முதல் பக்கம் தொடர்புக்கு


டவுனர் கௌ சின்ட்ரோம் எனப்படும் மாடுகள்
எழ முடியாத நோய் அறிகுறி
      

   இந்நோயினைப் பற்றி

   நோயின் தன்மை  
  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகள் நன்றாக இருக்கும். ஆனால் எழுந்து நிற்க முடியாது.
  • அயல் நாட்டின மாட்டு இனங்களிலும், கலப்பன மாடுகளிலும் இந்நிலை பொதுவாக ஏற்படுகிறது.
  • இந்நிலை பொதுவாக மாடுகள் கன்று ஈன்ற பிறகு உடனடியாக ஏற்படுகிறது.
  • இந்நோய் பொதுவாக பால் காய்ச்சல் நோய் பாதிப்பால் ஏற்படுகிறது.

    நோய்க்கான காரணங்கள்
  • தொடர்ந்து மாடுகளின் உடலில் கால்சிய சத்தின் பற்றாக்குறையினால், தொடர்ந்து இரண்டு கால்சிய சத்து ஊசி அளிக்கப்பட்டும் மாடுகள் எழுந்து நிற்க இயலாமை.
  • இது தவிர மாடுகளுக்கு ஏற்படும் பாஸ்பரஸ் சத்து குறைபாடும் இந்நிலை மாடுகளில் ஏற்படக் காரணமாகிறது.
  • இது தவிர மாடுகளின் இரத்தத்தில் ஏற்படும் பொட்டாசியச் சத்து குறைபாடும் மாடுகளில் இந்நிலை ஏற்படக் காரணமாகிறது. பொட்டாசியச் சத்து குறைபாடு பெரும்பாலும் பாஸ்பரஸ் சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது.
 
 

top

   அறிகுறிகள்

    மருத்துவ அறிகுறிகள்
  • மாடுகள் எழ முடியாமல் படுத்தே இருத்தல்
  • மாடுகளை எழுப்ப முயற்சிக்கும்போது அவை எழுவதற்கு குறைவாகவே முயற்சி செய்தல் அல்லது எழுவதற்கு முயற்சி செய்யாமல் இருத்தல் அல்லது பால் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் எழ முடியாமல் இருத்தல்
  • ஆனால் மாடுகள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்
  • இந்நிலையினால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு பசி எடுத்தல், அசை போடுதல், சிறுநீர் கழித்தல் எப்போதும் போல இருத்தல்
  • இந்நிலையினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் உடல் வெப்பநிலை சாதாரணமாகவே இருக்கும். சில நேரங்களில், குறிப்பாக அவை இறக்கும் தருணத்தில் அவற்றின் உடல் வெப்பநிலை சராசரி உடல் வெப்பநிலையினை விட குறைந்து விடும்.
  • இந்நிலையினால் பாதிக்கப்பட்ட மாடுகள், அவற்றின் முன்னங்கால்களைப் பயன்படுத்தி ஊர்ந்து செல்லும். ஆனால் அவற்றின் பின்னங்கால்கள் மடங்கியே இருக்கம். இந்நிலை – கிரீப்பர் கௌ – ஊர்ந்து செல்லும் மாடு என்று அறியப்படும்.
  • தொடர்ந்து 7 நாட்களுக்கு மாடுகள் இப்படியே எழ முடியாமல் படுத்திருந்தால், பெரும்பாலும் இறந்து விடும்.
  • மாடுகளின் இரத்தத்தில் கால்சிய சத்து குறைவால் ஏற்படும் மெக்னீசியச் சத்து குறைபாடும் மாடுகளில் இந்நிலை ஏற்படக் ஒரு காரணமாக உள்ளது.
  • மாடுகளை நீண்ட நேரம் கொட்டகையில் கட்டியிருப்பதால் அவைகளுக்கு ஏற்படும் தசைக் கோளாறுகள், அதிக உடல் எடையினாலும், பால் வற்றிய காலத்தில் அதிகப்படியான தீவனம் அளிக்கப்படுவதாலும் மாடுகளின் கால்களில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் போன்றவையும் இந்நோய் ஏற்படக் காரணமாகின்றன.
  • பால் காய்ச்சல் நோய் ஏற்பட்ட பிறகு ஏற்படும் நரம்பு மண்டலப் பாதிப்புகள், மாடுகள் படுத்தே இருக்கும் போது அவற்றின் நரம்புகளில் ஏற்படும் அதிகப்படியான நீட்சி போன்றவையும் மாடுகளில் இந்த நிலை ஏற்படக் காரணமாகும்.
  • மாடுகளுக்கு பால் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்கும்போது தொடர்ந்து அளிக்கப்படும் கால்சியம் ஊசிகளால் அவற்றின் இதயம் பாதிக்கப்படுவதாலும் இந்நிலை ஏற்படுகிறது.
  • அதிகமாக தீவனம் அளிக்கப்பட்டு உடல் எடை அதிகமாக இருக்கும் மாடுகள் அவற்றின் சினைக்காலத்தின் கடைசியில் பேஃட் கௌ சின்ட்ரோம் எனும் கொழுப்பினால் ஏற்படும் நோய் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதனாலும் மாடுகளால் எழ முடியாத நிலை ஏற்படுகிறது.

