முதல் பக்கம் தொடர்புக்கு


அடைப்பான் நோய்

   இந்நோயினைப்பற்றி

   நோயின் தன்மை  
  • அடைப்பான் நோய் உலகம் முழுவதும் கால்நடைகளைத் தாக்கக்கூடிய ஒரு முக்கியமான நோயாகும்.
  • இந்நோய் தாக்கிய மாடுகளில் மண்ணீரல் வீக்கம் ஏற்படுவதால் இந்நோய் மண்ணீரல் காய்ச்சல் நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படும் எல்லாக் கால்நடைகளும் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றன.
  • அடைப்பான் நோய்க்கெதிராக எந்த ஒரு பாலூட்டி விலங்குகளும் முழுமையான எதிர்ப்புசக்தியை பெறுவதில்லை.
  • அடைப்பான் நோயால் அதிகம் பாதிக்கப்படும் விலங்குகள் மாட்டினங்களும், செம்மறி ஆட்டினங்களுமாகும்.
  • இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு முக்கியமான நோயாகும்.

    நோய்க்கான காரணங்கள்
  • அடைப்பான் நோய் பேசில்லஸ் ஆன்த்ராசிஸ் எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
  • இந்த பாக்டீரியாக்கள் காற்றில் படும் போது ஸ்போர்களாக மாறிவிடுகின்றன. ஆனால் இந்த பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்ட மாடுகளின் உடலில் ஸ்போர் உருவாவதில்லை.ஆனால் பாதிக்கப்பட்ட மாடுகளின் உடலில் இருந்து  இந்த நோய்க்கிருமிகள் வெளியேறும்போது காற்று பட்டு ஸ்போராக மாறுகின்றன.
  • இந்த ஸ்போர்கள் அதிக வெயில் ,குளிர் மற்றும் ரசாயனங்கள், வறட்சி ஆகியவற்றைத் தாங்கக்கூடியவை.
  • அடைப்பான் நோய்க்கிருமியின் ஸ்போர்கள் மண்ணில் நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருக்கும்.பாதிக்கப்பட்ட கால்நடைகளின் தசைகள் மற்றும் செயற்கையாக வளர்க்கப்பட்ட ஊடகங்களில் இந்த பாக்டீரியா பத்து வருடங்களுக்கு உயிரோடு இருக்கும்.
  • கால்நடைகளைப் பாதிக்காமல்,இந்த பாக்டீரியா மண்ணில் நீண்ட வருடங்களுக்கு உயிரோடு இருக்கும்.
  • இந்த  ஸ்போர்களை 100டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் 5 நிமிடங்கள் வரை உயிரோடு இருக்கும். ஆனால் 10 நிமிடங்களுக்கு மேல் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உயிரோடு இருக்காது.
  • இந்த பாக்டீரியாவை  60டிகிரி வெப்பநிலையில் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்தால் இறந்துவிடும். ஆட்டோகிளேவ் வெப்பநிலையான 120 டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்திருக்கும் போது இந்த பாக்டீரியாக்கள் இறந்துவிடும்.
  • பொதுவாக உபயோகிக்கப்படும் ரசாயனங்கள் இந்த பாக்டீரியாக்களைக் கொல்வதில்லை.
  • 5% சோடியம்ஹட்ராக்சைடு கரைசல்  ஆந்த்ராக்ஸ் பாக்டீரியல்  ஸ்போரினால் அசுத்தமடைந்த பொருட்களை  கிருமி நீக்கம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

   நோய் பரவும் முறை  
  • ஆந்த்ராக்ஸ் நோயினை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் ஸ்போர்கள் நீண்ட நாட்கள் மண்ணில் உயிரோடிருக்கும்.இதனால் இந்நோய் தாக்குதலுக்குள்ளாகும் கால்நடைகளுக்கு ஸ்போர்கள் இருக்கும் மண் மூலம் நோய்க்கிருமி தொடர்ந்து பரவுகிறது.
  • ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்நிலைகள், வெள்ளம்  போன்ற இயற்கை விளைவுகள் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவின் ஸ்போர்களை ஓரிடத்திலிருந்து மற்றோரு இடத்துக்கு எடுத்துச்செல்கின்றன.
  • ஊண் உண்ணிகளான நாய்கள் மற்றும் ஓநாய் போன்ற விலங்குகள் மூலம் நோய்க்கிருமிகள் நீண்ட தூரத்திற்கு எடுத்துச்  செல்லப்பட்டு நோயற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றன.
  • பறவைகளும் அடைப்பான் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பரப்புகின்றன.
  • பறக்கும் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யும் போது நோயினைப் பரப்புகின்றன.
  • நோய்க்கிருமியால் அசுத்தமடைந்த மேய்ச்சல் நிலங்களில் நோய் தாக்குதலற்ற மாடுகள் மேயும்போது அவற்றின் வாய் மற்றும் தோலில் உள்ள புண்கள் வழியாக இந்த பாக்டீரியா உட்சென்று நோய் தாக்குதலுக்குள்ளாகின்றன.
  • நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் எலும்புத்தூள்,உரங்கள், தோல், முடி, உரோமம், தானியங்கள் மற்றும் உலர் தீவனங்கள் போன்றவற்றின் மூலமும் இந்நோய் பரவுகிறது.
top

