முதல் பக்கம் தொடர்புக்கு  

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்




பொதுவான கேள்விகள்  
கிசான் சேவை மையம் என்றால் என்ன?

இத்திட்டமானது விவசாயிகள் தங்கள் வேளாண் அறிவை வளர்த்துக்கொள்ளவும், தேவையான போது தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும் செயல்படுத்தப்படும் ஒரு இலவச திட்டம் ஆகும். கிசான் சேவை மையத்தின் இலவச தொலைபேசி எண்: 1551  

மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பண்ணை இயந்திரங்கள் எவை?

மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் பலவகைபட்ட இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறியரக நெல்புழுங்க வைத்தல் அமைப்பு, நட்சத்திர வடிவ களையெடுக்குங்கருவி, CRRI பல்பயிர் விதைக்கும் கருவி (2 வரிசைகள்) உருளை விதைப்பான், 3 வரிசையிலான மனித ஆற்றலால் இழுக்கும் வகை விதைக்குங்கருவி, நெல்பயிருக்கான் சக்கர வகை களைக்கொத்து, இரு வரிசை நெல்லுடன் உரமும் சேர்த்து இடும் இயந்திரம், நெல் உமி மற்றும் உமி அடுப்பு, விரல் வகை களையெடுக்குங்கருவி, 4 வரிசை மனித ஆற்றலால் இயக்கப்படும் நெல் நடுங்கருவி, கைமண்வாரி மற்றும் கைக்கலப்பை ஆகிய பண்ணை இயந்திரக்கருவிகள் மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவை.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பற்றிய அறிவுத் திறனை யார் வழங்குபவர்?

வேளாண்மைப் பல்லைக்கழகம் மற்றும் வேளாண்மைத் துறை.

நெல் தானியமணி எவ்வாறு இருக்கும்?

நெல்மணி மென்மையான, மின்னும் தன்மையுள்ள முட்டை வடிவமாகக் காணப்படும். பச்சைநிறத்தில் முதலில் காணப்படும். (முதிர்ச்சி நிலையில், தங்கமான மஞ்சள் நிறமாக மாறிவிடும்). பின் ஆலை பதனப்படுத்தலுக்குப் பிறகு நெல்லின் வெளிப்புற ஓடு பளபளப்பான வெள்ளைநிறத்தில் காணப்படும்.

நெல் எங்கு மற்றும் எப்பொழுது தோன்றியது?

சில காலத்திற்கு நெல் தோன்றியது பற்றிய விவாதம் நடந்தது. ஆனால் பண்டைக்காலத்தில் தோன்றிய பயிர் ஆனதால் அதன் முதல் வளர்ச்சி இடம் மற்றும் காலம் அறிய முடியவில்லை. இருப்பினும், நெற்பயிரை பேணி வளர்த்ததன் மூலமாக வரலாற்றில் இது ஒரு முக்கிய வளர்ச்சியடைந்துள்ளது. ஏனெனில் நெல் தான் உலகில் நீண்ட, தொடர்ச்சியான பயிரிடும் பயிர் வகையாக விளங்குகிறது. பேணி வளர்த்த நெல்லின் முன் தோற்றத்திற்குரிய தாவரவியல் பண்புகள் கிழக்கு இந்தியாவிலிருந்து மையான்மர், தாய்லாந்து, லயோஸ், வட வியட்னாம் மற்றும் தென் சீனா ஆகியவற்றின் வழியாக விரிவடைந்ததாகக் கருதப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் பேணி வளர்க்கப்பட்ட நெல்லுக்கான முன் மற்றும் மிகவும் முக்கியமான ஆதாரமாக அவை 1966 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் உள்ளில் கோஏட் என்ற இடத்திலிருக்கும் நான் நோக் தாவில் கண்டுபிடிக்கப்பட்டது. குறைந்தது 4000 கிமு ஆண்டிலிருந்து இவை இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

நெல் தவிடு என்றால் என்ன?

அரிசியின் மேலோட்டை சுற்றியிருக்கும் ஊட்டச்சத்துமிக்க வெளிப்புற உறையே தவிடு எனப்படுகிறது. தவிடு சுவையான பருப்பு மணமுடன் இருக்கும். மேலும் இதில் மிகச்சிறப்பான ஊட்டச்சத்துக்கள், தாதுப் பொருட்கள் மற்றும் நார்பொருட்கள் உள்ளன. 

 

நெல்லில் காணப்படும் இரண்டு வகையான மாவுப் பொருட்கள் யாவை?

"அமைலோஸ்" மற்றும் "அமைலோபெக்டின்" இதில் "அமைலோஸ்" அரிசியை தனித்தனியாகப் பிரித்து, பொலபொலப்பாக்குகிறது."அமைலோபெக்டின்" மாவுப் பொருளானது மெழுகு போன்ற வடிவில் இருக்கும்.இது அரிசி சமைக்கும்போது சாப்பாடு ஒட்டக்கூடிய அளவு நிலைத்திறனை அளிக்கிறது. 

 

நெற்பயிர் எங்கு விளையும்?

நெற்பயிர் மேட்டுப்பகுதி, நீர்ப்பாசனப்பகுதி, மானாவாரி தாழ்வான பரப்புகள் மற்றும் வெள்ளப்பெருக்கு இடங்களில் விளையக் கூடியது. இப்பயிர் மிகவும் தக அமைவுடையது. எனவே பலவகை சுற்றுச்சூழல்களிலும் இவை வளரும் தன்மையுடையது. 

 

நெல் என்றால் என்ன?

நெல் என்பது வெள்ளப் பாசனத்தால் சூழப்பட்டிருக்கும்வயலில் விளையும் பயிர். சொரசொரப்பான அரிசியை நெல் எனவும் கூறுவர். 

 

நெல் தானிய மணியின் முக்கிய கூறுகள் யாவை?

நெல் தானியம், பொதுவாக விதை என அழைக்கப்படுவது உண்மையான பழம் அல்லது பழுப்பு அரிசி (நெல்) மற்றும் உமியைக் கொண்டுள்ளது. உமி என்பது பழுப்பு நிற அரிசியை போர்த்தியிருக்கும். பழுப்பு நிற அரிசி முக்கியமாக வளர்கரு மற்றும் கருசூழ்தசை ஆகியவற்றை உள்ளடங்கியுள்ளது. விதையின் மேற்பரப்பு சில மெல்லிய அடுக்குகளால் ஆன வேறுபடுத்தப்பட்ட திசுக்களைக் கொண்டிருக்கும். இவை வளர்கரு மற்றும் கருசூழ்தசையைச் சூழ்ந்திருக்கும்.

 

உமியின் பகுதிகள் யாவை?

உமி என்பது இரண்டு திருந்திய இலைகளால் ஆனவை. அவை உமிச்செதில் மற்றும் செதிற்பூ ஆகியவை ஆகும். இவ்விரண்டும் கொக்கி போன்ற வடிவத்தால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும். முதிர்ச்சியடைந்த உமியின் திசுவறை மிகவும் தடிப்புறுகின்ற மற்றும் எளிதில் உடையும் தன்மையுடையதுமாக இருக்கும். இதில் அதிகளவிலான மணச்சியச் செறிவு (சிலிக்கான்) கொண்டிருக்கும். 

 

நெற்பயிர் தானியத்தின் வளர்கரு என்றால் என்ன?

வளர்கரு அல்லது கிருமி என்பது மிகவும் முற்றிய அளவில் நெல்லின் அடிப்புறத்தில் அமைந்திருக்கும். இவை வளர்கரு இலைகள் (முளைக்குருத்து) மற்றும் கருவேர் (முளை வேர்) கொண்டு இரண்டும் மிகக் குறுகிய தண்டுகளால் இணைக்கப்பட்டிருக்கும். முளைக்குருத்து, நீள் உருளை போன்ற பாதுகாப்பான உறை, கருத்தண்டுறையால் போர்த்தப்பட்டிருக்கும்.மேலும், முளைவேர் மென்மையான திகு கருவேருறையால் சூழப்பட்டிருக்கும். வளர்கருவின் வெளிப்புறம் தவிடால் சூழப்பட்டிருக்கும்.

கருசூழ்தசை என்றால் என்ன?

தவிடு மற்றும் மாவு போன்ற கருசூழ்தசை கொண்டிருக்கும். எனவே இவை முளைத்தெழும் வளர்கருவிற்கு உணவாகப் பயன்படுகிறது.

நெற்பயிர்ச் செடியின் தழை உறுப்புகள் யாவை?

செடியின் வேர்கள், தண்டுகள், மற்றும் இலைகள் ஆகியவை தழை உறுப்புகளில் அடங்கும்.

பூங்கொத்து வகை என்றால் என்ன?

நெல் தானியமணியை உற்பத்தி செய்யக்கூடிய செடியின் நுனித்தண்டுதான் பூங்கொத்து வகை எனப்படுகிறது.

கதிர்க்கிளை என்றால் என்ன? 

பூங்கொத்து வகையின் ஒரு அமைப்பே கதிர்க்கிளை ஆகும். இதில் இரண்டு மலட்டுத்தன்மையுடைய செதிற்பூக்கள், கிளைகள் மற்றும் மலர்ப்பிரிவுகள் (பூ) இருக்கும். மேலும் நெற்பயிரின் ஒரு கதிர்க்கிளையில் நன்கு முழுமையாயக வளர்ச்சியடைந்த ஒரே ஒரு மலர்ப்பிரிவு மட்டும் உள்ளதால், இப்பருவங்களை சிலசமயம் மாறுபட்டுப் பயன்படுத்த முடிகிறது.

பயிர்த்துார் என்றால் என்ன?

நெற்பயிர்ச் செடியின் அடிப்பகுதியிலிருந்து உருவாகும் மிகையான தண்டுகளே துார் எனப்படுகிறது. மரபியல் செயல் ஆற்றல் கொண்டு அதிக தண்டுகளை உருவாக்கும், இரகங்களை, "அதிக துார் வைக்கும் "இரகங்கள் என அழைக்கப்படுகிறது.

இலைப்பரப்படிச் செதில் என்றால் என்ன?

இவை சிறிய, காகிதம் போன்று, முக்கோண வடிவில் நெற்பயிர்ச்செடியின் இலைத்தாள்களக்குக் கீழே அமைந்திருக்கும்.

பெண் இனச் செடியிலிருந்து ஆண் இன நெற்பயிர்ச் செடியை எவ்வாறு வேறுபடுத்துவது?

இயற்கையாக நெற்பயிர் தன்மகரந்தச் சேர்க்கை முறையுடையது. இவை தன் கருவுறுதல் அதாவது, ஆண் மற்றும் பெண் உறுப்புகள் இரண்டும் கொண்டது. இருவகை இரகங்களை இனச்சேர்க்கை செய்வதற்கு, ஒரு இரகத்திலிருந்து ஆண் வகைப் பாகங்களை எடுத்து மற்றொரு இரகத்திலிருக்கும் மகரந்தத்துடன் சேர்த்து கருவுறச் செய்தல் வேண்டும்.

நெல் பயிர்ச் செடியிலிருந்து எவ்வாறு தானியமணிகளை பெறுவது?

சில நாடுகளில், நெற்பயிர்ச் செடிகளை கூட்டு அறுவடைக் கருவி என்னும் இயந்திரம் மூலமாக அறுவடை செய்வர். பெரும்பாலான அறுவடை கத்தி அல்லது கருக்கரிவாள் கொண்டு கையால்தான் அறுவடை செய்யப்படுகிறது. பிறகு கதிரடித்தல் என்னும் முறையால், நெல் தானியங்களை வைக்கோலிருந்து பிரித்தெடுக்க வேண்டும்.. 

நாம் உண்ணும் அரிசி வெள்ளை நிறத்தில் உள்ளது. ஆனால் இதுவே பயிர்ச்செடியிலிருக்கும் போதும், சாலைகளில் உலர்த்தும் போதும் தங்க நிறத்தில் உள்ளது. எவ்வாறு தங்க நிறத்திலிருக்கும் தானியம் வெள்ளை நிறமாக மாற்றப்படுகிறது?

வெயிலில் நெல்லை உலர்த்தி அதன் ஈரத்தன்மை குறைந்த பிறகு, ஆலை முறை பதனப்படுத்தல் தொடங்க வேண்டும். இதில் உமி நீக்கும் இயந்திரமானது, நெல்லிருக்கும் உண்ணத்தகாத உமியை அகற்றுகிறது. பிறகு பழுப்பு அரிசியிலிருக்கும் தவிடை உராய்தல் முறையின் மூலமாக, (அதாவது தானியங்கள் ஒரு வரிசை மூலமாக ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டு) தவிடை அகற்றுகிறது.



