பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

தக்காளி தேமல் நோய்:

அறிகுறிகள்

  • தாவரத்தில் வெளிர், பச்சை புள்ளியமைப்புடனும் மேலும் இளம் இலைகள் வெயில் நாட்களில் வாடத் தொடங்கும். இவை நோயின் ஆரம்பத் தொற்றாகும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் உருத்திரிந்து, மடிப்புடன், அளவை விட சிறயதாக இருக்கும். சில நேரங்களில் இலைகள் “பன்னம் இலை” அறிகுறியைக் காட்டும்.
  • பாதிக்கப்பட்ட தாவரம் வளர்ச்சி குன்றி வெளிர் பச்சை நிறமாகிறது.
  • வைரஸ் ஆடைகள், கைகளால் வேலை செய்யும் ஆட்கள் மற்றும் ஆரோக்கியமானவர்கள் பாதிக்கப்பட்ட செடியை கையாண்டுவிட்டு அல்லது தாவர குப்பைகளைக் கையாளும்பொழுது பரவுகிறது.
பாதிக்கப்பட்ட இலை ஆரோக்கியமான இலை

மேலாண்மை

  • விதைப்பிற்கு நோயற்ற ஆரோக்கியமான செடிகளின் விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • விதைகளை விதைப்பதற்கு ஒரு நாள் முன்பு டிரைசோடியம் பாஸ்பேட் (90கி / ஒரு லிட்டர் தண்ணீர்) கரைசலில் ஊற வைப்பதன் மூலம் நோயைக் குறைக்கலாம்.
  • விதைகளை நன்கு அலசி நிழலில் உலர்த்த வேண்டும். பண்ணையில் பாதிக்கப்பட்ட தாவரங்களை கவனமாக அகற்றி அழித்துவிட வேண்டும். வைரஸ் நோய் தொற்று கொண்ட நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்த கூடாது.
  • புகையிலை, உருளைக்கிழங்கு, மிளகாய், குடைமிளகாய், கத்தரி போன்றவற்றை தவிர மற்ற பயிர்களை பயிர் சுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016