற்றும் தாதுக்கலவையுடன் உணவுக்கழிவு மற்றும் அடர் தீவனத்தை பன்றிக்குட்டிகளுக்கு உணவாக அளிக்கின்றனர்.

தாக்கம்:

ஐந்து மாதங்களில் ஒரு பன்றிக்கு ரூ.4000/- வரை வருமானம் ஈட்டுகிறார். இவருடைய பண்ணை புது பன்றி பண்ணை தொடங்குபவர்களுக்கு ஒரு மாதிரி பண்ணையாக செயல்படுகிறது.

கிடைமட்ட பரவல்:

இவருடைய பண்ணைஅருகில் உள்ள இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒரு மாதிரியாக விளங்குகிறது. மேலும் பயிற்சியாளர்கள் இவருடைய பண்ணையை பார்வையிட்டு அவற்றைப்பின்பற்ற ஆலோசனை வழங்குகிறார்கள்.

வேலை வாய்ப்பு:

தனது குடும்பம் மற்றும் ஏழை விவசாயிகளுக்கும் கூட வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார்.

 

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15