ஒரு நெல் இரகத்தை உற்பத்தி செய்ய எவ்வாறு காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது?

மரபுவழி இனப்பெருக்க முறையில், ஒரு நெல் இரகம் உற்பத்தி செய்ய 5-10 வருடங்கள் ஆகும். ஆனால் உயிரியல் தொழிற்நுட்ப முறையில், 1-2 வருடங்களில் ஒரு நெல் இரகத்தை உற்பத்தி செய்ய முடிகிறது.



தொடக்கத்திலிருந்து முடிவு வரை ஒரு நெற்பயிர் வகையை பயிரிட்டு உற்பத்தி செய்வதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?

உற்பத்தி செய்யக்கூடிய அந்த நெல்லின் முதிர்ச்சி நிலையைப் பொருத்தே அதன் கால அளவு அமையும். பொதுவாக நெற்பயிர் முதிர்ச்சியடைய 90-200 நாட்கள் ஆகும்.




மேலே செல்க

  பருவங்கள் மற்றும் வானிலை
வானிலையால் நெல் மகசூல் பாதிக்கப்படுமா?

வெப்பநிலை, சூரிய ஒளிக்கதிர் மற்றும் மழைப்பொழிவு ஆகியவை பயிர் வினையியல் செயல்களான தானிய உற்பத்தியை நேரடியாக தாக்கியும், நோய்கள் மற்றும் பூச்சிகளின் மூலமாக மறைமுகமாக தாக்கியும் நெல் மகசூலில் செயல் விளைவை ஏற்படுத்துகின்றது.

வானிலை மாற்றத்தால் நெல் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகள் யாவை?

2 செ. வெப்பத்தால் நெல் மலட்டுத்தன்மை ஏற்படுவதுடன் அதன் மகசூல் 25 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக குறைதல். மேலும், குறைந்த வெப்பநிலை காரணமாக, நெல் வளர்ச்சிக்கால அளவு அதிகமாகிறது..

நெற்பயிரின் முதிர்ச்சிப் பருவத்தில் குறைந்த வெப்ப நிலையால் உண்டாகும் விளைவுகள் என்ன?

பூங்கொத்திலிருந்து தானியமணிகள் எளிதாக உதிர்ந்துவிடும். பயிரின் முதிர்ச்சி நிலையில் வெப்ப நிலை மிகவும் குறைவாக இருந்தால் தானிய உறக்க நிலை குறைவாக இருக்கும். நெற்பயிர், தானியங்களைவிட வைக்கோலையே அதிகம் உற்பத்தி செய்யும்.

நெற்பயிரின் முதிர்ச்சிப்பருவத்தில், அதிக வெப்பநிலை ஏற்படுவதால் உண்டாகும் விளைவுகள் என்ன?

அதிக வெப்பநிலையால், விரைவான தானிய முதிர்ச்சியை ஏற்படுகிறது. இதனால், தானியம் முதிரா நிலை (பிஞ்சு நிலை) ஏற்படுகிறது. இந்நிலையில் பகுதி நெல் சுண்ணாம்பு போன்று பால் வெள்ளை நிற மேலோடுகளுடன் தவிடு நன்கு தடித்தும் கெட்டியாகக் காணப்படும்.


மேலே செல்க


இரகங்கள்  
மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் எத்தனை இரகங்களை வெளியிட்டுள்ளது

எழுபது இரகங்கள்

மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் கலப்பு வகை இரகங்கள் உள்ளதா? இருப்பின், கால அளவு மற்றும் மகசூல் என்ன?

அஜய் மற்றும் ராஜ்லக்ஷ்மி ஆகிய இரண்டு கலப்பின இரகங்கள் உள்ளன. இரண்டிற்கும் கால அளவு 135 நாட்கள் மற்றும் மகசூல் ஆற்றல் முறையே 7.5 டன்/எக்டர் மற்றும் 7.0 டன்/எக்டர் ஆகும்.

மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நறுமண இரக வகைகள் உள்ளதா? இருப்பின் அதன் கால அளவு மற்றும் மகசூல் என்ன?

இரண்டு நறுமண இரகங்களான கீதாஞ்சலி மற்றும் கெட்டெக்கிஜோஹா ஆகியவை மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இரகங்கள் ஆகும். மேலும் அதன் கால அளவு முறையே 135 மற்றும் 145 நாட்கள் ஆகும். இதன் மகசூல் ஆற்றல் முறையே 5.0 டன்/எக்டர் மற்றும் 4.0 டன்/எக்டர் ஆகும்.

இந்நிறுவனத்தில் எத்தனை வேறுபட்ட நெல் இரகங்கள் உள்னன?

தற்போது வழக்கத்தில் சுமார் 1,20,000 இரகங்கள் உள்ளன.

பண்பற்ற/கரடுமுரமான அரிசி என்றால் என்ன?

அறுவடை செய்யப்பட்டு கதிரடித்த பின்பும், உமி மற்றும் தவிடுடன் காணப்படும் அரிசியே சொரசொரப்பான/கரடுமுரடான/பண்பற்ற அரிசி எனப்படுகிறது.

ஜப்போனிக்கா நெல் என்றால் என்ன?

ஜப்போனிக்கா இரகங்களில் குறுகலான கரும்பச்சை நிற இலைகள், நடுத்தர உயரமுள்ள துார்கள் மற்றும் குட்டையானது முதல் நடுத்தர உயரமுள்ள பயிகள். இது பொதுவாக குளிரான குறை வெப்பமண்டலங்கள் மற்றும் நடு வெப்பநிலை மண்டலங்களான ஜப்பான், போர்ச்சுக்கல், ஸ்பெயின், யூஎஸ்எஸ் ஆர், இத்தாலி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் தான் வளரக் கூடியவை.

இண்டிகா நெல் என்றால் என்ன?

பாரம்பரிய இண்டிகா நெல் இரகங்கள் பெரும்பாலும் குறைவெப்ப மண்டலங்கள் மற்றும் வெப்பமண்டலப்பகுதிகளில் வளரக் கூடியவை. இந்த இரகப் பயிர்கள் உயரமாகவும், அதிக துார்கள் கொண்டும், நீளமான, குறுகலான இளம்பச்சை இலைகளுடனும் காணப்படும்.

ஜவானிகா நெல் என்றால் என்ன?

ஒரைசா சட்டைவா சிற்றினத்தின் ஜப்போனிகா குடும்பத்தைச் சேர்ந்ததே ஜவானிகா நெல் இரகம் ஆகும். இவை உருவ அமைப்புப்படி ஜபோனிகா இரகத்தைப் போன்று ஒரே மாதிரியாக இருக்கும். இருப்பினும், ஜவானிகா வகை இலைகள் அகன்றும், அதிகமான மெல்லிய ரோமங்களுடன் காணப்படும். கூடுதலாக, தானியத்தில் தொடர்ச்சியாக ரோமம் போன்ற உமிச் சிலாம்புகள் இருக்கும். ஜவானிகா வகையைச் சார்ந்த இரகங்கள், "இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாட்டின் உயர்வான நெல் பயிரிடப்படும் சமநிலப்பகுதிகள் மற்றும் மடாகாஸ்கரின் மலைப்பரப்புகள்" ஆகிய இடங்களில் மட்டும் வளரக் கூடியவை.

நெல்லில் மொத்தம் எத்தனை இரகங்கள் உள்ளன?

தற்போது பயிரிடப்படும் நெல் இரகங்கள் 1,40,000 மேல் வழக்கில் உள்ளதாக (ஒரைசா சட்டைவா குடும்ப வகை புல்) கருதப்படுகிறது. ஆயினும் துல்லியமான எண்ணிக்கை ஒரு புதிராகவே உள்ளது.


மேலே செல்க

  நெல் சூழ்நிலை அமைவு
மானாவாரி மேட்டுப்பாங்கான பகுதிகளுக்கு மிகவும் ஏற்ற நெல் இரகங்கள் யாவை?

110 நாட்களில் முதிர்ச்சியடையும் அதிக மகசூல் ஈட்டும் இரகங்களான ஹீரா, சினேகா, பத்ரா, பன்டனா காலிங்கா மிமிமி, பாரிஜாத், அர்ணபூர்ணா, ஹன்தேஸ்வரி, கந்தகிரி, நீலகிரி ஆகிய இரகங்களை வரிசையில் நேரடியாக விதைத்தல் ஏற்றது.

மானாவாரி இடைநிலைப்பகுதிக்கு மிகவும் ஏற்ற நெல் இரகங்கள் யாவை?

135 நாட்களில் முதிர்ச்சியடையக் கூடிய அதிக மகசூல் தரும்நெல் இரகங்களான லாலத், எம்டியூ-1001, சுவர்ணா போன்றவற்றைப் பயிரிடலாம்.

மானாவாரி தாழ்வான நிலப்பகுதிகளுக்கு மிகவும் ஏற்றதான நெல் இரகங்கள் யாவை?

150 நாட்களில் முதிர்ச்சியடையக் கூடிய அதிக மகசூல் ஈட்டும் நெல் இரகங்களான மோடி, காஞ்சனா, கெளரி, பத்மினி, பாஜா, சமன்தா மெகொ ஆகியவை மிகவும் ஏற்றது.

மானாவாரி மேட்டுப்பாங்கான பகுதி மற்றும் அதன் நெல் வகைகள் பற்றி விரிவுரைக்க

உலகில் பெரும்பாலான ஏழை விவசாயிகள் மேட்டுப்பாங்கான பகுதிகளிலேயே வாழ்கின்றனர். அவர்களின் விவசாய முறைகள் முற்றிலும் வேறுபடும். அதில் மரப்பொருட்கள் மற்றும் கால்நடைகள் குடும்ப வருமானத்திற்கு மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சில விவசாயிகள் எவ்விதமான இரசாயனப் பொருட்களையும் பயன்படுத்தாமல் இன்றும் பாரம்பரிய இரகங்களை வளர்த்து வருகின்றனர். 17 மில்லியன் எக்டருக்கும் மேலான மேட்டுப்பாங்கான பகுதி நெல் உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. அதில் 60 சதவிகிதம் ஆசியாவில் உள்ளது.

மானாவாரி தாழ்வான பகுதி நெல் மற்றும் அதன் சுற்றுப்புற அமைவு பற்றி விளக்குக?

37 மில்லியன் எக்டர்கள் மானாவாரி தாழ்வானப் பகுதி சுற்றுப்புற அமைவு (அல்லது) உலகின் மொத்த நெல்பரப்புகளில் நான்கில் ஒரு பங்கு எனவும் சொல்லலாம். எவ்வித தனி இடத்திலும் மானாவாரி தாழ்வான நிலங்கள் பலவகைப்பட்டது (வேறுபாடு உடையது). மேலும் இவை எல்லா பரப்புகளும் வேறுபட்டு இதனைக் கணிக்க முடியாது. உலகின் மிகவும் ஏழ்மையான நுாற்றுக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்க்கை நிலைக்காக இதனையே சார்ந்துள்ளனர்.


மேலே செல்க


திருந்திய நெல் சாகுபடி  
திருந்திய நெல் சாகுபடிக்கு மிகவும் ஏற்ற பருவம் எது?

வறட்சிப்பருவத்தில் உறுதியான (தொடர்ச்சியான) பாசனம் உள்ள நிலை மிகவும் ஏற்றது.

எந்தெந்த பகுதிகளில் செம்மைநெல்லை சாகுபடியை தவிர்க்க வேண்டும்?

அதிக மழைப்பொழிவு (தமிழ்நாட்டின் வடகிழக்குப் பருவ மழை) உள்ள பரப்புகளில் இம்முறையிலான சாகுபடியை தவிர்க்க வேண்டும்.

திருந்திய நெல் சாகுபடிக்கு ஏற்ற நெல் வகைகள் எவை?

அதிக துார்கள் வைக்கும் தன்மையுடைய கலப்பின விதைகள் மற்றும் இரகங்கள்.

விதை அளவு என்ன?

குத்துக்கு ஒரு நாற்று என்ற அளவில் 7-8 கிலோ விதைகள்/எக்டர்.

1 எக்டரில் திருந்திய நெல் சாகுபடி செய்வதற்கு தேவையான நாற்றங்கால் பரப்பளவு எவ்வளவு?

