உயிரித் தொழில்நுட்பம் :: மரபணு மாற்றியமைக்கப்பட்ட பயிர்கள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தினரால் மரபணு மாற்றியமைக்கப்பட்ட பயிர்கள் வெளியிடுவதற்கு பின் சோதனையை கண்காணித்தல்

மரபணு மாற்றியமைக்கப்பட்ட பயிர்களை உருவாக்குபவர்கள், சுற்றுச்சுழல் காப்பிற்காக வயல்களில் சோதனை நடத்துவார்கள். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை பயிர் செய்ய அனுமதிக்கும் குழு (GEAC) மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்டவைகளை  திறனாய்வு செய்யும் குழுவின் அனுமதியுடன், நாட்டின் பல்வேறு இடங்களில் வயல் சோதனை நடைபெறும் மரபணு மாற்றம் செய்யப்பட்டவைகளை திறனாய்வு செய்யும் குழு அமைக்கப்பட்ட கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் குழுவால் வயல் சோதனை கண்காணிக்கப்படுகிறது. 

மேற்சொன்ன கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் குழு அல்லாதது, RCGM-ல் அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான தமிழ்நாட்டு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குனரால், பயிரானது குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக, ஆராய்ச்சி இயக்குனரை தலைமையாக கொண்டு தனித்தனி பயிருக்கான கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் குழு அமைக்கப்படுகிறது. பயிர் கலப்பு, உழவியல், பூச்சியியல், நோயியல், உயிர் தொழில்நுட்பத்தை சார்ந்த வல்லுநர்களும், இணை வேளாண் இயக்குநர், வேளாண் அலுவலர் ஆகியோர் இணைந்து ஒரு குழுவாக செயல்படுவார்கள்.

Bio Tech

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013