   நோய் அறிகுறிகள்

மருத்துவ அறிகுறிகள்   
  • அதிகக் காய்ச்சல்
  • பாதிக்கப்பட்ட மாடுகள் தீவனம் எடுக்காமல் வயிறு உப்பிக் காணப்படுதல்
  • பாதிக்கப்பட்ட மாடுகள் அளவுக்கு அதிகமாக சோர்வுடன் காணப்படுவதுடன் மூச்சு விட சிரமப்படுதல்
  • நோய் அறிகுறிகள் வெளிப்பட்டு 48 மணி நேரத்திற்குள்  பாதிக்கப்பட்ட மாடுகள் இறந்துவிடுதல்
  • மாடுகள் இறந்தவுடன் அவற்றின் இயற்கைத் துவாரங்களிலில் இருந்து உறையாத இரத்தம் வடிதல்
  • கழுத்து, கால்களுக்கு இடையிலுள்ள பகுதி, நெஞ்சுப்பகுதி,வயிற்றுப்பகுதி போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படுதல்
  • தீவிரமான நோய்த்தாக்குதலின் போது மாடுகள் எந்தவொரு நோய்அறிகுறியும் வெளிப்படுத்தாமல் இறந்துவிடுதல்

  top

   மேலாண்மை முறைகள்

    நோயினைக் கட்டுப்படுத்துதலும் நோய்த் தடுப்பு முறைகள்  
  • அடைப்பான் நோய்க்கெதிரான தடுப்பூசியினை நோய்த் தாக்குதலுக்குள்ளாகும் கால்நடைகளுக்கு போடவேண்டும்.
  • அடைப்பான் நோய்த்தாக்குதலுக்குள்ளாகும் பகுதிகளிலிருந்து மாடுகளை  வாங்கக்கூடாது.
  • நோய் தாக்குதலற்ற பகுதிகளில் நோய் தாக்கிய மாடுகளை அனுமதிக்கக்கூடாது.
  • அடைப்பான் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்த கால்நடைகளின் உடலை  கிழிக்கக்கூடாது.
  • அடைப்பான் நோய் தாக்கி இறந்த கால்நடைகளை ஆழமாக குழி தோண்டி புதைத்து அக்குழியில் சுண்ணாம்புத்தூள் தெளிக்கவேண்டும்.
  • அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை கையாளும் வேலையாட்கள் முறையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
  • இறந்து போன கால்நடைகள் பராமரிக்கப்பட்ட இடங்களில் 3% பர் அசிட்டிக் அமிலம் அல்லது  10% துணி சோடாத்தூள் அல்லது 10% ஃபார்மலின் தெளித்து கிருமிநீக்கம் செய்யவேண்டும்.
  • நோய்  பாதிப்புக்குள்ளான இடங்களில் விளையும்  தீவனங்களை அழித்துவிடுவதுடன் மற்ற கால்நடைகளுக்கும் போடக்கூடாது.


    பரிந்துரைக்கப்பட்ட முதலுதவி
  • இந்நோய்த் தாக்குதலுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மாடுகளின் உடலை கிழிக்கக்கூடாது.
  • அருகிலுள்ள தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற வேண்டும்.
  • அடைப்பான் நோயின் தாக்குதலைப் பற்றி அதற்கென உள்ள அலுவலர்களிடம் தெரிவிக்கவேண்டும்.
  • சுண்ணாம்புத் தூள் தூவிய குழியில் அடைப்பான் நோயால் இறந்த மாடுகளைப் ஆழமாகப் புதைக்கவேண்டும்.

   அடைப்பான் நோய் மனிதர்களுக்குப் பரவுவதற்கான முக்கியத்துவம்  
  • அடைப்பான் நோய் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு முக்கியமான நோயாகும்.
  • அடைப்பான் நோய் உண்டாக்கும் பாக்டீரியாவின் ஸ்போர்கள் மனிதர்களின் தோலில் சீழ்க்கட்டிகளை உண்டாக்குகின்றன. மேலும் இவை மனிதர்களில் நுரையீரல் பாதிப்பையும்,வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகின்றன.
  • அடைப்பான் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்த கால்நடைகளிடமிருந்து இரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்யும்போது கால்நடை மருத்துவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
  • அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த கால்நடைகளின் உடலைக் கையாளும்போது கவனமாக இருப்பதுடன் சுகாதாரமான முறைகளையும் கையாளவேண்டும்.
top