முதல் பக்கம் தொடர்புக்கு  

சாகுபடி முறைகள்



நெற்பயிர் சாகுபடிக்கு அதிக வேலையாட்கள் மற்றும் மிகுதியான நீர் தேவைப்படுவதால், குறைவான ஆட்கூலி மற்றும் மிகுதியான மழைப்பொழிவு உள்ள மண்டலங்கள் மற்றும் நாடுகளில் நெற்பயிர் சாகுபடி மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது. நாற்றங்கால் அமைக்கும் போதோ அல்லது அதற்கு பின்னரோ வயலில் நன்கு நீர் பாய்ச்சுதலே பாரம்பரிய நெல் சாகுபடி முறையாகும்.இந்த எளிய முறைக்கு, சிறப்பான திட்டமிடுதல் மற்றும் பாய்ச்சலுக்கான அணையிடுதல் மற்றும் வாய்க்கால் அமைத்தல் ஆகியவை முக்கியமான செயல்களாகும். மேலும் இம்முறை, களைச் செடிகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்களைக் குறைக்கிறது. நெல் சாகுபடியில், பயிர் வளர்ச்சி, உரமிடுதலின் போதும், பாசன முறைகள் செய்வதில்,களைகள் மற்றும் பூச்சிக்கட்டுப்பாடு ஆகியவற்றில் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது.