முதல் பக்கம் தொடர்புக்கு
 


எருமை மாடுகள் மற்றும் பசு மாடுகளின் னப்பெருக்க மேலாண்மை


         
   பசு மற்றும் எருமை மாடுகளின் முக்கியமான இனப்பெருக்க குணநலன்கள்

விவரம்

உள்நாட்டினங்கள்

வெளிநாட்டின மாட்டினங்கள்/கலப்பின மாடுகள் 

எருமைகள்

இனப்பெருக்க வயது

24 மாதங்கள்

12-15 மாதங்கள்

24-30 மாதங்கள்

முதல் இனப்பெருக்கம் செய்யும் வயது

30 மாதங்கள்

18-20 மாதங்கள்

30-36 மாதங்கள்

முதல் இனப்பெருக்கம் செய்யும்போது மாட்டின் உடல் எடை

250 கிலோ

180-275 கிலோ

300-350   கிலோ

சினைப் பருவ கால அளவு

17-24 நாட்கள்

21±3 நாட்கள்

21 நாட்கள்

சினைப் பருவ காலம்

18 மணி நேரம்

18 மணி நேரம்

18 மணி நேரம்

சினை முட்டை வெ ளிவரும் நேரம்

சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தி 12-16 மணி நேரம் கழித்து

சினை ஊசி போடும் தருணம்

சினைப் பருவ காலத்தின் மத்தியில்

கருவுறும்  விகிதம்

60 சதவிகிதம்

 

 

மாடுகள் கருவுறுவதற்காக காளைகள் சேர்க்கப்படும் எண்ணிக்கை

1.5-1.75

 

 

சினைக்காலம்

280-290 நாட்கள்

 

305-318 நாட்கள்

பால் வற்றிய காலம்

60

60

60

கன்று ஈன்ற பின்பு சினைக்கு வரும் காலம்

40 நாட்கள்

40 நாட்கள்

40 நாட்கள்

கன்று ஈன்று இனப்பெருக்கம் செய்யும் வயது

60 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக

 

 

கன்று ஈன்று சினை பிடித்தல்

85 நாட்கள்

 

 

பால் கறக்கும் காலம்

305 நாட்கள்

 

 

முதல் இனப்பெருக்கத்தின்போது கருவுறும் அளவு

65 %

 

 

60-90 நாட்கள் கழித்து சினைப்பருவம் வராமல் இருப்பதற்கான சதவிகிதம்

70 %

 

 

கன்று வீசும் விகிதம்

5%க்கும் குறைவாக

 

 

காளையின் இனப்பெருக்கவயது

2-2 ½ வருடம்

 

 

ஒரு வாரத்திற்கு காளைகள்  உபயோகப்படுத்தப்படும் எண்ணிக்கை

2-3

 

 

பால் உற்பத்தி

1500-2000

3500-5000

1500-3000

பிறக்கும்போது உடல் எடை

25

25-35

30-40

top

சினைப்பருவ காலம்  
  • முன் சினைப்பருவ காலம் – 2-3 நாட்கள்
  • சினைப் பருவ காலம் -12-18 மணி நேரம்
  • சினை முட்டை வெளி வரும் காலம் –  சினைப்பருவ அறிகுறிகள் வெளியிட்டு 12-16 மணி நேரம் கழித்து
  • சினைப்பருவ காலம் – 21+ 3 நாட்கள்

இனப்பெருக்க வயது முதிர்ச்சி
  • கால்நடைகள் இனப்பெருக்கத்திற்கு தயாராகி, இதர இனப்பெருக்கப்பண்புகள் வெளிப்படுதலே இனப்பெருக்க வயது முதிர்ச்சியாகும்
  • இனப்பெருக்க வயது முதிர்ச்சியடைந்த கால்நடைகள் இனப்பெருக்கத்திற்கு தயாரக இருக்கிறது என்று அர்த்தம்
  • இனப்பெருக்கத்திற்கு தயாரான கிடேரிகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும்.  காளைகள் விந்துக்களை உற்பத்தி  செய்யும்
  • இனப்பெருக்க வயது முதிர்ச்சி அடைந்த மாடுகளின் இனப்பெருக்க உறுப்புகள் அளவில் பெரியதாகும்
  • நல்ல தரமான தீவனம் அளிக்கப்படும்போது  வயது முதிர்ந்த மாடுகளின் எடையில் 66 % எடையினைக் கன்றுகள் அடையும்போது இனப்பெருக்க முதிர்ச்சியினை அடையும்

சினைப்பருவ அறிகுறிகள்  
  • சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும் மாடுகள் கொட்டகையிலுள்ள மற்ற மாடுகளை விட சீக்கிரம்  எழுந்திருக்கும்
  • மாடுகள் தீவனம் சரியாக எடுக்காமல், அடிக்கடி கத்திக்கொண்டு எப்போதாவது மட்டுமே  அசைபோடுவதுடன்,அமைதியின்றிக் காணப்படும்
  • பால் உற்பத்தி திடீரெனக் குறைந்துவிடும்
  • காளை மாடுகளைத் தேடும்
  • ஒரினச்சேர்க்கை அறிகுறிகளை வெளிப்படுத்தம் விதமாக சினைப்பருவ காலத்திலிருக்கும் மாடுகள், சினைப்பருவத்தில் இல்லாத மற்ற கறவை மாடுகளின் மீது ஏறும்
  • காளை தன் மீது ஏறுவதற்கு சினைப்பருவத்தில் இருக்கும் மாடுகள் அனுமதிக்கும்
  • காளைகள் தன் மீது ஏறும்போது சினைப்பருவத்தில் இருக்கும் மாடுகள் அமைதயாக இருக்கும். இது சினைப்பருவ காலத்தில் மாடுகள் இருப்பதற்கான உறுதியான அறிகுறியாகும்
  • இந்த அறிகுறிகள் 14-16 மணி நேரத்திற்கு  நீடிப்பதுடன், இதர சினைப்பருவகால அறிகுறிகளான அமைதியின்றி இருத்தல்,கத்துதல், தீவனம் எடுக்காமல் இருத்தல், பால் உற்பத்திக் குறைவு போன்ற இதர அறிகுறிகளும் காணப்படும்
  • சினைப்பருவ காலத்திலிருக்கும் மாடுகளின் இனப்பெருக்க உறுப்பிலிருந்து வடியும் கண்ணாடி போன்ற திரவம் மாடுகளின் வாலில் ஒட்டிக்கொண்டிருக்கும்
  • சினைப்பருவ காலத்தின் முதல் நிலையில் ,இனப்பெருக்க உறுப்பிலிருந்து வடியும் திரவம் தண்ணீர் போன்றும், பிறகு தடிமனாகவும் மாறும். சினைப்பருவ காலத்தின் கடைசி நிலையில் இத்திரவம் கடினமாகவும் நிறம் மாறியும் காணப்படும்