top

   மேலாண்மை முறைகள்

   நோய் தடுப்பு முறைகள்  
  • மாடுகள் கன்று ஈனுவதற்கு முன்பாக அவை வசதியாக படுப்பதற்கு ஏற்ற வகையில் படுக்கையினை அமைக்கவேண்டும். பொதுவாக மணல் படுக்கை இதற்கு ஏற்றது.
  • பால் காய்ச்சலை ஆரம்பித்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தல்.
  • மாடுகள் கன்று ஈன்று 48 மணி நேரத்திற்கு அவை பால் காய்ச்சல் நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனவா என கண்காணித்தல்.
  • மாடுகள் படுத்திருந்து எழ முடியாமல் இருக்கும்போது ஒரு மணி நேரத்திற்குள்ளாக அவற்றுக்கு சிகிச்சை அளித்துவிட வேண்டும்.
  • உடல் எடை மிக அதிகமாக உள்ள காளையுடன் மாடுகளை இனப்பெருக்கத்திற்கு அனுமதிக்கக்கூடாது. மாடுகள் தாங்குவதற்கேற்ற எடை கொண்ட காளை மாட்டினையே இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும். இல்லையேல் மாடுகளின் இடுப்பு எலும்பு உடைவதற்கும், அவற்றிற்கு நரம்பு செயலிழப்பும் ஏற்படும்.
  • மாடுகளின் உடல் எடைக்கேற்ப காளைகளுடன் சேர்க்கும் போது மட்டுமே, அவை சரியான எடையுடைய கன்றினை ஈனும். மாறாக அதிகப்படியாக உடல் எடை கொண்ட காளைகளுடன் சேர்க்கும் போது பெரிய கன்றுகள் உருவாகி அவற்றை ஈனும்போது சிரமம் ஏற்படும்.
  • மாடுகளின் சினைக் காலத்தின் கடைசி பகுதியில் தேவைக்கு அதிகமாக தீவனம் அளித்து அதிகப்படியாக உடல் பருமனாவதற்கும் அனுமதிக்கக்கூடாது.
  • கன்று ஈன்றவுடன் மாடுகளை சிறிது நேரத்திற்கு மட்டுமே நிற்க அனுமதிக்கவேண்டும்.
  • பால் காய்ச்சல் நோயினால் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகும் மாடுகளுக்கு, சினைக்காலத்தில் வைட்டமின் டி3 ஐ ஊசி வழியாக செலுத்தவேண்டும்.
  • குறைந்த கால்சியம் மற்றும் அதிக பாஸ்பரஸ் உள்ள தீவனத்தை மாடுகளுக்கு கொடுப்பதன் மூலம் அவற்றின் உடலிலுள்ள பாராதைராய்டு சுரப்பியின் செயல்திறனை ஊக்குவித்து பால் காய்ச்சலைத் தடுக்கலாம்.
  • முடியும் பட்சத்தில் மாட்டுப்பண்ணையிலுள்ள மாடுகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சத்து பற்றாக்குறைக்கான பரிசோதனைகளை செய்து அதற்கேற்றவாறு தீவனமளிக்க வேண்டும்.


    நோய் கட்டுப்படுத்துதல்

  • மாடுகள் படுத்திருந்து எழ முடியாமல் இருக்கும்போது ஒரு மணி நேரத்திற்குள்ளாக அவற்றுக்கு சிகிச்சை அளித்துவிட வேண்டும்.
  • மாடுகள் படுத்திருக்கும்போது அவைகளுக்கு வசதியாக இருக்குமாறு படுக்கையினை அமைக்கவேண்டும். படுக்கை அமைக்க மிருதுவான பொருட்களைப் பயன்படுத்தவேண்டும்.
  • மாடுகள் படுத்திருக்கும்போது அவற்றை ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு மாற்றி படுக்க வைப்பதால் அவற்றின் தசைப் பகுதி தாக்கப்படாமல் பாதுகாக்கலாம்.
  • மாடுகளை எழ வைக்க முயற்சிக்கவேண்டும். குறைந்தது மூன்று மணி நேரத்தற்கு ஒரு முறை மாடுகளை திருப்பி படுக்க வைக்க வேண்டும்.
  • கயிற்றைக் கொண்டு மாடுகளை எழ வைக்க முயற்சிக்க வேண்டும்
  • இடுப்பு பகுதியில் பொருத்தி மாடுகளை எழ வைக்கும் கருவிகளைக் கொண்டு மாடுகளை எழ வைக்க முயற்சிக்க வேண்டும்.
  • கயிற்றின் உதவியால் மாடுகளை 20-30 நிமிடம் வரை நிற்க வைக்க  வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு நிறைய முறைகள் செய்யவேண்டும்.
  • ஒரு நாளைக்கு இரண்டு முறை மாடுகளின் முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால்களை மசாஜ் செய்து விட வேண்டும்.
  • எழ முடியாமல் படுத்திருக்கும் மாடுகளில் மற்ற மாடுகளைப் போன்றே பால் கறக்க வேண்டும். அவற்றின் மடியினை கிருமி நாசினிகள் கொண்டு,  பால் கறப்பதற்கு முன்பும், பால் கறந்த பின்பும், கழுவி சுத்தமாக வைத்திருக்கவேண்டும். இது தவிர காம்புகளை கிருமி நாசினிக் கரைசலில் முக்கி எடுக்கவேண்டும்
  • கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், குளுக்கோஸ் போன்ற சத்துகளை ஊசி வழியாக தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு மாடுகளுக்கு அளிக்கவேண்டும்.
  • நோய்க்கிருமிகளின் தாக்குதல் இருக்கும் பட்சத்தில் மாடுகளுக்கு எதிர் உயிரி மருந்துகள் அளிக்கப்படவேண்டும்.
  • மாடுகளின் தசைகளுக்கு உடற்பயிற்சி அளிப்பதால், தசைகள் தமது செயல்களை செய்வதற்கு உதவி செய்யும்.


 

top