100 சதுர மீட்டர்.

100 சதுர மீ நாற்றங்காலுக்கு தேவைப்படும் மண் கலவை அளவு என்ன?

100 சதுர மீ அளவு நாற்றங்காலுக்கு நான்கு (4) மீ மண் கலவைத் தேவைப்படுகிறது.

ஆழம் குறைவான உயர்ந்த படுக்கையை (பாத்தி) எவ்வாறு தயாரிப்பது?

உயர்த்தி அமைக்கப்பட்ட பாத்தியில் (படுக்கையில்) பிளாஸ்டிக் தாள் அல்லது பயன்படுத்தப்பட்ட பாலித்தீன் சாக்குப் பைகளை விரித்து அதன் மேல் நாற்றுக்களை வளரச் செய்வதால் வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக வளராதவாறு தடுக்க முடிகிறது.

நாற்றங்கால் உயர்ந்த பாத்திகளில் பயன்படுத்தப்படும் மண் கலவைக் கூறுகள் என்ன? மண்கலவைக் கூறுகளின் விகிதாச்சாரம் என்ன?

70 சதவிகிதம் மண் + 20 சதவிகிதம் நன்கு மக்கிய கரும்பாலைக்கழிவு/தொழு உரம் + 10 சதவிகிதம் நெல் உமி ஆகியவற்றை கலந்து மண் கலவையைத் தயாரித்துக் கொள்ளவும். இக்கலவையுடன் 1.5 கிலோ பொடியான "டை-அமோனியம் பாஸ்பேட்" அல்லது 2 கிலோ (17-17-17) தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களைக் கலக்க வேண்டும்.

உயர்த்தப்பட்ட பாத்திகளில் மண் கலவையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

மண் கலவையை நிரப்புதல்: 0.5 மீ நீளம், 1 மீ அகலம் மற்றும் 4 மீ ஆழம் கொண்டு 4 சரிசம பாகங்களாகப் பிரிக்கப்பட்ட மரச்சட்டத்தை பிளாஸ்டிக் தாள் அல்லது வாழை இலைகளின் மேல் வைக்க வேண்டும். பின் அச்சட்டத்தின் மேற்பரப்பு வரை மண் கலவையால் நிரப்புதல் வேண்டும்.

விதைப்பதற்கு முன் விதைகளை எவ்வாறு முளைக்க வைப்பது? விதைப்பு செய்வதற்கு முன் விதை முளைக்கச் செய்வது அவசியமா?

விதைப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் விதைகளை முளைவிடச் செய்தல் வேண்டும்.விதைகளை 24 மணி நேரத்திற்கு ஊற வைத்து, நீரை வடித்து, 24 மணி நேரத்திற்கு உள் வளர்ச்சி செய்ய வேண்டும் (வெப்பமூட்டுதல்).பின் விதைகள் முளைவிட்டு முளை வேர்ப்பகுதி (2-3 மிமீ) நீளம் வளர்ச்சிக்கு பின் (விதை முளை வேர்) வந்தவுடன் விதைகளை விதைக்க வேண்டும்.

ஒரு சதுர மீட்டர் (மீ) அளவுக்கு எவ்வளவு முளைவிட்ட விதைகள் தேவைப்படும்? உயர்ந்த பாத்திகளில் எவ்வாறு விதைகளை விதைப்பது?

90-100 கிராம்/ மீ எடையிள்ள முளைவிட்ட விதைகளை சீராக பாத்தியில் விதைத்து, 5 மிமீ தடிப்பிற்கு உலர் மண்ணை விதைகளில் மேல் இட்டு மூடிவிட வேண்டும். (100 கிராம் உலர் விதை முளைவிட்ட பிறகு 130 கிராம் எடையைக் கொடுக்கும்). உடனடியாக பூவாளியைப் பயன்படுத்தி பாத்தியை நனைக்க வேண்டும். பின்பு அதன் மேலிருக்கும் மரச்சட்டத்தை அகற்றிவிட்டு பின் இதோ போன்று மற்ற பரப்புகளையும் விதைக்க வேண்டும்.

நாற்றங்கால் பாத்திகளை எவ்வாறு பராமரிப்பது?

மண்ணை ஈரத்தன்மையுடன் வைத்து பராமரிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 முறை பூவாளியைப் பயன்படுத்தி நீர் தெளிக்க வேண்டும். விதை விதைத்து முதல் 5 நாட்களுக்கு கன மழையிலிருந்து நாற்றங்காலைப் பாதுகாக்க வேண்டும். ஆறாவது நாளில் நாற்றுப் பாய்களைச் சுற்றி மெல்லிய நீர்ப்படலம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். பின்பு நாற்றுக்களை நடவு வயலுக்கு மாற்றி நடவு செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்னர் நாற்றங்காலில் உள்ள நீரை வடித்தல் வேண்டும்.

வேறு ஏதேனும் அதிகமான பராமரிப்பு நாற்றங்காலுக்கு தேவைப்படுகிறதா?

நாற்று வளர்ச்சி மெதுவாக இருந்தால், விதை விதைத்த 8-10 நாட்களில் 0.5 சதவிகிதம் யூரியா + 0.5 சதவிகிதம் துத்தநாகக் கந்தகைக் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும்.

நாற்றங்காலின் கால அளவு என்ன?

விதைத்து 15 நாட்களில் நாற்றுக்களைப் பிரித்து நடுவதற்கான போதிய வளர்ச்சியை அடைந்துவிடும்.நாற்றுப்பாய்களைத் துாக்கி, நடவு வயலுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

திருந்திய நெல்லுக்கான நடவு வயலை எவ்வாறு தயாரிப்பது?

நிலம் தயாரிப்பு: கோடைக்காலத்தில் நிலம் உழுவதை தவிர்க்க வேண்டும் இதன் காரணமாக ஆரப்பகட்ட நிலம் தயாரிப்புக்கு தேவையான நீரை சிக்கனப்படுத்த முடிகிறது. உழவு செய்வதற்கு 1-2 நாட்கள் முன்னரே வயலை வெள்ளப் பாசனம் செய்ய வேண்டும். இதனால் வயல் நன்கு ஊறிவிடும். வயலின் மேற்பகுதி நீரால் சூழப்பட்டிருக்க வேண்டும். சேற்றுழவின் போது 2.5 செ.மீ ஆழம் நீர் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

பிரச்சினைக்குரிய மண்ணை சமாளிப்பதற்கான செயல் முறைகள் யாவை?

பொலபொலப்பான் மண்ணுக்கு: 400 கிலோ எடையுள்ள கல் உருளை அல்லது எண்ணெய் உருளையை வயலில் பயன்படுத்தி மண்ணை இறுக்கப்படுத்த வேண்டும். அதாவது, கல் நிரப்பப்பட்டிருக்கும் அந்த உருளையை முறையான ஈரப்பத அளவில் ஒரு வருடத்தில் 8 முறைகள் வயலில் பயன்படுத்த வேண்டும். (பொற பொறப்பு தன்மை நிலையில் ஈரப்பதம் இருத்தல் ஏறக்குறைய 13-18 சதவிகிதம்). இவ்வாறு உருளையைப் பயன்படுத்தி மண்ணை இறுக்கப்படுத்துவதால், சுமை இழுக்கும் விலங்குகள் மற்றும் சேற்றுழவின் போது வேலையாட்கள் வயலில் மூழ்காதவாறு தடுக்க முடிகிறது.

நடவு செய்வதற்கு முன்னர், களர் நிலங்களை எவ்வாறு மேலாண்மை செய்வது?

8.5 அளவிற்கும் மேல் கார அமில நிலையுள்ள களர் நில மண்ணுக்கு, உகந்த ஈரப்பத அளவில் உழவு செய்து, ஜிப்சத்தை 50 சதவிகிதம் ஜிப்சம் தேவையில் சீராக அளித்து, நீரைத் தேக்கி வைத்தல் வேண்டும். பின்பு கரையும் உப்புக்கள் அரித்துச் செல்வதைத் தடுப்பதற்கு வடிகால் அமைக்க வேண்டும். நடவு செய்வதற்கு 10-15 நாட்களுக்கு முன்னர் பசுந்தழை எரு 5 டன்/எக்டர் அளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒரு எக்டருக்கு 37.5 கிலோ துத்தநாகக் கந்தகையை மணலுடன் கலந்து மொத்த அளவு 75 கிலோவாக மாற்றி சமப்படுத்தப்பட்ட வயலில் சீராக அளிக்க வேண்டும். மண்ணுக்குள் இதனை அளிக்கக் கூடாது. இம்முறையின் மூலம், கலர் நிள மண்ணில் உள்ள நெற்பயிர்களைப் பாதுகாக்க முடிகிறது.

நடவு செய்வதற்கு முன்னர் மண்ணிலுள்ள உப்புத்தன்மை பிரச்சினையை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

உவர்ப்பு மண்ணில்,மின் கடத்தும் திறன் (EC) மதிப்பு 4 dS/m அளவிற்கும் மேல் காணப்பட்டால், பக்கவாட்டு மற்றும் முதன்மை வடிகால் வாய்க்கால்களை அமைக்க வேண்டும். (60 செ.மீ ஆழம் மற்றும் 45 செ.மீ அகலம்). பசுந்தழை உரங்களை பயிர் நடவு செய்வதற்கு 10-15 நாட்கள் முன்னர் (5 டன்/எக்டர்) அளவில் அளித்து, பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரத்துடன் 2 சதவிகிதம் கூடுதலான தழைச்சத்து உரம் அளிக்க வேண்டும். மேலும் நடவின் போது துத்தநாக சல்பேட் 37.5 கிலோ/எக்டர் அளிக்க வேண்டும்.

திருந்திய நெல் சாகுபடிக்கு ஏற்றவாறு அமில மண்ணை எவ்வாறு மாற்றுவது?

மண்பாகுபாட்டின் அடிப்படையில், பொதுவான நெல் மகசூலைப் பெறுவதற்கு, அமில மண்ணில், சுண்ணாம்பு அளிக்க வேண்டும். இறுதி உழவின் போது 2.5 டன்/எக்டர் சுண்ணாம்பு அளித்தல் வேண்டும். ஐந்தாவது பயிர்நிலை வரை, ஒவ்வொரு பயிர் சாகுபடியின் போதும், இதே அளவு சுண்ணாம்பு அளிக்க வேண்டும்.

நாற்றுக்களின் வயது என்ன?

நடவு செய்யப்படும் நாற்றுக்கள், ஒற்றை நாற்று முறைக்கு 15 நாட்களானதாக இருக்க வேண்டும்.

பயிர் இடைவெளி என்ன?

சதுர நடவாக 22.5 x 22.5 செ.மீ (9 x 9 அங்குலம்)

இடைவெளி நிரப்புதலுக்கு ஏற்ற காலம் என்ன?

நாற்று நடவு செய்து 7 முதல் 10 நாட்களுக்குள் இடைவெளிகளை நிரப்ப வேண்டும்.

நீர்ப்பாசனத்தை எவ்வாறு மேலாண்மை செய்வது?

 10 நாட்களான நிலையில் மண்ணை நனைப்பதற்கு மட்டுமே பாசனம் செய்ய வேண்டும்.
 பின், பயிரின் பூங்கொத்து உருவாக்க நிலை வரை மயிற்கோடு போன்ற விரிசல் உருவான பிறகு, 5.0 செ.மீ ஆழம் வரை நீர் பாசனத்தை அதிகப்படுத்த வேண்டும்.
 பூங்கொத்து உருவாக்க நிலைக்குப் பிறகு, "நீர் மறைய நீர் பாய்ச்சுதல்" முறை மூலம் 5.0 செ.மீ ஆழம் வரை பாசனத்தை அதிகரிக்க வேண்டும்.

திருந்திய நெல் சாகுபடி முறையில் எவ்வகையான களைப்பான்/களையெடுக்குங் கருவியைப் பயன்படுத்துவர்?

சுழல் வகைக் களையெடுக்கும் கருவி / பயிரின் வரிசைகளுக்கிடைய களையெடுக்குங் கருவி.

சுழல் களையெடுக்கும் கருவியை (கோனோ) எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

சுழல் களையெடுக்கும் கருவியை நடவு செய்து 10-15 நாட்களிலிருந்து, 7-10 நாட்கள் இடைவெளியில் பயிர்களின் வரிசைகள் மற்றும் தூர்களுக்கு இருபுறமும் இரு திசைகளிலும் களைப்பானைக் கொண்டு முன்னும் பின்னுமாக நகர்த்துதல் வேண்டும். இதனால் களைகள் மண்ணுக்குள் புதைவதுடன் மண்ணுக்கு நன்கு காற்றோட்டம் கிடைக்கிறது.


