முதல் பக்கம் தொடர்புக்கு  
சார்புடைய தலைப்புகள்
கொள்கைகள்
திருந்திய நெல் சாகுபடி முறை
நாற்றுநடுதல்
நேரடி சேற்று விதைப்பு
நேரடி உலர் விதைப்பு
நாற்று வீசுதல் முறை

தேவையான பயிர்
எண்ணிக்கையை நிர்வாகித்தல்


கொள்கைகள்:  
    • பொதுவான இலக்கு: சீரான, பயிர் நிலையை உருவாக்குதல்.
    • அதிகமகசூல் பெறுவதற்கு பயிர்நிற்கும் நிலை, வயல் முழுதும் சீராக இருக்க வேண்டும்.
    • நாற்றுநடுதல், நல்லபயிர்நிற்கும் நிலையை உருவாக்குகிறது.
    • நேரடி விதைப்பு முக்கியமாக நேரடி சேற்று விதைப்பு பிரச்சினைக்குரியது.
    • நேரடி விதைப்பாக இருந்தால்,
        • மிகவும் சீராக நிலத்தை சமப்படுத்துதல் மற்றும் நீர் மேலாண்மை தேவைப்படும்.
    • மிகவும் ஆழமாக விதைத்த நாற்றோ/விதையோ சரியாக வெளிப்படாது.  மேலும் வலுக்குறைந்த செடிகளே தோன்றும்.

திருந்திய நெல் சாகுபடி முறை


விதையளவு:
  • ஒரு குத்துக்கு ஒரு நாற்று என்ற அளவில் எக்டருக்கு 7-8 கிலோ விதை தேவைப்படுகிறது.
  • பயிர் வளர கடினமாக இருக்கும் இடத்தில் குத்துக்கு 2 நாற்றுகள் என்ற அளவில் எக்டருக்கு 12-15 கிலோ விதை தேவைப்படுகிறது.
  • 15 நாட்களான நாற்றுகளை குத்துக்கு 1 அல்லது 2 நாற்றுகள் என்ற எண்ணிக்கையில்  நட வேண்டும்.
  • நாற்றங்காலிலிருந்து பிடுங்கிய நாற்றுக்களை பிடுங்கி 30 நிமிடத்தில் வயலில் நடவு செய்திட வேண்டும்.
  • சதுர நடவு 22.5 × 22.5 செ.மீ (9 × 9 இன்ச்)

பொதுவாக பயன்படுத்தும் சதுர நடவு முறைகள்

  • அடையாளம் வைத்த கயிரை உபயோகித்தல்.
  • அடையாளம் இட்ட அலுமினிய பைப்புகளை உபயோகித்தல்.     
  • கொக்கி/ஆப்பு கொண்டு அடையாளமாய் வைத்த மூங்கில் பலகையை உபயோகித்தல்.
  • அடையாளம் வைத்த மரப்பலகையை பயன்படுத்துதல்.
  • உருளை வடிவஅடையாளமிடும் கருவியை பயன்படுத்துதல்.
  • நடவு செய்து 7-10 வது நாளில் பயிர்களிடையே ஏற்படும்
  • டைவெளி-பாடுவாசியை நிரப்பவேண்டும்.

பெருமழைப் பொழிவு நிலவும் இடங்களில் பயிர் உருவாக்கம் சற்று கடினமாக இருக்கும் – (தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக்காலம்)

நாற்றுநடுதல் :

நாற்றுக்களை நாற்றங்காலில் தயார் செய்து பின் நடவு வயலில் நட வேண்டும். சீரானபயிர் நிறுத்தத்திற்கும், களைகட்டுப்பட்டிலும் சரியான நடவு முறை முக்கியமான பங்கு வகிக்கிறது.


நாற்றுகள் மேலாண்மை :


நாற்றின் வயதும், பயிர் வளர்ச்சியும்:    
  • குறுகியகால இரகமாயின் 18-22 நாட்களான நாற்றுக்கள், மத்திய கால ரகமென்றால் 30 நாட்களான நாற்றுக்கள், நீண்டகால இரகமாயின் 35-40 நாட்களான நாற்றுக்களே தக்க வயது  எனக் கொள்ளவும்.

நாற்றங்காலிலிருந்து பிரித்து நடவு செய்யும் முறை:

    • தக்க பருவத்தில்- நான்கு இலை நிலையில் நாற்றுக்களை பிரித்து நட வேண்டும்.
    • இந்நாற்றுக்கள் அதிக துார்களை உற்பத்தி செய்யும்.  துார் கட்டும் பருவத்தில் சற்றே கவனத்துடன் நீர் பராமரிப்பு, போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். நிலம் சமன்படுத்துதல் கவனத்துடன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
    • ஐந்து இலை, அல்லது அதற்கு மேல் வயது ஆகிவிட்ட நாற்றுக்கள், தேவையான பயிர் வளர்ச்சியைத் தராமல், மகசூல் குறைய வாய்ப்புகள் அதிகமாய் உள்ளது. இதுவே முதிர்ந்த(வயதான)நாற்றுக்கள் எனப்படுகிறது.

    வயதான நாற்றுக்களுக்கான மேலாண்மை முறைகள்:
    • குறைவான மண்வளம் உள்ள நிலங்களில் பரிந்துரைக்கப்பட்ட பயிர் இடைவெளியில் பயிரிட வேண்டும்.
    • ஒன்று அல்லது இரண்டு நாற்றுக்களுக்கு மேல் நடவு செய்யக் கூடாது.  வயதான நாற்றுக்களை கற்றையாக நடவு செய்தால் துார் கட்டுவது சிரமமாகிறது.எனவே இதனை தவிர்க்கவும்.
    • பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 50 சதவிகிதம் தழைச்சத்தை அடியுரமாக அளிப்பதால் துார்கள் உற்பத்தித்திறன் அதிகமாய் இருக்கும்.

    வேரினை நனைத்தல்:
      • 40 லிட்டர் தண்ணீரில் 5 பாக்கெட் (1000 கிராம்/எக்டர்) அசோஸ்பைரில்லம் மற்றும் 5 பாக்கெட் பாஸ்போபாக்டிரியா (1000 கிராம்/எக்டர்) அல்லது 10 பாக்கெட் அசோபாஸ் (2000 கிராம்/எக்டர்) கலந்து கரைசலை தயாரிக்கவும்.  இக்கரைசலில் நாற்றுக்களின் வேர் பாகம் நன்கு நனையுமாறு 15-30 நிமிடங்கள் வைத்திருந்து பின் நடவுக்கு பயன்படுத்தவும்.

பயிர் எண்ணிக்கையும் இடைவெளியும்:


இரகத்தின்
கால அளவு

குறைவான வளம் கொண்ட மண்  (செடிகள்/எக்டர்)

இடைவெளி
(செ.மீ)

சிறப்பான/ அதிக வளம் கொண்ட மண்   
(செடிகள்/எக்டர்)

இடைவெளி
(செ.மீ)

குறுகியகால ரகம்

8 லட்சம்

12.5 x 10

5.0 லட்சம்

20 x 10

மத்தியகால ரகம்

5.0 லட்சம்

20 x 10

3.3 லட்சம்

20 x 15

நீண்டகால ரகம்

3.3 லட்சம்

20 x 15

2.5 லட்சம்

20 x 20


கேரளா:

பருவம்

கால அளவு

இடைவெளி

குத்துக்கள் (எண்ணிக்கை/ ச.மீ)

முதற்பயிர்

மத்தியகால ரகம்
குறுகியகால ரகம்

20 செ.மீ x 15 செ.மீ
15 செ.மீ x 10 செ.மீ

33
67

இரண்டாம் பயிர்

மத்தியகால ரகம்
குறுகியகால ரகம்

20 செ.மீ x 10 செ.மீ
15 செ.மீ x 10 செ.மீ

50
67

மூன்றாம் பயிர்

மத்தியகால ரகம்
குறுகியகால ரகம்

20 செ.மீ x 10 செ.மீ
15 செ.மீ x 10 செ.மீ

50
67


நாற்றுக்களின் சரியான வயது:

   குறுகியகால இரகமாயின் 18 நாட்கள், மத்தியகால இரகம் என்றால் 20-25 நாட்கள் மற்றும் நீண்டகால இரகமானால் 30 நாட்கள் தக்க வயது எனக் கொள்ளவும்.

கர்நாடகா:
  • இடைவெளி: 20 x 10 செ.மீ (50 குத்துகள்/சதுரமீட்டர்) குத்துக்கு 2-3 நாற்றுக்கள்
  • குறுகியகாலஇரகம்: 15 x 10 செ.மீ (67 குத்துகள்/சதுரமீட்டர்)
  • துங்கபத்ரா பாசன பரப்புகளில், தாமதமான நிலையில் (ஆகஸ்ட் 15-30) நீண்டகால இரகங்களான சோனா மசூரி போன்ற இரகத்தை நடுவதானால் 45 நாட்களான நாற்றுக்களை தேர்ந்தெடுத்து ஒரு குத்துக்கு 3-4 நாற்றுக்கள் என்ற அளவில் நட வேண்டும்.இவ்வாறு செய்வதினால் அதிகமகசூலைப் பெறலாம்.

நடவுவயலில் நாற்றுக்களை நடுதல்:

நாற்றுக்களின் எண்ணிக்கை:
    • ஒரு குத்துக்கு 2-4 நாற்றுக்கள்
    • களர் மண்- குத்துக்கு 4-6 நாற்றுக்கள்

    நடவின் ஆழம்:
      • களிமண் - 5-6 செ.மீ
      • ஆழம் குறைவான மண் - 2.5 - 3.0 செ.மீ
      • ஆழம் குறைவான நடவு (3 செ.மீ) வேகமான வளர்ச்சி மற்றும் அதிக துார்களைக் கொடுக்கும்.
      • 5செ.மீக்கும் அதிக ஆழமான நடவு,  மெதுவானபயிர் வளர்ச்சி மற்றும் குறைவான துார்களைக் கொடுக்கும்.

      நாற்று நடவு அதிர்ச்சி:
      நாற்றங்காலிலிருந்து நாற்றுக்களைப் பிரித்து புதுசூழலில் நடவு செய்யும்போது  ஏற்படுவதே இந்த அதிர்ச்சி.  வெப்பமண்டலத்தில் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள 5-7 நாட்கள் ஆகும்.
      • குறைந்த ஆழத்தில் நடவு செய்வது பயிர்க்கால அளவைக் குறைக்கும்.
      • நடவுக்குப்பின் மிதமான வெப்பநிலை இருந்தால் இந்த அதிர்ச்சிகால அளவு குறையும்.
      • சூடான மற்றும் குளிரான பருவநிலை அதிர்ச்சி மீட்பினைக் குறைக்கிறது.
      • தகுந்த வெப்பநிலை: உச்ச அளவு -- <30° செ குறைந்த அளவு -- >20° செ.

      பாடுவாசி நிரப்புதல்(போக்கு நடவு)
        • நடவு செய்து 7-10 நாட்களுக்குள் ஏதேனும் பயிரில்லாமல் சந்து-பாடுவாசி தெரிந்தால் நாற்றுக்களைக் கொண்டு அதனை நிரப்ப வேண்டும்.

  மேலே செல்க

நாற்றுநடுதல் வகைகள்:  
நாற்றுநடுதல் வகைகள்:
  • கைவினை நடவு
  • இயந்திர நடவு

கைவினை நடவு:

    சிறிய நெல் வயல் மற்றும் வேலை ஆட்கள் மிகுதியாக இருக்கும் இடத்தில் கை நடவு ஏற்றது. நில சமன்படுத்துதல் குறைவாக இருக்கும் இடத்தில் மற்றும் வேறுபட்ட நீர் அளவு உள்ள நிலங்களுக்கு கை நடவு ஏற்றது.

கைவினை நடவு செய்யும் முறை:

    • விதைத்து 15-30 நாட்களான பிறகு நாற்றுக்களை நாற்றங்காலிலிருந்து பிரித்து நடவு வயலில் நட வேண்டும்.
    • திருந்திய பாய் நாற்றங்காலில், விதைத்து 15-20 நாட்களான பிறகு நாற்றுக்களை நடவுக்கு எடுத்துக் கொள்ளலாம். நாற்றுக்களைப் பாயோடு சேர்ந்து எடுத்து நடவு வயலுக்கு மாற்ற வேண்டும்.
    • நன்கு சேற்றுழவு செய்து, சமன்படுத்திய வயலில் நாற்றுக்களை உடனே நடவு செய்தல் வேண்டும்.  (பிரித்தெடுத்தவுடன் நடுதலில் தாமதம் ஏற்பட்டால் உயிர் பிடித்தலில் தாமதம்  மற்றும் சில நாற்றுக்கள் இறக்கக் கூட நேரிடலாம்)
    • தகுந்த இடைவெளியில் (20 செ.மீ x 20 செ.மீ (அ) 22.5 செ.மீ x 22.5 செ.மீ) ஒரு குத்துக்கு 2-3 நாற்றுக்கள் என்ற அளவில் அதிக ஆழமில்லாமல் நடவு செய்ய வேண்டும்.
    • நடவுக்குப்பின் நாற்றுக்கள் விரைவாக உயிர் பிடிக்கவும், வேகமான வளர்ச்சிக்கும் நடும்போது நாற்றுக்களை கவனமாக கையாள வேண்டும்.