மாடுகள் சினைப்பருவத்தில் இருப்பதைக் கண்டறிதல்
  • சினைப்பருவக்காலத்தில் இருக்கும் மாடுகள் தங்கள் மீது மற்ற மாடுகளைத் தாவவும்,  ஏறவும் அனுமதிப்பது  சினைப்பருவ காலத்தின் முக்கியமான அறிகுறியாகும். இதனை மாடுகள் சினைப்பருவகாலத்தில் இருப்பதைக் கண்டறியும் பொறுப்பில் இருப்பவர் முறையாக கவனித்து,தங்களுடைய அனுபவம் மூலம் அறிந்து மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டலை செய்யலாமா என்பதைத் தீர்மானிக்கவேண்டும்
  • சினைப்பருவ காலத்தில் இருக்கும் மாடுகள் மற்ற மாடுகளை தவிர்த்து தங்களின் அதிகாரத்தை மற்ற மாடுகளின் மீது வெளிப்படுத்தும்

எருமைமாடுகளில் சினைப்பருவ அறிகுறிகளைக் கண்டறிதல்  
  • மற்ற மாடுகளின் மீது  தாவுதல்,மற்ற மாடுகளைத் தங்கள் மீது தாவ  அனுமதித்தல் போன்ற அறிகுறிகள் சினைப்பருவகாலத்தில் இருக்கும் பசுமாடுகள் வெளிப்படுத்தும்.
  • ஆனால் எருமை மாடுகளில் இந்த அறிகுறிகள் காணப்டாது
  • சினைப்பருவகாலத்தில் இருக்கும் எருமைகளின் இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவ ஒழுக்கும் மாடுகளைப் போல காணப்படாது. திடீரென இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவ ஒழுக்கு ஏற்பட்டு அது கீழே  விழுந்துவிடும்.இவ்வாறு ஏற்படும்  திரவ ஒழுக்கு குறைந்த அளவே இருக்கும்
  • சினைப்பருவ காலத்தில் இருக்கும் சில எருமை மாடுகள் கத்தவும் செய்யாது. குறிப்பாக அதிக பால் உற்பத்தி செய்யும் எருமைகள் ஊமை சினைஅறிகுறிகளை மட்டுமே வெளிப்படுத்தும்.
  • எருமைகளில் காணப்படும் சினைப்பருவ அறிகுறிகள் பின்வருமாறு
  • இனப்பெருக்க உறுப்பு சிவந்து,வீங்கிக் காணப்படுதல்.இனப்பெருக்க உறுப்பின் கீழ்ப்புறம் எண்ணெய் தடவினாற்  போன்று காணப்படுதல். இனப்பெருக்க உறுப்பின் இரண்டு இதழ்களும் விரிந்து காணப்படுதல்
  • சினைப்பருவ அறிகுறிகள் இல்லாத காலத்தில் காணப்படும் சுருக்கங்கள் மறைந்துவிடுதல்
  • இனப்பெருக்க உறுப்பின் உட்புறச்சவ்வு,சிவந்து, ஈரமாக கண்ணாடி போன்று பளபளப்பாகக் காணப்படுதல்
  • சினைப்பருவகாலத்தின் முன்னும் பின்னும் எப்போதாவது இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவ ஒழுக்கு காணப்படுதல்
  • இனப்பெருக்க உறுப்பிலிருந்து வடியும் கோழை  போன்ற திரவத்தின் நிறம்,தன்மை மற்றும் அதிலுள்ள கோழையின் அமைப்பு போன்றவற்றை  வைத்து எருமைகள் சினைப்பருவகாலத்தின் எந்த நிலையில் உள்ளன என்பதைக் கண்டறியலாம்
  • பால் உற்பத்தி  செய்யும் எருமைகள் சினைப்பருவ காலத்தில் இருந்தால் அவற்றின் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் விளைவாக மடிக்காம்புகள் வீங்கிக் காணப்படும்
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல். சிறுநீரானது குறைந்த அளவில் இனப்பெருக்க உறுப்பு மற்றும் மடிக்கு மேல் உள்ள தோல் பகுதியினை நனைக்கும் அளவிற்கு மட்டுமே இருக்கும்.இப்பகுதியில் பட்ட சிறுநீர் காய்ந்து  வெள்ளையாக இருக்கும்
  • சினைப்பருவத்தில் இருக்கும் எருமை மாடுகள் அமைதியின்றி, தீவனம்எடுக்காமல், தலையைத்  தூக்கிக்கொண்டு இருக்கும்
  • உள்ளூர் எருமை மாட்டினங்கள் அடிக்கடி கத்திக்கொண்டு,தீவனம் எடுக்காமல் இருப்பது சினைப்பருவகால அறிகுறியாகும்.இவற்றின் பால் உற்பத்தி குறைவாகவும் காணப்படும்.
  • எருமை மாடுகள் சில சமயங்களில் பற்களை வெளியே காட்டிக்கொண்டு கத்துவதும்  சினைப்பருவ காலத்தின் முக்கிய அறிகுறியாகும்
  • 49% எருமை மாடுகளில் இனப்பெருக்க உறுப்பிலிருந்து கோழை  வடிவது காணப்படும். சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும் நாளில் மட்டுமே திரவஒழுக்கு ஆரம்பித்து பிறகு நாள் ஆக ஆக அதன் நிறம் வெள்ளையாக மாறி, தடிமனாகவும் மாறும்
  • 60-70% எருமை மாடுகள் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள் சினைப்பருவத்திற்கு வரும்(சூரியன் உதித்த பிறகு, சூரியன் மறைவதற்கு முன்பாக)
  • எருமைகள் பொதுவாக இரவு நேரத்தில் இனப்பெருக்கம் செய்யும் என்பதை மனதில் கொண்டு  எருமைகளைப் பராமரிக்கும் வேலையாட்கள் காலையிலும்  மாலையிலும் எருமைகள்  சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனவா என்பதை கண்காணிக்கவேண்டும்
  • இனப்பெருக்கம் செய்யமுடியாதவாறு  அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காளைகளைக் கொண்டும் எருமைகள் சினைப்பருவத்தில் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியலாம்

