உயிரி எரிபொருள் :: புங்கம்

 

தாவரவியல் பெயர்: பொங்காமியா பின்னேட்டா, டெரிஸ்   இண்டிகா, பொங்காமியா க்ளாப்ரா

குடும்பம்: ஃபேபேசியா (பாப்டிலியோயேசியே)

பரவல்:

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. கிழக்கே சமவெளி பகுதியான ரவி முதல் ஆற்றங்கரைகள் மற்றும் தென் பகுதிகளில் வரையில் காணப்படுகின்றது. உத்திரப்பிரதேசம், பீகார், ஒரிசா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்னபடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காணப்படுகின்றது. சுந்தரவன காடுகள் மற்றும் அந்தமான் தீவின் கடற்கரையோரங்கள் மற்றும் வரப்புகளில் வளரக்கூடியது.
தேவையான சூழல்:

வெப்ப நிலை:

இயற்கையான இருப்பிடத்தில் அதிக சராசரி வெப்பநிலை 27 முதல் 38டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்த வெப்பநிலை 10 முதல் 16டிகிரி செல்சியஸ் வரையிலும் வேறுபடுகின்றது.

மழையளவு:

புங்கம் ஈரப்பதம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் நன்கு வளரக்கூடியது. இதற்கு தேவையான ஆண்டு சராசரி மழையளவு 500-2500 மி.மீ ஆகும்.

இடஅமைப்பு:

கடல் மட்டத்திலிருந்து 1200 மீ உயரம் வரையிலும் இது வளரும். ஆனால் இமாலய மலைப்பிரதேசத்தில் 600மீ உயரத்திற்கு மேல் இதனை காண இயலாது.

மண் வகை:

அதிக மண் வகைகளில் வளரக்கூடியது. கரடுமுரடான மணல் முதல் களிமண் வரையிலும் வளரும். உவர் மண்ணை தாற்கி வளரக்கூடியது. நீர்நிலைகள் (அ) கடற்கரையின் ஓரங்களில் பொதுவாக காணப்படுவதுடன் இவற்றின் வேர்ப்பகுதி நீரில் இருக்கும் படி வளரும். நல்ல வடிகால் மற்றும் குறைவில்லாத ஈரப்பதம் கொண்ட மண்வளங்களில் நன்கு வளரும்.

வளர்ச்சி நிலை:

இம்மரம் தனது வளர்ச்சி நிலையில் நல்ல மாற்றங்களை கொண்டதாகும். சாதகமான சூழலில் பசுமை மாறாமலும், நேர்மாறான சூழலில் இலைகள் முற்றிலும் உதிர்ந்து காணப்படும். புதிய இலைகளும், பூக்களும் உடனடியாக தோன்றும். ஏப்ரல் முதல் ஜீலை மாதம் வரையில் பூக்கள் தோன்றும். ஜனவரி முதல் மார்ச் வரையில் காய்க்கும். 4 முதல் 7 ஆண்டுகளில் பூக்க மற்றும் காய்க்க துவங்கும்.

மரத்தின் வளர்ச்சி தன்மைகள்:

ஒளி - இதற்கு ஒளி தேவைப்படும் ஆயினும் நிழலை தாங்கி வளரும் 
பனி - பனிகாலத்தினை தாங்கிக்கொள்ளாது
வறட்சி - ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் வறட்சியை தாங்கி கொள்ளும்
வெள்ளம் - அதிக ஈரப்பதத்தினை குறைந்த காலம் தாங்கிக் கொள்ளும் 
மறுதாம்பு - சிறந்து மறுதாம்பு பயிர் 
வேர் கன்றுகள் -  வேர் கன்றுகளை உற்பத்தி செய்யும்
அடியோடு வெட்டுதல் - அடியோடு வெட்டுவதை தாங்கி கொள்ளும்

இயற்கையாக வளர்தல்:

இது பனிக்காலத்தில் விதையிலிருந்து இயற்கையாக வளரும். இது மறுதாம்பு பயிர் ஆதலால் இயற்கை சூழலில் வேர் கன்றுகளை உற்பத்தி செய்யும்.