    குறைபாடுகள்:

      • நடவு செய்தல் சற்று சிரமமான மற்றும் அதிக நேரம் செலவாகும் (30 ஆட்கள்/நாள்/எக்டர்) செயல் ஆகும்.
      • உச்ச பருவ காலங்களில் போதுமான வேலை ஆட்கள் கிடைக்காமல் குறித்த நேரத்தில் நடுவது சற்று சிரமமாக இருக்கும்.
      • நிலப்பரப்பைப் பொருத்து ஒப்பந்த முறையில் குறைந்த பயிர் அடர்வில் நடவு  செய்தல் மகசூல் அளவைக் குறைக்கிறது.
      • மானாவாரி நிலங்களில் மழைப் பொழிவிற்கு முன்பே நாற்றுக்கள் (முக்கியமாக நவீன இரகங்கள்) முதுமை அடைந்து விடுவதால் சிரமம் ஏற்படுகிறது.








இயந்திர நடவு:

    • இளம் நாற்றுக்களை சேற்றுழவு செய்த மண்ணில் இயந்திரம் மூலம் நடுவதே இயந்திர நடவு.

    இயந்திர நடவு செய்யும் முறை: ?

      • சிறப்பு பாய் நாற்றங்கால் அல்லது நாற்று தட்டுக்களில் நாற்றுக்களை வளர வைக்க வேண்டும்.  ஒரு எக்டருக்கு, 100 சதுரமீட்டர் அளவு நாற்றங்காலில் போதுமான அளவு  சிறந்த தரம் வாய்ந்த விதைகளை விதைக்க வேண்டும்.
      • விதைத்து 12-15 நாட்களில் நாற்றுக்கள் நடவிற்கு தயாராகி விடும்.
      • நடவு செய்வதற்கு முன், வயலை நன்கு சேற்றுழவு செய்து சமப்படுத்தியிருக்க வேண்டும்.
      • வயலை வடிகட்டி, இறுதி சேற்றுழவிற்கு பின் சேறை 1-2 நாட்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும்.
      • கீழ்மட்ட மண் போதுமான அளவு கடினமாக இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் நடவு இயந்திரம் வயலில் நடவு  செய்ய முடியும்.
      • சேற்றுழவு செய்தமண்ணில், குச்சி கொண்டு“V” போன்ற சிறு அடையாளம்  உண்டாக்கினால்,அதுஅப்படியேஇருப்பின் மண் நடவிற்கு தயார் நிலையில் உள்ளது என்பதை அறியலாம்.
      • இந்த ஈரப்பத நிலையில், மண் நாற்றுக்களை பிடித்துக்கொள்ளும் திறன் பெற்றிருக்கும்.
      • மிகவும் உலர் மண்ணாக இருந்தால் நடவு இயந்திரத்தின் சக்கரம் மற்றும் மற்ற பாகங்களில் ஒட்டிக் கொள்ளும்.  எனவே மண் மிகவும் உலர்ந்திருக்கக்கூடாது.
      • பாய்நாற்றுக்களை நடவு இயந்திரத்தில் வைத்து அதில் குறிப்பிட்ட அளவு பொருத்தியிருக்கும்படி வைத்து நடவு செய்தல் வேண்டும்.