சினைப்பருவத்தைக் கண்டறியம் இதர வழிமுறைகள்
  • இனப்பெருக்க காலத்தில் மாடுகளின் இனப்பெருக்க உறுப்பிலிருந்து வடியும் திரவ ஒழுக்கின் கிளை போன்ற அமைப்பை வைத்து மாடுகள் சினைப்பருவத்தில் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியலாம்
  • சினைப்பருவத்தைக் கண்டறிவதற்கென்றே பல்வேறு உபகரணங்கள் உள்ளன.இந்த உபகரணங்கள் மாடுகளின் வால் மற்றும் முதுகுப்பகுதியில் இணைக்கப்பட்டு சினைப்பருவத்தில் இருப்பது கண்டறியப்படுகிறது
  • சினைப்பருவத்தில் மாடுகள் மற்ற மாடுகளின் மீது தாவும்போது இந்த உபகரணங்களில் இருந்து நிறமூட்டப்பட்ட திரவம் வடியும்.இதனை தூரத்தில் இருந்து கூட பார்க்கமுடியும்
  • சின் காளை இனப்பெருக்க கண்டறியும் உபகரணம் மாடுகள் சினைப்பருவத்திலிருப்பதைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது.பந்து முனைப் பேனா செயல்படும் முறையில் இந்த உபகரணம் செயல்படுகிறது.இந்த உபகரணம் சினைப்பருவத்தைக் கண்டுபிடிக்கும் காளைகளின் கழுத்து சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும்
  • இந்த காளைகள் சினைப்பருவத்திலிருக்கும் மாடுகளின் மீது ஏறும்போது இந்த உபகரணத்தில் இருக்கும் நிறமூட்டப்பட்ட திரவம் மாடுகளின் முதுகில் வடிந்து விடும்.இதிலிருந்து சினைப்பருவத்திலிருக்கும் மாடுகளைக் கண்டறியலாம்
  • ஓம் மீட்டர் மற்றும் எலெக்ட்ரோடுகளைப் பயன்படுத்தி ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் மாடுகளில் சினைப்பருவத்தைக் கண்டறியும் உபகரணம் ஒன்றை வடிவமைத்துள்ளனர்
  • இந்த உபகரணத்தின் ஒரு பகுதியினை மாடுகளின் இனப்பெருக்க உறுப்பில் வைக்கும்போது மாடுகள் சினைப்பருவத்தில் இருப்பதைக் கண்டறியலாம்
  • பீடோமீட்டர் எனப்படும் கருவியும் மாடுகளின் நடமாட்டத்தை அறிய உதவுகிறது
  • சினைப்பருவ காலத்தில் மாடுகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.இதனை அடிப்படையாகக் கொண்டு பீடோமீட்டர் கருவியை மாடுகளின் கால்களில் பொருத்தி மாடுகள் சினைப்பருவத்திலிருப்பதைக் கண்டறியலாம்
  • இனப்பெருக்க உறுப்பின் வெப்பநிலையினை கண்டுபிடித்தும் மாடுகள் சினைப்பருவத்திலிருப்பதைக் கண்டறியலாம்
  • சினைப்பருவத்தில் இருக்கும்போது மாடுகளின் இனப்பெருக்க உறுப்பின் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.ஆனால் இம்முறை பொதுவாக பின்பற்றப்படுவதற்கு ஏற்றதல்ல
  • பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை காரணங்களால் மேற்கூறிய முறைகளில் சினைப்பருவத்தை மாடுகளில் கண்டறிவது வளரும்நாடுகளில் சாத்தியமல்ல
  • வளரும் நாடுகளில் மாடுகளில் சினைப்பருவ அறிகுறிகளைப் பயன்படுத்தி மாடுகள் சினைப்பருவத்தில் இருப்பதைக் கண்டறியலாம்
  • பெரிய பண்ணைகளில் மாடுகளை காளைகளுக்கு அருகில் ஓட்டிச் சென்று மாடுகள் சினைக்காலத்தல் இருப்பதைக் கண்டறியலாம்.சினைப்பருவத்தினைக் கண்டறிய இனப்பெருக்கம் செய்ய முடியாதவாறு அறுவைசிகிச்சை செய்யப்பட்ட காளைகளைப் பயன்படுத்தலாம்
  • இனப்பெருக்கம் செய்ய முடியும் காளைகளின் ஆணுறுப்பின் மீது துணி அல்லது சாக்கினைப் பொருத்தியும் மாடுகள் சினைப்பருவத்தில் இருப்பதைக் கண்டறியப் பயன்படுத்தலாம்
  • சினைப்பருவத்தைக் கண்டறியப் பயன்படுத்தும் காளைகளுக்கு எந்தவொரு நோய்த்தொற்றும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்

சினை ஊசி போடும் நேரம்  
  • சினைப்பருவ  அறிகுறிகளை வெளிப்படுத்தி 12 மணி நேரம் கழித்து மாடுகளில் சினை முட்டை வெளியேற்றப்படும்.இவ்வாறு வெளியேற்றப்பட்ட சினைமுட்டை சினைக்குழாயை அடைய 6 மணிநேரமாகும்
  • சினை ஊசி போட்டு சில நிமிடங்களுக்குள் விந்து சினைக்குழாயை அடைந்தாலும்,அது பெண் இனப்பெருக்க உறுப்பில் 6 மணி நேரமாவது இருந்தால் தான் கருவுறுதலை ஏற்படுத்தும் திறனைப் பெறுவது சாத்தியம்
  • கருவுறுதலுக்கு விந்தினைத் தயார் செய்வது கெப்பசிடேட்டிங் எனப்படும்
  • பெண் இனப்பெருக்க உறுப்பில் விந்து 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். ஆனால் சினை முட்டை அது வெளி வந்த 10 மணி நேரம் வரைதான் உயிரோடிருக்கும்
  • எனவே தான் சினை ஊசியினை மாடுகள் அவற்றின் சினைப்பருவத்தின் மத்தியில் இருக்கும்போது மாடுகளுக்குப் போடவேண்டும்
  • பொதுவாக மாடுகள் தங்கள் சினைப்பருவ அறிகுறிகளை காலையில் வெளிப்படுத்தினால் அவற்றுக்கு மாலையில் செயற்கை முறைக் கருவூட்டல் அல்லது சினை ஊசி போடவேண்டும்
  • கன்று ஈன்ற 30-40 நாட்கள் கழித்து மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும். கன்று ஈன்று 50 நாட்கள் கழித்தும் மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை எனில் மாடுகளுக்கு ஏதேனும் குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். எனவே மாடுகளை பரிசோதித்துப் பார்க்கவேண்டும்
  • எருமைகள் சினைப்பருவத்தின் சரியான நிலையிலிருக்கும்போது அவற்றுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யவேண்டும்.ஆனால் எருமைகள் வெளிப்படுத்தும் சினைப்பருவ அறிகுறிகளைப்பற்றி நன்றாக அறிந்திருப்பது மிகவும் நல்லது
  • எருமைகள் சினைப்பருவத்தின் சரியான நிலையிலிருப்பதை அவற்றின் இனப்பெருக்க உறுப்பிலிருந்து வெளி வரும் திரவ ஒழுக்கின் நிறம் மாறியிருப்பதை வைத்துக் கண்டறியலாம். இந்த திரவ ஒழுக்கு எருமைகளின் முந்தைய சினைப்பருவத்தில் நிறமற்று  கண்ணாடி போன்றும், சினைப்பருவத்தின் பிந்தைய நிலையில் வெள்ளையாகவும் இருப்பதை வைத்து அவை சினைப்பருவத்தின் எந்த நிலையில் இருக்கின்றன என்பதைக் கண்டறியலாம்
  • சினைப் பருவத்தின் மத்திய நிலையில் எருமைகளின் பிறப்புறுப்பின் இதழ்கள் வீங்கி அவற்றுக்கு இடையில் ஒரு சிறிய திறப்பு காணப்படும். மேலும் அந்த இதழ்களின் உட்பகுதியில் எண்ணெய் தடவியது போன்று காணப்படும்
top

