animal husbandry
கால்நடை பராமரிப்பு :: அறுவடை பின்சார் தொழில்நுட்பம் : மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் முதல் பக்கம்

 

சிக்கன்(இறைச்சி) குழலப்பம்

விஞ்ஞானிகளின் ஈடுபாடு: முனைவர் K.T.ராதாகிருஷ்ணன், மற்றும் முனைவர் V.வெங்கட்ராமானுஜன்

தயாரிப்பு தொழில்நுட்பம் :

உற்பத்தித் திறனற்ற கோழிகளின் இறைச்சி மற்றும் கொழுப்பிலிருந்து இறைச்சி குழலப்பம் தயாரிக்கப்படுகிறது. இறைச்சி துண்டுகளாக வெட்டப்பட்டு பின் குழம்பு தயாரிக்கும் நேரத்தில் கொழுப்பு சேர்க்கப்படுகிறது. உலர்முறை பதப்படுத்தலில், உப்பு, சர்க்கரை, பொட்டாசியம் நைட்ரேட், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது. இந்தக்குழம்பு குளிர் சாதனப்பெட்டி வெப்பநிலையில் 24 மணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும். இந்த குழம்பு குளிர் சாதனப்பெட்டி வெப்பநிலையில் 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். இந்த குழம்பு ஈர ஆட்டுப்பொதியுரையில் அடைத்து வைக்கப்படுகிறது.அடைக்கப்பட்ட பொருள் 45°C - 50°C வெப்பநிலையில் 2 மணி நேரம் வரை புகைமூட்டம் செய்யப்படுகிறது. புகைமூட்டம் செய்யப்பட்ட பொருள், குளிர்விக்கப்பட்டு பின் குளிர்சாதனப்பெட்டியில் 24 மணி நேரம் வரை வைக்கப்படுகிறது. பின் இந்தப்பொருள் வெப்பக்காற்று அடுப்பில் 80°C வெப்பநிலையில், 2 மணி நேரம் வரை வைத்து வேக வைக்கப்படுகிறது. வேக வைகவைத்த பொருள் குளிர்விக்கப்பட்டு பின் 8-10°C வெப்பநிலையில் சேமித்து வைக்கப்படுகிறது.

பொருள் வழங்கல் முறை :

இறைச்சி குழலப்பம், சான்ட்விச், சாலடு மற்றும் ஹாட்பாக்ஸ் போன்ற வகைகளில் வழங்கப்படுகிறது. இவற்றை நன்கு பொரித்த பின்னரும் நுகர முடியும்.

தயாரிப்பு பயனீடு :

கோழி இறைச்சி தொழிற்சாலைகளின் வருகையால் உற்பத்தி திறனற்ற கோழிகளின் கடின இறைச்சி தன்மையால் சந்தைப்படுத்துதல் கடினமாக உள்ளது. இந்த மாதிரியான இறைச்சிகள், மதிப்புக்கூட்டப்பட்ட இறைச்சிப்பொருட்களான குழலப்பம் தயார் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளின் தற்போதைய நுகர்வோர் தேவை அவற்றை பிரபலப்படுத்துவதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு :

மாமிச அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை,
சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி,
சென்னை -600 007

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15