செயற்கை முறை உற்பத்தி:

விதை (அ) நாற்றங்காலில் உற்பத்தி செய்த நாற்றுகள் (அ) 1-2 செ.மீ விடடம் கொண்ட தண்டுகளின் மூலம் இம்மரத்தினை நேரடியாக உற்பத்தி செய்யலாம். பக்கக் கிளைகளின் துண்டுகள் மற்றும் வேர்க் கன்றுகள் மூலமும் உற்பத்தி செய்யலாம். புதிய விதைகள் அதிக முளைப்புத் திறன் கொண்டிருக்கும். ஒரு மரத்திலிருந்து 1.0-5.0 கிலோ விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ எடையில் 1500-1700 விதைகள் இருக்கும். விதைப்பதற்கு முன்னர் விதை நேர்த்தி தேவையில்லை. காய்களின் உள்ளே விதைகள் ஒரு வருடம் வரையில் வீரியத்தன்மையுடன், இருக்கும். காய்களை பூச்சி மற்றும் நோய் தாக்காத கொளகலன்களில் சேமிக்க வேண்டும்.

நாற்றங்கால்:

புதிய விதைகளை 20x15 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில், மண், மணல், மற்றும் மக்கிய தொழு உரம் (1:2:1) ஆகியவற்றை நிரப்பி விதைக்க வேண்டும். 10-15 நாட்களில் விதைகள் முளைத்துவிடும். முளைக்காத விதைகளை பாத்திகளில் விதைத்து பின்னர் துளைத்தவுடன் 30-40 நாட்களில் பாலித்தீன் பைகளில் மாற்றி நட வேண்டும். இதனால் ஒரே சீரான நாற்றுகள் கிடைக்கப்பெறலாம். 
நடவு:

6 மாதம் முதல் 1 வருடம் கொண்ட நாற்றுகள் நடவு வயலில் 30 செ.மீ3 (அ) 45 செ.மீ3 அளவு கொண்ட குழிகளில் 3மீ x 3மீ (அ) 5மீ x 5மீ இடைவெளியில் நட வேண்டும். 5 கிலோ தொழு உரம் மற்றும் டிஏபி 25 கிராம் / குழி இருவது மரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

பராமரித்தல் மற்றும் கவனம்:

நீர்:

வறண்ட இடங்களில், கோடை காலத்தில் முதல் இரண்டு வருடங்களுக்கு நீர் பாய்ச்சுவது அதிக நாற்றுகள் பிழைப்பதற்கும் நல்ல வளர்ச்சிக்கும் பயனளிக்கும்.

பராமரிப்பு முறைகள்:

முதல் மூன்று வருடங்களில் செடியை சுற்றி களைகள் எடுப்பது நல்ல வளர்ச்சிக்கு உதவி புரியும். சாலையோர (அ) பூங்கா மரமாக வளர்க்கப்படும் பொழுது, சரியான தண்டு உருவாதற்கும் மரத்தினை கவர்ந்து செய்ய வேண்டும்.

மகசூல்:
காய்களுக்காகவே வளர்க்கப்படுகின்றது. இதனில் 20-25 சதம் எண்ணெய் இருக்கும். நன்கு வளர்க்கும் மரம் 5-10 கி கிடைக்கும்.

பயன்கள்:

மரமானது நல்ல தரமான வெட்டு மரமாகாது. வண்டி சக்கரம், பெட்டிகள், வேளாண் கருவிகள் மற்றும் கருவிகளின் கைப்படி செய்வதற்கு பயன்படுகின்றது. இலைகளில் 18 சதவிகிதம் புரதம் உள்ளது. இவை சிறந்த தீவனமாக ஆடு, மாடுகளுக்கு பயன்படுகின்றது.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013