கன்று ஈனுவதற்கான அறிகுறிகள்
  • கன்று ஈனும் மாடுகள் மற்ற மாடுகளில் இருந்து தனியே பிரிந்து காணப்படும்
  • தீவனம் எடுக்காமல் அயற்சியுடன் காணப்படுதல்
  • மடி மற்றும் மடிக்காம்புகள் வீங்கி,  காம்புகளில் இருந்து பால் சொட்டு சொட்டாக வடிதல்
  • மாடுகளின் இடுப்பின் தசை நார்கள் கன்று ஈனுவதற்கு ஒரு நாள் முன்பாகத் தளர்ந்து காணப்படுதல். வாலின் அடிப்பகுதியில் தசை நார்கள் வலுவிழந்து தளர்ந்து காணப்படுவதால் அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோன்றுதல்
  • பிறப்புறுப்பு வீங்கி தொளதொளவென்று காணப்படுதல்
  • மாடுகள் அங்குமிங்கும் அலைந்து கொண்டு பின்புறம் நோக்கி உதைத்துக்கொண்டு இருத்தல்
  • கன்று ஈனுதல் மூன்று நிலைகளாக நடைபெறும்.1.தயாரிப்பு நிலை (கருப்பை சுருக்கம் மற்றும்  கருப்பையின் வாய் விரிவடைதல்)2.கன்றை வெளித்தள்ளும் நிலை 3. நஞ்சுகொடியினை வெளியேற்றல்
  • முதல் நிலை ஏற்பட்ட 12 மணி நேரத்திற்குள் மாடு கன்றினை ஈனும்
  • கன்று ஈன்றவுடன் மாடுகள் நஞ்சுகொடியினை வெளித்தள்ளுகின்றனவா என்பதை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். நஞ்சுக்கொடியினை மாடு வெளித்தள்ளியவுடன் நஞ்சுகொடியினை மாடு தின்றுவிடுவதைத் தவிர்ப்பதற்காக அதனை முறையாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.

மாடுகளில் இனப்பெருக்கத்திறனை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்  
  • மாட்டுப்பண்ணையில் மாடுகளின் இனப்பெருக்கத்திறனை அதிகரிப்பதற்கு பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படவேண்டும்
  • மாடுகளின் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும் நாள், காளையுடன் இனப்பெருக்கத்திற்காக சேர்த்த நாள் மற்றும் கன்று ஈன்ற நாள் போன்ற விவரங்களை பதிவேட்டில் எழுதி வைத்திருக்கவேண்டும்
  • இந்த விவரங்களைக் கொண்டு மாடுகள் சினைப்பருவத்திற்கு வரும் உத்தேச நாளைக் கணக்கிட்டு மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனவா என்பதைக் கண்காணிக்கவேண்டும்
  • பெரிய மாட்டுப் பண்ணைகளில் சினைப்பருவத்தைக் கண்டறியும் காளைகளைப் பயன்படுத்தலாம்
  • ஒவ்வொரு மாட்டினுடைய முழுமையான இனப்பெருக்க வரலாறு, முந்தைய இனப்பெருக்கத்திறன், இனப்பெருக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் போன்றவற்றை முறையாக குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்
  • மாடுகளின் ஒழுங்கற்ற சினைப்பருவம், அவற்றின் பிறப்புறுப்பில் இருந்து வெளிவரும் திரவ ஒழுக்கின் நிற மாறுபாடு போன்றவற்றுக்கு தக்க சிகிச்சை அளிக்கவேண்டும்
  • நஞ்சுக்கொடி போடாத மாடுகளுக்கு முறையான சிகிச்சை அளித்து, அடுத்த முறை அவற்றை இனப்பெருக்கம் செய்வதற்கு முன்பு அவற்றின் இனப்பெருக்க உறுப்பை பரிசோதித்து ஏதேனும் கோளாறுகள் இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும்
  • பண்ணை மேலாளர் மாடுகளுக்கு சினை ஊசி போட்ட 24-36 மணி நேரத்திற்குப் பிறகு அவற்றின் பிறப்புறுப்பில் இருந்து சினைப்பருவ காலத்தின் மத்திய பகுதியில் ஏற்படும் இரத்த ஒழுக்கு இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கவேண்டும்
  • இவ்வாறு இரத்த ஒழுக்கு சினை ஊசி போட்ட 24 மணி நேரம் கழித்துத் தென்பட்டால் மாடுகள் மிகவும் தாமதமாக கரூவூட்டல் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளவேண்டும்
  • கருவூட்டல் செய்யப்பட்டு 36மணி நேரம் கழித்து இரத்த ஒழுக்கு காணப்பட்டால் மாடுகள் மிகவும் முன்பாகவே கருவூட்டல் செய்யப்பட்டிருக்கின்றன என்று அர்த்தம்.இதனை வைத்து மாடுகள் கருவுறாததற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்
  • கருவூட்டல் செய்து 45-60 கழித்து மாடுகளுக்கு சினைப்பரிசோதனை செய்யவேண்டும்.அவை சினையாக இல்லையெனில், மீண்டும் அவற்றை இனப்பெருக்கம் செய்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும்
  • காளைகள் மூலம் இனவிருத்தி செய்வதை விட செயற்கை முறைக் கருவூட்டல் மூலம் மாடுகள் கருவுறும் விகிதம் குறைந்தால், செயற்கைமுறை கருவூட்டல் செய்த நேரம், செய்த முறை, விந்தின் தன்மை போன்றவற்றை பரிசோதிக்கவேண்டும்
  • மாடுகளுக்கு முறையான உடல்நலப்பராமரிப்பு, நோய்ப்பரிசோதனை மற்றும் நோய்களுக்கெதிரான தடுப்பூசி அளித்தல் மிகவும் அவசியமாகும்
  • சினைப்பருவ அறிகுறிகள் வெளிப்படுத்தும் காலம் ஒழுங்கற்று இருந்தால் மாடுகளுக்கு நீர்க்கட்டிகள் கருமுட்டைப்பையில் இருக்கின்றன என்று அர்த்தம். சினைப்பருவ அறிகுறிகளுக்கு இடையில் குறைந்த மற்றும் நீண்ட கால இடைவெளி இருந்தால் சினைப்பருவத்தை முறையாகக் கண்டறியவில்லை என்று அர்த்தம்
  • ஊமை சினை அறிகுறிகள்-சில மாடுகளில் சினைப்பருவ அறிகுறிகள் நன்றாக வெளிப்படுத்தப்படாமலும், அறிகுறிகளே வெளியில் தெரியாமலும் இருக்கும்
  • ஊமை சினைப் பருவ அறிகுறிகள் எருமைகளில் பொதுவாகக் காணப்படும். ஆனால் சினை முட்டை வெளியேறுவது எப்போதும் போலவே இருப்பதால் இந்த எருமைகளை கருவூட்டல் செய்யும் போது அவற்றுக்கு சினை பிடிக்கும்
  • ஆனால் மாடுகளில் சினைப்பருவ காலத்தில் கருமுட்டைப்பையில் சாதாரணமாக ஏற்படும்மாற்றங்களே ஏற்படும். ஆனால் பழக்க வழக்க மாறுபாடுகளும்,இனப்பெருக்கத்தினை ஏற்றுக்கொள்ளும் திறனும்  மாறுபடும்
  • இந்த மாறுபாடு வெயில் காலங்களில் மற்ற பருவ காலங்களை விட அதிகமாகவும், கிடேரிகளில் அதிகமாகவும் காணப்படும்
  • சரிவிகிதத் தீவனமளித்தல், முறையான வெயில் கால மேலாண்மை, சினைப்பருவத்தைக் கண்டறியும் காளைகளைப் பயன்படுத்துதல் போன்றவை ஊமை சினைப்பருவத்தைக் கண்டறியும் பல்வேறு முறைகளாகும்
  • சினைப்பருவத்திற்கு வராமல் இருப்பது கருமுட்டைப்பை முதிர்ச்சி அடையாமல் இருப்பதாலோ அல்லது கார்பஸ் லுயூட்டியம் எனும் பகுதி கருமுட்டையில் நிலையாக இருப்பதாலும் ஏற்படுகிறது. முந்தைய நிலையில் கருமுட்டைகள் உருவாவதில்லை எனவே கிடேரிகள் சினைப்பருவத்திற்கு வருவதில்லை
  • கருமுட்டைப்பைகள் முதிர்ச்சி அடையாததற்கான முக்கிய காரணம் சத்துக்குறைபாடாகும். இது தவிர மரபியல் காரணங்களும் கருமுட்டைப்பைகள்  முதிர்ச்சி அடையாததற்கு காரணமாகின்றன
  • கார்பஸ் லுயூட்டியம் எனப்படும் பகுதி கருமுட்டையில் நிலையாக இருப்பதற்கு பல்வேறு ஹார்மோன் குறைபாடுகளும் சரிவிகிதமற்றதன்மையும் காரணமாக இருக்கிறது. இவ்வாறு நிலையாக இருக்கும் கார்பஸ்லுயூட்டியத்தால் மாடுகள் சினைப்பருவத்திற்கு வருவது தடுக்கப்படுகிறது.இதற்கான பொதுவான காரணம் நஞ்சுகொடி தங்குதலும்,கருப்பையில் நோய்த் தொற்றுகளுமாகும்
  • கன்று ஈன்ற பிறகு சிறிது காலத்திற்கு மாடுகள் பால் கொடுப்பதால், சினைப்பருவத்திற்கு வருவதில்லை

