பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

இலை சுருட்டை நோய்

அறிகுறிகள்

  • புதிதாக வளரும் தக்காளி செடியின் மஞ்சள் இலைகள் சுருண்டு தாவரத்தின் வளர்ச்சி குறைந்துவிடும்.
  • புதிய இலைகள் அளவில் குறைந்து சுருங்கி, நரம்புகள் மஞ்சள் நிறமாகிவிடும். இலைகள் மேல் நோக்கி சுருண்டு பார்ப்பதற்கு கிண்ணம் போல் இருக்கும்.
  • மலர்கள் தோன்றும் ஆனால் காய் பிடிப்பதற்குள் உதிர்ந்துவிடும்.
இலைவழி அறிகுறி
இலை நரம்புகள் மற்றும் ஓரங்கள் ஒரு மேல்நோக்கி சுருண்டநிலை இலை சுருட்டை அறிகுறி

மேலாண்மை

  • மஞ்சள் ஒட்டும் பொறியை வெள்ளை ஈக்களை கண்காணிக்க 12/ஹெக்டர் என்ற அளவில் வைக்க வேண்டும்.
  • விளை நிலங்களைச் சுற்றி வேலிப் பயிராக தானிய வகைகள் பயிரிட வேண்டும்.
  • களைகளை நீக்க வேண்டும்.
  • நாற்றுகளை வலை கூடாரம் அல்லது பசுமை  கூடாரத்தில் பாதுகாக்க வேண்டும்.
  • இமிடா குளோரைடு 0.05% அல்லது டைமெதோட் 0.05% ஐ நடவு முடிந்து 15, 25, 45 ஆகிய நாட்களில் தெளித்தால் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016