மேலே செல்க


  நாற்றங்கால் மேலாண்மை
சுத்தமான மற்றும் ஆரோக்கியமான விதைகளை எவ்வாறு பெறுவது?

சுத்தமான மற்றும் ஆரோக்கியமான விதைகளைப் பெறுவதற்கு, உப்பு கரைசலைத் தயாரித்து (100 கிராம் உப்பை 1லிட்டர் நீருடன் கலக்கவும்) விதைகளை அதில் போட வேண்டும். மிதக்கும் விதைகளை அகற்றிவிட்டு படிந்துள்ள விதைகளை எடுத்து சுத்தமான நீரில் நன்கு கழுவி விட வேண்டும்.

விதை நேர்த்தி எவ்வாறு செய்ய வேண்டும்?

விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக விதை நேர்த்தி மேற்கொள்ளப்படுகிறது. பெவிஸ்டின் மருந்தை 2.5 கிராம்/கிலோ விதை (அல்லது) பீம் 75 மருந்தை 0.6 கிராம்/கிலோ விதை என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும்.

நாற்றங்கால் படுக்கையில் எவ்வாறு நாற்றுக்கள் நேர்த்தி மேற்கொள்வது?

ஃப்யூரடான் 3 ஜி மருந்தை 250 கிராம்/100 சதுர மீட்டர் என்ற அளவில் அளிப்பதன் மூலம் நாற்றுக்கள், ஆனைக்கொம்பன் ஈ பூச்சித்தாக்குதலை எதிர்த்து வளரும் தன்மையை குறைந்தது 25-30 நாட்களுக்கு பெற்று விளங்கும்.நாற்றுக்களை நடவு வயலில் நடுவதற்கு 10-12 மணி நேரங்கள் முன்னர் நாற்றுக்களின் வேர்ப்பகுதிகளை க்லோர்பைரிபாஸ் கரைசலில் (1 மிலி/ 1லிட்டர் நீருடன் கலந்து) நன்கு நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்

அதிக மகசூல் தரக்கூடிய இரகங்கள் மற்றும் திருந்திய நெல் சாகுபடி முறை ஆகியவற்றில் நாற்றுக்களுக்கான வயது என்னவாக இருக்க வேண்டும்?

Age of Seedlings for

  • அதிக மகசூல் ஈட்டும் இரகங்களுக்கு நாற்றுகளின் வயது 20-30 நாட்கள்
  • திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றுக்களின் வயது 10-12 நாட்கள்
நேரடி விதைப்பு நெல் என்றால் என்ன?

நெல் விதைகளை மேட்டுபாங்கான நிலம் அல்லது தாழ்வான நிலப்பகுதிகளில் நேரடியாக விதைத்து நெல் பயிரிடும் முறையே நேரடி விதைப்பு நெல் எனப்படுகிறது.

வல்லுநர் விதைகள் (மரபியல் விதை) என்றால் என்ன?

வல்லுநர் விதை என்பது விதை அல்லது பாலினம் சாரா இனப்பெருக்க பொருள் இனப்பெருக்கத் திட்டம் அல்லது நிறுவனத்தின் பயிர் உற்பத்தியாளர்கள் மூலம் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் விதை உற்பத்தியை தனிப்பட்ட முறையில் நன்கு தகுதியுடைய பயிர் உற்பத்தியாளர் மூலம் கண்காணிக்கப்படுவதால், ஆதார விதைகளின் துவக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் மூலமான வளங்களை அளிக்கிறது. இனப்பெருக்க (மரபியல் வல்லுநரின் விதைகள்) விதைகள் மரபு வழியில் மிகவும் துாய்மையானது. எனவே அடுத்துவரும் தலைமுறைக்கு (அதாவது) சான்று ஆதார விதைக்கு உத்திரவாதம் அளிக்க முடிகிறது. சான்று ஆதார விதை வகுப்பு, மரபியல் துாய்மையின் தர நிலையை உறுதி செய்ய வேண்டும். மேலும் இயற்கைத் துாய்மை, உயிர்பற்ற பொருள், முளைப்பு ஆகிய மற்ற தரம் வாய்ந்த காரணிகளை உண்மையான வழியில் பெயர்ச்சீட்டில் (அடையாள அட்டை) சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆதார விதைகள் என்றால் என்ன?

ஆதார விதை: மரபியல் நிபுணர் விதையின் பின் தலைமுறையே ஆதார விதை ஆகும். அல்லது ஆதார விதையிலிருந்து உற்பத்தி செய்யப்படுவது மரபு வழி நிபுணரின் விதையைப் போன்றே அசலுடன் துாய்மையாகக் காணப்படும். எனவே ஆதார விதை உற்பத்தியின் போது, ஆதார விதைகளிலிருந்து ஆதார விதையை உற்பத்தி செய்ய முடிகிறது. சான்று விதை நிலை I மற்றும் II இரண்டுக்குமே குறைந்த விதைச்சான்று தரஇலை ஒன்றுபோலவே இருக்கும். சான்று விதை நிலை I மற்றும் II ஆகிய இரண்டு நிலைக்கும் சான்றளிப்பு அட்டை வெள்ளை நிறத்தில் இருக்கும். மேலும் I மற்றும் II நிலையின் உற்பத்தியையும் சான்றளிப்பு முகமையின் மூலம் கண்காணிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படுகிறது. எனவே குறிப்பிட்ட மரபுவழி அடையாளம் மற்றும் மரபு வழித் துாய்மையைப் பராமரிக்கவும் முடிகிறது. மேலும் சான்று பெற உள்ள பயிர்/இரகத்தின் சான்று தரநிலையை உறுதிசெய்யவும் தேவைப்படுகிறது.

சான்று விதைகள் என்றால் என்ன?

சான்று விதை: ஆதார விதையின் அடுத்த தலைமுறையே சான்று விதை ஆகும். குறிப்பிட்ட பயிருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தர நிலையைப் பொருத்தே அதன் குறிப்பிட்ட மரபுவழி அடையாளம் மற்றும் அதன் துாய்மையைப் பராமரிப்பதற்காக இதன் உற்பத்தி நன்கு கையாளப்படவேண்டும். சான்று விதைகள் சான்று விதையின் பின் நிலையாகவும் அமையும். இதனால் ஆதார விதை நிலை- I க்கு பின்வரும் இனப்பெருக்கம் மூன்று தலைமுறைகளுக்கு மேல் அதிகமாகாது.

கலப்பு விதை என்றால் என்ன?

இரு வகை இரகங்கள் அல்லது மூல உயிரிகள் ஆகியவற்றை இனக் கலப்பினம் செய்வதால் கிடைப்பது முதல் தலைமுறை. கலப்பு (சான்று) விதை என்பதுதான் முதல் தலை முறை விதைகள், இவை உறுதி செய்த இரண்டு உறவுப் பெருக்கம் (பயிர்) வரிசைகளின் கலப்பினத்தினால் அல்லது மூல உயிரிகளால் உருவாக்கப்படுகிறது ஆனால் ஒன்றில் ஆண் இனம் மலட்டுத் தன்மையானது.

அடையாள அட்டை கொண்ட விதை என்றால் என்ன?

விதைச் சட்டம், 1966 பிரிவு 5-ன் கீழ் குறிப்பிட்டுள்ள விதைகளை சந்தையில் விற்பனை செய்வதற்கு அதே விதைச்சட்டம், பிரிவு 6 (ஏ) மற்றும் 6 (பீ) ஆகியவற்றின் கீழ் பரிந்துரைக்கப்பட்டவாறு விதைகளை அடையாள மிட வேண்டும். இதுவே அடையாளம் செய்யப்பட்ட விதைகள் எனப்படுகிறது.

சான்று விதைகளை உற்பத்தி செய்யக்கூடிய முகமைகள் யாவை?

யாரேனும் சான்று விதை உற்பத்தி செய்ய முன்வருவோர், சான்று விதைகளை உற்பத்தி செய்யலாம். தற்பொழுது, மாநில விதை கூட்டாண்மை அமைப்பு, தேசிய விதைகள் கூட்டாண்மை அமைப்பு, இந்தியாவின் மாநில பண்ணை கூட்டாண்மை அமைப்பு, மாநில வேளாண்மைத் துறைகள், தனியார் நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட விவசாயிகள் சான்று விதைகளை உற்பத்தி செய்கின்றனர்.

விதை மாற்றீடு செய்தல் வீதம் என்றால் என்ன?

பண்ணையில் சேமிக்கப்பட்ட விதைகள் அன்றி, சான்று விதை/தரமான விதைகளைக் கொண்டு, குறிப்பிட்ட பருவத்தில் பயிரிடப்பட்ட மொத்தப் பரப்பில், எவ்வளவு சதவிகிதம் பரப்பு விதைக்கப்பட்டுள்ளதோ அதுவே விதை மாற்றீடு வீதம் ஆகும்.

மரபு வழி மாற்றம் மரபுக்கூறு மாற்றுவியக்கப் பயிர்கள்/விதைகள் என்றால் என்ன?

உயிரியல் தொழிற்நுட்பத்தைச் செயல்படுத்தி வளரச் செய்வதே மரபுவழி மாற்றம் பெற்ற விதைகள் ஆகும். இதில் மற்ற பேரினத்திலிருந்து உருவான குறிப்பிட்ட மரபணுவை மரபுவழி கையாளுவதன் மூலம் உட்செலுத்தப்படுகிறது. இதனால் சில பூச்சிகளின் தாக்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் திறனைப் பெற்று விளங்குகிறது. (எ.கா) பீ.டி பருத்தியில் (பேசில்லஸ் துருன்ஞியென்சிஸ் பருத்தி), க்ரை 1 ஏசி, மரபணுவை மண் நுண்ணுயிரியிலிருந்து (அதாவது பேசில்லஸ் துருஞ்சியென்சிஸ்) வரும் பருத்தி விதைக்குள் செலுத்தப்படுகிறது. இதனால் காய்ப்புழுத்தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியைப் பெறுகிறது.

விதைகளை எதற்கு நேர்த்தி செய்ய வேண்டும்?

விதைப்பதற்கு முன், விதைகளை பூசணக் கொல்லியுடன் கலந்து விதைக்க வேண்டும். இது மண்ணில் உண்டாகும் பூசணங்களிடமிருந்து விதைகளை பாதுகாக்க உதவுகிறது. மேலும் நாற்றுகளுக்கு தெம்பைக் கொடுக்கிறது.


மேலே செல்க

பயிரிடும் முறைகள்  
அதிக மகசூல் தரும் இரகங்கள், கலப்பின நெல் இரகங்கள் மற்றும் திருந்திய நெல் சாகுபடி முறை ஆகியவற்றிற்கான பயிர் இடைவெளி என்ன?
  • அதிக மகசூல் தரும் இரகங்களுக்கு: 20 செ.மீ X 10 செ.மீ (அ) 20 செ.மீ X 15 செ.மீ (அ) 15 செ.மீ X 10 செ.மீ
  • கலப்பின நெல் இரகங்களுக்கான பயிர் இடைவெளி: 20 செ.மீ X 20 செ.மீ
  • திருந்திய நெல் சாகுபடி முறை: 25 செ.மீ X 25 செ.மீ (அ) 30 செ.மீ X 30 செ.மீ
அதிக மகசூல் தரும் இரகங்கள் மற்றும் திருந்திய நெல் சாகுபடி முறைகளில் நாற்றுக்களின் நடவு வயது என்னவாக இருக்க வேண்டும்?
  • அதிக மகசூல் ஈட்டும் இரகம்: 20-30 நாட்கள்
  • திருந்திய நெல் சாகுபடி முறை: 10-12 நாட்கள்
நடவு செய்யப்பட்ட வயலில் பயிர் எண்ணிக்கை எவ்வளவு பராமரிக்க வேண்டும்?

110 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் இரகங்களுக்கு 70 குத்துக்கள்/மீ2, 135 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் இரகங்களுக்கு 50 குத்துக்கள்/மீ2 மற்றும் 155 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் இரகங்களுக்கு 35 குத்துக்கள்/மீ2 என்ற அளவுகளில் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.

நெற்பயிர் பயிரிடும் முறைகள் யாவை?