இளங்கன்றுகளைப் பராமரித்தல்
  • பொதுவாக இளங்கன்றுகள் அவற்றின் தாயால் நன்கு பராமரிக்கப்படும்.எனவே  பிறந்த இளங்கன்றுகளைப் பராமரிக்க நாம் குறைந்த கவனம் செலுத்தினாலே போதுமானது
  • மாடுகள்,செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் தங்களது கன்றுகள் அல்லது குட்டிகளை ஈன்றவுடன், குட்டிகளின் மூக்கிலுள்ள கோழையைச்  ஒரு சுத்தமான ஈரமில்லாத துணியினால் அல்லது ஒரு  கை நிறைய வைக்கோலை எடுத்து சுத்தம் செய்துவிட வேண்டும்.
  • இளங்கன்றுகளை ஈன்ற தாய்க்கும் கன்றுக்கும் ஒரு அமைதியான கொட்டகை ஒதுக்கப்பட்டு தாய்க்கும் சேய்க்கும் இடையில் ஒரு பந்தம் ஏற்பட வழிவகை செய்யவேண்டும்
  • தாய் மாடு கன்றினை நக்க கட்டாயம் அனுமதிக்கவேண்டும்.தாய் மாடு கன்றினை நக்கவில்லை என்றால் கன்றின் மீது சிறிது  உப்பு அல்லது தவிட்டைத் தூவி தாய்மாட்டினை கன்றினை நக்கத் தூண்டவேண்டும்
  • கன்று ஈன்றவுடன் கன்றின் தொப்புள் கொடியினை கன்றின் தொப்புளில் இருந்து 1 அங்குல நீளம் விட்டு ஒரு சுத்தமான நூலால் கட்டிவிட வேண்டும். பிறகு தொப்புள் கொடியை நறுக்கிவிட்டு டிங்ச்சர் அயோடின் தடவ வேண்டும்
  • கன்று ஈன்ற ஒரு மணி நேரத்திற்குள் கன்றினை தாயிடம்  போதுமான  அளவு சீம்பாலைக் குடிக்கச் செய்யவேண்டும். சீம்பாலில் இருந்து கன்றுக்குத் தேவையான நோய் எதிர்ப்புசக்தி கிடைக்கிறது
  • இளங்கன்றுகளுக்கு வசதியாக இருக்கும் வகையில் கொட்டகை அமைத்து அவற்றைப் பராமரிக்கவேண்டும். இளங்கன்றுகளை வயதான மாடுகளிடமிருந்து தனியாகப் பிரித்து பராமரிக்கவேண்டும்
  • குளிர் காலத்தில் கன்றுகளுக்கு வெதுவெதுப்பாக இருக்கும்வகையில் கொட்டகையில் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்
  • கன்றுகள் படுப்பதற்கு ஏதுவாக அவற்றின் கொட்டகையில் போதுமான அளவு வைக்கோல் போடவேண்டும்
  • கன்றுகளுக்கு வெதுவெதுப்பாக இருப்பதற்கு ஏற்றவாறு அவற்றுக்கு செயற்கையாக லைட்டைப் பொருத்தவேண்டும்
  • தேவையான வெளிச்சம், காற்றோட்டம் மற்றும் சுகாதாரமான சூழ்நிலையினை கன்றுகளுக்கு அளிப்பதால் அவற்றுக்கு நோய் தாக்குத்தலைக் குறைக்கலாம்

பால் வற்றிய மாடுகளைப் பராமரித்தல்  
  • மாடுகள் தங்களின் பால் சுரப்பினை நிறுத்தி அவற்றின் மடிக்கு போதுமான அளவு ஓய்வு கொடுக்கும் நிலையிலிருக்கும் மாடுகள் பால் வற்றிய கறவை மாடு எனப்படுகின்றன
  • பால் கொடுக்கும் மாடுகளில் இருந்து பால் வற்றிய மாடுகள் தனியாகப் பிரித்து பராமரிக்கப்படவேண்டும்
  • பசு மாடுகள் தங்களின் கறவை வற்றிய நிலையில் மடி நோய்க்காக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அடுத்த கறவையில் இம்மாடுகள்ளுக்கு மடி நோய் வருவது தடுக்கப்படுகிறது

சினை மாடுகளைப் பராமரித்ததல்
  • சினையுற்றிருக்கும் மாடுகளுக்கு அவற்றினுள் வேகமாக வளரும் கருவிற்காகவும், பிற்கால பால் உற்பத்திக்குத் தேவைக்கான சக்தியைச் சேமித்து வைப்பதற்கும் அவற்றிற்கு அதிகப்படியான தீவனம் அளிக்கப்படவேண்டும்
  • சினையுற்றிருக்கும் மாடுகளை அவற்றின் கடைசி சினைக்காலத்தின்போது மற்ற மாடுகளிலிடமிருந்து தனியாகப் பிரித்து பராமரிக்கப்படவேண்டும்
  • கன்று ஈனும் கொட்டகையில் சினையுற்ற மாடுகளைத் தனியாகப் பராமரிக்க வேண்டும்
  • சினை மாடுகளின் கொட்டகையில் போதுமான அளவு வைக்கோல் பரப்பி மாடுகள் படுப்பதற்கு வசதி செய்யவேண்டும்
  • சினை மாடுகளின் கொட்டகைத் தரை வழுக்காமல் இருக்கவேண்டும்
  • மாடுகளின் கடைசி சினைக் காலத்தில் அவற்றுக்கு மலமிலக்கும் தன்மை வாய்ந்த தீவனங்களை அளிக்கவேண்டும்