      நன்மைகள்:

        • இயந்திர நடவில் கை நடவை விட குறைந்த நேரம் மற்றும் குறைந்த ஆட்களே தேவைப்படுகின்றன. (1-2 எக்டர்/
          1 ஆள்/நாள் ஆனால் கை நடவில் 0.07 எக்டர்/ஆள்/நாள்)
        • இயந்திர நடவு மூலம் வேகமாகவும் மற்றும் சிறப்பாகவும் செய்ய முடிகிறது. குறிப்பிட்ட நேரத்தில் நடவு செய்து முடிக்க முடிகிறது.  (1-2 எக்டர்/நாள்)
        • அலைச்சல், நெருக்கடி மற்றும் வேலைப்பளுக்களை குறைக்கிறது.
        • சீரான இடைவெளி மற்றும் பயிர் எண்ணிக்கை உறுதிபடுத்தப்படுகிறது.
        • நாற்றுக்கள் விரைவாக வளர்ந்து, வேகமாக துார்கள் பிடித்து, சீராக முதிர்ச்சியடைகிறது.

        குறைபாடுகள்:

        • மிகவும் சிறிய நாற்றுக்களாக இருக்கும் போது நடவு செய்ய வேண்டும். எனவே இயந்திர நடவு பாசனப் பரப்புகளுக்கு மட்டுமே நன்கு பொருந்தும்.
        • சிறப்பு நாற்றங்கால் மேலாண்மை தேவைப்படுகிறது (பாய்நாற்றங்கால் (அ) தட்டு நாற்றுக்கள்)
        • நல்ல நில அமைப்பு, சமன்படுத்துதல் மற்றும் நீர் மேலாண்மை தேவைப்படுகிறது.






  மேலே செல்க

நேரடி சேற்று விதைப்பு:
  • விதையளவு: 60 கிலோ/எக்டர்
    • சேற்று நாற்றங்காலுக்கு விதைகளை முன்பே முளைக்க வைக்க வேண்டும்.
    • உருளை விதைக்கருவியோ அல்லது வீசி விதைத்தல்  மூலமாகவோ மெல்லிய நீர் படலம் இருக்கும் நிலையில் விதைகளை விதைக்க வேண்டும்.
    • விதைத்து 14-21 நாட்கள் ஆனபிறகு சந்து நிரப்புதல் அல்லது அதிக பயிர் அடர்த்தியாக இருப்பின் களைத்தல், ஆகியவை செய்ய வேண்டும்.
    • இருபயிர் முறையில், நெற்பயிரை பசுந்தாள் உரப்பயிருடன் சேர்த்து பயிரிட்டால், 40 செ.மீ உயரம் வந்தவுடன் அல்லது விதைத்து, 30 நாட்கள் ஆனபிறகு அப்பயிரை உழவு செய்து மண்ணுக்குள் புதைத்து விடவேண்டும்.
    • பசுந்தாள் உரம் அளித்த வயலில், ஒரு வாரத்திற்குப் பின் சுழற்களையெடுக்கும் கருவியைக் கொண்டு மண்ணுக்கு காற்றோட்டம் அளிக்க வேண்டும்.


  மேலே செல்க

நேரடி உலர் விதைப்பு;  
தமிழ்நாடு:
    • விதையளவு: பரிந்துரைக்கப்பட்ட இரகத்திற்கு 75 கிலோ/எக்டர் உலர் விதை.
    • 1 சதவிகிதம் பொட்டாஷியம் குளோரைடில் 16 மணி நேரத்திற்கு விதையை கடினப்படுத்துதல் (விதை மற்றும் பொட்டாஷியம் குளோரைடு 1:1) வேண்டும். பின் எடுத்து நிழலில் உலர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் விதைகளை சேமிக்கும் அளவு ஈரத் தன்மையைப் பெற முடிகிறது. இதனால்  வறட்சி மற்றும் முன் ஈர அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடிகிறது.
    • விதைக்கும் நாளன்று கடினப் படுத்திய விதைகயுடன் சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் 10 கிராம்/கிலோ விதை என்ற அளவில் கலக்கி பின் அசோபாஸ் 2000 கிராம் (அல்லது) அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா 600 கிராம்/எக்டர் என்ற அளவில் கலந்துவிதை நேர்த்தி செய்ய வேண்டும்.
    • விதைக்குங் கருவியைப் பயன்படுத்தி, 20 செ.மீ உள்வரிசை இடைவெளி விட்டு, விதைகளை விதைக்க வேண்டும்.
    • 3-5 செ.மீஆழம் கொண்டு விதைக்க வேண்டும்.  பின் மேற்பரப்பு மண்ணை சமன்படுத்தும் பலகையைக் கொண்டு சற்று இணக்கப்படுத்த வேண்டும்.
    • சீரான முளைப்பிற்கு முன் பருவ விதைப்பே ஏற்றது.
    • விதைத்து 14-21 நாட்களுக்குள் சந்து நிரப்புதல் அல்லது பயிர் அடர்த்தியை களைத்தல் ஆகியவை மேற்கொள்ள வேண்டும்.