நாற்றுக்களை நாற்றங்காலிருந்து பிரித்து நடவு வயலில் நடுதல் மற்றும் நேரடி நெல் விதைப்பு.

நடவு நெல் என்றால் என்ன?

நாற்றங்காலில் (விதைப்பாத்திகளில்) நாற்றுக்களை முதலில் வளர்த்து, குறிப்பிட்ட வளர்ச்சிக்கு பிறகு நாற்றுக்களை நாற்றங்காலில் இருந்து பிரித்து நடவு வயலில் நடவு செய்தல் வேண்டும். இதுவே நடவு நெல் எனப்படுகிறது.

நெற்பயிரின் மூன்று வளர்ச்சி நிலைகள் என்ன?

தழைப்பருவம், இனப்பெருக்கப்பருவம் மற்றும் முதிர்ச்சிப்பருவம்.

தழைப்பருவ நிலையை எவ்வாறு வகைப்படுத்துவது?

பயிரின் வீரிய துார் வைத்தல் பருவம் (முக்கிய தண்டிலிருந்து உருவாகும் துார்கள்), பயிர் படிப்படியாக உயரமாகுதல் மற்றும் முறையான இடைவெளிகளில் இலை வெளிவருதல் ஆகியவை தழைப்பருவத்தை உணர்த்துகிறது.

இனப்பெருக்க வளர்ச்சி நிலையை எவ்வாறு வகைப்படுத்துவது?

தண்டு நீட்சி அடைதல் (பயிர் உயரம் அதிகரித்தல்), துார்கள் எண்ணிக்கை குறைவடைதல், கண்ணாடி இலை வெளிவருதல் (கடைசி இலை), கதிர் இலைப்பருவம், பூட்டைப்பருவம் மற்றும் பூத்தல் பருவம் ஆகியவை இனப்பெருக்க வளர்ச்சி நிலையை உணர்த்துகின்றன.

பயிர் முதிர்ச்சி நிலையை எவ்வாறு வகைப்படுத்துவது?

இலை முதிர்ச்சியடைதல் மற்றும் நெல்மணி வளர்ச்சி பெறுதல் முதிர்ச்சிநிலையை உணர்த்துகின்றது.

இனப்பெருக்க வளர்ச்சி நிலையில், கண்ணாடி இலை (கதிர் இலைப்பருவம்) வளர்ச்சி என்றால் என்ன?

பூங்கொத்து உருவாக்க நிலைக்கு அடுத்த நிலையில், (பூங்கொத்து உருவாக்கத்திலிருந்து 16 நாட்களில்) கதிர்த்தாள் உறை வீக்கம் அடைதல். இம்முறையான கதிர்த்தாள் உறை வீக்கம் பெறுவதே கதிர்த்தாள் வளர்ச்சிப் பருவம் எனப்படுகிறது.

கதிர்ப்பருவம் என்றால் என்ன?

கதிர்த்தாள் உறையிலிருந்து பூங்கொத்து வெளிவருதலே கதிர்ப்பருவம் எனப்படுகிறது.

பூத்தல் பருவம் யாது?

நுனிப் பூங்கிளைகளின் மகரந்தப்பை வெளிவந்து மகரந்தத் துாள்களை உதிர்க்கும்போது நிகழ்வதே பூத்தல் பருவம். இவை பூங்கொத்து உருவாகி 25 நாட்களுக்குப் பிறகு ஏற்படக் கூடியவை.

முதிர்ச்சிப்பருவத்தின் மூன்று நிலைகள் யாவை?

பால்பருவ தானிய நிலை, கடின நெல் மணி நிலை, மஞ்சள் நிறமடைந்த முதிர்ச்சி நிலை மற்றும் முதிர்ச்சியடைந்த தானிய நிலை ஆகியவை ஆகும்.

பால்பருவ தானிய நிலை என்றால் என்ன?

நெல் தானியத்தின் உட்பொருள்கள் (தானியமணியின் மாவுப் பொருள் பகுதி) முதலில் நீர் வடித்திலும் பின் பால் போன்ற நிலைத்திறனாக மாறிவிடும். செங்குத்தாக வைக்கும் போது, பால்ப்பருவத்தில் பூங்கொத்தின் மேற்பகுதி சற்று வளைந்து வில் போன்று காட்சி தரும். தானிய மணியின் உட்பொருள் வெள்ளைநிற திரவமாகத் தோன்றும்.

கடின நெல் மணி நிலை என்றால் என்ன?

இது நெல்மணியின் வெள்ளை நிறப்பகுதியாகும். இவை முதலில் மென்மையாக மாறி பின் கடினமான மாவு போன்று மாறிவிடும்.

முதிர்ச்சியடைந்த தானியமணி நிலை என்றால் என்ன?

பூங்கொத்திலிருக்கும் தானியத்தின் நிறம் பச்சையிலிருந்து மஞ்சள் நிறமாக மாற்றம் அடையும். தனிப்பட்ட தானியம் நன்கு முதிர்ச்சியடைந்து முழுவதும் வளர்ச்சி பெற்று, சற்று கடினமாகவும், பச்சை நிறமின்றியும் காணப்படும். 90-100 சதவிகிதம் நிறம்பப்பட்ட பூங்கிளைகள் மஞ்சள் நிறமாக மாற்றம் அடையும் போதுதான் முதிர்ச்சியடைந்த தானியப் பருவம் முழுமையடைகிறது. சில பச்சை நிற கதிர்க்கிளைகளைத் தவிர மற்ற பூங்கொத்துக்கள் மீண்டும் வளைகிறது. அனைத்து தானியங்களும் மஞ்சள் நிறமாகவும், சற்று கடினமாகவும் இருக்கும்.

களை மேலாண்மை என்றால் என்ன?

நெற்பயிரில் பூச்சி மேலாண்மை போன்றே களை மேலாண்மைக்கான சில ஒருங்கிணைந்த முறைகளையும் செயல்படுத்த வேண்டும். 2000 வருடங்களுக்கும் மேலாக, நீர் மற்றும் இயற்பியல் வழி (மனித ஆற்றலால்) மூலம் தான் களைகளை அகற்றி களை மேலாண்மை மேற்கொள்வதுதான் முக்கிய கூறுகளாக இருந்தன. ஆனால் இன்று, களைக்கொல்லிகளைக் கொண்டு கட்டுப்படுத்த முடிகிறது. இருப்பினும் மற்ற அணுகுமுறைகளைக் கொண்டு வருவது அவசியமாகும். சமப்படுத்திய வயலோடு சிறந்த நில மேலாண்மை மேற்கொள்வது, சிறந்த களைக் கட்டுப்பாட்டிற்காக குறைந்த நீர் உபயோகித்தல், சுத்தமாக விதைகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றை முறையாக மேற்கொண்டால், புதிய களை சிற்றினங்கள் உருவாவதைத் தடுக்க முடியும். நாற்று நடவு செய்தல் அல்லது நேரடி விதைப்பு நெல் ஆகிய இரண்டையுமே இயந்திரமயமாக்குதல், மூலமாக எளிதாக களை மேலாண்மை மேற்கொள்ள முடிகிறது. சில இயற்கை வளங்களான சூரிய ஒளி, ஊட்டச்சத்து மற்றும் நீர் ஆகியவற்றிற்காக களைகளுடன் போட்டியிடும் சில நெற்பயிர் இரகங்களை உருவாக்குதலால் அவை களை வளர்ச்சியுடன் போட்டி மேற்கொண்டு அதனைத் தடுக்கிறது. இவை நீண்ட கால களை மேலாண்மை முறையாகும். களைகள் சொந்தமாக பூச்சிகள், நோய்கள், மற்றும் நுாற்புழுக்களைக் கொண்டிருக்கும். எனவே, சில சந்தர்ப்பங்களில், இவ்வகையான இயற்கை கட்டுப்பாட்டுச் செயலிகளை உயிரியல் களை மேலாண்மைக் கருவிகளாகப் பயன்படுத்தி களைகளை கட்டுப்படுத்த முடிகிறது.

சில விவசாயிகள் நேரடி விதைப்பு நெல் முறையை விட நாற்று நடவு முறையை அதிகம் விரும்புவதற்கான காரணம் என்ன?

நெற்பயிரின் கதிர்கள் களைகளை விட உயரமாக இருப்பதால் கயையெடுக்கும் செலவு, மற்றும் அதிகமான இராசயனங்களின் செலவும் குறைக்கப்படுகிறது.


மேலே செல்க

  ஊட்டச்சத்து மேலாண்மை
மானாவாரி மேட்டுப்பாங்கான பகுதி நெல், காரீப் மற்றும் ராபி (குளிர்ப்பருவ) நெல் வகைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட செயற்கை உர அளவு என்ன?
  • மானாவாரி மேட்டுப்பாங்கான பகுதி நெல் சாகுபடிக்கான பரிந்துரைக்கப்பட்ட உர அளவு (தழைச்சத்து, மணிச்சத்து, மற்றும் சாம்பல்சத்து) 40-20-20 கிலோ/எக்டர் ஆகும்.
  • தாழ்வான பகுதி காரீப் பாசன வசதியுடைய நெல்லுக்கு 60-30-30 கிலோ/எக்டர் மற்றும் குளிர்ப்பருவ நெல் சாகுபடிக்கு 80-40-40 கிலோ/எக்டர் ஆகியவை ஆகும்.
கலப்பு நெல் வகை மற்றும் நறுமண நெல்லுக்கான பரிந்துரைக்கப்பட்ட உர அளவு என்ன?
  • கலப்பு நெல்லுக்கான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து உரங்களின் அளவு 100-60-60 கிலோ/எக்டர் ஆகும்.
  • நறுமண நெல்லுக்கான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, துத்தநாகம் ஆகியவற்றின் அளவுகள் 60-30-30-25 கிலோ/எக்டர் ஆகும்.
நாற்றங்கால் பாத்தியில் எவ்வாறு உர மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்?
10 செண்ட் பரப்புகளுக்கான உர அளவு பின் வருமாறு,

10 செண்ட் நாற்றங்கால் பரப்பில், 2 குவிண்டால் தொழு உரம், 4.5 கிலோ யூரியா, 13 கிலோ தனி உயர் எரிகை, மற்றும் 3.5 கிலோ சாம்புர பாசிதை ஆகியவை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலுரமிடுதலின் போது, அதாவது விதை விதைத்து 15 நாட்களுக்குப் பிறகு, 4.5 கிலோ யூரியவை அளிக்க வேண்டும்.

அசோலா என்றால் என்ன? எந்த வகையில் இது பயன்படுகிறது?
  • அசோலா என்பது நீர்ப்பெரணி, கூட்டு வாழ்வு முறை மூலமாக நீலப்பச்சை பாசியின் உதவியால் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை மண்ணுக்குள் அளிக்கிறது. இதன் மூலம் மண் ஆரோக்கியம் பெருகுவதோடு மண்ணின் வளமும் மேம்படுகின்றது. களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதோடு, செயற்கை இரசாயன தழைச்சத்து உரங்கள் வீணாவதைத்தடுக்கிறது. அசோலா உயிர் உரங்களின் தொழிற்நுட்பம் மிகவும் எளிமையாகவும், விலை மலிவாகவும் இருப்பதுடன் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும் விளங்குகின்றது. நெல் வயலில், பயிர் நடவு செய்வதற்கு முன்னரோ அல்லது நடவு செய்த பின்னோ அசோலாவை ஒரு முறை வளர்ப்பதன் மூலம், 25 டன் அளவு அங்கக உயிர்ப்பொருள் உற்பத்தி செய்கிறது. மேலும் 50 கிலோ தழைச்சத்து/எக்டர் வரை பங்களிக்கிறது. பயிர்ப் பருவத்தின் போது ஒரு முறை அசோலா வளர்ப்பதன் மூலம் 20-40 கிலோ/எக்டர் தழைச்சத்தை எளிதாக வழங்குகிறது. கோழி இனப் பறவைகள், வாத்துக்கள், மீன் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றிற்கு இரையாகப் பயன்படுகிறது.
மலிவான விலையில் கிடைக்க கூடிய செயற்கை தழைச்சத்து இராசயன உரம் எது?

அனைத்து வகைகளிலும் யூரியா உரம் தான் மிகவும் மலிவானது.

அமில மண்ணில், எவ்வகையான மணிச்சத்து உரம் உதவியாக உள்ளது?