வேலைக்கு உபயோகப்படுத்தப்படும் காளை மாடுகளைப் பராமரிப்பதும் அவற்றுக்கான தீவன மேலாண்மையும்  
  • வேலைக்குப் பயன்படுத்தப்படும் காளை மாடுகளை நேர் வெயிலில் வேலை செய்யப் பயன்படுத்தக்கூடாது
  • வெயில் காலங்களில் காளை மாடுகளை காலை 5.00 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் வேலை செய்யப் பயன்படுத்தவேண்டும்
  • கடினமான தரையில் வேலைக்குப் பயன்படுத்தப்படும் காளை --மாடுகளுக்கு முறையாக லாடம் அடிக்கவேண்டும். இல்லையேல் அவற்றின் குளம்புகள் பாதிக்கப்படும்
  • விவசாய வேலைகளுக்கு ஈடுபடுத்தப்படும் காளை மாடுகளுக்க 2-3 மாதங்களுக்கு ஒரு முறை லாடம் அடிக்கவேண்டும்
  • பசு மாடுகளைப் போன்றே காளைகளையும் பராமரிக்கலாம். இலகுவான வேலைக்குப் பயன்படுத்தும்போது காளைகளுக்கு உலர் தீவனம் போதுமானது. கடினமான வேலைகளுக்குப் பயன்படுத்தும்போது அவற்றுக்கு எரி சக்தி அதிகமுள்ள தரமான தீவனம் தினசரி 1-2 கிலோ கொடுக்கவேண்டும்

காளைகளுக்கான பொதுவான பராமரிப்பு மற்றும் மேலாண்மை
  • மாடுகளுடன் இனச்சேர்க்கைக்காகப் பயன்படுத்தப்படும் காளைகள்ளை நன்றாகப் பராமரிப்பது முக்கியமான அம்சமாகும்
  • அதிக உடல் எடை கொண்ட காளைகள் தரம் குறைந்த விந்தினை உற்பத்தி செய்யும் அல்லது மாடுகளுடன் சேராது
  • இனச்சேர்க்கைக்காக பயன்படுத்தப்படும் காளைகளுக்கு போதுமான உடற்பயிற்சி அளிக்கப்படவேண்டும். இவ்வாறு உடற்பயிற்சி அளிக்கப்பட்ட காளைகள் அதிகப்படியான விந்தினை உற்பத்தி செய்யும்
  • இனவிருத்திக்காகப் பயன்படுத்தப்படும் காளைகளுக்கென தனியாக கொட்டகை போதுமான இடவசதியுடன் அமைக்கவேண்டும்
  • காளைக் கொட்டகை எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதுடன், தண்ணீர் எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும்
  • காளைகளுக்கு எப்போதும் போதுமான அளவு எரிசக்தி, வைட்டமின்கள், தாது உப்புகள், புரதம் நிறைந்த தீவனத்தை அளிக்கவேண்டும்
  • இனவிருத்தி காலத்திற்கு முன்பும், இனவிருத்தி செய்யப்படும் போதும் காளைகளுக்குப் போதுமான அளவு பசுந்தீவனம் அளிக்கப்படவேண்டும்
  • பொதுவாக காளைகள் ஆக்ரோஷத்துடன் காணப்படும் என்பதால் அவற்றுக்கு எப்போதும் மூக்கு வளையம் போட்டு கட்டுப்படுத்தப்படவேண்டும்
  • பொதுவாக காளைகளுக்கு அடிக்கடி போதுமான அளவு தீவனம் அளித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் ஒரே சமயத்தில் அதிகப்படியான தீவனமோ அல்லது குறைவான அளவு தீவனமோ அளிக்கக்கூடாது
  • காளைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை மாடுகளுடன் இனவிருத்தி செய்ய அனுமதிக்கலாம். காளைகளுக்குப் போதுமான அளவு உடற்பயிற்சி அளித்தால் மட்டுமே அவை சுறுசுறுப்பாகவும், அதிகப்படியாக உடல் எடை கூடாமலும் இருக்கும்
  • காளைகளின் உடலை நன்கு சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகும். எருமைக் காளைகளின் அதிகப்படியான முடியை அடிக்கடி சவரம் செய்வதும் அவசியமாகும்

வேலைக்குப் பயன்படுத்தப்படும் காளைகளுக்கான கவனிப்பு மற்றும் பராமரிப்பு  
  • காளைகள் பொதுவாக விவசாய வேலைகளுக்கும், போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன
  • சில காளைகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்பதால் அவற்றை மூக்கு வளையம் அல்லது மூக்கணாங்கயிறு மூலம் கட்டுப்படுத்தவேண்டும்
  • வேலைக்காக உபயோகப்படுத்தப்படும் காளைகளின் குளம்புகளுக்கு உலோகத்தாலான லாடம் அடிப்பதால் குளம்புகளின் தேய்மானத்தைக் குறைக்கலாம்
  • காளைகளை வேலைக்குப் பயன்படுத்தப்படும் நேரம் பின்வருமாறு;
  • சாதாரண வேலைகள் – 6 மணி நேரம் வண்டி இழுப்பதற்கும், 4 மணி நேரம் நிலம்  உழுவதற்கும்
  • கடினமான வேலை – 8 மணி நேரம் வண்டி இழுப்பதற்கும், 6 மணி நேரம் நிலம் உழுவதற்கும்
  • போதுமான அளவு உலர் தீவனமும், 1-2 கிலோ அடர்தீவனமும் காளைமாடுகளுக்கு அவற்றின் வேலை நேர இடைவெளியில் அளிக்கலாம். காளைகளை திறந்த வெளியில் மேய்ச்சலுக்கும் அனுதிக்கலாம்
  • போதுமான அளவு இட வசதியுடன், வெயில் மற்றும் குளிரிலிருந்து பாதுகாக்க காளைகளுக்குக் கொட்டகைகள் அமைக்கவேண்டும்
  • காளைகளுக்குப் போதுமான அளவு குடிநீர் எப்போதும் கிடைக்குமாறு செய்வது அவசியமாகும். மேலும் போதுமான கால இடைவெளியில் அவற்றின் உடலை சுத்தப்படுத்துவதும் அவசியமாகும்