    கேரளா:
    • விதை அளவு:
    • வீசி விதைத்தல் 80-100 கிலோ/எக்டர்
    • ஊன்றிவிதைத்தல் 80 - 90 கிலோ/எக்டர்

    குறிப்பு: குறைந்த அளவு முளைப்புத் திறனாக 80 சதவிகிதம் கிடைக்கும் பகுதிகளில் மேற்கூறிய விதை அளவு தேவைப்படும்.  பொக்காலி சாகுபடியில், வைட்டில்லா இரகத்திற்கு 100 கிலோ/எக்டர் என்ற அளவை, வயலில் அமைக்கப்பட்டுள்ள பாத்திகளில் விதைக்க வேண்டும்.

    கர்நாடகா:
    வீசி விதைத்தல் :
      • விதை அளவு - 100 கிலோ/எக்டர்
      • நேரடி விதைப்பு நெல் முறையினால் அதிக மகசூல் பெற வாய்ப்புள்ளது.
      • குறைந்த நீர் வசதி கொண்ட பகுதிகளில் நேரடி விதைப்பு முறை சிறந்தது.
      • நீர் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை உள்ள இடத்தில் இம்முறை ஏற்றதாக உள்ளது.
      • பெரிய அளவிலும் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளலாம்.

    உருளை விதைக்கருவியை பயன்படுத்தி விதைவிதைத்தல்:
    • பின்பருவ விதைப்பு நிலைகளில் இக்கருவியை பயன்படுத்த வேண்டும்.  குறிப்பாக ஜூலை மாதத்தில் சேற்றுழவு மேற்கொள்ள போதுமான அளவு மழைப்பொழிவு இருக்கும் நிலையில் விதைக்குக்கருவியை பயன்படுத்தி விதைக்கலாம்.
      முன் முளைப்பு செய்த விதைகளை விதைக்க வேண்டும்.
      விதை அளவு - 40 கிலோ/எக்டர்






  மேலே செல்க

நாற்று வீசுதல் முறை:
    • குறுகியகால இரகங்களில் 20 நாட்களான நாற்றுக்களை வீசுதல் நல்லது.
    • வரிசை நடவு செய்வதை விட ஏறக்குறைய 20 சதவிகிதம் நாற்றுக்கள் அதிகமாக தேவைப்படும் அல்லது முறைமையற்ற நடவில் தேவைப்படும் அளவுக்குச் சமமாக இம்முறைக்கும் தேவைப்படும்.
    • நன்கு சேற்றுழவிட்டு சமன்படுத்திய வயலில் நடவு செய்பவர்கள், நாற்றுக்களை வேகம் இல்லாமல் வீசிப் போடுவர்.
    • தாளடி அல்லது மிகுந்த மழைப் பருவத்தைத் தவிர அனைத்துப் பருவங்களுக்கும் ஏற்றது.
    • வரிசை நடவோடு ஒப்பிடும்போது 50 சதவிகிதம் அளவு ஆட்கள் சேமிப்பும், முறைமையற்ற நடவைவிட 35 சதவிகிதம் அளவு ஆட்கள் சேமிப்புத் திறனும் கொண்டது.
    • 7-10 நாட்கள்வரை நாற்று வீசுதல் முறை இருப்பின் வயலில் மெல்லியபடலம் நீர்   இருக்குமாறு (சேற்று நெல் போல்) பாதுகாக்க வேண்டும்.
    • மற்ற வளர்ப்பு முறைகள் அனைத்தும் வழக்கமான நடவு வயல் நெல் முறையைப் போன்றது.
    • வரிசை நடவு முறையைப் போன்று இம்முறையிலும் சமமான தானியமகசூல் கிட்டும். முறைமையற்ற நடவு முறையைவிட 10-12 சதவிகிதம் அதிக மகசூலைப் பெறலாம்.

  மேலே செல்க