விதைப்பதற்கு ஒரு மாதம் முன்னரே ராக் பாஸ்பேட் உரத்தை வயலில் அளிக்க வேண்டும்.அல்லது 50 சதவிகிதம் ராக் பாஸ்பேட் 50 சதவிகிதம் தனி உயர் பாஸ்பேட் கலவையை அளிக்க வேண்டும்.

பாஸ்பேட் உரத்தை எந்த நிலையில் அளிக்க வேண்டும்?

இறுதி உழவின் போது, அடியுரமாக மட்டுமே அளிக்க வேண்டும்.

உயிர் உரங்களின் வகைகள் யாவை? எந்த பயிர்களுக்கு இதனை அளிக்க வேண்டும்?

உயிர் உரங்களின் வகைகள் பின்வருமாறு:

  • அசோடோபேக்டர் - நெற்பயிர் அல்லாது மற்ற பயிர் வகைகளுக்கு.
  • அசோஸ்பைரில்லம் - நன்செய் நில நெற்பயிர் .
  • ரைசோபியம் - பயிர் வகைகள் மற்றும் நிலக்கடலைப் பயிர்
  • சாம்பல் சத்தை கரைக்கும் நுண் உயிரிகள் - அனைத்துப் பயிர்களுக்கும்.

மண் ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது?

கரிம எரு அளித்தல் மற்றும் பயிர்த் துார்களை மறுசூழற்சி செய்தல் மூலம் மண் வளத்தை மேம்படுத்தலாம்.

அதிக மகசூல் ஈட்டும் நெல் இரகத்திற்கான உர அளவு என்ன?

குறுகிய காலப் பயிருக்கு தழைச்சத்து, மணிச்சத்து, மற்றும் சாம்பல்சத்து உரங்களின் அளவு முறையே 24: 12: 12 கிலோ/எக்டர் மத்திய காலம் மற்றும் நீண்ட கால அதிக மகசூல் ஈட்டும் நெல்லுக்கான உர அளவுகள் 32: 16: 16 கிலோ/ஏக்கர் ஆகும்.

தழைச்சத்து உரத்தை நெற்பயிரில் எவ்வாறு அளிப்பது?

  • விதை விதைப்பு/நாற்று நடவின்போது 25 சதவிகிதம்
  • துார் வைக்கும் பருவத்தின் போது 50 சதவிகிதம்.
  • பூங்கொத்து உருவாக்க நிலையின் போது 25 சதவிகிதம்.
உரமிடுதலில், மேலுரமிடுதல் என்றால் என்ன?

விதை விதைப்பு அல்லது நாற்று நடவு செய்த பிறகோ அல்லது பயிர்ச்செடிகள் நன்கு வளர்ச்சியடைந்த பின்னரோ, மண் அல்லது நீர்ப்பரப்பில் உரங்களை அளிப்பதே மேலுரமிடுதல் எனப்படும். பயிர் வளர்ச்சி நிலையில் அளித்தல் என்பது (பொதுவாக பூத்தல் பருவத்திற்குப் பிறகு 3 வாரங்களில் பூங்கொத்து உருவாக்க நிலையில்) மேலுரமிடுதல் ஆகும்.


மேலே செல்க

நீர்ப்பாசனம்  
நெல்லின் நீர் தேவைக்கான மாறுநிலை பயிர் வளர்ச்சிப் பருவங்கள் யாவை?
  • 1) நாற்றுப்பருவம்
  • அதிகத் துார்ப் பருவம்
  • பூங்கொத்து உருவாக்க நிலை
  • பூத்தல் பருவம்
  • மென்மையான (அல்லது) பால்ப் பருவம்
பாசன நெல் விளக்குக?

ஒரு வருடத்தில் ஒன்று அல்லது அதற்கும் அதிகமான பயிர்களுக்கு ஏற்றவாறு நீர் வசதியுள்ள சேற்றுழவிட்ட வயல்களில் வரப்புகள் அமைக்கப்பட்டு அதில் வளரச் செய்வதே பாசன நெல் ஆகும். உலகம் முழுவதும் உள்ள 80 மில்லியன் எக்டர்கள் பாசன நெல் (55 சதவிகிதம் மொத்த பரப்பு) மற்ற அனைத்து நெல் அறுவடையில் மூன்று கால் பங்கு அளவு உற்பத்தி செய்கிறது. ஒரு எக்டருக்கு மொத்த சராசரி மகசூல் 3-9 டன்கள் அளவாக வேறுபடுகிறது.

வெள்ளப்பெருக்க நெல் மற்றும் அதன் சூழ்நிலையை விளக்குக?

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா விவசாயிகள் ஏறக்குறைய 10 மில்லியன் எக்டர்களில் வெள்ளப்பெருக்கு நெல்லை உற்பத்தி செய்கின்றனர். இவை உலகில் மற்ற பரப்புகளில் வளரும் இவ்வகை நெல்லில் 88 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. மூன்று முக்கிய வெள்ளப்பெருக்கு நெல் வகைகள் உள்ளன. ஒன்று ஆழ்நீர் நெல், இவ்வகை நெல் 50-100 செ.மீ ஆழம் நீரைத் தாங்கக் கூடியவை. இரண்டாவது வகை நெல் "மிதக்கும் நெல்" இது 400 செ.மீ நீர் ஆழம் வரை காணக்கூடியது. மற்றொரு வகை "கரையோர நன்செய் நெல்" வகையானது நீர் மூழ்கு நிலையிலும், சில சமயங்கள் உப்பு நீரிலும் சில காலங்கள் வாழக் கூடியவை.


மேலே செல்க

  பூச்சி மற்றும் நோய்கள்
நெற்பயிரின் மிக முக்கியமாக பூச்சிகள் யாவை?

நெல் தண்டு துளைப்பான், ஆனைக்கொம்பன் ஈ, படைப்புழு, நெல் கூண்டுப்புழு, நெல் ஸ்கிப்பர் பூச்சி, இலைச்சுருட்டுப்புழு, நெல் கொம்புப்புழு, மஞ்சள் கம்பளிப்புழு, வெட்டுக்கிளி, முள் வண்டு, குருத்து ஈ, பச்சை இலைத்தத்துப்பூச்சி, பழுப்பு இலைத்தத்துப்பூச்சி, வெண்முதுகுத்தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி, கதிர் நாவாய்ப்பூச்சி, இலைப்பேன் ஆகியவை நெற்பயிரைத் தாக்கும் முக்கிய பூச்சிகள் ஆகும்.

நடுகுருத்து காய்வதற்கும் வெண்கதிர்கள் தோன்றுவதற்கும் காரணம் என்ன?

தண்டு துளைப்பான்

நெற்பயிர் தண்டு துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள் யாவை?
  • நெருக்கமான நடவு மற்றும் வயலில் தொடர்ச்சியான நீர்த்தேக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
  • பூச்சித் தாக்கப்பட்ட துார்களை பிடுங்கி அகற்றி அழித்து விட வேண்டும்.
  • பூச்சிகளைக் கவர்ந்து அதனைக் கொல்வதற்காக ஒளிப்பொறியை வயலில் பொருத்த வேண்டும்.
  • நில அடிமட்டம் வரைபயிர்களை அறுவடை செய்ய எஞ்சியிருக்கும் துார்களை அகற்ற வேண்டும். 
"டிரைக்கோகிரேம்மா ஜப்போனிக்கத்தை" எப்பொழுது விடுவித்து பூச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும்?

அந்துப்பூச்சியின் செயலைக் கண்ட ஒரு வாரத்திற்குள் இந்த ஒட்டுண்ணியை விடுவிக்க வேண்டும்.

நெற்பயிர் தண்டு துளைப்பானுக்கான எதிர்ப்புத் திறன் கொண்ட நெல் இரகங்கள் யாவை?

ரத்னா, ஜெயா மற்றும் டி.கே.எம் 6.

தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்துவதற்காக சிறந்த பூச்சிக்கொல்லி என்ன? ஒரு எக்டருக்கு என்ன அளவு பரிந்துரைக்கப்படுகிறது?

பென்தியான் 100 EC (திரவமாற்று திரட்டு) 500 மிலி/எக்டர் (அ) மோனோக்ரோட்டோபாஸ் 36 SL 1000 மிலி/எக்டர் (அ) ஃபெனிட்ரோதியான் 50 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் (அ) போசலோன் 35 EC (திரவமாற்று திரட்டு) 1500 மி/லி எக்டர் (அ) குயினால்பாஸ் 25 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் (அ) பாஸ்போமிடான் 40 SL 600 மிலி/எக்டர் (அ) ப்ரோஃபெனோபாஸ் 50 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் ஆகியவை ஆகும்.

குழல் போன்ற வீக்கம்/முடிச்சு அல்லது வெள்ளித் தண்டு ஆகிய அறிகுறிகளுக்கான காரணம் என்ன? இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

ஃபென்தியான் 100 EC (திரவமாற்று திரட்டு) 500 மிலி/எக்டர் (அ) ஃபெனிட்ரோத்தியான் 50 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் (அ) போசலோன் 35 EC (திரவமாற்று திரட்டு) 1500 மிலி/எக்டர் (அ) குயினால்பாஸ் 25 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் (அ) பாஸ்போமிடான் 40 SL 600 மிலி/எக்டர்.

நெற்பயிர் ஆனைக்கொம்பன் ஈ பூச்சியை உழவியல் முறைகள் மூலம் எவ்வாறு தடுப்பது?
  • பயிர் அறுவடைக்குப்பின் உடனடியாக வயலை நன்கு உழ வேண்டும்.
  • முன்னரே முதிர்ச்சியடையும் இரகங்கள் மற்றும் இப்பூச்சி எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களான எம்டீயூ 3.
  • சக்தி, விக்ரம், மற்றும் சுரேகா ஆகியவற்றைப் பயிரிடுதல் வேண்டும்.
  • சாம்பல் சத்து உரத்தை உகந்த அளவு பரிந்துரைக்க வேண்டும். அகச்சிவப்பு ஒளிப்பொறிகளை வைப்பதால், சிறந்த முறையில் ஆனைக்கொம்பன் ஈ யை கவர்ந்து கட்டுப்படுத்துகிறது.
"ப்லேடிகேஸ்டர் ஒரைசியா" வை எப்பொழுது, எவ்வாறு நெல் வயலில் விடுவிக்க வேண்டும்?

நாற்று நடவு செய்து 10 நாட்களுக்குப் பிறகு 10 சதுர மீட்டர் அளவிற்கு ஒன்று என்ற அளவில் நடவு வயலில் விடுவிக்க வேண்டும்.

"ஆனைக்கொம்பன் ஈ" யை சிறப்பாகக் கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் யாவை?
  • ஃபென்தியான் 100 EC (திரவமாற்று திரட்டு)
  • 500 மிலி/எக்டர் (அல்லது)
  • குயினால்பாஸ் 25 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர்
வயலில் நாற்றுகள் மாடு மேய்ந்தது போல் தோன்றுவதற்கு காரணம் என்ன?

படைப்புழுக்கள்

"படைப்புழுவிற்கு" உகந்த மாதங்கள் யாவை?

ஜூலை-செப்டம்பர்.

நடவு வயல் மற்றும் நாற்றங்காலில் படைப்புழுவை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

நடவு வயலில் நீர்ப்பாசனத்தின் போது மண்ணெண்ணெயை அதனுடன் கலந்துவிட வேண்டும். இதனால் முச்சுத்திணறல் ஏற்பட்டு பூச்சி இறந்துவிடும்.நடவு வயலில் வாத்துக்களை விட வேண்டும்.நாற்றங்காலில் நீரை வடிகட்டி, க்லோர்பைரிபாஸ் 20 EC 80 மிலி +20 லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும்.

நாற்றங்கால் மற்றும் நடவு வயலிலிருக்கும் கூண்டுப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கான பூச்சிக்கொல்லிகள் யாவை?

நாற்றங்காலில் இருக்கும் நீருடன் 100 மிலி மண்ணெண்ணெயை கலக்க வேண்டும். பின் 8 சென்ட் நிலத்திற்கு 30 மிலி என்ற அளவில் குயினால்பாஸ் 25 EC (திரவமாற்று திரட்டு) தெளிக்க வேண்டும்.நடவு வயலில் குயினால்பாஸ் 25 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் (அல்லது) மோனோக்ரோட்டோபாஸ் 36 WSC (நீரில் கரையும் திரள்) 500 மிலி/எக்டர் ஆகியவற்றைத் தெளிக்க வேண்டும்.