காளைகளை மேலாண்மை செய்தல்
  • காளைகள் மாட்டுப் பண்ணையின் மிக முக்கியமான அங்கமாகும். இனவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் காளைகள் மரபுரீதியாக உயர் தரத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாமல், அவை இனவிருத்திக்குத் தயாராக இருக்குமாறு போதுமான அளவு தீவனம் அளிக்கப்பட்டு பராமரிக்கப்படவேண்டும்
  • இனவிருத்திக்குப் பயன்படும் காளைகள் அவற்றின் தாய், தந்தையர் மற்றும் மூதாதையரின் குண நலன்களைப் பின்பற்றியே தேர்ந்தெடுக்கப்படவேண்டும். மேலும் காளைகள் அவற்றின் இனப்பெருக்கமுதிர்ச்சியை அடைந்தவுடன் பண்ணையிலுள்ள மற்ற மாடுகள், கிடேரிகளிடமிருந்து தனியாகப் பிரித்துப் பராமரிக்கப்படவேண்டும்.பொதுவாக உள்நாட்டின காளைகள், எருமைக் காளைகள்  1 ½ முதல் 21/2 வயதில் இனப்பெருக்க முதிர்ச்சி அடையும். ஆனால் கலப்பினக் காளைகள் மேற்கூறிய வயதிற்கு முன்பாகவே இனப்பெருக்க முதிர்ச்சியை அடையும்
  • காளைக் கன்றுகளின் கொம்பினை அவற்றின் சில நாட்கள் வயதிலேயே ரசாயன முறைகளின் மூலம் அல்லது சூடான இரும்பு கம்பி மூலம் தீய்த்து விட வேண்டும்
  • காளைக் கன்றுகளுக்கு கொம்பு நீக்கம் செய்வதால் அவற்றைப் பாதுகாப்பாக கையாளமுடியும்
top

காளைகளைக் கட்டுப்படுத்துதல்  
  • காளைக் கன்றுகளுக்கு அவற்றின் ஒரு வருட வயதில் மூக்கு வளையம் போடவேண்டும். ஏனெனில் ஒரு வருட வயதில் தான் காளைக் கன்றுகளுக்கு வலிமை கிடைக்கும்
  • ஒரு வருட வயதில் சிறிய மூக்கு வளையத்தைப் போட்டுவிட்டு பிறகு காளைகள் முதிர்ச்சி அடையும் போது பெரிய மூக்கு வளையத்தைப் போடலாம்
  • அலுமினியம், தாமிரம் அல்லது இதர துருப்பிடிக்காத உலோகக் கலவையினாலான மூக்கு வளையங்கள் இரண்டு அரை வட்ட வடிவில் செய்யப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும்.
  • இரண்டு அரை வட்ட வளையங்கள் இணைக்கப்பட்டிருக்கும் இடம் மொழுமொழுவென்று இருக்குமாறு வடிவமைக்கப்படவேண்டும்
  • மூக்குப்பகுதியானது மிகவும் மென்மையானது என்பதால் மூக்கில் பொருத்தப்பட்டிருக்கும் வளையத்தால் காளைகளின் தலையை உயர்த்தி பணியாளர்கள் ஓட்டிச்செல்லுவதற்கு வசதியாக இருக்கும்
  • காளைகளைக் கட்டுப்படுத்தவதற்கு மூக்கு வளையம் மிகவும் முக்கியமாகும். காளை மாடுகளை ஓட்டிச்செல்லுவதற்கான இரும்புக் குச்சிகள் மூக்கு வளையத்திற்குள் பொருத்தப்படும்
  • மூக்கு வளையத்திற்குள் ஒரு கயிறு நுழைத்து அக் கயிறை காளைகளின் கொம்பைச் சுற்றி கட்டுவதால் காளைகளை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்

காளைகளுக்குப் பயிற்சி அளித்தல்
  • காளைகளைக் கையாளுவதற்கும், நடத்திச்செல்வதற்கும் அவற்றின் இளம் வயதிலேயே பயிற்சி அளிக்கவேண்டும்
  • இளம் வயதிலேயே காளைகளுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் வயது முதிர்ந்தவுடன் அவற்றைக் கட்டுப்படுத்துவது எளிது
  • காளைக் கன்றுகள் 4-6 மாத வயதை அடைந்தவுடன் அவற்றின் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி அவற்றைக் கையாளலாம்
  • பிறகு அவற்றிற்கு மூக்கு வளையம் போட்டு அதில் ஒரு கயிறு அல்லது குச்சியை வைத்தும் அவற்றைக் கட்டுப்படுத்தலாம்
  • காளைகளை ஓட்டிச்செல்லும்போது பண்ணைப் பணியாளர் காளைக்கு முன்னால் எப்போதும் செல்லக்கூடாது. மாறாக காளையின் இட அல்லது வலப்புறத்திலோ, காளையின் தலையை உயர்த்திப் பிடித்தவாறு செல்லவேண்டும்
  • இவ்வாறு தலையை உயர்த்திப் பிடிக்காமல் காளையை ஓட்டிச்சென்றால் அவை எங்காவது இடித்துக்கொள்ளும்
  • காளைகளைக் கையாளும்போதும் அவற்றை ஓட்டிச்செல்லும்போதும் காளைகள் கையாள அபாயகரமானவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஏற்கெனவே கையாண்ட அல்லது பழக்கப்பட்ட காளை என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது

காளைகளுக்குப் உடற்பயிற்சி அளித்தல்  
  • இளங்காளைகள் மற்றும் வயது முதிர்ந்த காளைகளுக்கு தினமும் முறையான உடற்பயிற்சி அளிக்கவேண்டும். இவ்வாறு உடற்பயிற்சி அளித்தால் தான் காளைகளின் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல், உடற்கட்டோடு இருக்கும்
  • உடற்பயிற்சி அளிப்பதால் அதிகப்படியாக வளரும் குளம்புகள் தேய்வதால் காளைகள் நன்றாக நடப்பதற்கும் வழி ஏற்படுகிறது

வயது முதிர்ந்த காளைகளைப் பராமரித்தல்
  • இனவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் காளைகளை பண்ணையிலுள்ள மற்ற மாடுகளுடன் சேர்ந்திருக்க அனுமதிக்கக்கூடாது. காளைகள் தனித்தனியான கொட்டகைகளில் பராமரிக்கப்படவேண்டும்
  • இவ்வாறு தனித்தனியாகப் பராமரிப்பதால் காளைகள் இனவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் எண்ணிக்கை கட்டுக்குள் வைத்திருக்கமுடியும். மேலும் அவற்றின் இனவிருத்தி பற்றிய விவரங்களை பதிவும் செய்துகொள்ளலாம்
  • காளைகளின் ஆணுறுப்பைச் சுற்றியுள்ள முடியினை குறிப்பிட்ட கால இடைவெளியில் வெட்டி விடவேண்டும்
  • ஆனால் இம்முடிகளை மிகவும் சிறியதாக வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டினால் அது ஆணுறுப்பில் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் அவற்றை 1  செமீ நீளம் விட்டு வெட்டி விடவேண்டும்

