உயிரி எரிபொருள்:: இலுப்பை

தாவரவியல் பெயர் : மதுக்கா லேட்டிபோலியா
குடும்பம் : சப்போடேசியே

பரவல் :

இந்தியாவின் பல பகுதிகளில் வளரக் கூடியது இம்மரம். குளிர்ந்த மற்றும் வறண்ட பகுதிகள் , இந்திய தீபகற்பத்தின் தென் பகுதிகள் தவிர்த்து அனைத்து பகுதிகளிலும்  வளரும் மத்திய பிரதேசம் மற்றும் வறண்ட சமநிலை பகுதிகளில் காணப்படும். கிராமப் புறங்களில் இது அதிகமாக வளர்க்கப்படுகின்றது. இதனில் இரு இரகங்கள் உள்ளது – லாங்கிபோலியா மற்றம் லாட்டிபோலியா . இதனில் இரகம் தென் இந்தியாவிலும் , இரண்டாம் இரகம் வட இந்தியயவிலும் வளர்க்கப்படுகின்றது.

தேவையான சூழல் :

தட்ப வெப்பநிலை : 

வெப்ப மற்றும் உபவெப்ப பிரதேசங்களில் வளரக்ககூடியது. இதன் இயற்கையான சூழலில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 41 -48º செ வரையிலும் வேறுபடுகின்றது.

மழையளவு :

ஆண்டு மழையளவு 750 - 1875 மி..மீ வரையிலும் தேவை. இதன் இயற்கை சூழலில் அதிகபட்ச ஈரப்பதம் ஜனவரி மாதத்தில் 40 - 80 சதவிகிதம் வரையிலும் ,
ஜீலை மாதத்தில்  60 -90 சதவிகிதம் வரையிலும் தேவைப்படும்.

மண்வகை :

பலதரப்பட்ட மண் வகைகளில் வளர்ந்தாலும் மணற்பாங்கான மண்வகை பொருத்தமானதாகும். இந்திய –கங்கை சம வெளிப் பகுதியின் வண்டல் மண் வகைகளில் நன்கு வளரக்கூடியது. சால் காடுகளில் , களி மண் மற்றும் சுண்ணாம்பு நிறைந்த மண்களிலும் வளரும் .

வளர்ச்சி நிலை :

மார்ச் முதல் ஏப்ரல் மாதங்களில் பூக்கத் துவங்கும். புதிய இலைகள் தளிர்க்கும் முன்னரே சதைமிக்க அல்லி வட்டம் விழுந்து விடும் . 10 வயது கடந்த மரங்கள் காய்க்க துவங்கும். 

ஓவ்வோர் மூன்று ஆண்டுகளிலும் , 1 அல்லது 2 ஆண்டுகளில் நல்ல மகசூல் கிடைக்கும்.

மர வளர்ச்சி தன்மைகள் :

ஒளியினை அதிகம் விரும்பும் இம்மரம் நீழலில் வளர்ச்சி குன்றி காணப்படும். கோடை காலத்தில் அடியுடன் வெட்டினால் மீண்டும் நன்கு தளிரும். இதில் நன்கு வளர்ந்த ஆணிவேர் இருக்கும்.

நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் :

கிளைகளை உலுக்கி பழுத்த பழங்களை  சேகரிக்கலாம். கைகளில் அழுத்தி பிழிந்து விதைகளை எடுக்க வேண்டும். ஒரு கிலோ எடையில் 450 விதைகள் இருக்கும். புதிய விதைகள்அதிக முனைப்புதிறன் பெற்றிருந்தாலும் சேமிக்கும் பொழுது அது குறைந்துவிடும் . விதையினை பூச்சி மற்றும் பூஞ்சாண்கள் விரைவில் தாக்கிவிடும்.

புதிய விதைகளை 1.5 - 2.5 செ.மீ ஆளத்தில் விதைக்க வேண்டும். ஒரு மாதம் நிரம்பிய நாற்றுகளை பாத்திகளில் மாற்றி நடவேண்டும்.இதில் தாமதித்தால் நாற்றுகள் நன்கு வளராது.இப்பாத்திகளில் நிழலின் அடியில் 30 X 15 செ.மீ இடைவெளியில்  நாற்றுகளை நடலாம். பாத்திகள் அன்றி பைகளிலும் ஒரு மாதம் நிரம்பிய நாற்றுகளை நிழலுக்கடியில் மாற்றி நடலாம்.

நடுதல் :

30 செ.மீ குழிகளில் 4 X 4 மீ இடைவெளியில் நடவேண்டும். கடப்பாரை கொண்டு ஏற்படுத்திய குழிகளில் மரத்தின் அடிப்பகுதியினையும் நடலாம்.

பயன்பாடு :

இலைகளில்  9.8 சதம் புரதம் , 20.3 சதம் நார்சத்து , 60.7 சதம் நைட்ரஜன் அல்லாத சாரம், 4.1 சதம் ஈதர் சாரம் , 7.8 சதம் ஒட்டுமொத்த சாம்பல், 1.6 சதம் கால்சியம் மற்றும் 0.2 சதம் பாஸ்பரம் உள்ளது. விதைகளில் 39 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. அவை சோப்பு தயாரிக்க மற்றும் சமைக்க பயன்படுகிறது. விதை பிண்ணாக்கு தீவனமாக பயன்படுவதோடு உரமாகவும் பயன்படுகின்றது. இதன் பூக்கள் கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் அரிசி வகை தீவன வகைகளுக்கு மாற்றாகும். நன்கு வளர்ந்த மரத்திலிருந்து ஒரு வருடத்தில் 90 கிலோ பூக்கள் கிடைக்கும். பூக்களின் வேதியியல் பங்கீடுகள் (சதவிகிதத்தில் புரதம் - 8.0 ஈதர் சாரம் 1.4 நார்ச் சத்து -30.4 நைட்ரஸன் இல்லா சாரம் -52.4 கூட்டு கார்போஹைட்ரேட் - 83.8 கூட்டு சாம்பல் - 7.8 கால்சியம் 0.22 பாஸ்பரஸ் 0.16 பூக்களின் புரதச்சத்து அரிசிக்கு ஈடாகவும் கார்போஹைட்ரேட் மக்காச்சோளம் மற்றும் ஒட்ஸிற்கு ஈடாகவும் கூறப்படுகின்றது. பூக்கள் ஆல்கஹாலிற்கு மூஸ்பொருளாக பழங்குடியினரால் பயன்படுத்தப்படுகின்றது.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013