நெல் வயலில் கூண்டுப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கான உழவியல் மேலாண்மை முறைகள் என்ன?
  • தேங்கியிருக்கும் நிலையான நீரில் 250 மிலி மண்ணெண்ணெயை கலக்க வேண்டும். பயிர்ச் செடிகளின் நுனிப்பகுதியின் மேல் வயல்களின் இருபுறமும் நின்று கயிற்றைக் கொண்டு பயிர்களின் மேல் மெதுவாக இழுக்க வேண்டும். இதனால் பூச்சிகள் நீரில் விழுகின்றன. பின் வயலிலிருந்து நீரை வடிகட்டி விட வேண்டும். பின் கூண்டுப்புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும்.;
நாற்றங்கால் மற்றும் நடவு வயலிலிருக்கும் கூண்டுப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கான பூச்சிக்கொல்லிகள் யாவை?
  • நாற்றங்காலில் இருக்கும் நீருடன் 100 மிலி மண்ணெண்ணெயை கலக்க வேண்டும். பின் 8 சென்ட் நிலத்திற்கு 30 மிலி என்ற அளவில் குயினால்பாஸ் 25 EC (திரவமாற்று திரட்டு) தெளிக்க வேண்டும்.
  • நடவு வயலில் குயினால்பாஸ் 25 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் (அல்லது) மோனோக்ரோட்டோபாஸ் 36 WSC (நீரில் கரையும் திரள்) 500 மிலி/எக்டர் ஆகியவற்றைத் தெளிக்க வேண்டும்.
"நெல் ஸ்கிப்பர்" பூச்சியைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் யாவை?

குயினால்பாஸ் 25 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் (அ) மோனோக்ரோட்டோபாஸ் WSC (நீரில் கரையும் திரள்) 500 மிலி/எக்டர்.

இலைச்சுருட்டுப்புழுவை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
  • எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான தமிழ்நாடு வேளாண்மைப் பல்லைக்கழகத்தின் LFR 831311, காவேரி, அகாஷி, டிகேஎம்-6, ஐஈடி 7511, ஐஈடி 9225, மற்றும் ஐஈடி 9797 ஆகியவற்றைப் பயன்படுத்துதல்.
  • பூச்சித் தாக்கப்பட்ட இலைகளை கத்தரித்து விடுவதால் பூச்சித் தொகையை குறைக்க முடிகிறது.
  • வரப்புகளை சீர் செய்து சுத்தமாக வைத்தல் வேண்டும். புல்வகைக் களைகளை அகற்ற வேண்டும்.
  • மிகுதியான தழைச்சத்து உரம் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அதனைக் கொல்லுவதற்காக ஒளிப்பொறிகளை வயலில் வைக்க வேண்டும்.
  • நடவு செய்து 37, 44 மற்றும் 51 வது நாட்களில் மொத்தம் மூன்று முறைகள் "டிரைக்கோகிராம்மா சிலோனிஸ்" விடுவிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து , 58,65 மற்றும் 72-வது நாட்களில் மொத்தம் மூன்று முறை "மோனோக்ரோட்டோபாஸ்" 36 SL @ 1000 மிலி/எக்டர் தெளிக்க வேண்டும்.
  • வேப்பங்கொட்டையின் சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர் (அ)ஃபெனிட்ரோதியான் 50 EC (திரவமாற்று திரட்டு) 1.01 லி (அ) போசலோன் 35 EC (திரவமாற்று திரட்டு) 1.5 லிட்டர் (அ) க்லோர்பைரிபாஸ் 20 EC (திரவமாற்று திரட்டு) @ 1.25 லிட்டர்/எக்டர் ஆகியவற்றைத் தெளிக்க வேண்டும்.
இலை மடக்குப் புழுவிற்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்கள் எவை?

காவேரி, அகாலி, டிகேஎம் 6, டிகேஎம் 12, ஏடீடி 46, டிபிஎஸ் 2, டிபிஎஸ் 3, ஏடீடி 44, பிஒய் 4, கைராளி, அகல்யா குஞ்சு குஞ்சு வர்ணா, குஞ்சு குஞ்சு பிரியா, ரேஷ்மி (பிடிபீ 44) , நீரஜா (பிடிபீ 47) மற்றும் தீப்தி.;

பயிர்ச்செடியில் இலைகள் முறையற்று, நுனியிலிருந்து கீழ்நோக்கி உதிர்வதற்காக காரணம் என்ன?

நெல் கொம்புப் புழு.

நெற்பயிரின் கொம்புப்புழுவை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

குயினால்பாஸ் 25 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் (அ) மோனோக்ரோட்டோபாஸ் 36 WSC (நீரில் கரையும் திரள்) 500 மிலி/எக்டர் ஆகியவற்றைத் தெளிக்க வேண்டும்.;

நெல் வயலில் பூங்கொத்துப் பருவத்தில் தண்டுகளை வெட்டும் பூச்சி எது?

வெட்டுக்கிளி.;

மஞ்சள் கம்பளிப்புழுவை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

குயினால்பாஸ் 25 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் (அ) மோனோக்ரோட்டோபாஸ் 36 WSC (நீரில் கரையும் திரள்) 500 மிலி/எக்டர்.

வெட்டுக்கிளியை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

வயலில் உழவு மேற்கொண்ட பிறகு, பூச்சியின் முட்டைகளை வெளிப்படுத்துவதால், அவை பறவைகளால் உண்ணப்படுகிறது. வயல் வரப்புகளை சீர் செய்ய வேண்டும். பயிர்களின் மேல் 5-10 சதவிகிதம் பியூட்டா ஹெக்சாக்லோரைடு (அல்லது) மிதைல் பேரத்தியான் 2 சதவிகிதம் @ 25-30 கிலோ/எக்டர் (அ) மேலத்தியான் 5 சதவிகிதம் @ 20 கிலோ/எக்டர் ஆகியவற்றைத் துாவ வேண்டும்.

மார்புப் பகுதியில் முள்ளுடன் காணப்படும் நீள-கருப்பு நிற பளப்பளப்பான வண்டுப்பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
  • பொட்டு/கொப்புளம் போன்ற அறிகுறியையுடைய இலை நுனியை அகற்றிவிட வேண்டும். கையால் சேகரித்தல் மற்றும் கைவலைகளைப் பயன்படுத்தி வண்டுகளைக் கொல்லுதல். குயினால்பாஸ் 25 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் தெளித்தல்.
இலை விளிம்புகளில் இள மஞ்சள் நிற நீள்வடிவ துளையிட்ட புள்ளிகள் தோன்ற காரணம் என்ன?

குருத்து ஈ;

எதனால் இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி ஆரஞ்சு மஞ்சள் நிறமாக மாறுகின்றன?

பச்சை தத்துப்பூச்சி.

நெல் துங்ரோ நச்சுயிரி, நெல் மஞ்சள் மற்றும் இடைநிலை மஞ்சள் அமைப்பு ஆகிய நோய்களைப் பரப்பும் உயிரி என்ன?

பச்சை தத்துப்பூச்சி.;

பச்சைத் தத்துப்பூச்சியை எதிர்க்கும் திறன் கொண்ட நெல் இரகங்கள் யாவை?

ஐஆர் 50, சிஆர் 1009, கோ 46.

பச்சைத்தத்துப் பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
  • 20 சென்ட் நாற்றங்காலில் 12.5 கிலோ வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக அளிக்க வேண்டும். தத்துப்பூச்சிகளைக் கவர்ந்து அதனைக் கட்டுப்படுத்துவதற்காக ஒளிப்பொறிகளை வைக்க வேண்டும்.நாற்று நடவு செய்து 15 மற்றும் 30 வது நாட்களில் இருமுறை கீழ்வரும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க வேண்டும். பாஸ்போமிடான் 40 SL @ 1000 மிலி/எக்டர் (அ)ப்ரோஃபென்பாஸ் 50 EC (திரவமாற்று திரட்டு) @ 1000 மிலி/எக்டர்.;
ஏன் வயலில் வட்டமான வறண்ட திட்டுகள் காணப்படுகின்றன?

பழுப்பு தத்துப்பூச்சி – புகையான் 

புல் குட்டை நோய், காய்ந்து குட்டையாகும் நோய் மற்றும் வாடல் குட்டை ஆகிய நோய்களைப் பரப்பும் உயிரி என்ன?

பழுப்பு இலைத்தத்துப்பூச்சி.;

பழுப்பு இலைத் தத்துப் பூச்சியைத் தாங்கும் அல்லது எதிர்க்கும் திறன் கொண்ட வெளியிடப்பட்ட இரகங்கள் யாவை?

அருணா, எடீடி 36, கோ 42, கோ 46, ஐஆர் 36, மற்றும் ஐஆர் 72.

நெல் வயலில் பழுப்பு இலைத் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் உழவியல் மேலாண்மை செயல்முறைகள் என்ன?
  • அடர்த்தியான/நெருக்கமான பயிர் நடவு செய்தலை தவிர்க்க வேண்டும். மேலும் ஒவ்வொரு 2.5 மீ இடையில் 30 செ.மீ வரிசை இடைவெளி விட வேண்டும். மிகுதியான தழைச்சத்து உரங்கள் அளிப்பதை தவிர்க்க வேண்டும். இடைவிட்ட வயல் வடிகால் மூலம் பாசனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இரவு நேரத்தில் ஒளிப்பொறிகளையும், பகல் நேரத்தில் மஞ்சள் தட்டுப்பொறிகளையும் வயலில் வைக்க வேண்டும். இப்பூச்சியின் இயற்கையான எதிரிகளான "லைகோசாசூடோஅன்னுலேடா, சிர்டார்ஹினஸ் லிவிடிபென்னிஸ்" ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும். புத்துயிர்ப்பு ஏற்படுத்தும், பூச்சிக்கொல்லிகளான செயற்கை பைரித்ராய்ட்ஸ், மிதைல் பேரத்தியான், ஃபென்தியான் மற்றும் குயினால்பாஸ் ஆகியவற்றை பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும். பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு முன், வயலில் உள்ள நீரை வடிகட்ட வேண்டும். பூச்சிக்கொல்லிகளை பயிர்ச்செடியின் அடிப்பகுதியில் தெளிக்க வேண்டும்.;
பழுப்பு இலைத் தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் யாவை?
கீழ்வரும் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்:
  • பாஸ்போமிடான் 40 SL 1000 மிலி/எக்டர், மோனோக்ரோட்டோபாஸ் 36 ஷிலி 1250 மிலி/எக்டர்
  • போசலோன் 35 EC (திரவமாற்று திரட்டு) 1500 மிலி/எக்டர்,கார்பரைல் 10 டீ 25 கிலோ/எக்டர்
  • மிதைல் டெமிடான் 25 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர், அசிபேட் 75 SP 625 கிராம்/எக்டர்
  • க்லோர்பைரிபாஸ் 20 EC (திரவமாற்று திரட்டு) 1250 மிலி/எக்டர், கார்போஃபூரான் 3 ஜி 17.5 கிலோ/எக்டர்
  • டைக்லோர்வாஸ் 76 WSC (நீரில் கரையும் திரள்) 350 மிலி/எக்டர்
  • வேப்பெண்ணெய் 3 சதவிகிதம் @ 15 லிட்டர்/எக்டர், இழுப்பை எண்ணெய் 6 சதவிகிதம் @ 30 லிட்டர்/எக்டர், வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர்
ஏன் வயலில் வட்டமான வறண்ட திட்டுகள் காணப்படுகின்றன?

வெண்முதுகு தத்துப்பூச்சி 

நெஞ்சுக்கூட்டில் வைரம் போன்ற குறிகளுடன், முட்டையிடும் பகுதி கருப்பு நிற கீறுகளுடன் தோன்றும் பூச்சி எது?

வெண்முதுகு தத்துப்பூச்சி

வெண்முதுகுத் தத்துப்பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
  • மிகுதியான தழைச்சத்து உரங்கள் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • இடைவிட்ட வயல் வடிகால் மூலம் பாசனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
வெண்முதுகுத் தத்துப்பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் யாவை?
  • கீழ்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத் தெளித்தல்.பாஸ்போமிடான் 40 SL 1000 மிலி/எக்டர்,மோனோக்ரோட்டோபாஸ் 36 SL @ 1250 மிலி/எக்டர்
  • கார்போஃபூரான் 3 ஜி @ 17.5 கிலோ/எக்டர், டைக்லோர்வாஸ் 76 WSC (நீரில் கரையும் திரள்) @ 350 மிலி/எக்டர்
  • வேப்பெண்ணெய் 3 சதவிகிதம் @ 15 லிட்டர்/எக்டர், இலுப்பை எண்ணெய் 3 சதவிகிதம் @ 30 லிட்டர்/எக்டர், வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர்
சிவப்பான நிறத்தில், இறக்கைகள் இல்லாத இழைவடிவமுடைய பொருள்களால் போர்த்தப்பட்டிருக்கும் பூச்சி எது?