காளைகளின் இனவிருத்திப் பண்பை பராமரித்தல்  
  • குறைந்த அல்லது அதிக வயது, பயிற்சியின்மை, உடற்பயிற்சியால் சோர்வுறுதல், அடிக்கடி இனவிருத்திக்கு உபயோகப்படுத்துதல், புதிய இடங்கள் அல்லது பழக்கமற்ற இடங்களில் விந்து சேகரித்தல், விந்து சேகரிக்கும் உபகரணங்களை முறையற்று உபயோகப்படுத்தல், தவறான தீவன மேலாண்மை, அதிக உடல் எடை, பிறவிக்கோளாறுகள், தற்காலிகமாக அடிபடுதல் அல்லது காளைகளின் கால்கள், முதுகுப்பகுதி மற்றும் ஆணுறுப்பில் நீண்ட நாட்களாகக் காணப்படும் பாதிப்பு போன்ற பல காரணங்களால் காளைகளின் இனப்பெருக்க குணநலன் பாதிக்கப்படுகிறது. மேற்கூறிய நிலைகளை கண்டறிந்தவுடன் உடனே அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்
  • சில காளைகளில் விந்து சேகரிக்கப் பயன்படுத்தப்படும் செயற்கை பெண் உறுப்பினால் ஒவ்வாமை ஏற்படும். ஆனால் சில காளைகள் கடினமாக கையாளும்போதும் தாங்கிக்கொள்ளும் தன்மை படைத்தவை
  • முறையற்ற கையாளும் முறைகளால் காளைகளின் இனப்பெருக்க குணநலன்களான மாடுகளின் மீது ஏறுதல், ஆணுறுப்பு வெளிவருதல், விந்தினை வெளியேற்றுதல் போன்றவை பாதிக்கப்படுகின்றன
  • பழக்கப்பட்ட சூழ்நிலைகளில், எப்போதும் கையாளும் பணியாளர் காள்ளைகளைக் கையாளும்போது பெரும்பான்மையான காளைகள் விந்தினை வெளியேற்றும்.
  • வலி ஏற்படுத்தும், வசதியற்ற மற்றும் கவனத்தை ஈர்க்கும் மற்ற சூழ்நிலைகளால் இனப்பெருக்க குணநலன்கள் பாதிக்கப்படுகின்றன
  • மிகவும் மென்மையான குணாதிசியத்தை உடைய காளைகளில் இனப்பெருக்ககுணநலன்கள் திடீரென பாதிக்கப்படும்
  • இவ்வாறு இனப்பெருக்க குணநலன்கள் பாதிக்கப்படும்போது அந்த காளைகளுக்கு முறையாக ஓய்வு அளிக்கப்படவேண்டும். இந்த தடைகள் காளைகளின் சூழ்நிலையினை மாற்றுவதால் மாறிவிடும்
  • கிடேரிகள் மற்றும் மாடுகளுடன் சேர்த்தே பராமரிக்கப்படும் இளங்காளைகளுக்கான வேலைப்பளு மிகவும் அதிகம்
  • காளையால் இனவிருத்தி செய்யப்படும் மாடுகளின் எண்ணிக்கையோ அல்லது எத்தனை முறை காளைகள் மாடுகளுடன் இனவிருத்தி செய்துள்ளது என்பது முக்கியமல்ல. எந்த ஒரு காளையும் ஒரு மாட்டிடம் இரண்டு முறைக்கு மேல் இனவிருத்தி செய்ய அனுமதிக்கக்கூடாது
  • ஒரு இளங்காளை ஒரு வாரத்தில் 2-3 மாடுகளுடன் இனவிருத்தி செய்ய அனுமதிக்கலாம். இளங்காளைகளுக்கு அவற்றின் 2-21/2 வயதில் இனவிருத்திக்குப் பயன்படுத்தலாம்
  • விந்தின் தரம் பாதிக்காமலும், இனப்பெருக்க குணநலன்கள் பாதிக்கப்படாமலும் வயது முதிர்ந்த காளைகள் ஒரு வாரத்தில் நிறைய முறைகள் விந்தினை வெளியேற்றும்
  • இனப்பெருக்க குண நலன்களை குறைவாக வெளிப்படுத்தும் காளைகளின் விந்து வெளியேற்றத்தை தாமதப்படுத்தலாம். காளைகளை சிறியதாக உள்ள ஒரே கொட்டகையில் கட்டிப் பராமரிப்பதால் அவற்றின் இனப்பெருக்க குண நலன்களை வெளிப்படுத்துவதற்கு சலிப்படையும்
  • மற்றொரு காளை இருக்கும்போதும், சுற்றுப்புறத்தினை மாற்றும்போதும் காளைகளின் இனப்பெருக்க குணநலன்கள் பாதிக்கப்படாது
  • வெயிலால் ஏற்படும் அயற்சியால் வெளிநாட்டின மற்றும் கலப்பனக் காளைகளின் இனப்பெருக்க குணநலன்கள் பாதிக்கப்பட்டு, தரம் குறைந்த விந்தையே உற்பத்தி செய்யும்
  • வெயில் காலத்தில் மேற்கூறிய கோளாறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க காளைகளை குளிர்ச்சியான, நல்ல காற்றோட்டம்  உள்ள கொட்டகைகளில் கட்டிப் பராமரிக்கவேண்டும்
  • வெயில் அதிகமுள்ள நாட்களில் மாடுகளின் மீது 2-3 முறை தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதால் வெயிலில் இருந்து மாடுகளைப் பாதுகாக்கலாம்

வயது முதிர்ச்சியடைந்த காளைகளுக்கான தீவன மேலாண்மை
  • வயது  முதிர்ச்சியடைந்த காளைகளுக்கு பொதுவாக ஒரு கிலோ வைக்கோலும்,அரை கிலோ அடர்தீவனமும் ஒவ்வொரு நூறு கிலோ உடல் எடைக்கு அளிக்கவேண்டும்
  • எனவே 400 கிலோ உடல் எடையுள்ள காளைக்கு 4 கிலோ வைக்கோலும்  2 கிலோ அடர்தீவனமும் அளிக்கவேண்டும்
  • பல்வேறு காளைகளின் உடல் எடைக்கேற்ப அவற்றுக்கான மேற்கூறிய அடர் மற்றும் உலர்தீவனங்களை அளிக்கவேண்டும்
  • காளைகளின் உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரிக்கவிடக் கூடாது. அளவுக்கு அதிகமாக காளைகளின் உடல் எடை அதிகரித்தால் அவற்றின் இனப்பெருக்க குணநலன்கள் பாதிக்கப்படுவதுடன் அவற்றின் கால்கள்  மற்றும் பாதத்தின் மீது அதிகப்படியான பாரத்தையும் ஏற்படுத்தும்
  • அதிகப்படியான கால்சியம் சத்தும் காளைகளின் தீவனத்தில் இருக்கக்கூடாது. இவ்வாறு அளிக்கப்படும் அதிகப்படியான கால்சியம் சத்து காளைகளின்  உடல்நலத்தை குறிப்பாக  வயதான காளைகளின் உடல்நலத்தைப் பாதிக்கும்
  • காளைகளுக்கு பயறு வகை உலர்தீவனத்தை  அளித்தால் அவைகளுக்கு அளிக்கப்படும் அடர்தீவனத்தில் கால்சியம் சேர்க்கக்கூடாது
  • பொதுவாக காளைகளுக்கு அளிக்கப்படும் கால்சியம் சத்தை அவை இழப்பதில்லை. இதனால் அவைகளுக்கு  அளிக்கப்படும் அதிகப்படியான கால்சியமானது, காளைகளின் முதுகெலும்பில் சேர்ந்து மற்ற எலும்புகளுடன் கூடி விடும்
  • எனவே காளை மாடுகளுக்கு, கறவையில்  இருக்கும் பசுமாடுகளுக்கு அளிக்கப்படும் அடர்தீவனத்தை அளிக்காமல் வேறு வகை அடர்தீவனத்தை அளிக்கவேண்டும்
top