மாவுப்பூச்சி

மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த பயன்படும் உயிரியல் காரணிகள் எவை?

இயற்கை பூச்சி எதிரிகளான "ஸ்கைம்னஸ் சிற்றினம், அனாட்ரிக்கஸ் பிக்மேயிஸ் மற்றும் மெப்பாகைமெரஸ்" என்சிஃபெர் ஆகிய உயிரினங்கள்.

நெல் வயலில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்துவதற்கான பூச்சிக்கொல்லிகள் யாவை?
பூச்சித் தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே கீழ்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டும்.
  • டைமீத்தோயேட் 30 EC (திரவமாற்று திரட்டு) 500 மிலி/எக்டர் (அ) மிதைல் டெமட்டான் 25 EC (திரவமாற்று திரட்டு) @ 500 மிலி/எக்டர்
பூச்சி உட்கொண்டு துளைகள் ஏற்பட்ட பரப்பில், நெல் மணிகளின் மேல் கருப்பு நிறப் புள்ளிகள் காணப்படுவது எதனால்?

கதிர்நாவாய்ப்பூச்சி

வட்டமாக பழுப்பு நிற விதை போன்று, 2 மி.மீ நீளம் கொண்டு இரு வரிசைகளில் முட்டைகள் கூட்டமாக வைக்கப்பட்டிருக்கும். இம்முட்டைகள் எதனுடையது?

கதிர்நாவாய்ப்பூச்சி

நெற்கதிர் நாவாய்ப்பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

கீழ்வரும் ஏதேனும் ஒன்றை 25 கிலோ/எக்டர் என்ற அளவில், முதலில் பூத்தல் பருவத்திலும், அதற்கு ஒரு வாரத்திற்கு பின் ஒருமுறையும் மொத்தம் இருமுறைத் துாவ வேண்டும்.

  • குயினால்பாஸ் 1.5 டீ (அ) ஃபெனிட்ரோதியான் 2 டீ (அ) கார்பரைல் 10 டீ (அ) மேலத்தியான் 5 டீ (அ)
  • கேகேஎம் 10டீ (புதிய கேகேஎம் துகள் வடிவ முறையில் 10 சதவிகிதம் வசம்பு வேர்ப்பொடி மற்றும் 90 சதவிகிதம் அனல் மின்னிலையத்திலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருளான பறக்கும் சாம்பலும் அடங்கியிருக்கும். இந்த துாள் வடிவ கேகேம் நெல் கதிர்நாவாய்ப்பூச்சிகளைத் துரத்துகிறது.

மேற்கூறியதைப் போன்றே கீழ்வரும் ஏதேனும் ஒன்றை இருமுறை தெளிக்க வேண்டும்.

  • மோனோக்ரோட்டோபாஸ் 36 SL 500 மிலி/எக்டர் (அ) ஃபெனிட்ரோதியான் 50 EC திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் (அ)
  • ஃபென்தியான் 100 EC (திரவமாற்று திரட்டு) 500 மிலி/எக்டர் (அ) மேலத்தியான் 50 EC @ 500 மிலி/எக்டர் (அ)
  • வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர் (அ) நொச்சி (அ) ஐப்போமியா (அ) கருவேல் மர இலைச்சாறுகள் 10 சதவிகிதம்.
எதனால் நுனி இலைகள் சுருண்டு, மேலிருந்து கீழ்நோக்கி காய்ந்தும் காணப்படும்?

செடிப்பேன் 

கரும்பழுப்பு நிற செடிப்பேன்களை கட்டுப்படுத்துவதற்குப் பயன்படும் பூச்சிக்கொல்லிகள் யாவை?

கீழ்வரும் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.

  • பாஸ்போமிடான் 40 SL 600 மிலி/எக்டர் (அ) மோனோக்ரோட்டோபாஸ் 36 SL 500 மிலி/எக்டர் (அ)
  • குயினால்பாஸ் 25 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர்
தண்டு துளைப்பானின் பொருளாதார சேத நிலை அளவு என்ன?

நாற்றங்காலில் மிதமான முதல் அதிகளவு தாக்குதல் காணப்படும். 5 சதவிகிதம் அழுகிய குறுத்து (அ) நடவுப்பருவம் முதல் துார்வைக்கும் பருவம் வரை சதுர மீட்டருக்கு 1 முட்டைத்திறள் அளவு (அ) பூங்கொத்து உருவாக்க நிலையிலிருந்து கதிர் இலைப்பருவம் (அல்லது) பூத்தல் பருவம் வரை ஒரு சதுர மீட்டருக்கு ஒரு அந்துப்பூச்சி என்ற அளவில் காணப்படும்.

ஆனைக்கொம்பன் ஈ பூச்சியின் பொருளாதார சேத நிலை அளவு என்ன?

பூச்சிகளின் உட்பரவல் உள்ள பரப்புகளில் 1 சதுர மீட்டருக்கு ஒரு பூச்சி (அல்லது) பூச்சிகளின் உட்பரவல் இல்லாத பரப்புகளில் 5 சதவிகிதம் பூச்சி தாக்கப்பட்ட துார்கள் என்ற அளவில் காணப்படும். மத்திய துார் வைக்கும் பருவத்தில் 5 சதவிகிதம் தாக்கப்பட்ட (பாதிக்கப்பட்ட) துார்களே பொருளாதார சேத நிலை அளவாகும்.

குருத்து ஈ பூச்சியின் பொருளாதார சேத நிலை அளவு என்ன?

நடவு செய்து 30 நாட்கள் வரை 20 சதவிகிதம் சேதமடைந்த குத்துக்கள்.

கூண்டுப்புழுவின் பொருளாதார சேத நிலை அளவு என்ன?

ஒரு குத்துக்கு 1-2 கூண்டுப்புழுக்கள் 

இலைச்சுருட்டுப்புழுவின் பொருளாதார சேத நிலை அளவு என்ன?

நடவின்போது 1 குத்துக்கு ஒரு சேதமடைந்த இலை அல்லது ஒரு குத்துக்கு ஒரு புழு என்ற அளவில் காணப்படும். மத்திய துார்வைக்கும் பருவம் (அ) பூங்கொத்து உருவாக்க நிலையிலிருந்து கதிர் இலைப்பருவம் வரை ஒரு குத்துக்கு 1-2 புதிதாக சேதமடைந்த இலைகள் காணப்படும். 

முள் வண்டின் பொருளாதார சேத நிலை அளவு என்ன?

நடவுப் பருவம் முதல் முன் துார்விடும் பருவங்களில் ஒரு குத்துக்கு ஒரு முதிர்ப்பூச்சி அல்லது ஒரு புழு மற்றும் மத்திய துார்விடும் பருவத்தில் 1 குத்துக்கு ஒரு முதிர்ப்பூச்சி அல்லது 1-2 சேதமடைந்த இலைகள் காணப்படும். 

பழுப்புத் தத்துப்பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

கீழ்வரும் முறைகளின் மூலம் பழுப்புத் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த முடிகிறது.
3-4 நாட்களுக்கு வயலிலிருந்து நீரை வடித்துவிட வேண்டும்.உகந்த பயிர்த்தொகையைப் பராமரித்தல் பக்கச்சந்துகள் அமைத்தல் (ஒவ்வொரு 20 வரிசைகளுக்கு அடுத்து 1 வரிசை விட்டுவிட வேண்டும்).மோனோக்ரோட்டோபாஸ் 36 SL @ 400 மிலி, ஈத்தோஃபென்ப்ராக்ஸ் 10 EC (திரவமாற்று திரட்டு) @ 300 மிலி,போசலோன் 35 EC (திரவமாற்று திரட்டு) @ 400 மிலி. இமிடால்க்லோபிரிட் @ 40 மிலி பீபிஎம்சி @ 400 மிலி/பரப்பு இதில் 200 லிட்டர் நீருடன் கலந்து அளித்தல். பயிரின் அடிப்பகுதியில் தெளிமுனையை வைக்க வேண்டும். வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லியை @ 4-5 மிலி/லிட்டர் அளவில் பயிரின் அடிப்பகுதியில் தெளிக்க வேண்டும். 

குலைநோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
கீழ்வரும் முறைகளின் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்
    உழவியல் கட்டுப்பாட்டு முறை/strong>
  • மேட்டுப்பாங்கான பரப்புகளில் நாற்றுக்கள் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • தழைச்சத்து உரத்தை 80 கிலோ/எக்டர் அளவிற்கு மேல் மிகுதியாக அளிக்கக் கூடாது.
  • தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து உரத்தை சரிவிகிதத்தில் 2-3 பாகங்களாகப் பிரித்து அளிக்க வேண்டும்.
    இரசாயன கட்டுப்பாட்டு முறை
  • ஹினோசன் 50 EC (திரவமாற்று திரட்டு) @ 2 மிலி/லிட்டர் தண்ணீருடன் சேர்த்துத் தெளித்தல்.
  • பவிஸ்டின் 50 நனையும் துாள் @ 2.5 கிராம் அளவை 1 லிட்டர் வில்வ மர இலைச் சாறுடன் கலந்து தெளித்தல்.
  • 25 கிராம் துாளை ஒரு லிட்டர் நீருடன் சேர்த்து நன்கு அரைத்து அதனை 1 லிட்டர் நீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
  • 25 கிராம் இலைகளை (ஆக்சிமம் சேன்க்டம்) ஆவியில் வேகவைத்து (15 நிமிடங்கள்) பின்பு 1 லிட்டர் நீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை விவசாயிகளுக்கு எவ்வாறு உதவுகிறது?

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையைச் செயல்படுத்துவதன்மூலம், விவசாயிகள், பூச்சிகள், நோய்கள், களைகள் மற்றும் மற்ற உயிரினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்முறைகள் மற்றும் செய்திகளை நன்கு அறிந்து சிறந்த வகையில் கட்டுப்பாட்டு முறைகளைத் தீர்மானிக்க முடிகிறது. இதன்மூலம், வேதியியல்/இராசயன உரங்களை மட்டும் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுவது மற்றும் அதன் தாக்கத்தினைப் பற்றியும் விவசாயிகள் அறிய முடிகிறது.

சிலந்திகள் விவசாயிகளுக்கு எவ்வாறு பயனுள்ளதாக அமைகிறது?

இயற்கையான சிலந்திகள் அதிகளவு உணவு உட்கொள்ளும் ஆர்வமான கொன்றுண்ணி வகையாகும். 2-3 நிமிடங்களில் ஐந்து பழுப்பு இலைத் தத்துப்பூச்சிகளின் இளம் உயிரி அல்லது முதிர்நிலைப் பூச்சிகளைச் செயல் இழக்கச் செய்கிறது.. 300 பல வகைச் சிலந்திகளில், ஓநாய்ச் சிலந்திதான் சிறப்பான கொன்றுண்ணியாகத் திகழ்கிறது.

நத்தைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

பிலிப்பைன்ஸ் மற்றும் மற்ற நாடுகளில் அதிக அளவு பயிர் சேதத்தை ஏற்படுத்தி, நத்தைகள் மிகவும் தீவிர பிரச்சினைக்குரியதாக உள்ளது. ஆனால் அங்கு இப்பூச்சிகளின் மேல் தீவிரமான, நன்கு இலக்குடைய ஆராய்ச்சி இல்லை. முதலில் நெல் சூழ்நிலையிலுள்ள உயிரிக் காரணி மற்றும் உயிரல்லாக் காரணிகளுள் இந்நத்தைகளின் உறவு முறையைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். பின்பு தான் பூச்சி மேலாண்மை முறைகளை வடிவமைக்க முடியும். இந்நிலையில் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம், மாற்று ஆயுதமாக சமையலறை வடிகட்டி மற்றும் நீளமான கைப்பிடியுடைய சுரண்டும் கத்தி ஆகியவற்றை வடிவமைத்து நத்தைக் கட்டுப்பாட்டு முறைக்கு செயல்படுத்துகிறது.


மேலே செல்க